Assdo Voice

Assdo Voice Assdo Media Network
Assdo Voice Ahlussunnah Students' Social Development Organaization
(11)

07/06/2024

24/05/2024
 #வெள்ளி_மிம்பர் 🌹
24/05/2024

#வெள்ளி_மிம்பர் 🌹

வடமேல் மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் சுற்றாடல் அமைச்ச...
02/05/2024

வடமேல் மாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் சுற்றாடல் அமைச்சர் Z.A.நசீர் அகமட் - வடமேல் மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ட்ரோன்கள் பறக்க தடை! பொலிஸார் அறிவிப்பு!அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை  பயன்படுத்துவத...
29/04/2024

ட்ரோன்கள் பறக்க தடை! பொலிஸார் அறிவிப்பு!

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத தெரிவித்துள்ளார்.

இது, நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Updateவெலிகம ஹப்ஸா பெண்கள் மத்ரஸாவில் பாரிய தீவிபத்துவெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹப்ஸா பெண்கள் அரபிக் கல்லூரியில் இரண...
29/04/2024

Update

வெலிகம ஹப்ஸா பெண்கள் மத்ரஸாவில் பாரிய தீவிபத்து

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹப்ஸா பெண்கள் அரபிக் கல்லூரியில் இரண்டாவது தடவையாகவும் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது

குறித்த அரபிக் கல்லூரியின் பெண்கள் விடுதியின் நான்கு மாடிக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இன்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது

கட்டிடம் முழுவதும் தீ பரவிக் கொண்டிருந்த நிலையில் அதன் உள்ளே சுமார் 150 மாணவிகள் சிக்கிக் கொண்டிருந்தனர்

எனினும் பிரதேசவாசிகள் சமயோசிதமாக செயற்பட்டு சகல மாணவிகளையும், ஒருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படாத வகையில் கட்டிடத்துக்கு வௌியில் கொண்டு வந்து காப்பாற்றியுள்ளனர்

அத்துடன் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அணைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

அதன் பின்னர் மாத்தறை நகரசபையின் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளன.

தீவிபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பிரதேசத்தில் மின் துண்டிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் மின் ஒழுக்கினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், எனவே சதி நாசவேலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது

இதற்கு முன்னரும் கடந்த மார்ச் மாதம் 02ம் திகதியும் இதே கல்லூரியின் குறித்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, பிரதேச வாசிகள் மற்றும் நகர சபை தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

29/04/2024

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

29/04/2024

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.


குறித்த மத்ரஸாவில் மாணவகள் உள்ளே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வெலிகம பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்க...
29/04/2024

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸ் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி அவர்களும் மூன்றாவதாக பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் அவர்கள் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.

பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை.
கடந்த 2021.08. 09 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் 5 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி ஆறாவது உபவேந்தராக நியமிப்பார்.

“உமா ஓயா” பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இலங்கை - ஈரான் ஜனாதிபதிகளால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!- ஈரானுடனான தொடர்புகளை ப...
24/04/2024

“உமா ஓயா” பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இலங்கை - ஈரான் ஜனாதிபதிகளால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

- ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்வதே நோக்கமாகும்
-இலங்கை ஜனாதிபதி

- இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு கைகொடுக்கத் தயார்
-ஈரான் ஜனாதிபதி

மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை - ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இருநாட்டு தலைவர்களும் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து “உமா தியா ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளித்ததுடன், டிஜிட்டல் தொழில்நுட்ப முறையின் ஊடாக மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்கி பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

அதனையடுத்து இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் ஆதரவின்றி இலங்கையால் உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு சென்றிருக்க முடியாது. அதற்காக ஈரான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஈரானுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

