The Flash Media

The Flash Media The Flash Media� Its your Media �

Approved power interruption schedule  The Flash Media
30/11/2022

Approved power interruption schedule

The Flash Media

29/11/2022

Power Failure:
காத்தான்குடி CEB பிரிவில் தற்போது தடைப்பட்டுள்ள மின்சாரம் சற்று நேரத்தில் மீள வழங்கப்படும்.
-ES
CEB/KKY

காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலயத்திலிருந்து 96.36 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவுஅல்ஹம்துலில்லாஹ்...!எல்லாப் புக...
27/11/2022

காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலயத்திலிருந்து 96.36 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவு

அல்ஹம்துலில்லாஹ்...!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இம்முறை (2021/ 2022) கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எமது காத்தான்குடி மட்/மம/ஹிழுரியா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக 02 பேர் 9A, ஒருவர் 8A,1B, 03 பேர் 7A,2B பெற்றுள்ளனர். அதே போன்று ஏனைய மாணவர்களும் பரீட்சையில் சிறப்பு சித்தியெய்தியுள்ளனர். அத்துடன் சித்தி வகிதம் 96.36. அல்ஹம்துலில்லாஹ்

இம்மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த எமது பாடசாலை பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பிரத்தியேக வகுப்புகள் நாடாத்திய ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு (SDEC) உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் நெறிப்படுத்தி வழிகாட்டிய மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணி ப்பாளர் DR SMMS. உமர் மௌலானா சேர் (SLEAS - I) அவர்களுக்கும், DDE, ADE, DEO, EPSI இணைப்பாளர், Staff அனைவருக்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நன்றிகளையும், தெரிவித்துக் கொள்வதுடன் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு

அதிபர்,
மட்/மம/ஹிலுரிய்யா வித்தியாலயம்,
காத்தான்குடி.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் விஷேட அறிவிப்பு...!_theflashmedia03-Nov-2022(Thursday)மட்டக்களப்பு இர...
03/11/2022

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் விஷேட அறிவிப்பு...!

_theflashmedia
03-Nov-2022(Thursday)

மட்டக்களப்பு இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

எனவே குருதியை நன்கொடையாக வழங்க விரும்புவோர் எந்த குருதி வகைகளைச் சேர்ந்த நபர்களாக இருந்தாலும் மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவுக்கு வருகை தந்து தங்களது இரத்தங்களை தானமாக வழங்க முடியும்.

மட்டக்களப்பு இரத்த வங்கி:
0652226116
0757004300

Crescent Institute இன்  555 மாணவர்களுக்கு பாராட்டு...!_theflashmedia02-11-2022(Wednesday)காத்தான்குடி Crescent Institute...
02/11/2022

Crescent Institute இன் 555 மாணவர்களுக்கு பாராட்டு...!

_theflashmedia
02-11-2022(Wednesday)

காத்தான்குடி Crescent Instituteயின் 2022ம் ஆண்டுக்கான மாணவர் பாராட்டு விழா நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம் பெற்றது.

Crescent Instituteயின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.றிஸ்வி தலைமையில் Crescent Instituteயின் இயக்குனர் சிபானி றிஸ்வியின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் பங்கேற்று சிறப்பித்தார்.

வைபவத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட் தந்தை ஏ.ஏ. நவரத்னம் நவாஜி, EduGate Globalயின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் உள்ளிட்ட கல்வியாளர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இதன்போது மாணவர்களின் நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன் இவ்வருடத்தில் 555 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்களை உடன் விநியோகிக்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பணிப்புரை : நீதிக்கான மய்யத்தின் ...
01/11/2022

மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்களை உடன் விநியோகிக்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பணிப்புரை : நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகளிடம் புத்தகங்கள் கையளிப்பு...!

_theflashmedia
01-Nov-2022(Tuesday)

பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகத்தினை மீள் விநிேயாகம் செய்தல் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (01) செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில்
நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில் தலைமையிலான குழுவினர், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நுறாமித் தலைமையிலான குழுவினர் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட், பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இஸ்லாம் பாடப் புத்தகத்திகை உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் பாடப்புத்தகத்தில் எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுமிடத்து திருத்தக் குழுவில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் கோரிக்கையினை முன்வைத்தார்.

