MTM MEDIA மறத்தமிழர் முரசம்

MTM MEDIA மறத்தமிழர் முரசம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MTM MEDIA மறத்தமிழர் முரசம், Media/News Company, Batticaloa, Batticaloa.

29/11/2023

இன்றைய தினம் மாவீரர் தினம் அன்று கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித மேலதிக தகவலும் நிலைப்பாடும் கிடைக்காத விடத்து வாழைச்சேனை ASP காரியாலயத்துக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேரடியாக விஜயம் செய்துள்ளார்.
விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது....

கைது செயப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனை ஜனாதிபதியின் முக்கிய கவனத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் எடுத்துச் செல்லப்படும் என்று உறுதியளித்தார்.

26/11/2023

தமிழகத்தில் ZEE தமிழ் 2ND FINALIST கில்மிசாவின் பாடல்கள்

ZEE தமிழின் சரிகமபா நிகழ்ச்சியின் 2nd FINALIST ஆனார் கில்மிசாKilmisha Yaazhisai
26/11/2023

ZEE தமிழின் சரிகமபா நிகழ்ச்சியின் 2nd FINALIST ஆனார் கில்மிசா
Kilmisha Yaazhisai

சினிமா மோகத்தில் இருந்து விடுபடுங்கள்...இன்று வடக்கிலே இளைஞர்கள் சினிமா மோகத்திலே கையிலே வாள்களுடன் அலைந்து திரிவதை பார்...
26/11/2023

சினிமா மோகத்தில் இருந்து விடுபடுங்கள்...

இன்று வடக்கிலே இளைஞர்கள் சினிமா மோகத்திலே கையிலே வாள்களுடன் அலைந்து திரிவதை பார்க்கும் போது,

எங்களுடைய நெஞ்சம் கனக்கின்றது. இன்று சினிமாவிலே பைத்தியங்கள் பிடித்தவர்கள் போல நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வதும், சிலர் நடிகர்களின் படங்களை தங்களது சட்டைப் பையிலே கொண்டு திரிவதும் மன வேதனையினை தருகின்றது.

இந்தகைய காட்சிகளை பார்க்கின்ற போது வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத ஒரு சமூக மாற்றம் எமது மண்ணிலே தோன்றி விட்டது என்ற ஆதங்கம் மனதிலே தோன்றி கவலை தருகின்றது.

சினிமா என்பது ஒரு கலை வடிவம் அதனை முற்றுமுழுவதுமாக கூடாது என்று சொல்லுகின்ற தகுதி எனக்கு கிடையாது. நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல கதைகள், நல்ல சிந்தனைக்கு விருந்தான காட்சிகள், வெறும் 3 மணத்தியாலத்துள் இந்த உலகத்திற்கு நல்ல கதைகளை சொல்லுகின்ற சினிமாக்களும் உண்டு.

ஆனால் சினிமாவிலே பாத்திரங்களாக வந்துவிட்டு போகின்றவர்கள் எல்லோரும் தங்கள் வாழ்வில் பத்திரமாக வாழ்கின்றார்கள் என்று அபிப்பிராயம் கொள்வது பெரும் தவறு.

இந்திய சினிமா நட்சத்திரங்கள் பற்றி நான் சிறு வயது தொடக்கம் வாசித்து கொண்டு இருக்கின்றேன். திரையிலே வருகின்ற கதா நாயகர்கள் எல்லோரும் தங்கள் வாழ்வில் இராமனாக, சீதையாக அல்லது அரிச்சந்திரனாக அவர்கள் நடத்திருக்கலாமே அல்லாமல் அவர்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.

இவர்களை பார்த்து ஏமாந்து விடுகின்ற இளைய சமூகம் இந்தியாவிலே இருந்தது. இந்திய மாநிலங்களிலே கேரள மாநிலம் 96 வீதம் கல்வியறிவு பெற்று உயர்ந்த நிலையிலே இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டிலே இந்த சினிமா பாதிப்புக்கள் இன்றும் உள்ளன.

தமது சிறு வயதிலே பாடசாலைக்கு செல்லாதவர்கள் கூட அங்கு உள்ளார்கள், பலர் வறுமையிலே வாடுகின்றார்கள்.

தமிழ்நாட்டிலே கல்வியறிவு குறைந்தவர்கள் மத்தியிலே இந்த சினிமா மோகமானது வேகம் கொண்டு இந்த சினிமாவிலே நடடிப்பவர்களை கடவுளாக உயர்த்தி போற்றும் நிலை உருவாகி அவர்கள் இந்த நடிகர்களுக்காக சங்கங்கள் அமைத்துள்ளார்கள்.

ஒரு காலத்திலே தமிழுக்கும் சங்கம் அமைத்து, முத்தமிழுக்கும் சங்கம் அமைத்து மதுரை தமிழ் சங்கம் என்றும் சென்னை தமிழ் சங்கம் என்றும் சங்கங்கள் அமைத்து தமிழை போற்றிக் காத்த தமிழர் பண்பாட்டிற்கு அப்பாலே,

நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சங்கம் அமைத்து அதற்கு தலைவர் என்றும் செயலாளர் என்றும் தேர்தல் நடாத்தும் அவலம் அங்கு நடைபெறுகின்ற செய்திகளை பத்திரிகைகளிலே பார்க்கின்ற பொழுது எமது மண்ணை நினைத்து சற்று ஆறுதலாக இருந்தது.

எங்கள் மண்ணிலே சினிமா நாயகர்களுக்கு யாருமே சங்கம் அமைக்கவில்லை சினிமா நாயகர்களை யாரும் வீட்டிலே படமாக வைக்கவில்லை, சினிமா நாயகர்களின் படங்களை பொறித்த உடைகளை யாருமே அணிந்து செல்லவில்லை,

என்று நிதானமானர்கள் எல்லோரும் எங்கள் மண்ணிலே வாழ்கின்றார்கள் என்று நான் தமிழ் நாட்டிற்கு செல்லும் பொழுதுகளில் நினைத்து ஆறுதல் அடைந்தேன்.

என்ன பரிதாபம்?.. போருக்கு பின்பு ஏற்பட்ட மாற்றங்களின் விளைவு இன்று எதிர்பாரத விதமாக எங்கள் மண்ணிலே இந்த போலித்தனமான சினிமாவின் சாயல்கள் அவர்களின் உள்ளங்களிலே ஊறி இருக்கின்றது.

இதன் காரணமாகத்தான் நிதானம் கெட்ட செயற்பாடுகள் எமது மண்ணிலே நடைபெறுகின்றது.

அன்புக்குரிய மாணவர்களே உங்களுடைய கைப் பையிலே ஒரு விஞ்ஞானியின் படம் இருக்கலாம், ஒரு மெய்ஞானியின் படம் இருக்கலாம், பெற்றவர்களின் படம் இருக்காலம் ஆனால் நடடிகர்களின் படங்களை நீங்கள் சுமப்பீர்களானால் நீங்கள் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் அல்ல.

அன்பு குழந்தைகளே அப்படி ஏதாவது சினிமா படங்களை நீங்கள் வைத்திருந்தால் அவற்றை இன்றே அப்புறப்படுத்தி விடுங்கள்.

இந்த சினிமா நடிகர்கள் வெறும் பணத்திற்காக நடிக்கின்றார்கள். இந் சினிமா மோகத்திலே தமிழர்கள் ஊறி அழிகின்றார்கள் என்பதை உணர்ந்து வேறு பல மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டிலே படம் நடடிக்கின்றார்கள்.

பலபேருக்கு தமிழ் மொழியே தெரியாது. படம் நடித்து பெரிய கதா நாயகர்களாக கொண்டாடுகின்ற பலருக்கு தமிழ் மொழியே தெரியாது.

தமிழர்களே பல கோடிகளை செலவு செய்து படம் எடுக்கின்றார்கள் தமிழர்களே நாயகன் நாயகிகளை கொண்டாடுகின்றார்கள் ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது.

இந்த 21ம் நூற்றாண்டிலே தமிழன் ஏமாறுகின்றானே...

அன்புக்குரிய மாணவர்களே சினிமாவிலே வருகின்ற நுட்பங்கள் அனைத்தும் எமக்கு அப்பாற்பட்டவை இவை அனைத்தும் தொழில்நுட்பத்தினாலே உருவாக்கப்பட்டவை.

மிகப் பெரிய உயரத்தில் இருந்து குதிக்கும் கதாநாயகன் எந்ந காயமும் இல்லாமல் தப்புகின்றான் என்று கனவு காண வேண்டாம்.

சம தரையிலே ஓடுகின்ற நீங்கள் விழுந்தாலே காயம் ஏற்படுகின்றது ஆனால் மலையிலே இருந்து விழுந்து எழுந்து நாயகன் 10 பேரை அடித்து வீழ்த்துகின்றான் என்றால் இந்த 21ம் நூற்றாண்டிலே என்ன வேடிக்கை?

ஆற்றல் உள்ள மாணவர்கள் இது தொழில்நுட்பத்தின் கெட்டித்தனம் என்று நன்றாக ரசிக்கலாம் ஆனால் அது கதாநாயகனின் கெட்டித்தனம் என்று ரசிப்பதுதான் பெரும் ஆபத்து ஆகும்.

இன்று எமது மண்ணிலே பல இளைஞர்கள் கையிலே வாள்களுடன் திரிகின்றார்கள். சினிமா காட்சிகளிலே உள்ளது போல அவர்கள் வாள்களை கையிலே எடுத்து தெருக்களிலே சண்டை பிடிக்கின்றார்கள்.

யாழ் போதனா வைத்தியசாலையிலே மருத்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறான சூழலிலே ஒவ்வொரு மாதமும் வைத்தியசாலையிலே படுக்கையிலே கிடக்கின்ற இளைஞர்களை போய் பாருங்கள்.

இவர்களுக்கு மூலம் என்ன?.. சினிமாதான்...

சினிமாவிலே காட்டுகின்ற வாள்கள் அனைத்தும் போலியானவை. வாள்களுடன் சட்டை போடும் காட்சிகளிலே சினிமா கதாநாயகனின் முகத்தினை வைத்து தொழில்நுட்பம் மூலம் காட்சிகளை தயார் செய்கின்றார்கள்.

ஆனால் பல இளைஞர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால் எங்களுடைய கதா நாயகன் நன்றாக வாள் வீசுகின்றான் என்று.

அன்பு குழந்தைகளே... இந்த சினிமா போலித்தனங்களில் நீங்கள் அகப்பட்டு விடக்கூடாது. நன்மைகளை செய்த சினிமா இன்று கெடுதல்களை உருவாக்குகின்றது.

வயதிற்கு மூத்தவர்களை ஏளனம் செய்வது,பொருளை திருடுவதற்காக கொலை செய்வது போன்ற இன்றைய இளஞர்களின் நடத்தைகள் எல்லாம் தற்கால சினிமாவிலே காட்டியவைதான்.

எமது மண்ணிலே இன்றைய திருடர்கள் எங்கே இருந்து கற்றார்கள்? சினிமாவிலே சில காட்சிகளை அவ்வாறு காட்டி விட்டு போய்விடார்கள்.

பணம் தேவை என்றவுடன் சினிமாவிலே கற்றதை கையாளுகின்றார்கள். ஒரு காலத்திலே ஆங்கில படங்களிலே மட்டும் காட்டுகின்ற காட்சிகளை தற்காலத்தில் தமிழ் சினிமா காட்சிகளிலே காட்டுகின்றார்கள்.

இன்று எங்கள் மண்ணிலே சினிமாவிலே பார்த்து விட்டு எத்தனை கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒரு இரக்கமற்ற ஒரு சமூகத்தை நாங்கள் எங்கள் மண்ணிலே உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.

சினிமாவிலேதான் பொருட்களை கடத்துகின்ற நுட்பங்களை காட்டிக் கொடுத்தார்கள். இன்று வடக்கிலே இந்தளவு போதைப் பொருட்களை கடத்துகின்றார்கள் என்றால் அது சினிமா கற்று தந்த தந்திரங்கள்தான்.

இன்று எமது மண்ணிலே போதைகளை கடத்துபவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிபதி போல சிறப்பான தோற்றத்துடன் திரிகின்றார்கள் யாரும் இவர்களை எளிதில் அடையாளம் காண முடியாத அளவிற்கு திரிகின்றார்கள்.

சினிமாவிலே வரும் காட்சிகளை பார்த்து தத்தம் தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு காலத்திலே யாழ்ப்பாணம் நிமிர்ந்து நின்றது. யாருக்கும் அஞ்சாது சின்றது, நிதானமாகத்தான் எந்த ஒன்றையும் செய்யும். ஒரு காலத்திலே 5 சதம் செலவு செய்வது என்றாலும் வினாக செலவு செய்ய மாட்டர்கள்.

ஒரு காலத்திலே வடக்கினுடைய பொருளாதார வலுமையினை ஏனையவர்கள் பெருமையுடன் பேசினார்கள்.

இந்த பண்பாட்டிற்கு ஆபத்து வரக்கூடிய ஆடம்பரமான செலவீனங்கள் எமது மண்ணிலே தொடங்கி விட்டது. சினிமா மோகம் பலர் வாழ்வில் குடி கொண்டுள்ளது. திருமண வீட்டிலே ஒரு பெண்னை அலங்கரிப்பதற்கு பல இலட்சங்களை செலவு செய்கின்றார்கள்.

எங்கள் மண்ணிலே பல பெண்கள் தமிழுக்காக வாழ்ந்து உயிர் துறந்த பண்பாட்டிலே இன்று எங்கள் தமிழ் பெண்கள் ஆந்திரா வடிவமைப்பு, கேராள வடிமைப்பு என்று கூறிக் கொண்டு அலங்கரிக்கின்றார்கள்.

எங்கள் பண்பாட்டிற்கு அப்பால் பெண்களை அலங்கரிப்பதெல்லாம் எங்கள் தமிழ் பண்பாட்டிற்கு செய்யும் பொரும் துரோகம் ஆகும்.

இந்த ஒப்பனை பெண் கலைஞர்களை எங்கள் மண்ணிலே உருவாக்கியிருப்பது இந்த சினிமாதான். இந்த ஒப்பகைளை பார்த்து விட்டு சிலர் அழகாக இருப்பதாக சொல்லலாம் ஆனால் இது பெரும் ஆபத்து. எங்கள் பண்பாட்டை குழி தோண்டி புதைக்கின்ற ஆபத்து.

எத்தைனை நூற்றாண்டுகள் பழமையான வரலர்றை கொண்ட எங்கள் மண்ணிற்கு இந்த சினிமா கதா நாயகிகளை பார்த்து பார்த்து பெண்கள் எல்லோரும் திசை மாறிச் செல்கின்றார்கள்.