உலகின் தென் துருவ நாடுகள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக தென்துருவ நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதனையடுத்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் மட்டுமல்ல, ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான அடையாளமாகும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல தயாரென உறுதியளித்த ஈரான் ஜனாதிபதி, இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு தொழில் நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் உதவத் தயாரெனவும் தெரிவித்தார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி மற்றும் அவரது பாரியார் ஜெமீலே சதாத் அலமோல்ஹுதா உள்ளிட்ட குழுவினர் (24) காலை மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இதன்போது ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததோடு , 2008 ஏப்ரல் மாதத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதி நெஜாட்டின் இலங்கை விஜயத்திற்கு பின்னர், ஈரான் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

தனது வருகையை குறிக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி மத்தளை விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் குறிப்பேட்டிலும் பதிவிட்டார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் (UOMDP) என்பது இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். தென்கிழக்கு பகுதியின் உலர் வலயத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் தனிப்பதற்காக, சுற்றுச் சூழலுக்கும், நீர் மூலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உமா ஓயாவில் வருடாந்தம் சேரும் 145 (MCM) கனமீற்றர் நீருக்கு மேலதிகமான நீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்கும். அத்தோடு பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வருடாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்க முடியும்.

இத்திட்டத்தில், புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்கப் பாதை), 15.2 கி.மீ நீளமான பிரதான சுரங்கப்பாதை, நிலக்கீழ் மின் நிலையம், மின்சார கம்பிக் கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிர்மாணங்களும் உள்ளடங்கியுள்ளன.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்ததின் ஊடாக 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த இத்திட்டத்திற்கு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. இருப்பினும், அந்த சமயம் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக அவர்களால் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியளிக்க முடியாமல் போனது. எனவே, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்காரரான பராப் நிறுவனத்துடன், திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இத்திட்டம் 2010 மார்ச் 15 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 2015 மார்ச் 15 ஆம் திகதி நிறைவு செய்யப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதான (Headrace tunnel) சுரங்கப்பாதையில் எதிர்பாராத விதமாக தண்ணீர் நுழைதமையால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சமூக பாதிப்புகள், நிதி சவால்கள் உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் நிர்மாணக் காலத்தில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்று நோய் பரவல் என்பன காரணமாக, திட்டத்தின் நிறைவு திகதி 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல் குறைபாடுகள் மற்றும் உத்தரவாதக் காலமும் 2025 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

மின்சாரத்தை உற்பத்தி செய்த பின்னர், அந்த நீர், சுரங்கப்பாதை மூலம் கிரிந்தி ஓயாவின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள அலிகோட்ட ஆர நீர்த்தேக்கத்திற்கு நீர் திருப்பி விடப்படுகிறது. அதன் பின்னர், அந்த நீர் உமா ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரையில் அமைந்துள்ள இத்திட்டத்தின் கீழ் நீர் கொள்ளளவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள ஹந்தபானாகல

நீர்த்தேக்கத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய, மஹாரகம, தனமல்வில, பலஹருத போன்ற பிரதேசங்களுக்கும் நீர் வழங்குவதற்காக, உமா ஓயாவின் தென் கரையில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய குடா ஓயா நீர்த்தேக்கத்திற்கும் திருப்பி விடப்படவுள்ளது. 60 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட நீர்ப்பாசன கட்டமைப்பும் கட்டப்பட்டு வருகிறது. இந்த நீர்ப்பாசன முறைகள் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் தற்போதுள்ள 1500 ஹெக்டெயார் நிலப்பரப்பு மற்றும் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 4500 ஹெக்டெயார் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கான நீர் வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நேரடிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்தப்படும் உமாஓயா கீழ் நீர்த்தேக்க அபிவிருத்தித் திட்டமானது கிரிந்தி ஓயா பள்ளத்தாக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த நீர்ப் பற்றாக்குறையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதோடு, பெறப்படும் நீரின் மூலம் அதிகபட்ச பயன்களைப் பெற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த விவசாய மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பண்டாரவளை மற்றும் வெல்லவாய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீரை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தீர்வுகளை வழங்கியுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்று இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்ற ஈரான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் கருதுகிறேன்.