மேலும் நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில், மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகம் 10 மாதங்கள் கடந்தும் திருத்தப்பட்ட புத்தகங்கள் இன்று வரை வழங்கப் படவில்லை என அமைச்சருக்கு சுட்டிக்காட்டியதுடன் இதனால் இம்முறை சாதாரணப் பரீட்சை எழும்தும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி உடன் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நுறாமித் கருத்து தெரிவிக்கையில்,

மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு உடன் வழங்க நடவடிககை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது எம்மிடம் கலந்தாலோசிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இஸ்லாம் பாடப் புத்தக விநியோகத்தினை ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் நிறுத்தியதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை கைவிட்டு விட்டு உடன் இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை நாடு பூராகவும் விநியோதிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இஸ்லாம் பாடப்புத்தகத்தில் எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுமிடத்து திருத்தக் குழுவில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் மூவரை நியமிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதனை அடுத்து திருத்தப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்கள் நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகளிடம் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என். அகிலப் பெருமவினால் கையளித்து வைக்கப்பட்டது.

மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு உடன் வழங்க நடவடிககை எடுக்குமாறு கோரி நீதிக்கான மய்யம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பொருளாளர் கலாநிதி அஸ்வர் அசாஹிம், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என். அகிலப் பெரும, பிரதி ஆணையாளர் நாயகம் எம்.தாஜுதீன்
நீதிக்கான மய்யத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் தொழிலதிபர் ஏ.ஏ. அஷ்ரஃப் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

HAPPY DIWALI 2022
23/10/2022

HAPPY DIWALI 2022

Happy Diwali 2021

இலங்கையில் முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட பச்சை அப்பிள் ஜனாதிபதியிடம் கையளிப்புஇலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ந...
20/10/2022

இலங்கையில் முதன்முறையாக அறுவடை செய்யப்பட்ட பச்சை அப்பிள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற அப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார்.

மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, அப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

அப்பிள் விதைகளை இந்நாட்டுக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே பயிர்ச்செய்கையை முன்னெடுத்ததாகவும் இரண்டு ஏக்கரில் அறுவடை கிடைத்திருப்பதாகவும் விவசாயி லக்ஷ்மன் குமார தெரிவித்தார்.

இந்த விளைச்சலை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்து, அவற்றை விநியோகிப்பதற்கு முடியுமென்றும் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் இதற்கான பயிர்ச்செய்கையை முன்னெடுக்கும் வகையிலேயே இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயி கையளித்த பச்சை நிற அப்பிளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதனை ருசி பார்ப்பதற்கும் மறக்கவில்லை.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாஸ் மற்றும் பீ.ஜே. அசங்க லயனல் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் விரைவில்காகிதத் தட்டுப்பாடே தாமதத்துக்கு காரணம் என்கிறார் ஆணையாளர்..!‘திருத்­தங்கள் மேற...
20/10/2022

திருத்தப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் விரைவில்
காகிதத் தட்டுப்பாடே தாமதத்துக்கு காரணம் என்கிறார் ஆணையாளர்..!

‘திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்லாம் சமய பாட­நூல்கள் அடுத்த மாதம் நவம்பர் ஆரம்­பத்தில் அதி­பர்கள் ஊடாக மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண பரீட்­சையைக் கருத்­திற்­கொண்டு 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்­பு­க­ளுக்­கான பாட­நூல்­க­ளுக்கு விநி­யோ­கத்தில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும்’ என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் பீ.என்.அயி­லப்­பெ­ரும ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்­துக்கு முன்பு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு இஸ்லாம் பாட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு மீள வழங்­கப்­படும் என கல்வி வெளி­யீட்டுத் திணைக்­க­ளத்தின் ஆணை­யாளர் நாயகம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். என்­றாலும் திருத்­தப்­பட்ட இஸ்லாம் பாட­நூல்கள் அச்­சி­டு­வ­தற்­கான காகிதம் தட்­டுப்­பாட்­டினால் தாம­த­மேற்­பட்­ட­தா­கவும் அவர் கூறினார்.