அன்பு குழந்தைகளே இந்த போலித்தனமான வலையிலே நீங்கள் அகப்பட்டு விடாதீர்கள்.

சினிமா நடிகர்கள் கோடிக் கனக்கில் பணம் சம்பாதிக்கின்றார்கள் ஆனால் ஒரு ஏழைக்கு கொடுக்க மாட்டர்கள்.

சினிமாவிலே கோடிக் கனக்கில் உழைத்து தள்ளுகின்ற கதாநாயகர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம் பல தர்ம காரியங்கள் செய்திருக்கலாம்.

கோடிகளை சம்பளமாக பெற்றுக் கொள்ளும் நடிகர்கள் நினைத்திருந்தால் தெருக்களிலும், மரங்களுக்கு அடியிலும், புகையிர தண்டபாளங்களின் அருகிலும் வாழும் ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாம்.

சினிமாவிலே தங்களை ஏழைகளின் பங்காளன் என வீர வசனங்களை பேசுபவர்கள் சுய வாழ்விலே ஒரு ஏழையின் வாழ்வில் ஒரு சுபீட்சத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.

சினிமாவிலே ஏழைகளின் பங்காளன் என்றும் அநியாயங்களை எதிர்ப்பவர்கள் போலவும் இளைஞர்களின் மனங்களில் குடி கொள்ளும் சினிமா நடிகர்கள் நிய வாழ்விலே தாம் சார்ந்த சமூகங்களிற்கு ஏதுவும் செய்வதில்லை.

முன்பு பல நடிகர்கள் தர்மங்கள் செய்திருகின்றார்கள் ஆனால் தற்காலத்தில் 90 வீதனமா நடிகர்கள் நடிகைகள் தர்மம் செய்வதில்லை.

எனவே அன்பு குழந்தைகளே போலியான இந்த சினிமா காட்சிகளை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இன்று எங்கள் மண்ணிலே பலர் பணம் கொடுத்து உடலிலே சினிமா நடிகர்களின் உருவங்களை பச்சை குத்துகின்றார்கள்.

நாளும் பொழுதும் தனது பிள்ளைகளுக்காக அரும் பாடுபட்ட பெற்றோர்களை மறந்து சினிமா நடிகர்களை பச்சை குத்தும் அவலம் இன்று எங்கள் மண்ணிலே நடைபெறுகின்றது.

தமது வாழ்விலே மொழிகளை கடந்து, தேசங்களை கடந்து, மதங்களை கடந்து வாழ்ந்த எத்தனையோ சரித்திர நாயகர்களின் வரலாறுகள் உள்ளன அவற்றை படியுங்கள் இந்த சினிமா போலிகளை நம்பாதீர்கள்.

எந்தவொரு நடிகர்களின் சங்கங்களை எங்கள் மண்ணில் தமிழர்கள் கொண்டாடக் கூடாது. நடிகர்களுக்காக புத்தி கெட்டவர்களாக நடப்போமாக இருந்தால் எதற்கு பள்ளிக்கூடங்கள்? ஏன் ஆசிரியர்கள்? உங்களுடைய பெற்றோர்களுக்கு செய்கின்ற கைமாறு இதுவா?

எங்களுடைய வளரும் பயிர்களாக உள்ள மாணவர்கள் புனிதமாக வளர வேண்டும். தற்கால சினிமா படங்களை பார்க்கின்ற போது மிகவும் கவலையாக இருக்கின்றது.

ஏனென்றால் தரமான அறிவு நிறைந்த படைப்பாளிகளின் போற்றத்தக்க சினிமா படங்களை கடந்த காலங்களில் பார்த்த நாங்கள் தற்காலத்தில் வெளிவரும் சினிமா படங்களை பார்த்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

ஒரு காலத்திலே சினிமாவிலே பாடல்களை நிறைந்த அறிவுடைய கவிஞர்களால் படைக்கப்பட்டது. இன்று ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துவதும் தமிழ் மொழியினை அசிங்கப்படுத்துவம் சினிமாவில் மலிந்து போய் உள்ளது.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாத காவியங்களை முன்னைய சினிமாக்களில் பல மகான்கள் எமக்காக ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

ஆனால் இன்று சினிமா பாடல் என்றால் ஓசை அதிகமாகிவிடுகின்றது மேலைத்தேச வாத்தியங்கள் பாடலை தின்று விடுகின்றது கருத்து அங்கே கைகழிவிப் போகின்றது தமிழை தேட வேண்டியிருக்கின்றது.

தமிழ் படைப்புக்களில் தமிழ் அசிங்கப்படுத்தப்படுமேயானால் அது தமிழ் அன்னைக்கு செய்கின்ற துரோகம் ஆகும்.

ஒரு காலத்தியே என்ன அற்புதமான தமிழ் பாடல்கள் இருந்தது என்ன அற்புதமான படைப்புக்கள் இருந்தது இன்று அவற்றை காண முடிவதில்லை.

