கல்முனை மாநகரம்

கல்முனை மாநகரம் You can Oder eggs less cakes

31/05/2024

காத்தான்குடியில் 70 பக்கெட் காம மதன லேகியம் கைப்பற்றப்பட்டது: கடை உரிமையாளர் கைது !

31/05/2024
31/05/2024
31/05/2024
07/05/2024
07/05/2024
07/05/2024
நன்றி  Mohamed Neroosநாடளாவிய சேவை ஆட்சேர்ப்பு பொறிமுறையில் மொழி,இனரீதியான தரப்படுத்தல் இல்லாத போதும்  SLEAS நேர்முகத்தே...
07/05/2024

நன்றி Mohamed Neroos
நாடளாவிய சேவை ஆட்சேர்ப்பு பொறிமுறையில் மொழி,இனரீதியான தரப்படுத்தல் இல்லாத போதும் SLEAS நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் விபரத்தை நண்பர் Mohamed Neroos இவ்வாறு பகுப்பாய்வு செய்திருக்கிறார்.பெயரை வைத்து இனரீதியாக கணிப்பிட்டிருப்பதால் எண்ணிக்கை துல்லியமாக சரியாக இருக்காவிட்டாலும் நாங்கள் சில விடயங்களுக்கு தயாராக வேண்டுமாயின் தூரநோக்குடன் கூடிய காலம் பயிற்சியில் ஈடுபடவேண்டுமென்பதை உணர்த்துகின்றது. #

06/05/2024
06/05/2024
27/04/2024
ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 5 மில்லியன் நிதியை ஜனாதிபதியிடம் கையளித்த கல்முனை பிராந்திய பொது நிறுவனங்கள். ...
27/04/2024

ஜனாதிபதியின் காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு 5 மில்லியன் நிதியை ஜனாதிபதியிடம் கையளித்த கல்முனை பிராந்திய பொது நிறுவனங்கள்.

நூருல் ஹுதா உமர்

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோச­னையின் பேரில் காஸா பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் 50 லட்சம் ரூபாய் நிதி நன்­கொ­டை­யாக இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிதி கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்த்தன உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

காஸா சிறுவர்களின் நல திட்டத்திற்காக கல்முனை கல்வி வலய உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்பில் 3,128,500/- நிதியும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 1,589,000/- நிதியும், ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் 300,000/- ரூபாய் நிதியுமாக ஐந்து மில்லியன் ரூபாய் பணத்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் நிதியை பௌண்டஷனின் தவிசாளர் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும், கல்முனை கல்வி வலய நிதியை பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையிலான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கணக்காளர் வை. ஹபீபுல்லா, அதிபர், ஆசிரியர் சார்பில் நவாஸ் சௌபி அடங்கிய குழுவும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகளும் கையளித்தனர்.

😲
26/04/2024

😲

கடலரிப்பை உடனே தடுங்கள்...........!
இல்லையேல் - இராஜினாமா செய்க !!
--------------------------------------
- யஹியாகான் காட்டம்

ஜனாதிபதிக்கு கை கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது உட்பட - அம்பாரை மாவட்ட கடலோர மண்ணரிப்பை தடுக்க நிரந்தர திட்டமொன்றை செயற்படுத்துங்கள்.

இவ்வாறு - முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் - அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலமாக - யஹியாகான் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் - சாய்ந்தமருது பகுதி கடலரிப்பு உட்பட மாவட்ட கடலரிப்பு தொடர்பில் நான் உட்பட பலரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால் , எதுவித தீர்வும் இதுவரை எட்டப்படவே இல்லை.

தேசிய காங்கிரஸ் தலைவரும் - அண்மையில் சாய்ந்தமருதில் , கடலரிப்பை தடுத்து விட்டது போன்று வீடியோ , புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். ஆனால் , அதுவும் சாத்தியப்படவில்லை என்றே புலனாகியது.

ஜனாதிபதியுடன் கைகொடுத்து , அருகில் நின்று - புகைப்படம் எடுக்கும் மாவட்ட எம்பீமார் - சாய்ந்தமருது கடலரிப்பை தடுக்க ஆர்வம் காட்டுவதில்லை ஏன் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழுந்துள்ளது.

இவ்வாறு - கைகொடுக்கும் சந்தர்ப்பத்திலாவது இந்த கடலரிப்பு குறித்து ஜனாதிபதியிடம் தெளிவாக பேசியிருக்க முடியும்.

அம்பாரை மாவட்ட எம்பீக்களே ! ஜனாதிபதியை இவ்வாறு தனித்தனியாக சந்திப்பதை விடுத்து கட்சி ரீதியாக அல்லது மாவட்ட எம்பீக்கள் அனைவரும் ஒன்றுபட்டு முகா. தலைவர் ஹக்கீமுடன் சென்று சந்திக்க முடியுமாக இருந்தால் இன்னும் வலுவாக இருக்கும். தனித்தனியாக சென்று சந்திப்பதனால்தான் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடைநடுவில் நிற்கின்றன என்பது மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.

கடலரிப்பு காரணமாக மீனவ சமுகம் மட்டுமன்றி முழு மக்களுமே கடும் ஆவேஷத்துடன் மாவட்ட எம்பீமாருடன் இருக்கின்றனர். இந்த எம்பீக்களை தேடித் தேடி தோற்கடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

தயவுசெய்து - சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பு உட்பட மாவட்ட கரையோர கடலரிப்பை தடுக்க நிரந்தர முயற்சி செய்யுங்கள்; இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள்.

அம்பாரை மாவட்ட எம்பிக்களுக்கு - இன்று நல்ல செல்வாக்கு அரசாங்கத்துடன் உள்ளதாக - அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. அதைப் பயன்படுத்தியாவது - தலைவர் ஹக்கீமின் தலைமையில் சென்று - ஜனாதிபதியை சந்தித்து தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த அறிக்கையில் - யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

26/04/2024

"திடீர் "பணக்காரன் ஆகுவது இப்படித்தான்

அண்மையில் போதைப்பொருளுடன் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட அழகிய அம்பாறைப் பெண் வளங்கிய தகவல்களின் பிரகாரம் மருதமுனையில்.

கீழ் படத்திலுள்ள கல்முனை பிரதேச சபை கணக்காளர் றிஸ்வான் உட்பட பலை கைதுகள் தொடர்கின்றன 50 க்கும் அதிகமான தொலைபேசி இலக்கங்கள்.

யார் அந்த மற்றுமொரு பெண் வியாபாரி?

26/04/2024
25/04/2024
எத்தனை ஏழையின் சாபத்துக்கு ஆளாகிருப்பாரு இந்த கட்டப்பா..அனுபவி ராஜா..அல்லாஹ் இருக்கிறான்..
25/04/2024

எத்தனை ஏழையின் சாபத்துக்கு ஆளாகிருப்பாரு இந்த கட்டப்பா..அனுபவி ராஜா..அல்லாஹ் இருக்கிறான்..

வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த தமிழ் பத்திரிகை  பெயர் உதய தாரகை. 1841 ஆளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. புகைப்பட...
25/04/2024

வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த தமிழ் பத்திரிகை பெயர் உதய தாரகை. 1841 ஆளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது.
புகைப்படத்தில் இருப்பது உதய தாரகை பத்திரிகையின் அச்சகமும் அச்சு இயந்திரமும்!

25/04/2024
27/06/2022

உங்கள் மங்களகரமான வைபவங்களுக்கு தேவையான Eggs less cakes இனை ஓடர்செய்து பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளுங்கள்
0652250700

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்முனை மாநகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies