PadaKu TV

PadaKu TV Media

13/04/2024

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!

09/04/2024

ஆரையம்பதி சக்தி பாலர் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 2024

மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வா நகர் சக்தி பாலர் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா பாடசாலை அதிபர் திருமதி பு. குகாநிதி தலைமையில் இன்று (09) காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாளபிள்ளை பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

இதன் போது அதிதிகள் வரவேற்கப்பட்டு சம்பிரதாய பூர்வமாக நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து மாணவச் செல்வங்களின் திறன் விருத்தி விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து சிறுவர்களை மகிழ்விக்கும் இசைவும் அசைவும் விசேட நிகழ்வு நடைபெற்றது.

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் "செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா” நடாத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

யுத்தம் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் உடல் உள தேகாரோக்கியத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் இந்த "செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா” விசேட செயற்பாடு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நடாத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் வலியூறுத்தி சகல வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் சுற்று நிருபம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஆரையம்பதி சிவா வித்தியாலய அதிபர் திருமதி சுமதி பத்மநாதன், மலைசியா ஆரையூர் குழு உறுப்பினர் சுப்பிரமணியம் சிவலோகமூர்த்தி, கிராம சேவகர் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரை  இடமாற்றக்கோரி மீண்டும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலய...
09/04/2024

பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரை இடமாற்றக்கோரி மீண்டும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

மட் /பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய முன்றலில் இருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விடையம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அல்லது இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன் வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளர், பூ பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

தமது பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியைக் கருத்திற் கொண்டு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை உடன் இடமாற்றம் செய்து தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வருகைதந்த இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தனிடம் மகஜரை கையளித்ததனை அடுத்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்

குறித்த விடயம் தொடர்பில் இம்மாதம் 01ம் திகதி தொடக்கம் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி சமூகத்தினரால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

08/04/2024

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கான
புத்தக அடுக்குகள் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனால் வழங்கிவைப்பு

07/04/2024

ஈஸ்டர் படுகொலை (இன,மத, நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்) நூல் அறிமுக விழா!

06/04/2024

சிவப்பு சித்திரை தினத்தை முன்னிட்டு எல்லே விளையாட்டு நிகழ்வு 2024.

வெருகல் மலை பகுதியில் நடந்த சகோதர படுகொலையின் போது கிழக்கின் தனித்துவமான இருப்பிற்காக மடிந்த மறவர்களை நினைவு கூறும் வெருகல் படுகொலை "சிவப்பு சித்திரை" நினைவு தினம் எதிர்வரும் ஏப்ரல் 10, 2024 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளமையை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மாபெரும் எல்லே விளையாட்டு போட்டி நிகழ்வானது மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருஸ்தாஸ் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசக் குழு கட்டமைப்பு ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பத்து பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 16 பேர் கொண்ட 09 அணிகள் பங்குபற்றிய 40 பந்து பரிமாற்றங்களை கொண்ட குறித்த எல்லே சுற்றுப்போட்டி நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது போரதீவுப் பற்று மற்றும் கோறளைப் பற்று கிரான் பிரதேச அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதிப் போட்டி நிகழ்வுகள் சிவப்பு சித்திரை நினைவு தினமான எதிர்வரும் 10ம் திகதி வாகரை வம்மிவட்டுவான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியானது ஆற்றல் மிக்க பெண் தலைமைத்துவங்களை உருவாக்கும் நோக்கிலும் வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் பல்வேறு ஆக்க பூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு மாணவச் செல்வங்களின் கல்வி துறை சார்ந்து தாயாக கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டத்தினையும் முன்னெடுத்திருந்தது. அத்தோடு யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் பெண்கள் மற்றும் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல்வேறு கருத்திட்டங்ளை முன்னெடுத்தும் வருகின்றது.

