27/12/2024
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த பொருளாதார நெருக்கடி தற்போது மீழ் எழுச்சி பெற்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைந்த விலைகளில் மக்களுக்கு பெறக்கூடியதாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் மாட்டு இறைச்சி மாத்திரம்,ஏழை மக்களால், நடுத்தர மக்களால் வாங்கி உண்ண முடியாத அளவிற்கு அறி கூடிய விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது; இதற்காக வேண்டி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் தயவு செய்து ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜனவரி 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மாட்டு இறைச்சி வாங்குவதனை மக்கள் முற்றாகத் தவிர்ந்து கொண்டு 1800/- ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படும் வரை இப் போராட்டம் தொடரும் என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு; ஜனவரி 16ம் திகதி மாட்டு இறைச்சி மாபியாக்களுக்கு எதிரான நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்று ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முஸ்லிம் முற்போக்கு முன்னணி..