கவிஞர் வைரமுத்துவைப் பார்த்து ஒருவர் கேட்டார் ஆரம்பத்தில் நல்ல தமிழை தந்தீர்கள் இன்று நீங்கள் படைப்பது வானிபத்திற்காக இருக்கின்றது. அதற்கு அவர் நாங்கள் என்ன செய்ய முடியும் தயாரிப்பாளர்கள் அப்படி கேட்கின்றார்கள் என பதில் சொன்னார்.

ஒரு தமிழ் கவிஞன் அப்படி பதில் சொல்ல முடியாது.

இன்று தமிழ் படங்களுக்கு பெயர் வைப்பதற்கு கூட தமிழ் தட்டுப்பாடாக உள்ளது.கோடான கோடி தமிழர்கள் பார்க்கின்ற படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க மறுக்கின்றார்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தென்னாடு என்று போற்றுகின்ற தமிழ்நாட்டிலே தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர் இல்லை.

மகாகவி பாரதி போன்றவர்களின் படைப்புக்களை எடுத்து சினிமாக்களிலே முன்பு படைத்தார்கள் சங்கீத விற்பன்னர்களை பயன்படுத்தி அருமையான படைப்புக்களை தந்தார்கள். எண்ண முடியாத அரும் பெரும் சொத்துக்கள் தமிழர்களிடையே உள்ள போதும்,

இன்று போலித்தனமான காட்சிகளை வைத்து சினிமாக்களை தயாரிக்கின்றார்கள்.

எனவே அன்பான குழந்தைகளே...

இந்த போலியான சினிமாக்காரர்களையும் காட்சிகளையும் நம்பி அதனை பின்பற்றாமல் எம் மண்ணிற்கென்ற தனித்துவத்துடன் வாழ்ந்து,

எமது மண்ணிற்கு பெருமை தேடித்தாருங்கள்...

காலங்காலமாக கல்விச்சூழல் உள்ளது எமது யாழ்ப்பாணம். தடக்கி விழுந்தாலும் ஒரு தமிழ் பண்டிதார் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார் என்று கி.வ.ஜெகநாதன் யாழ்ப்பாணத்தை புகழ்ந்து பேசினார்.

மிகப்பெரிய எழுத்தாளர் டாக்கடர் மு.வரதராஜன் இலங்கை விஜயம் என்ற தனது கட்டுரையிலே மூளை வளம் மிக்க நாடு வடக்கு என்று எழுதினார்.

இத்தகைய சாண்றோர்கள் போற்றிய இந்த மண்ணிலே ஒரு நடிகனுக்கு படம் கட்டி பால் ஊற்றி கொண்டாடும் அவலம் நடைபெறுகின்றது.

இதைப் பார்த்து வேதனை வராதா? என்ன சோதனை?

எங்களுக்குரிய அடையாளங்களை தெலைத்து விட்டு சினிமாவின் அடையாளங்களை பாதுகாக்கின்ற அவலம் எங்கள் மண்ணிலே நடைபெறுவது வேதனை தருகின்றது.

போலித்தனமான சினிமாக்களை நம்பி இதற்கு அடிமையாகி விடாதீர்கள்.

நல்லதை வரவேற்று தீயவற்றை கைவிட்டு நல்ல சமூகமாக எங்கள் சமூகம் மாற குழந்தைகளே போலித்தனமான சினிமாக்களை கைவிடுங்கள்.

நன்றி

ஆறு.திருமுருகன்,
தலைவர்,
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை

இராஜராஜசோழரின் ஓவியம்:தஞ்சை பெரியகோவிலில் உள்ள சாந்தாரஅறை ஓவியம்,சோழர் செப்பேடு மற்றும் மானம்பாடி கோவிலில் உள்ள சிற்பம் ...
30/10/2023

இராஜராஜசோழரின் ஓவியம்:

தஞ்சை பெரியகோவிலில் உள்ள சாந்தாரஅறை ஓவியம்,சோழர் செப்பேடு மற்றும் மானம்பாடி கோவிலில் உள்ள சிற்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இராஜராஜ சோழரின் உருவம்,சோழசேனை குழுவினரால் வெளியிடப்பட்டது.

கைகளில் ஆத்திப்பூ,மார்பில் விழுப்புண்,அவரது செப்புத்திருமேனியில் உள்ளதைப்போன்று காது வளர்த்தல், சன்னவீரம் ,மிகப்பெரிய கொண்டை வளர்த்தல் என நுட்பமாய் மெனக்கெட்டு வரைந்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர்.கோ தெய்வநாயகம் ஐயா அவர்களும், சாகித்ய அகாடமி விருது பெற்ற, முனைவர்.மு.ராஜேந்திரன் IAS அவர்களும் இணைந்து, ஓவியத்தினை ராஜராஜர் பதவியேற்ற ஆடி புணர்பூசத்தில் திருச்சி மாவட்டம் சோழமாதேவி கோவிலில் வெளியிட்டனர்.