இந்தத் திட்டம் எனது பதவிக் காலத்திற்கு முன்பிருந்த தலைவர்களால் தொடங்கப்பட்டது என்பதைக் கூற வேண்டும். அத்துடன் உலர் வலய பிரதேசத்திற்கு நீர் வழங்கும் இத்திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அக்கறை காட்டினார். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் எமது இரு நாடுகளுக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, இந்த சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.

மேலும், இந்த உமா ஓயா திட்டம் நமது இரு நாடுகளின் இரண்டு பழைமையான நீர்ப்பாசன மரபுகளின் கலவையாகும். ஈரானில் பெர்சியா மற்றும் இலங்கையில் அனுராதபுரத்தின் நீர்ப்பாசன பாரம்பரியம் இங்கே உள்ளது. ஈரானிய தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைக்காமல் போயிருந்தால் உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை எடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்பதைக் கூற வேண்டும்.

ஈரானின் தொழில்நுட்ப வல்லமை அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது. ஈரான் தனக்கே உரிய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேணும் நாடு என்பதையும் கூற வேண்டும். எனவே, இரு நாடுகளின் பொதுவான அம்சங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். நாம் அனைவரும் உலகளாவிய தெற்கு நாடுகளில் அடங்குகிறோம். உலகளாவிய தெற்கு நாடுகள் தங்கள் அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக, ஈரான் எமது நாட்டின் உலர் வலய பிரதேச மக்களுக்கு நீர் வழங்குவதற்கு பங்களித்துள்ளது. இது மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலர் வலய பகுதிக்கு நீர் வழங்குவது என்பது அந்தப் பகுதி மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதாகும். கிருவாபத்துவவிற்கு அப்பால், மாகம்பத்துவவில் உள்ள பகுதியில் வறட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்படியானால், இன்று நாம் செய்திருப்பது உடவளையில் கிடைக்கும் பல்நோக்கு முறைமையை கிரிந்திஓயாவுக்குக் கொண்டுவருவதுதான்.

அந்த நீர்ப்பாசன முறைமையுடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய முதலீட்டு வலயத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளோம். இதன் மூலம் ஹம்பாந்தோட்டை மாவட்டம் புதிய பொருளாதார முன்னேற்றத்தை பெறும்.

இந்தப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக சிறு மற்றும் பெரும்போகங்களில் 6000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படும். உடவளவ பிரதேசம் இலங்கையில் அதிகளவு நெல்லை உற்பத்தி செய்கிறது. தற்போது ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் அதே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

அதன் மூலம் தென் மாகாணத்திலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். மேலும், இது வலுசக்தித் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.

மேலும், இந்த திட்டத்தின் ஊடாக 120 மெகாவொர்ட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். உலகின் தெற்கில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் ஈரானும் இலங்கையும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்படி, ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்ஷ, தாரக பாலசூரிய, விஜித பேருகொட, சிறிபால கம்லத், டி.வி.சானக்க, தேனுக விதான கமகே, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், தென் மாகாண ஆளுநர் விலி கமகே. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், வடிவேல் சுரேஷ், சுதர்சன் தெனிபிட்டிய, திஸ்ஸ குட்டியாராச்சி, டி. வீரசிங்க, எம்.எல்.ஏ.எம். அதாவுல்லா, யதாமினி குணவர்தன மற்றும் அமைச்சர்கள், ஈரான் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர்அப்துல்லாஹியன் ,அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட தூதுக் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் மற்றும் அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24-04-2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
24/04/2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதிஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்க...
24/04/2024

இலங்கை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

24/04/2024

குதுகல கொண்டாட்டத்தில் பெற்றோர்களின் மடமைத்தனமான உணவுப்பழக்க ஆசையால் தன் பிள்ளையை இழந்த சோகக் கதை

வித்தியாசமான அனுபவத்தை பெறுவதாக நினைத்து தெருக்களில் விற்பனை செய்யும் உணவுகளையெல்லாம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்.