சிவப்பு சித்திரை நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு வாகரை பிரதேசத்தை மையப்படுத்தி கரப்பந்தாட்ட போட்டி நிகழ்வுகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விளையாட்டு நிகழ்வின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் சந்திரகுமார், தேசிய அமைப்பாளர் தஜுவரன், மாவட்ட அமைப்பாளர் அருன் திருநாவுக்கரசு, இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர், யுகநாதன், உட்பட தலைவர் பணிக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதேச குழு நிர்வாகிகள், கிராமிய குழு நிர்வாகிகள் விளையாட்டு அணிகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

05/04/2024

இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனுடன் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் விசேட சந்திப்பு- கிழக்கு மாகாண பணிமனைகளை திருமலைக்கு மாற்ற எடுக்கப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

04/04/2024

களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை வீதியை செப்பனிடுதல் தொடர்பில் களவிஜயம்

04/04/2024

20 மில்லியன் செலவில் எருவில் சிவபுரம் 4ம் குறுக்கு வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வந்த முக்கிய கிராமிய வீதிகள். கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எருவில் கிழக்கு சிவபுரம் 4ம் குறுக்கு வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பிராஜா தஜிவரன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.

460 மீட்டர் நீளமான சிவபுரம் 4ம் குறுக்கு வீதியானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 25 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் நுட்ப உத்தியோகஸ்தர் ரவீந்திரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிவபுரம் கிராமிய குழு தலைவர் பிரபு உட்பட கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், மாதர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

03/04/2024

25 மில்லியன் செலவில் வவுணதீவு குருந்தையடிமுன்மாரி சின்னத்தம்பி வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் காணப்படும் கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய முக்கிய கிராமிய வீதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம சேவையாளர் பிரிவில் குருந்தையடிமுன்மாரி சின்னத்தம்பி வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ. பிரசாந்தன் ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்கு பிரதேசக் குழு தலைவர் பா.கோபிநாதன் இணைப்பாளர் ராகவன், கல்வி கலை கலாச்சார செயலாளர் ஜெயசீலன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குருந்தையடிமுன்மாரி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், மாதர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நால்வர் உயிரிழப்பு, 50இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிதாய்வானில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவா...
03/04/2024

நால்வர் உயிரிழப்பு, 50இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
தாய்வானில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

01/04/2024

34.6 மில்லியன் செலவில் கண்டலடி பண்டித்தீவு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கமைவாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் காணப்படும் கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய முக்கிய வீதிகளை இனம்கண்டு முன்னுரிமை அடிப்படையில் செப்பனிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 860 மீற்றர் நீளமான கண்டலடி பண்டித்தீவு வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ. பிரசாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு இணைந்து சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தனர்.

மேற்படி நிகழ்வில் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கண்ணப்பன் கணேசன், வாகரை பிரதேசக் குழு தலைவர் மதிவேந்தன் உட்பட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

30/03/2024

அமரர் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களின் 20வது ஆண்டு நினைவு தின நிகழ்வு!

கடந்த மார்ச் 04, 2004 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட அமரர் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களின் இருபதாவது ஆண்டு நினைவு தின நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச குழு தலைவர் காந்தராசா தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது அன்னாரின் புதல்வி திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன் கட்சியின் பிரதிச் செயலாளர் சந்திரகுமார், மகளிர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ், மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் யுகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அமரர் ராஜன் சத்தியமூர்த்தி அவர்கள் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சமூக செயற்பாடுகளின் மூலம் சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்தியவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவர், வர்த்தக சங்க தலைவர், சமாதான பேரவை தலைவர் உள்ளிட்ட பல்வேறு சமூக சமய பொறுப்புக்களில் தன்னை இணைத்து சேவையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

30/03/2024

மூதூர் பெருவெளி கதிரேசன் வித்தியாலயத்திற்கான வாண்ட் வாத்திய இசைக் கருவிகள் வழங்கி வைப்பு!

30/03/2024

சிவப்பு சித்திரை மென்பந்து கிரிக்கெட் சகோதரச் சமர் 2024.