செய்தி!ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் துணைவியார் அமரர் கௌரி சங்கரி தவராசாவின் 2,ம் ஆண்டு நினைவு நிகழ்வு மட்ட...
30/10/2023

செய்தி!
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் துணைவியார் அமரர் கௌரி சங்கரி தவராசாவின் 2,ம் ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பு உதயம் விழிப்புணர்வற்றோர் இல்லத்தில் நேற்று 29.10.2023 இடம்பெற்றது..!

அவரின் நினைவாக உதயம் விழிப்புணர்வற்றோர் உறுப்பினர்களுக்கு உலர் உணவுப்பொதிகளும், மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது-29/10/2023 இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் மற்றும் அரியநேந்திரன் தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் சேயோன் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



@gmail.com

செய்தி!மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமா...
30/10/2023

செய்தி!
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சமூக சேவை திணைக்கள உத்தியோகஸ்தர்களினால் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விசேட தேவை உடைய குடும்ப தலைவிகள் சிலருக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் கெளரவ ஆளுநர் அவர்களின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்கள உயர் அதிகாரிகளால் பா.உறுப்பினர் அவர்களின் அலுவலகத்தில் வைத்து வாழ்வாதார ஊக்குவிப்பு காசோலை வழங்கி வைக்கப்பட்டது.



@gmail.com

29/10/2023

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தாந்தாமலை செல்லும் வழியில் நாற்பதுவட்டை சந்தியில் மிக உயரமான பாலமுருகன் சிலை நிர்மானிக்கப்பட்டு குடமுழுக்கு செய்து திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு பக்த அடியார்களுக்கு மாபெரும் அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த குடமுழுக்கு வைபவமானது இன்று(23.10.2023) தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது விசேட யாகபூஜை, கும்பபூஜை நடைபெற்றதை தொடர்ந்து முச்சந்தி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

விசேட பூஜைகள்
அதனை தொடர்ந்து பாலமுருகனுக்கு விசேட பூஜைகள் அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹா குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கிழக்கு இலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு திருக்குடமுழுக்கு விழா

குறித்த பெருவிழாவில் நீர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://youtube.com/shorts/-JbUcacXoMc?si=Q9xViXJiNV81fmnC

https://whatsapp.com/channel/0029VaArXPMEwEjuCPX3wW1k

இன்றைய நாள் எப்படி
28/10/2023

இன்றைய நாள் எப்படி

இன்றைய ராசி பலன்
23/10/2023

இன்றைய ராசி பலன்

22/10/2023

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை (20) வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற. இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது.

சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

MTM MEDIA மறத்தமிழர் முரசம்

22/10/2023


22/10/2023

அன்றும் இன்றும்
22/10/2023

அன்றும் இன்றும்

CINIMA CLICKமகள் அனோஸ்காவுடன் நடிகை சாளினி
22/10/2023

CINIMA CLICK
மகள் அனோஸ்காவுடன் நடிகை சாளினி

தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் ; அதனை விட மாகாண சபை உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம் - மகிந்த தேசப்பிரிய!அரசாங்கத்தின் உ...
22/10/2023

தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் ; அதனை விட மாகாண சபை உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம் - மகிந்த தேசப்பிரிய!

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய ஆறுமாதங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை ஆணைக்குழு பூர்த்தி செய்வது மிகவும் கடினம்,பல மணித்தியாலங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியிருக்கும் ஒருவருட காலத்திற்கு கூட இது நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை அவை இந்த காலத்தின் தேவை எனினும் இவற்றிற்கு முன்னர் எங்களிற்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://whatsapp.com/channel/0029VaArXPMEwEjuCPX3wW1k

https://www.youtube.com/

mtmmedia6@gmail. Com

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசின் கொள்கையாகும் - ஜனாத...
22/10/2023

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசின் கொள்கையாகும் - ஜனாதிபதி ரணில் !

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா. பொதுச் செயலாளரின் வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார், முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் மத மற்றும் கலாசார பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர்.

தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டத்தின் சிறப்புரையை அஷ்ஷெய்க் பி. நிஹாமத்துல்லாஹ் மௌலவி ஆற்றினார்.

தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டம் 2023க்கான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டதுடன், தபால்மா அதிபர் ருவன் சத்குமாரவினால் ஜனாதிபதிக்கு முதல் முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை வழங்கப்பட்டது.

தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவுச் சின்னம் மற்றும் "மன்னார் மாவட்ட வரலாறு" புத்தகமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நபிநாயகத்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வடிவமைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிவைத்தார்.

மேலும், பள்ளிவாசல்களில் நீண்ட காலம் பணியாற்றிய மௌலவிகளுக்கு கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தளம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருக்கும் புத்தளம் மாவட்ட ஜம் இதுல் உலமா அமைப்பின் தலைவருக்கும் நினைவு பரிசுகள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜனாதிபதி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

இன்று நாம் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். மன்னார் மாவட்டத்தில் நான் கலந்துகொண்ட இரண்டாவது சமய விழா இதுவாகும். சில மாதங்களுக்கு முன் மடு தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டோம்.