மாண­வர்­களின் கல்­வியில் தடைகள் ஏற்­ப­டு­வ­தற்கு கல்வி வெளி­யீட்­டுத்­தி­ணைக்­களம் ஒரு­போதும் உடந்­தை­யாக இருக்­காது எனவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக ஆராய்ந்து வாக்கு மூலம் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்வைத்த பரிந்­து­ரைகள் மற்றும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய இஸ்லாம் சமய பாட­நூல்கள் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டதால் மாண­வர்­க­ளுக்­கான பாடநூல் விநி­யோகம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டன.

விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்த பாட­நூல்கள் கல்வி வெளி­யீட்­டுத் ­தி­ணைக்­க­ளத்­தினால் மீள பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

தரம் 6, 7, 8, 10 மற்றும் 11 ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் பாட­நூல்­களில் அடிப்­ப­டை­வாத வச­னங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் வாக்குமூல­ம­ளிக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்தே அந்­நூல்­களின் விநி­யோகம் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­ட­துடன் விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்த நூல்கள் மீளப்­பெற்றுக் கொள்­ளப்­பட்­டன.

பீ.என்.அயி­லப்­பெ­ரும இவ்­வி­வ­காரம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், இஸ்­லா­மிய சமய பாட­நூல்­களில் அடங்­கி­யி­ருந்த சில சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்கள் திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. சில வச­னங்கள் நீக்­கப்­பட்­டன. சில வச­னங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன. இஸ்லாம் மார்க்­கத்­துக்கு பாதிப்­பில்­லா­த­ வ­கையில் கல்வி வெளி­யீட்­டுத்­ தி­ணைக்­க­ளத்தின் இஸ்­லா­மிய கற்­கை­க­ளுக்குப் பொறுப்­பான முஸ்லிம் அதி­கா­ரி­களின் சிபா­ரி­சின்­படி திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

திருத்­தங்­களைச் செய்து பாட­நூல்கள் அரச அச்­சக திணைக்­க­ளத்­துக்கு கடந்த மே மாதம் அனுப்பி வைக்­கப்­பட்­டன. ஒரு நூல் தனியார் அச்­ச­கத்­துக்கு வழங்­கப்­பட்­டது.தனியார் அச்­சகம் நூல்­களை அச்­சிட்­டுள்­ளது. அரச அச்­சக திணைக்­க­ளமும் அச்­சிடும் பணி­களை பூர்த்தி செய்­துள்­ளது. காகி­த ­தட்­டுப்­பாடே தாம­தத்­திற்கு கார­ண­மாகும்.

6,7,8,10 மற்றும் 11 ஆம் தரங்­க­ளுக்­கு­ரிய இஸ்லாம் மத ­பா­ட­நூல்கள் சிங்­களம் மற்றும் தமிழ் மொழியில் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்­டுள்­ளன.

தரம் 1 முதல் 5 வரையும் மற்றும் 9ஆம் தர பாட­நூல்­களில் எவ்­வித திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

கல்வி வெளி­யீட்­டுத்­தி­ணைக்­களம் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டா­த­வாறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. ஆனால் அச்­ச­கத்தின் தாமதம் எமது கட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்­ட­தாகும்.

எவ்­வா­றெ­னினும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருத்­தப்­பட்டு அச்­சி­டப்­பட்­டுள்ள புதிய இஸ்­லா­மிய பாட­நூல்கள் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும். அதற்­கான ஏற்பாடுகளை திணைக்களம் முன்னெடுத்துள்ளது என்றார்.

இதேவேளை அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் 6,7,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இஸ்லாம் பாடத்தை ஒரு பாடமாக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு 2021 டிசம்பர் முதல் பாடநூல்கள் இல்லை என நீதிக்கான மையம் எனும் சிவில் அமைப்பு மாணவர்கள் சார்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை அண்மையில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

19/10/2022

Latest News:
புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைப்பு!