சிலவேளைகளில் அது உயிராபத்துகளையும் ஏற்படுத்தி விடலாம்.

இந்த வீடியோவில் லிக்யூட் நைட்ரஜனை சிறுவனுக்கு அதிகமாக கொடுத்ததால் சிறுவன் மரணமடைந்துள்ளார்.

லிக்யூட் நைட்ரஜன் என்பது ஐசாக மாறும் தன்மை கொண்டது. அந்த சிறுவனுக்கு அதிகமாக லிக்யூட் நைட்ரஜனை கொடுத்ததால் அது சுவாசக்குழாயில் சென்று ஐசாக மாறியதில் நுரையீரல் உறைந்ததால் சுவாசிக்க முடியாமல் சிறுவன் மரணமடைந்துள்ளார்.

சம்பியனாக தெரிவுகல்முனை அல் பஹ்ரியா பழைய மாணவர் சங்கத்தினால் நடைபெற்று முடிந்த  பஹ்றியன் பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியி...
23/04/2024

சம்பியனாக தெரிவு

கல்முனை அல் பஹ்ரியா பழைய மாணவர் சங்கத்தினால் நடைபெற்று முடிந்த பஹ்றியன் பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் 2012 அணி சம்பியனாக தெரிவு

எமது வாழ்த்துக்கள்

பாகிஸ்தான் சென்றடைந்தார்ஈரான் ஜனாதிபதி2 நாள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு 24 ஆம் திகதி இலங்கை வருகிறார்.
22/04/2024

பாகிஸ்தான் சென்றடைந்தார்
ஈரான் ஜனாதிபதி

2 நாள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு 24 ஆம் திகதி இலங்கை வருகிறார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல், உஷாராகும் ஈரான்ஈரான் மீது இஸ்ரேல் நேற்று இரவு பதிலடி தாக்குதலை நடத்தி உள்ளதாக சர்வதேச செய்...
19/04/2024

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல், உஷாராகும் ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று இரவு பதிலடி தாக்குதலை நடத்தி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது. இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நட்பு நாடுகள் வைத்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துள்ள நிலையில், இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

நேற்று ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வெளியான அப்டேட்கள்:

மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ஈராக் மற்றும் தெற்கு சிரியாவில் ஒரே நேரத்தில் வரிசையாக ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன.
ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் இஸ்பஹானில் வெடித்ததை உறுதிப்படுத்துகின்றன.
ஈரானிய வான்வெளியின் முக்கிய பகுதிகள் மூடப்பட்டு உள்ளன.
அமெரிக்காவின் ஆலோசனையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் 1ம் திகதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு இடையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் இராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. பலஸ்தீன போரில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன போராளி குழுக்களுக்கு உதவிய நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது.

ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் இராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இந்த தாக்குதலுக்குத்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று முதல்நாள் நடந்த ஜனாதிபதி, பிரதமர், இராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான் உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை. அதன் ஒரு கட்டமாக இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையிலான போர்தான் இந்த ஈரான் தாக்குதலுக்கு காரணம். பலஸ்தீனத்தை இஸ்ரேல் விடாமல் தாக்கி வந்தது ஈரான் விரும்பவில்லை. இந்த போரில் பலஸ்தீனத்திற்கு ஈரான் மறைமுகமாக உதவி வந்தது. இப்போது நேரடியாக இது இஸ்ரேல் – ஈரான் போராக மாறி உள்ளது.

19/04/2024


ஏவுகணை தாக்குதல் எதுவும் எம்மீது இடம்பெறவில்லை, ஈரானிய எல்லைக்குள் எந்தவொரு விமானமும் ஊடுருவவும் இல்லை.

எனினும் #இஸ்பஹான் பகுதியில் தென்பட்ட இதுபோன்ற குட்டி குட்டி ட்ரோன்கள் பலவற்றை சுட்டு பொசுக்கியுள்ளோம்.