இந்த நிகழ்வை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தமைக்கு மத கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்வுடன் இங்கு புதிய பாடசாலை கட்டடம் திறப்பு, வீட்டுத்திட்டம் போன்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்துக்கு இந்த அபிவிருத்தி தேவை. இந்தப் பகுதி போரால் பாதிக்கப்பட்ட பகுதி. எனவே, இந்தப் பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம்.

குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் வீதிகள் அமைப்பது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றோம். அமைச்சர் பாராளுமன்றத்திலும் அதை ஞாபகப்படுத்துகிறார்.

குறிப்பாக, இப்பிரதேசத்தில் வீடுகளை நிர்மாணிப்பது போன்று கல்வியும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

மன்னார் நகரில் கல்வி நன்றாக உள்ளது. ஆனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கல்வியில் திருப்தியடைய முடியாது.

அத்துடன், இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி குறித்தும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையில் கடல் போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்கான பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை காங்கேசன்துறையில் ஆரம்பித்தோம்; அடுத்து தலைமன்னாரில் ஆரம்பிக்கப்படும். அதேநேரம் இந்தியாவும் இலங்கையும் இணைந்து மின்சார அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. அது இந்த மன்னார் ஊடாகவும் நடக்கிறது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

இது வெறும் ஆரம்பம்தான். இதன் மூலம் எதிர்காலத்தில் மன்னார் அபிவிருத்தி அடையும். குறிப்பாக இந்த பகுதியில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை ஆற்றலுக்கு அதிக சாத்தியம் உள்ளது. இங்கு கிடைக்கும் சூரிய சக்தியை கொண்டு இப்பகுதியை மேம்படுத்த முடியும். புத்தளத்திலிருந்து மன்னார் வரை யாழ். குடாநாட்டின் ஊடாக முல்லைத்தீவு வரை அந்த வாய்ப்புள்ளது. இதை மையமாக வைத்து புனரினை ஆக்குவோம் என்றும் நம்புகிறோம்.

மேலும் மன்னாரை சுற்றுலா மையமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் மீன்பிடி தொழில் வளர்ச்சி அடையும்போது மன்னாருக்கு புதிய பொருளாதாரம் கிடைக்கும்.

இன்று நாம் இங்கு நபிகள் நாயகத்தை நினைவுகூருவோம். நபிகள் நாயகம் அவர்கள் கூறிய அதே கோட்பாடுதான் இன்று இலங்கையில் உள்ளது. எனவே இந்த விழாவை தேசிய விழாவாக கருதுகிறோம். அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதே எங்கள் கொள்கை.

மேலும் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதே எங்கள் நோக்கம். இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அரசும் அவற்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் திவாலான நாட்டைக் கைப்பற்றினேன். அந்த திவால் நிலையில் இருந்து இன்னும் மீண்டு வருகிறோம். எனவே, அந்த பணியை முறையாக மேற்கொள்ளவுள்ளோம்.

இன்றைக்கு மொராக்கோ முதல் இந்தோனேஷியா வரை ஆபிரிக்கா, ஐரோப்பா என எல்லா இடங்களிலும் நபிகளாரின் இஸ்லாமியக் கோட்பாடு பரவியுள்ளது.

நபிகளார் இந்தக் கோட்பாட்டை பிரசங்கித்த போது, எல்லா கிறிஸ்தவ யூதர்களும் அந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இன்று பெரிய பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அரசாங்கம் தனது கருத்தை தெரிவித்திருந்தது. பாராளுமன்றத்திலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

20 உணவு லொரிகள் காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கேள்விப்பட்டோம். ஆனால் இது போதுமா என்ற கேள்வி எழுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீன மக்கள் காஸா பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த மக்களின் துயரத்தை நாங்கள் மன்னிக்கவில்லை. அந்த மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உணவு இஸ்ரேலில் இருந்து மட்டுமல்ல, எகிப்திலிருந்தும் வழங்கப்பட வேண்டும். மேலும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை ஒரு பிரச்சினை. ஆனால், இந்தப் போராட்டத்தில் சாதாரண பாலஸ்தீன மக்கள் பலியாகிவிடக் கூடாது. எனவே, அதனை தீர்க்க எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மற்ற நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து அந்தப் பிரதேசங்களில் அமைதியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். பாலஸ்தீன அரசாங்கத்தின் தேவை இருப்பதையும் குறிப்பிட வேண்டும் என்றார், ரணில்.

மேலும், இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் கூறுகையில்,

தேசிய மெளடூனில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் செய்தமை எமது மக்களுக்குக் கிடைத்த கௌரவமாகவே கருதுகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இப்பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. முறையான திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளினால் குறித்த பிரதேசத்தில் அபிவிருத்தி மற்றும் முதலீடுகளுக்காக காணிகளை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் தலைமையில் எனது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்பதை குறிப்பிட வேண்டும். எந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததோ அந்த நாட்டின் பொறுப்பை ஏற்று பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உழைத்தீர்கள்.

