SPN News.lk

SPN News.lk social public news

18/11/2023

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய சூரசம்ஹார நிகழ்வு !

17/11/2023

கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவர் துப்பாக்கியுடன் கைது !

15/11/2023

மட்டக்களப்புக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வருகை !

13/11/2023

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வு !

12/11/2023

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவனுக்கு விசேஷ அபிஷேகம் பூஜை !

04/11/2023

மட்டக்களப்பு வாவியில் சடலம் மீட்பு - அடையாளம் காண உதவி கோரும் பொலிசார்!!

மட்டக்களப்பு வாவியில் ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாவியில் (புதுப்பாலம்) நேற்று (03) திகதி இரவு அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க இனங்கானப்படாத குறித்த ஆணின் சடலத்தினை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் உதவி கோருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும், மட்டக்களப்பு மாவட்ட தடையவியல் பொலிசாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

02/11/2023

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

18/10/2023

பாக்கு நீரினை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்!!

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரினை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டவுள்ளதாக நேற்று (16) திகதி இரவு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு
எதிர்வரும் 23.10.2023 திகதி புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட சாரண மாணவர்கள் மூவர் இணைந்து இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரினை குறுகிய நேரத்திற்குள் கடந்து தலைமன்னாரை வந்தடைந்து மீண்டுமொருமுறை சாதனையினை நிலைநாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்தடையவுள்ள சிரேஷ்ட சாரணர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த சாதனையை நிலைநாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் பாடசாலை அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப்,
மாவட்ட சாரணர் ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன்,
சாரண ஆசிரியர் இன்னாசி கிறிஸ்டி மற்றும் சாரண மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோரும் கலந்துகொண்டிருந்ததுடன், அதிபர் மற்றும் சாரண ஆணையாளரினால் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், கொடிச்சீலைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஏற்கனவே சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டு வவுணதீவில் மோட்டர்சைக்கில் விபத்தில் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்ட...
11/10/2023

மட்டு வவுணதீவில் மோட்டர்சைக்கில் விபத்தில் இன்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மோட்டர்சைக்கிள விபத்தில் காயமடைந்த நிலையில் மட்டு போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கட்ட பொலிஸ் சப்இன்பெக்கடர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (11) அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவிலல் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த நாற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சப்இன்பெக்டர் சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டர்சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவு பகுதியில் அவர் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டர்சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அவரை போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் அவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரின் இறுதிகிரிகை பொலிசாரின் மரியாதையுடன் நாளை இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

09/10/2023

இலங்கை அரசு உடனடியாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ் நிலை காப்புச் சட்டம் மீளப்பெறவேண்டும் என தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் !

08/10/2023

மட்டக்களப்பு தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

மட்டு ஏறாவூரில் 9 வயது சிறுமியை பாலியல்சேட்டை புரிந்த 83 வயது வயோதிபர் கைது.  மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்த...
05/10/2023

மட்டு ஏறாவூரில் 9 வயது சிறுமியை பாலியல்சேட்டை புரிந்த 83 வயது வயோதிபர் கைது.

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டைபுரிந்த 83 வயதுடைய ஒருவரை நேற்று புதன்கிழமை (4) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 9 வயது சிறுமி மீது 83 வயதுடைய முதியவர் பாலியல் சேட்டை புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த முதியவரை நேற்று மாலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்...
05/10/2023

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயம் மாரடைப்பால் வியாழக்கிழமை (05) அதிகாலையில் உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டு தேவாலயத்தில் 2005 ம் ஆண்டு டிசெம்பர் 25 ம்திகதி ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து ரி.எம்வி.பி கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவந்த கஜன்மாமா மற்றும் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் உட்பட 5 பேரை கடந்த 2015 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 2019 ம் ஆண்டு குறித்த வழக்கில் இருந்து அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது

இந்த நிலையில் உயிரிழந்த கஜன்மாமா மட்டக்களப்பு 5ம் ஒழுங்கை நாவற்குடாவில் வசித்துவந்த நிலையில் சம்பவதினமான வியாழக்கிழமை (05) அதிகாலை 1 மணியளவில் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனாவைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

நிந்தவூரில் மோட்டர்சைக்கிளை திருடிய 3 பேர் வாழைச்சேனையில் கைது 4 மோட்டார்சைக்கிள் மீட்பு அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில...
05/10/2023

நிந்தவூரில் மோட்டர்சைக்கிளை திருடிய 3 பேர் வாழைச்சேனையில் கைது 4 மோட்டார்சைக்கிள் மீட்பு

அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைத்துவிட்டு வீட்டிற்கு பெயின்டிங் செய்து கொண்டிருந்த ஒருவரின் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த 3 பேரை நேற்று புதன்கிழமை (04) ஆம் திகதி கைது செய்ததுடன் திருடப்பட்ட மோட்டர் சைக்கள் உட்பட 4 மோட்டர் சைக்கிள்களை கராச் ஒன்றில் இருந்து மீட்டுள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் கடந்த 27ம் திகதி நிந்தவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு பெயின்டிங் வேலைக்கு மோட்டர்சைக்கிள் சென்று அதனை வீட்டின் வெளி மதில்பகுதியில் நிறுத்திவிட்டு பெயின்டிங் செய்த வேலையில் இருந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது மோட்டர் சைக்கிள் திருட்டுபோயுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் விசேட புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக சம்பவதினமான நேற்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற 3 பேரை கைது செய்ததுடன் திருடிச் சென்று மோட்டர்சைக்கிளை பாகங்களாக கழற்றி விற்கும் காராச் ஒன்றில் இருந்து வாழைச்சேனை பகுதியில் நேற்று முன்தினம் திருட்டுப்போன மோட்டர்சைக்கிள் உட்பட 4 மோட்டர்சைக்கிள்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 22, 28, 27 வயதுடைய பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி  90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர...
03/10/2023

அவுஸ்ரோலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது.

அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் மட்டு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.

திருகோணமலை ஓசில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனான போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்ரோலியாவிற்கு அனுப்புவதாக போலி அவுஸ்ரேலியா விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளார்.

இதனையடுத்து அந்த விசாவில் இலங்கையில் இருந்து பயணிக்க முடியாது இந்தியா சென்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக இந்தியாவுக்கு விமான மூலம் அனுப்பி வைத்த நிலையில் இந்தியா சென்ற குறித்த நபர் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமான மூலம் செல்வதற்காக முயற்சித்த போது அந்த விசா போலியானது என தெரியவந்துள்ளதையடுத்து அவர் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பினார்.

இதனையடுத்து 90 இலச்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியக பெற்ற போலி முகவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிசாரிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிசார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (02) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

03/10/2023

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம்

மட்டு கொம்மாந்துறையில் பெண் ஒருவரின் கழுத்தையறுத்து 10 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையடித்த கொள்ளையன் தப்பி ஓட்டம்  மட்டு ஏறாவ...
02/10/2023

மட்டு கொம்மாந்துறையில் பெண் ஒருவரின் கழுத்தையறுத்து 10 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையடித்த கொள்ளையன் தப்பி ஓட்டம்

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையன் அங்கு தனியாக இருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தை கத்தியால் வெட்டி அவரின் கழுத்தில் இருந்த 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (2) காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொம்மாந்துறை பகுதியில் தனிமையில் இருந்த 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் வீடடினுள் சம்பவதினமான இன்று காலை 7.30 மணிக்கு துவிச்சக்கரவண்டியில் தனியாக சென்ற கொள்ளையன் ஒருவன் உப்புகுந்து அவருடன் உரையாடிய நிலையில் அவர் வீட்டினுள் இருந்து வெளியே வந்ததையடுத்து அவரின் கழுத்தை கத்தியால் வெட்டியதயைடுத்து அவர் படுகாயமடைந்ததையடுத்து அவரின் கழுத்தில் இருந்த சுமார் 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடியுள்ளான்.

இதனையடுத்து வயோதிப பெண் சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவ இடத்துக்கு சென்ற ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தடவியல் பிரிவு பொலிசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்மாக்கிய 18 வயது காதலன் !மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்மாக்கிய 18 வயதுடைய காத...
30/09/2023

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்மாக்கிய 18 வயது காதலன் !

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்மாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

மட்டுதலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28ம் திகதி வியாழக்கிழமை அனுமதித்தனர் இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர்.

குறித்த சிறுமி அதேபிரதேசத்தைச் சேர்ந்த கராச் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடைய காதலன் உடன் ஏற்பட்ட உடல்உறவு காரணமாக கர்ப்மாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த இளைஞனை நேற்று 29ம் திதிகதி கைது செய்தபொலிசார் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அவரை 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

27/09/2023

தம்பிலுவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில் !