சகல பகுதிகளிலும் ஆகாய பாதுகாப்பு (Air Defense System) சிஸ்டம் அக்டிவ் செய்துள்ளோம்.

-ஈரானிய ராணுவ பேச்சாளர்

நட்பு நாடுகளை உதறிய இஸ்ரேல்இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செய...
18/04/2024

நட்பு நாடுகளை உதறிய இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 1ம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் ஏப்ரல் 14ம் திகதி தாக்குதலை தொடுத்திருக்கிறது.

அன்று இரவு மட்டும் சுமார் 200க்கும் அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடி பதில் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கவில்லை.

இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும், நேற்று அதிகாலையும் சுமார் 150 ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் 2 கமாண்டர்கள் உட்பட மூன்று ஹில்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள அறிக்கை பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, “ஈரான் விவகாரத்தில் தற்காப்புக்காக இஸ்ரேல் சொந்தமாக முடிவை எடுக்கும். நட்பு நாடுகளின் கருத்துக்கள் முரணாக இருந்தாலும், இஸ்ரேல் சொந்தமாக முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார். அதாவது, ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கூடாது, என்று இஸ்ரேலை வலியுறுத்தியிருந்தன.

ஆனால், நெதன்யாகு இந்த அறிவுறுத்தலை ஏற்க தயாராக இல்லை என்பது, தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

ரைசியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்புஇம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜய...
18/04/2024

ரைசியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு

இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உமா ஓயா திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவிற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டிற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு இந்த ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஈரான் ஜனாதிபதியின் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, ஈரானிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி வரும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கி பலத்த பாதுகாப்புடன் உமா ஓயா சென்று அன்றைய தினம் திரும்பிச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இந்த விஜயம் தொடர்பில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவினரும் அமெரிக்க உளவுத் துறையினரும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(காத்தான்குடி) பாலமுனை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு - காத்தான்குடி பொலிஸார் விசாரணைமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்...
18/04/2024

(காத்தான்குடி) பாலமுனை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு - காத்தான்குடி பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (18) கரை ஒதுங்கி உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடைய சடலம் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தளத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையிலான பொலிஸார் குறித்த சடலத்தை பார்வையிட்டதுடன் ஆரம்பகட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

குறித்த சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் ,சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணைகள் இடம் பெற்றுவருதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

🔴இஸ்ரேல் - இலங்கை இடையிலான விமான சேவை ரத்து ??
18/04/2024

🔴இஸ்ரேல் - இலங்கை இடையிலான விமான சேவை ரத்து ??

சிறப்புடன் நடைபெற எமது வாழ்த்துக்கள்கல்முனை அல் பஹ்றியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்து நடாத்...
18/04/2024

சிறப்புடன் நடைபெற எமது வாழ்த்துக்கள்

கல்முனை அல் பஹ்றியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்படுகின்ற பஹ்ரியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் இரண்டாவது வருடமாகவும் இம்முறை மிக கோலாகாலமான முறையில் இடம்பெற இருக்கின்றது.

இச்சுற்றுத் தொடர் இம்மாதம் 19ம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இறைவன் ஏற்பாட்டை நம்புகிறோம்... ஆனால் கண்ணில் நீர் வடிகிறது இறைவா!😭😭ஒன்றரை வயது குழந்தையை..தனியே இருத்தி விட்டு...தாகமே ...
17/04/2024

இறைவன் ஏற்பாட்டை நம்புகிறோம்... ஆனால் கண்ணில் நீர் வடிகிறது இறைவா!😭😭

ஒன்றரை வயது குழந்தையை..தனியே இருத்தி விட்டு...தாகமே தீர்க்காத...தாய் தந்தை உறவு இன்று ஒரே நாளில்...அனாதை..என்ற பட்டத்தை கொடுத்து விட்டதே 😢