புதிய விலை 265/-

03/10/2022
16/09/2022

Please help them😢..! | aalif ahamed | The Flash Media

6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை..!_theflashmedia12-Sep-2022(Monday) ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறு...
12/09/2022

6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை..!

_theflashmedia
12-Sep-2022(Monday)

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில்

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று 6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் ஹரிஷ் ரஹூப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நஷீம் ஷா, சதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும் இப்திகர் அஹமட் 32 ஓடட்ங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

10/09/2022

இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு - மத்திய வங்கி தகவல்.

_theflasmedia
10-Sep-2022(Saturday)

கடந்த மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த மாதம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிமாற்றமாக பெறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெறப்பட்ட மொத்த பணத்தின் பெறுமதி 2214.8 மில்லியன் அமெரிக்க டொலர் என மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

09/09/2022

கூகுள் (Google) மாறுகிறது...!

_theflashmedia
09-Sep-2022(Friday)

உலகின் மிகவும் பிரபலமான இணைய தேடுபொறியான கூகுள், தனது முகப்புப் பக்கத்தை வெளிர் சாம்பல் பின்னணிக்கு மாற்றியுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு காரணமாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளிர் சாம்பல் நிறத்தில் மாற்றியுள்ளது.

கூகுள் என்ற சாம்பல் நிற பின்னணியை கிளிக் செய்வதன் மூலம் மறைந்த ராணியின் விபரங்கள் அடங்கிய இணையதள பக்கங்களை அணுக முடியும்.

09/09/2022

வாரயிறுதி நாட்களில் (10, 11) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. எதிர்வரும் 12 ஆம் திகதி மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை 01 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
- PUCSL

09/09/2022

இங்கிலாந்தின் புதிய அரசர் அறிவிப்பு.

_theflashmedia
09-Sep-2022(Friday)

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய அரசராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்.

சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் உயிரிழந்த 2-ம் எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.

73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது முதல் மனைவியான இளவரசி டயானாவை 1996-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து டயானா 1997-ல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் தற்போதும் மர்மம் நீடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார்.

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

பிரிட்டன் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தால் செய்யப்பட்ட கீரிடம் இனி கமிலா வசம் செல்ல உள்ளது.

இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்._theflashmedia09-Sep-2022(Friday)https://chat.whatsapp.com/Ln2J8TvIcda...
09/09/2022

இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்.

_theflashmedia
09-Sep-2022(Friday)

https://chat.whatsapp.com/Ln2J8TvIcdaLjAiHdD9sTy

இன்று வெள்ளிக்கிழமை (09) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 06.00 முதல் இரவு 09.00 மணி வரை 01 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,UV,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 01 மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

❇️ ABCDEFGHIJKL | PQRSTUVW

📌 பி.ப. 6.00 - பி.ப. 9.00 வரை 1 மணித்தியாலம்.

✅ I, J, K, L, R, S, T
👇👇👇
06:00 PM - 07:00 PM

✅ E, F, G, H, U, V, W
👇👇👇
07:00 PM - 08:00 PM

✅ A, B, C, D, P, Q
👇👇👇
08:00 PM - 09:00 PM

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையனால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

WhatsApp Group Invite

31/08/2022

🏫 பாடசாலைகளின் விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியானது...!

_theflashmedia
31-Aug-2022(Wednesday)

அரச மற்றும் அரை அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை தவணை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் திகதி பாடசாலைகளின் புதிய தவணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

காத்தான்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி நிந்தவூர் வீதி விபத்தில் மரணம்..._theflashmedia31-Aug-2022(Wednesday)ஏ. ஷபாஅத...
31/08/2022

காத்தான்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி நிந்தவூர் வீதி விபத்தில் மரணம்...

_theflashmedia
31-Aug-2022(Wednesday)

ஏ. ஷபாஅத் அஹமட் -
நிந்தவூர் பிரதான வீதியில் துரையிடைமூலை என்னும் இடத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வாகனமொன்றுடன் மோதுன்று இன்று காலை (31.08.2022) ஸ்தலத்திலேயே மரணமானார்..