ஓட்டுமாவடியில் குளியலறையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைதுதனது மனைவியை குளியலறையில் வைத்து  கழுத்தையும் கையையும் வெ...
27/09/2023

ஓட்டுமாவடியில் குளியலறையில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

தனது மனைவியை குளியலறையில் வைத்து கழுத்தையும் கையையும் வெட்டி தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவனை கைது செய்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (27) வாழைச்சேனை ஓட்டுமாவடியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடி முதலாம் பிரிவு அல்முக்தார் வீதியில் கணவன் மனைவி வாழ்ந்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று பகல் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி குளியலறைக்கு சென்ற நிலையில் அவரை அங்கு வைத்து அவரின் கழுத்து மற்றும் கையை கூரிய ஆயதத்தால் வெட்டியபோது அவர் பலத்தகாயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்

இதனையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு படுகாயமடைந்த பெண்னை காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தையடுத்து மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவனை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடிமின்னல் தென்னைமரத்தில் தாக்கியதால் தென்னைமரம் தீபற்றி எரிந்தது இந்த நிலையில் வீடு தெய்வாத...
27/09/2023

மட்டக்களப்பு வெல்லாவெளியில் இடிமின்னல் தென்னைமரத்தில் தாக்கியதால் தென்னைமரம் தீபற்றி எரிந்தது இந்த நிலையில் வீடு தெய்வாதீனமாக தப்பிய சம்பவம் இன்று புதன்கிழமை (27) மாலை 3.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக மட்டு மாவட்டத்தில் சில தினங்களான மாலையில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் இன்று மாலை 3.45 மணியளவில் இடிமின்னல் தாக்கும் வெல்லாவெளியில் யாசோத என்பவரின் வீட்டிலுள்ள தென்னை மரத்தை தாக்கியதையடுத்து வீடு மின்னல் தாக்குதலில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் பயந்துள்ளதாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா  சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27) மறுக்கப்பட்டு கடிதம் ...
27/09/2023

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அரசாங்க அதிபர் கடந்த ஜனவரி 18 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவரும் இவர் எதிர்வரும் 29 ம் திகதி 60 வயதை பூர்த்தியடைந்த நிலையில் அரச சேவையில் இருந்து ஓய்வூதியம் பெற்றுகின்றார்.

இந்த நிலையில் தனது ஓய்வூதிய காலத்தின் பின்னர் தொடர்ந்து அரச சேவையில் கடமையாற்றுவதற்கு பொது உள்நாட்டு அமைச்சிடம் சேவை கால நீடிப்பு கோரியுள்ள நிலையில் கால நிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் இன்று அனுப்பபட்டுள்ளது

இதனையடுத்து அவர் எதிர்வரும் 29 ம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் இவருக்கு இன்று பிரியாவிடை கச்சேரியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27/09/2023

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் 13 தங்கப்பதக்கங்ளை பெற்று புதிய சாதனை!

26/09/2023

மட்டக்களப்பு பாடுமீன் பெருஞ் சமர்- 2023 Big Match- 2023

மட்டக்களப்பில் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது..  மட்டக்களப்பு ந...
22/09/2023

மட்டக்களப்பில் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது..

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி மகனை தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி மகனை அங்கு சென்று கலவரம் ஏற்படுத்திய பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை மதுபோதையில் நேற்று வியாழக்கிழமை (21) கைது செய்துள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் ஒருவர் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை மதுபோதையில் மனைவி மகன் மீது தாக்கியுள்ளார் இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி பொலிஸ் நிலையம் போவதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்துக்காக செல்லுகின்றீர்கள் நானும் வாரேன் அங்கு இரண்டில் ஒன்று பார்ப்பதாக கணவர் அவர்களை பின் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பெரும் கலவரம் ஏற்படுத்தியதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை வைத்தியசாலையில் அனுமதித்து மதுபோதை பாவித்தாரா என உறுதிபடுத்திய பின்னர் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டகோவை 1979 ம் ஆண்டு 4ம் பிரிவின் கீழ் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அவரை 2 ஆயிரத்து 500 ரூபா அபதாரம் செலுத்துமாறும் 25 ஆயிரம் ரூபா கொண்ட ஒருவருட நன்னடத்தை பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

21/09/2023
11/09/2023

எங்களுடைய அப்பாவி மக்களது உயிர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் !

