Media24

Media24 "MEDIA24" அனைத்து விதமான செய்திகளையும் வெளியிடுகின்ற தமிழ் இணையத்தளமாகும்
(3)

01/08/2022

மட்டக்களப்பிள் தொடங்கியது மழை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை...
01/08/2022

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

ஆலய மரபின் படி நல்லூர் கிழக்கு சட்ட நாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிடேக ஆராதனைகளைத் தொடர்ந்து, கொடிச் சீலை தயாரிக்கும் மரபினையுடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா நாளை 02 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது.

https://youtu.be/xSoW2PkrD4E
01/08/2022

https://youtu.be/xSoW2PkrD4E

சமகால அரசியல் தொடர்பாக MP சாணக்கியனின் கருத்து

மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு?எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பெற்றோலிய க...
01/08/2022

மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு?

எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 50 ரூபா முதல் 100 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01/08/2022 | இன்றைய ராசி பலன்!    |   |
01/08/2022

01/08/2022 | இன்றைய ராசி பலன்!

| |

நமது செயல்கலே நமது சந்ததிகளில் பிரதிபலிக்கும்......
31/07/2022

நமது செயல்கலே நமது சந்ததிகளில் பிரதிபலிக்கும்......

ரணிலின் அதிரடிகள்! எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு!எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற...
31/07/2022

ரணிலின் அதிரடிகள்! எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு!

எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை குறைப்பு இன்று (1) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எரிபொருளின் விலையை பத்து முதல் இருபது ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

 #ஒரு_முதியோரின்_டைரியில்  #எழுதி_இருந்த_ஓர்_உண்மைக்_கதை.திருமணமாகி 35 வருடங்கள் அவருக்கு 61 வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்...
31/07/2022

#ஒரு_முதியோரின்_டைரியில்
#எழுதி_இருந்த_ஓர்_உண்மைக்_கதை.

திருமணமாகி 35 வருடங்கள் அவருக்கு 61 வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.
வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிற்று கிழமையில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது..

கடுமையா உழைத்து குடும்பத்தைப் பார்த்தார்...
இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது..

வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...
வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியைக் கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள்..

வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..
"ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டுப் பேசி எவ்வளவு காலமாச்சு..."
அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்து வரும்போது பட்டு மாதரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்...

அவள் மெல்லிய சிரிப்புடன்
நான் எதை என்னவென்று சொல்ல.. 35 வருசத்தில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி ஏதேதோ நடந்திருக்கும்... என்றாள்...

மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது...

என்ன சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்வளவு பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்...
நீங்க என்னை வண்டியில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனேன். கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...
இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே..

நான் சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நான் சொன்னா கூட நீங்க என்னை தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்.

என் கண்களில் கூட படலியே இதெல்லாம்... என்றார் வலி நிறைந்த குரலில்..
என்னை நீங்க அருகில சந்திக்கிறதே சில நிமிடம்தான்.
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...

அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நான் இப்படி ஓடாய் உழைத்தேன். பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினேன்.. உன்னையும் ஒரு குறையும் இல்லாம பார்த்தேன்... என்றார்..

உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது. என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...
என்னை மன்னிச்சிடு . பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...
எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேட்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...

கேளு என்றார்.நாம் திருமணமான புதிதில சில நாட்கள் நான் உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையணைலதான் நாம தலை வைத்து படுத்திருக்கோம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என கேட்க அவருக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.
மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....
இதே போல்தான் பெரும்பாலும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...

எத்தனை கணவன்மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேட்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...

ஆண்களே, உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள், காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்...
அவளின் மனக்காயம் வெளிவரும்.

படித்ததில் வலித்தது..
உண்மையும் கூட..
😌😌😌😌😌

சவூதி அரேபியா மிரர் லைன் எனப்படும் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை வெளியிட்டது. இது 488 மீட்டர் (1,600 அடி) உயரம்...
31/07/2022

சவூதி அரேபியா மிரர் லைன் எனப்படும் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை வெளியிட்டது.

இது 488 மீட்டர் (1,600 அடி) உயரம் கொண்ட இரண்டு கண்ணாடி பிரதிபலிப்பு கட்டிடங்களைக் கொண்டிருக்கும், கடலோர, மலை மற்றும் பாலைவன நிலப்பரப்பு முழுவதும் 120 கிலோமீட்டர் (75 மைல்) வரை இணையாக இயங்கும்.