குழந்தைக்கு தேவையான அத்தனை ஆடைகளையும்..வழங்கி வைத்து விட்டு..தாங்கள் மட்டும்...வெண்ணிற ஆடைகளை அணிந்து கொண்டார்களே இந்த தம்பதியினர்..😢

குழந்தைக்கு தேவையான அளவுகளில் தலையணைகள் வாங்கி அடுக்கி விட்டு...தாங்கள் போய்...மண் கட்டியில் தூங்க சென்றதே இந்த இளம் தம்பதியினர்..😢

குழந்தை..பெயரை....பிறப்புச் சான்றிதழில்...எ ழுதி.. விட்டு..தமது பெயரை..மரணச்..சான்றிதழில் எழுதிக் கொண்டார்களே ..இந்த தம்பதியினர்.....😢

இறைவா!

யாரென்றே அறிமுகமில்லாத ஒரு உறவு பிரிந்து சென்றாலும் வலி 😭என்ற வேதனை எல்லா உயிருக்கும் சமமானதே....

ஆகையால்..இன்றைய தினம்..அகாலமரணம் அடைந்த அந்த தம்பதியினரை நீ சிறந்த அடியானாக ஏற்றுக் கொண்டு..உலகிலே தனியாக விட்டு சென்ற ஒன்றரை வயது செல்வத்தை..நீ துணை நின்று காப்பானாக..இறைவா! 🤲

அத்துடன் அல்லாஹ் வே..

இந்தளவு கவலைகளை காதுகளால் கேட்கவோ..கண்களால் காணவோ எமக்கு சக்தியில்லை....நாங்கள் சாதாரன அடிமைகள் இறைவா!

இனிமேல் யாருக்கும்...இதுபோன்ற துயரக் கண்ணீர்களை கொடுத்து விடாத இறைவா எனும் வரிகளுடன்....

மனிதம் எனும் உறவு 😢

இலங்கை பணியாளர்களை மீட்ட ஈரான் கடற்படை!ஓமான் வளைகுடாவில் மூழ்கி தத்தளித்த டேங்கரில் (படகில்) இருந்து 21 இலங்கை பணியாளர்க...
17/04/2024

இலங்கை பணியாளர்களை மீட்ட ஈரான் கடற்படை!

ஓமான் வளைகுடாவில் மூழ்கி தத்தளித்த டேங்கரில் (படகில்) இருந்து 21 இலங்கை பணியாளர்களை ஈரான் கடற்படை மீட்டுள்ளது.

அவர்காள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது,

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்கல்வியாண்டு 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு ...
17/04/2024

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

கல்வியாண்டு 2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை அனுமதி அட்டைகள் தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் அதேவேளை, பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துபாய் வெள்ளத்தின் காட்சி
17/04/2024

துபாய் வெள்ளத்தின் காட்சி

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்களின் பெயர் பலகை திறந்து வைப்பு.1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் ப...
17/04/2024

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர்களின் பெயர் பலகை திறந்து வைப்பு.

1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2024) 53 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது.

இதன் பின்னணியில் இக்கல்லூரியின் நீண்ட கால தேவையாகவும் வரலாற்று நிகழ்வுகளை தற்கால இளம் மாணவ சமூகத்தவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் கல்லூரி முதல்வரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களில் ஒன்றான இக்கல்லூரியில் அதிபர்களாக கடமையாற்றியவர்களின் பெயர்கள் மற்றும் காலங்களை உள்ளடக்கிய "மஹ்மூத் அதிபர் பெயர் பலகை" உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (17) கல்லூரியின் நிர்வாக கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பெயர் பலகையினை இக்கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதைய 17வது அதிபரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முதலாவது இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியுமான அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களினால் திறை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இக்கல்லூரி வரலாற்றில் (1971-2024) இன்றுவரை 17 அதிபர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்ப...
17/04/2024

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் செவ்வாய்க்கிழமை (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

Address

156, Sailan Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Assdo Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Assdo Voice:

Videos

Share