யாழில் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தம் !யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத...
07/09/2023

யாழில் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தம் !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும் மாதாவின் உருவச் சிலையில் இருந்தே இவ்வாறு இரத்தம் வழிகின்றன.
கடந்த 6ம் திகதி முதல் இன்றுவரை இரத்தம் இடையிடையே வழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
கடந்த 26ம் திகதி பிரான்ஸில் இருந்து இவர்களின் மகளால் குறித்த மாதாவின் உருவச் சிலை கொண்டு வரப்பட்டது.
குறித்த வீட்டில் தரம் 5 ல் கல்வி கற்கும் 10 வயதுடைய ஆர்த்தி எனும் சிறுமிக்கு மாதா கொண்டு வருவதற்கு முன்னர் கண்ணில் இருந்து இரத்தம் வடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வைத்திய உதவிய நாடிய போதிலும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளாக தெரிவிக்கின்றனர்.

2022/2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் https://www.d...
04/09/2023

2022/2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

03/09/2023

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் திருவிழா !

கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று (03) ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வரலாற்று சின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் திகழ்கின்றது. ‘கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலம்’ ஆக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற வசந்த மண்டப பூசையினைத் தொடர்ந்து பார்வதி, சிவன், பிள்ளையார், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியன் ஆகியோர் வெளிவீதியில் சித்திரத் தேரில் ஆரோகணிக்கப்பட்டதை தொடர்ந்து விசேட பூசைகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து மாலை 4.00மணிக்கு ஆரம்பமான தேரோட்டநிகழ்வில் பிள்ளையார் தேரும் சித்திரத்தேரும் வீதிவலம்வருவது வழமை . இத்தேர்தல்களில் வடம்பொருத்தி வடத்தின் ஊடாக பக்தர்கள் தேரினை இழுத்துச்செல்வார்கள்.

ஆனால் இவ்வாண்டு வீதிவலம் வந்த பிள்ளையார் தேர் இடைநடுவில் நின்றதுடன் சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஆறுதடவைகன் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளது. அதன்பின் வரலாற்றில் முதல்தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதிவலம் வந்துள்ளது.

இதேபோன்று முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது 1920களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும், 1933இல் உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும் மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.

இன்று நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பீதியினை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏதோவொரு தெய்வக்குற்றம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

03/09/2023

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருக்கோவில் முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு !

02/09/2023

ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலத்தில் பாத யாத்திரை !

மட்ட்டக்களப்பு ஆரோக்கிய மாதா தேவலாயத்தில் இருந்து ஆயித்தியமலை துயா சகாயமாதா தேவாலயத்துக்கான பாதயாத்திரை இன்று சனிக்கிழமை (02) காலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த பாதையாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பாதையாத்திரையக சென்றனர்.

ஆயித்தியமலை துயா சகாயமாதா தேவாலய வருடாந்த திருவிழாவையிட்டு வருடாவருடம் மக்கள் தமது வேண்டுதலை நிறைவேற்று பாதையாத்திரையக செல்வதுடன் மட்டு ஆரோக்கிய மாதா வேலாயத்தில் இருந்து மாதாவின் திரு உருவத்தை எடுத்துச் செல்வது வழமை.

இந்த நிலையில் வருடாந்த திருவிழாவையிட்டு இன்று மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆயித்தியமவை பிரசேத்திலுள்ள துயா சகாயமாதா தேவாலத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைக்கப்பட்டு விசேட ஆராதனை இடம்பெற்றது

இதில் அம்பாறை மட்டக்களப்பு பமாவட்டங்களிலுள்ள தேவாலய பங்கு தந்தைகள் அருட்சகோதரிகள் உட்பட பல்யாயிரக்கணக்கானோர் கரந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்

01/09/2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு நோயாளிகள் வெளியே இருந்து மருந்து வாங்கி வந்து அரச வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுகின்றனர்

அரச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை ...
01/09/2023

அரச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பாடசாலை ஒன்றின் அதிபர், அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரியதாக, கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய குறித்த மாணவ தலைவியை பாடசாலை அதிபர் தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும், எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது? என்பதை பதியுமாறும், மாதவிடாய் காரணமாகத்தான் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்க வில்லை? போன்ற தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் உத்தரவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அந்தப் பாடசாலையில் உள்ள சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மா...
31/08/2023

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 42 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீற்றர் ஒன்றிற்கு 1 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 359 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் ​அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 231 ரூபாவாகும்

31/08/2023

Chairman" நானும் இந்த மாவட்டத்தில் நீண்டகாலமாக அரசியல் செய்கிறேன் எனக்கும் அரசியல் தெரியும் !

ஊடகவியலாளர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் பாராளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் இன்று (30) வியாழக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

31/08/2023

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு - மனித உரிமையில் முறைப்பாடு !

30/08/2023

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி
கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி!

29/08/2023

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு !

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when SPN News.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Batticaloa

Show All

You may also like