இரண்டு கட்டிடங்களும் நடைபாதைகள் வழியாக இணைக்கப்பட்டு, அவற்றின் அடியில் அதிவேக ரயில் இயக்கப்படும். கட்டுமானம் முடிவடைந்தவுடன் $1 டிரில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் 20 நிமிட இடைவெளியில் இறுதி முதல் இறுதி வரை பயணிக்கக்கூடிய ஐந்து மில்லியன் மக்கள் தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

#கட்டிடம்

முகக்கவசம் அணியாவிட்டால் எரிபொருள் இல்லை..!முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எ...
31/07/2022

முகக்கவசம் அணியாவிட்டால் எரிபொருள் இல்லை..!

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நடைமுறை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது இடங்களில் நடமாடுபவர்கள், வரிசைகளில் காத்திருப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 #செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற 8 வயது பாலஸ்தீன சிறுமி  #ராண்டா சேடாரின் புகைப்படம் இணையத்தில் வைரகியுள்ளது. இன்ற...
30/07/2022

#செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற 8 வயது பாலஸ்தீன சிறுமி #ராண்டா சேடாரின் புகைப்படம் இணையத்தில் வைரகியுள்ளது.

இன்று நடைபெற்ற செஸ் போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

#செஸ்ஒலிம்பியாட்

30/07/2022

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து!



இன்று(30) பிற்பகல் #பண்டாரகம சீபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தே இதுவாகும்.

இந்த சம்பவத்தில் தீ அணைக்கும் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இன்னும் எத்தனை நாள்?இத்தனை அவலமும் தீர, இன்னும் எத்தனை நாளாகும் இந்த அழகிய சிறிய தீவில்....!கொட்டும் மழையிலும், கொழுந்து...
30/07/2022

இன்னும் எத்தனை நாள்?

இத்தனை அவலமும் தீர, இன்னும் எத்தனை நாளாகும் இந்த அழகிய சிறிய தீவில்....!

கொட்டும் மழையிலும், கொழுந்துவிட்டெரிக்கும் வெயிலிலும், இரவும், பகலுமாய், இளசுகளும், சந்தோஷமாக ஓய்வெடுக்கும் தருணத்தில் அதை முழுமையாக இழந்த முதுமையுமாய்…ஓராயிரம் உயிர்கள்!

அன்றாடம் அனுபவிக்கும் இந்த அவலங்கள் தீர இன்னும் எத்தனை நாளாகும், எத்தனை மாதங்களாகும்….!

எத்துணை துன்பமென்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரைக்கும், எது நடந்தாலும் அதை ஆறவிட்டு எருமை மாட்டில் பெய்த மழைபோல பார்த்துக்கொண்டிருக்கும் அரசியல் லாபகர்களும், முதுகெலும்பில்லாத தலைமைகளும் இருக்கும் வரைக்கும் இன்னும் எத்தனை நாள் எடுக்கும் இந்த இந்த அவலம் தீர….!

இறுக்கமாக்கப்பட்ட தேசிய எரிபொருள் விநியோகம் : அனைத்து வாகன சாரதிகளுக்குமான முக்கிய அறிவிப்புகியூ.ஆர் அட்டை முறை தொடர்பான...
30/07/2022

இறுக்கமாக்கப்பட்ட தேசிய எரிபொருள் விநியோகம் : அனைத்து வாகன சாரதிகளுக்குமான முக்கிய அறிவிப்பு

கியூ.ஆர் அட்டை முறை தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் ஒன்று எரிசக்தி அமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அத்துடன், எரிசக்தி அமைச்சகத்தினால், வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவ் அறிப்புகள் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

1. தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். கடைசி இலக்க எண் தகடு அமைப்பு, டோக்கன்கள் மற்றும் நடைமுறையில் இருந்த பிற ஏற்பாடுகள் அனைத்தும் நிராக்கப்படும். கியூ.ஆர் அட்டை மற்றும் கோட்டா அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும்

2. கியூ.ஆர் அட்டை முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் அட்டை ஐப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கண்காணிக்கப்படும்.


3. வாகன (Chassis Number) எண்ணுடன் பதிவு செய்ய முடியாத வாகனங்களைப் பயன்படுத்துவோர் நாளை முதல் வருவாய் உரிம எண்ணுடன் (Revenue License number) பதிவு செய்யலாம்.

4. அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பொலிஸ் நிலையத்தின் ஊடாக அவர்களுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

5. ஜெனரேட்டர்கள், தோட்டக் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள், தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தேர்வு ஆகியவற்றை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

6. பல வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் அனைத்து வாகனங்களையும் தங்கள் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்ய முடியும்.


7. பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இலங்கை அரச போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு டிப்போக்களில் ஊடாக வழங்கப்படும். அவை வழித்தட அனுமதி மற்றும் சேவையில் உள்ள கி.மீ.களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டைக் கொண்டு ஒதுக்கப்படும்.

8. பாடசாலை சேவை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து வாகனங்கள், தொழில்கள், சுற்றுலாத் துறை, நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிற அத்தியாவசிய சேவைகளின் டீசல் எரிபொருள் தேவைகளையும் இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்.

9. அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அவர்கள் கோரும் அளவு எரிபொருளை வழங்க வேண்டும்.

10. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பொலிஸ் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும்.

11. பொதுமக்கள் 0742123123 என்ற எண்ணுக்கு சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு அல்லது விற்பனை நடவடிக்கைகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்களை WhatsApp இல் அனுப்ப முடியும். அவர்களின் கியூ.ஆர் அட்டை அணுகல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


12. திங்கட்கிழமையன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

01. யானை 🐘 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 02. யானை 🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 03. அதன் தும்பிக்கையால...
30/07/2022

01. யானை 🐘 22 மாதங்கள் கருவை சுமக்கும் !.
02. யானை 🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.!
03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.
04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.
05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.
06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.
09. யானை 🐘 ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும்.
10. யானை 🐘 ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது.
11. ஒரு யானை 🐘 தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது.

அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி, நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே!.

5 கிமீ தூரத்தில் தண்ணீர்💦💦 இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை!.

மின்தடை பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்!நாட்டில் நாளாந்தம் 14 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் ...
30/07/2022

மின்தடை பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்!

நாட்டில் நாளாந்தம் 14 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் திறைசேரி குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  மருத்துவமனையின் ,உரிமை...
30/07/2022

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையின் ,
உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் வைத்து கவனிக்கச் சொன்னார்.

2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து,
"இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
மேலும் ,
அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் வாங்க வேண்டாம்" என்றும் தனது மருத்துவமனை ஊழியர்களிடம் கூறி சென்றார்.

நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, ​​

மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார்.

அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது.

டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து,
"இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.

நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவர் நோயாளியிடம்,
"தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?"

நோயாளி கூறினார்,
"நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..."

டாக்டர் சொன்னார்,
"நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க...
இப்போது ஞாபகம் வருகிறதா?"

"ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..."

"அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ​​கார் பழுதாகி விட்டது.

சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.

குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது.

நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.

நீங்கள் பைக்கில் வந்தீர்கள்...

பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள்.

பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்...

சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது.

நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம்.

'அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்'
என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம்.

நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள்.

அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை,
அது விலைமதிப்பற்றது.

ஆனாலும்,
நான் உங்களிடம், "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன்.

அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,

"எனது விதியும் கொள்கையும் என்னவெனில்...

பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை.

இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்."
என்றீர்கள்.

அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன.

'பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்...,

அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?'
என்று அன்று நினைத்தேன்.

அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன்.

நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.

உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன்.

இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது.

நீங்கள் இங்கே என் விருந்தாளி.

உங்கள் சொந்த விதியின்படி...
என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது.

இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும்.

"நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்."
மருத்துவர் கூறிவிட்டு
கேபினை விட்டு வெளியே சென்றார்.

​​அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன...

அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது!

*நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன...*

அதுவும் ஆர்வத்துடன்.

*அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.*

*இதுதான் பிரபஞ்ச விதி!*
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

🔴அடுத்த வார எரிபொருள் விநியோகம்
30/07/2022

🔴அடுத்த வார எரிபொருள் விநியோகம்

கதிர்காமம் முதலாம் நாள்
30/07/2022

கதிர்காமம் முதலாம் நாள்

30/07/2022
30/07/2022

Address

Chenkalady
Batticaloa
30000

Telephone

+94710565156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media24:

Videos

Share