மக்களின் அவலங்களை நன்கு அறிந்த ஜனாதிபதி என்ற ரீதியில் இப்பிரதேசங்களில் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வை வழங்குவீர்கள் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.

இன்றைய இந்த நிகழ்வில் கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. திலீபன், பௌத்த சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எம். பைசல், மகா சங்கரத்னா தலைமையிலான சமயத் தலைவர்கள், தூதுவர்கள், பாதுகாப்புப் படைத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

https://whatsapp.com/channel/0029VaArXPMEwEjuCPX3wW1k

https://www.youtube.com/

mtmmedia6@Gmail. Com

     34 வது அகவையும்,  உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக்கழகத்தினால் நாடாத்தப்பட்ட  உதைப்பந்தாட்...
22/10/2023


34 வது அகவையும், உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக்கழகத்தினால் நாடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஜெகன் VS ரென்ஸ்டார் அணிகள் இறுதிச்சுற்றில் மோதிக் கொண்டன போட்டியின் முடிவில் குருந்தையடி முன்மாரி ரென் ஸ்ரார் அணி வெற்றியீட்டி முதலாவது கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினையும், பட்டிப்பளை வைரவர் அணியினர் மூன்றாம் இடத்தினையும், விளாவெட்டுவான் ராஜா அணியினர் நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

https://whatsapp.com/channel/0029VaArXPMEwEjuCPX3wW1k

https://www.youtube.com/

mtmmedia6@Gmail. Com

இன்றைய ராசி பலன்22.10.2023
22/10/2023

இன்றைய ராசி பலன்
22.10.2023

21/10/2023

NEWS JUST IN
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை - பெரகல பகுதியில் கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியூடாக பயணிப்பதை தவிர்க்குமாறு பதுளை அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்.



[email protected]

மயிலத்தமடுவில் 37 வது நாளாக இடம்பெற்று வரும் அறவழிப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உ...
21/10/2023

மயிலத்தமடுவில் 37 வது நாளாக இடம்பெற்று வரும் அறவழிப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுகாஷ் கனகரெத்தினம் அவர்களும் போராட்டக்களத்தில் பங்கேற்பு

UPDATE 21.10.2023


[email protected]

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம...
21/10/2023

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில் பொருட்களை வழங்கி வைத்தார்!

தமிழ்க் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 20.10.2023 இன்று வெள்ளிக்கிழமை இவ்...
20/10/2023

தமிழ்க் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 20.10.2023 இன்று வெள்ளிக்கிழமை இவ்வாறு காணப்பட்டது!



[email protected]

20/10/2023

பண்ணையாளர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாதவர்கள் தானா
யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றீர்கள்?

ஆளும்தரப்பில் உள்ள தமிழ்க் கட்சிகளிடம் மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஷ் கனகரெத்தினம் கேள்வி?

மயிலத்தமடு பண்ணையாளர்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்....

அதிகஷ்ட பிரதேச பாடசாலையான  மட்/மமே/கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவையுள்ள முப்பது மாணவர்களுக்கு  ...
17/10/2023

அதிகஷ்ட பிரதேச பாடசாலையான மட்/மமே/கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தேவையுள்ள முப்பது மாணவர்களுக்கு மண்டூரைச் சேர்ந்த தற்போது கட்டாரில் தொழில் புரிந்துவரும் சமூக ஆர்வலர் பரமன் அவர்களின் நிதிக் கொடுப்பனவில் இன்று 17/10/2023 ரூபா.70,000/= பெறுமதியான புத்தகப் பைகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

 #இன்றைய_ராசிப்பலன்    17/10/2023 புரட்டாசி 20 செவ்வாய்க்கிழமை வளர்பிறை .🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 #மேஷம்17/10/2023 செவ்வாய்க்கிழ...
17/10/2023

#இன்றைய_ராசிப்பலன்
17/10/2023 புரட்டாசி 20 செவ்வாய்க்கிழமை
வளர்பிறை .
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

#மேஷம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும். மொத்தத்தில், நிதானம் தேவைப்படும் நாள்.

#ரிஷபம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

#மிதுனம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

#கடகம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சகோதரர்களை அனுசரித் துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.

#சிம்மம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

#கன்னி
17/10/2023 செவ்வாய்க்கிழமை

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

#துலாம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

#விருச்சிகம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதைதெரியும் நாள்.

#தனுசு
17/10/2023 செவ்வாய்க்கிழமை

தன்னம்பிக்கையுடன் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . நல்லன நடக்கும் நாள்.

#மகரம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரபதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

#கும்பம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

#மீனம்
17/10/2023 செவ்வாய்க்கிழமை

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

Address

Batticaloa
Batticaloa

Telephone

+94767100263

Website

Alerts

Be the first to know and let us send you an email when MTM MEDIA மறத்தமிழர் முரசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MTM MEDIA மறத்தமிழர் முரசம்:

Videos

Share


Other Media/News Companies in Batticaloa

Show All