24/11/2023
இல்ல விளையாட்டு போட்டி வெற்றிக்கரமாக நடாத்தி முடிப்பதற்கான திட்டம்
*********************************
மாணவ,மாணவியர் உட்பட பாடசாலை உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபடும் ஒரு நிகழ்வு இல்ல விளையாட்டுப் போட்டியாகும்.
பாடசாலை வருட ஆரம்பத்தில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டிகள் பாடசாலையின் சகல அங்கத்தவர்களிடையேயும் ஈடுபாடு,புரிந்துணர்வு,மகிழ்ச்சி என்பனவற்றை வழங்குகிறது.
இல்ல விளையாட்டுப் போட்டியினை 3 ஆக பிரித்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
1. போட்டிக் முன்
2.போட்டி நாள்
3.போட்டிக்கு பின்
விளையாட்டு போட்டி முன் ஒழுங்கமைப்பு
******************************
இதுவே ஒரு இல்ல விளையாட்டு போட்டியினை சிறப்பாக செய்து முடிப்பதற்கான அத்திவாரமாகும்.
# ஆரம்ப நிகழ்ச்சி நிரல்களை தயார் செய்தல்.
# பாடசாலையின் அனைத்து மாணவர்கள்,ஆசிரியர்கள்,சேவையாளர்கள் அனைவருக்கும் முழுமையான செயற்பாடு அனைத்தையும் தெரியப்படுத்தல்.
# சம்பந்தப்பட்ட அனைவரையும் குழுக்களாகவும்,உப குழுக்களாகவும் பிரித்து செயற்பட வைத்தல்.
# வைபவ நிகழ்வுகளில் அதிதிகளை வரவேற்க வீர,வீராங்கனைகள் மற்றும் வாத்தியக் குழுக்களை தயார் செய்தல்.
# கொடிகள் ஏற்ற மிகப் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதுடன் பாடசாலை மற்றும் இல்லக் கொடியை விட உயரத்தில் தேசியக் கொடி இருக்கும் படி அமைத்துக் கொள்ளல்.
# கொடி ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் முன் கூட்டியே தயார் செய்தல்.
# வைபவ நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரலை முன் கூட்டியே தயார்படுத்தல்.
# அதிதிகள் மற்றும் நடுவர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல்.
# கொடியேற்ற உரிய நபர்களை தெரிந்து வைத்திருத்தல்.
# அணி நடை,கண்காட்சி நிகழ்வுகளை மாணவர்களை பயிற்றுவித்தல்,ஒழுங்கமைத்தல்,ஒத்திகை செய்தல்.
# ஒலிம்பிக் தீபம் ஏற்றல், சத்திய பிரமாணம் செய்வதற்கான நபர்களை தெரிவு செய்தல்.
# போட்டியாளர்களின்,மற்றும் நடுவர்களின் பெயர் பட்டியலுடனான விபரத்தை தயாரித்தல்.
# சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் ஏற்பாட்டை ஒழுங்கு செய்தல்.
# அறிவிப்பாளர்கள்,நடுவர்கள் ஆகியோரை அறிமுகமாதலும்,ஆலோசனை வழங்கலும்.
போட்டி நாள் நிகழ்ச்சி நிரல்
*****************************
# பிரதம அதிதியை வரவேற்றல்.
# தேசியக் கொடி,பாடசாலைக் கொடி,இல்லக் கொடியேற்றல்.
# தேசிய, பாடசாலைக் கீதங்கள் பாடல்.
# ஒலிம்பிக் தீபம் ஏற்றல்,சத்தியபிரமாணம் செய்தல்.
# போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்தல்
# அணி நடை
# அதிபரின் உரை
# பிரதம அதிதி உரை
# பரிசளிப்பு
# நன்றியுரை
# தேசிய கீதம் இசைத்தலும் கொடிகளை இறக்குதலும்.
போட்டி நிகழ்ச்சிகளுக்காக மாணவர்கள்,அதிதிகள்,பார்வையாளர்களுக்கிடையில் பிரபல்யமான விளையாட்டுகளாகவும்,நேரம் குறைந்த விளையாட்டுகளாகவும் தெரிந்தெடுத்தல்.
Ex: 100m,200m 100×4 அல்லாது 100 × 400 அஞ்சல் போன்றவற்றை தெரிவு செய்யலாம்.
கண்காட்சிகள் இருப்பின் பொருத்தமானதொரு நேரத்தை தெரிவு செய்து நடத்தலாம் ஒழுங்கமைப்பில் ஏதும் சிரமம் இருப்பின் அணிநடை நடைபெறும் ஒழுங்கை மாற்றலாம்.
போட்டியின் பின் ஒழுங்கமாப்பு
*********************************
போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்று அதிதிகள் வெளியேறிய பின் மைதானத்தையும்,பொருள்களையும் மீள் ஒழுங்கு செய்தல்.வரவு,செலவுகளை அறிக்கைப்படுத்தல்.
விளையாட்டுக் கொடி இறக்கம் ,விளையாட்டு கொடியை பாடசாலை அதிபரிடம் கையளித்தல்,விளையாட்டு போட்டி நிறைவடைந்தமைக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு போன்றவைகளை நிகழ்ச்சி நிறைவடைந்ததும் கூறல்.