இருபது வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலையின் போது கிழக்கின் தனித்துவமான இருப்பிற்காக மடிந்த மறவர்களை நினைவு கூறும் வெருகல் படுகொலை நினைவு தினம் எதிர்வரும் ஏப்ரல் 10, 2024 அன்று அனுஷ்டிக்கப்படவுள்ள சிவப்பு சித்திரை தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் மாபெரும் மென்பந்து கிறிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வானது இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் தலைமையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச குழு கட்டமைப்பு ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பத்து பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட 10 அணிகள் பங்குபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணியானது இளைஞர்களின் விளையாட்டு துறைக்கு பாரிய முக்கியத்துவமளித்து இளைஞர்களின் உடல் வலுவாக்கம் கூட்டுப் பொறுப்பு, தலைமைத்துவ பண்பு பேன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் விளையாட்டுதுறை சார்ந்து பல்வேறு கருத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் சிவப்பு சித்திரை நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வாகரை பிரதேசத்தை மையப்படுத்தி கரப்பந்தாட்ட போட்டி நிகழ்வுகள் மற்றும் மாவட்ட ரீதியிலான மகளிர் அணியினருக்கான எல்லே விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் சந்திரகுமார், தேசிய அமைப்பாளர் தஜுவரன், மகளிர் அணி செயலாளர் சுஜிகலா அருள்தாஸ், மாவட்ட அமைப்பாளர் அருன் திருநாவுக்கரசு, மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர், யுகநாதன், உட்பட தலைவர் பணிக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதேச குழு நிர்வாகிகள், கிராமிய குழு நிர்வாகிகள் விளையாட்டு அணிகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

RIP😪நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்! திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சு...
30/03/2024

RIP😪
நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜி, நெஞ்சுவலி ஏற்பட்டதும் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
|

29/03/2024

20 மில்லியன் செலவில் மக்களடியூற்று காளி கோவில் வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தனின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களடியூற்று காளிகோவில் வீதிக்கான கொங்கீறிட் இடும் பணிகளை, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ. பிரசாந்தன் ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த வீதியானது விவசாய நிலங்களுக்கான பிரதான வீதியாக காணப்படுவதோடு வணக்கஸ்தலங்களுக்கான மிக முக்கிய வீதியாகவும் காணப்படுகின்ற போதிலும் அண்மையில் ஏற்பட்ட பருவமழை காரணமாக கடுமையாக சேதமடைந்து விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு சிரமங்களை எதிர்கொண்டு வந்தமை தொடர்பில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் அடிப்படையில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் 20 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் இணைப்பாக்கம் சந்திரகுமார், கட்சியின் மண்முனை தென்மேற்கு பிரதேச கிளை செயலாளர் குகநாதன், இணைப்பாளர் தங்கதுரை, தாந்தாமலை கிராமிய குழு நிர்வாகிகள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

25/03/2024

16.5 மில்லியன் செலவில் நெல்லிக்காடு கிராமிய பாலம் புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு!

25/03/2024

புணானை அ.த.க பாடசாலை பிரத்தியேக மற்றும் உள்ளக வீதிகளுக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்

23/03/2024

புத்தகவெளியீடு

#“ஈஸ்டர்_படுகொலை”
நூலாசிரியர். சிவ. சந்திரகாந்தன்

20/03/2024

25மில்லியன் செலவில் பள்ளத்துச்சேனை கிராமிய பாலம் புனரமைப்புக்கான ஆரம்ப நிகழ்வு!

20/03/2024

ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனைக்கு இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் விசேட விஜயம்!

18/03/2024

சித்தாண்டி R.K.M பாடசாலை வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்!

16/03/2024

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மயிலங்கரச்சை பாடசாலைக்கான விசேட கள விஜயம்!

16/03/2024

மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா.

15/03/2024

30.2 மில்லியன் செலவில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி உள்ளக வீதிகளுக்கான கொங்கிறீட் மற்றும் கார்பெட் இடும் பணிகள் ஆரம்பம்!

14/03/2024

மண்டூர் ஒருங்கிணைந்த பண்ணையில் உற்பத்திகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

13/03/2024

13.4மில்லியன் செலவில் சவுக்கடி A.O.G தேவாலய வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகள் ஆரம்பம்!

Address

91 Lake Road
Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when PadaKu TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PadaKu TV:

Videos

Share


Other Media/News Companies in Batticaloa

Show All