انا لله وانا اليه راجعون...

காத்தான்குடி-5, மீராபள்ளி வீதியைச் சேர்ந்த 23வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா
என அழைக்கப்படுபவரே மரணமானார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விடுதி மாணவியான இவர் இரண்டாவது பருவகால அமர்வின்பொருட்டு தனது கணவருடன் காத்தான்குடியிலிருந்து..
இன்று காலை 6.00 Am மணியளவில் புறப்பட்டு நிந்தவூரினூடாக பல்கலைக்கழகத்திற்கு... பயணித்துக்கொண்டிருந்தபோதே வாகனமொன்றுடன் மோதுன்று காலமானார்.

இவரது ஜனாஸா தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது... வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு இது தொடர்பாக அறிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..

இம்மாணவி திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்பரிதாப மரணம் சம்பவித்துள்ளமை, கவலைக்குரியதாகும்.

இம்மாணவியின் தந்தையான அக்பர் அலி
கல்முனை மின்சார சபையில் நீண்டகாலமாக பணியாற்றியவர் என அறியப்படுகிறது.,

பல்கலைக் கனவுகளுடனும், புதிதாக திருமணம் புரிந்து சந்தோசங்களைப் பகிர்ந்துகொள்ள முன்பாகவே அல்லாஹ் இவரை அழைத்துக் கொண்டான்...

அன்னாரின் மறுமையின் சிறப்புகளுக்காக வும், அவரது இழப்பால், தவித்துப்போயிருக்கும்..
அவரது குடும்பத்தவர்களின் மன ஆறுதலுக்காகவும் மனமுருகிப் பிரார்த்திப்போம்....🤲🏻

WhatsApp Group Invite

අනුමත විදුලි කප්පාදු කාලසටහන - බදාදාஅங்கீகரிக்கப்பட்ட மின் தடை அட்டவணை - புதன்Approved power interruption schedule - Wed...
30/08/2022

අනුමත විදුලි කප්පාදු කාලසටහන - බදාදා
அங்கீகரிக்கப்பட்ட மின் தடை அட்டவணை - புதன்
Approved power interruption schedule - Wednesday
(2022-08-31)

30/08/2022

ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக குறைப்பு..!

_theflashmedia
30-Aug-2022(Tuesday)

ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வயதெல்லையை 60 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 65 வரை அதிகரிக்கப்பட்டமையினால், தொழில் வாய்ப்புக்கள் அற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், பதவி உயர்வுகள் வழங்கப்படுவதும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோரின் வயதெல்லை 60 வயது வரை குறைக்கப்படுகின்றது.

தற்போது 60 வயதுக்கு அதிகமான வயதை கொண்டவர்கள் பணியாற்றுவார்களாயின், அவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் கட்டாய ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

Approved power interruption schedule (From 30th August 2022 To 02nd September 2022)
29/08/2022

Approved power interruption schedule
(From 30th August 2022 To 02nd September 2022)

29/08/2022

O/L பெறுபேறுகள் இவ்வருட இறுதிக்குள்...!

_theflashmedia
29-Aug-2022(Monday)

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை இவ்வருட இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

අනුමත විදුලි කප්පාදු කාලසටහන - සදුදාஅங்கீகரிக்கப்பட்ட மின் தடை அட்டவணை - திங்கள்Approved power interruption schedule - M...
28/08/2022

අනුමත විදුලි කප්පාදු කාලසටහන - සදුදා
அங்கீகரிக்கப்பட்ட மின் தடை அட்டவணை - திங்கள்
Approved power interruption schedule - Monday
(2022-08-29)

28/08/2022

2021(2022) உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.

28/08/2022

Power cuts for today reduced to ONE hour only in the night (peak- hours) due to lower demand & resumption of coal power plant.
Power shedding for the coming week will be decided based on the available resources and be notified later.
Janaka Ratnayake
Chairman- PUCSL

pucsl.gov.lk

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Flash Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Flash Media:

Videos

Share


Other Media/News Companies in Batticaloa

Show All