BATTI TODAY

BATTI TODAY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BATTI TODAY, Media/News Company, Batticaloa.

Our coverage is comprehensive and insightful, encompassing a gamut of topics that include hard-hitting political interviews, news and human interest stories, issue-based investigations and analyses.

12/12/2024

மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.......................
12/12/2024

மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்...................................................................................................................................................................................................................

'உள் வாங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்' என்ற தொனிப் பொருளில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று(11) கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பினால் இந் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைப்பின் தலைவர் நவரெட்ணம் (தீபன்)தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் சித்திரவேல் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக கிரான் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சிவநேசராசா, சுகாதார வைத்திய அதிகாரி சுபலக்ஷன் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக வாழ்க்கை தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி திருமதி சுகந்தினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனத் தலைவர் அருள்ராஜ், டேட்டா செறிட்டி இணைப்பாளர் ஜீவராசா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து ஊர்வலமாக வரவேற்கப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியதுடன் வரவேற்பு நடனம், தலைமை உரை, அதிதிகள் உரை என்பவற்றுடன் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் நலன் கருதி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பிரதேச செயலாளர் சித்திரவேல் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

மேற்படி நிகழ்வுகள் யாவும் திறன்பட நடாத்துவதற்கு நிதி அணுசரணையை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமலி செயாரிட்டி நிறுவனத்தினர் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

27/11/2024

மழை காரணமாக மட்டக்களப்பு அரசடி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது; போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் அசௌகரியம்

27/11/2024

இலங்கை கிழக்குக் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த வெள்ள நீர்; பல்கலைக்கழக மாணவர்கள் வெளியேற்றம்

எதிர்வரும் 26ஆம் திகதிக்குப் பிறகு மழையுடனான காலநிலை ஓரளவு சீரடையும்- வானிலை முன்னறிவிப்பு.................................
24/11/2024

எதிர்வரும் 26ஆம் திகதிக்குப் பிறகு மழையுடனான காலநிலை ஓரளவு சீரடையும்- வானிலை முன்னறிவிப்பு
...................................................................................................................................................................................................................

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றும்(24) நாளையும்(25) மழையுடனான காலநிலை காணப்படும். எதிர்வரும் 26ஆம் திகதிக்குப் பிறகு மழையுடனான காலநிலை ஓரளவு சீரடையும்.

நேற்று(23) தினம் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியின் கிழக்காகவும் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாகவும் காணப்பட்ட தாழமுக்க பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு மேலாக காணப்படுகின்றது.

இது தொடர்ச்சியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையும்.

அதன்பின்னர் இது அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் இலங்கையின் கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில்,

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்க பகுதியானது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது மேலும் நகர்ந்து, இலங்கையின் வட கடலோரத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கையின் அனேகமான பிரதேசங்கள் மேகமூட்டமாக காணப்படும்.

வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேலைகளில் அல்லது இரவு வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 150மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சியும், வட மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் 100மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மணிக்கு 30கிலோமீற்றர் தொடக்கம் 40கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்றும் பலமானதாக வீசக்கூடும்.

எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதத்தை குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் முதல் காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடான அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியத்தில் மீனவர் சமுதாயம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை கடற்தொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30கிலோமீற்றர் - 40கிலோமீற்றர் வரையான வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.

இதன்போது காற்றின் வேகமானது மன்னார் முதல் காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடான அம்பாந்தோட்டை வகையான கடற் பிராந்தியத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60கிலோமீற்றர் - 70கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக் கூடும்.

மேற்குறிப்பிடப்பட்ட கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் ஏனைய கடற் பிராந்தியங்கள் சாதாரண கொந்தளிப்பாக காணப்படும் எனவும், கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் அந்த கடல் பிராந்தியமானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் அக்கடல் பிராந்தியத்தில் காற்றும் பலமானதாக வீசும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21/11/2024

பாராளுமன்றத்தின் முதல் நாளே சர்ச்சையை கிளப்பினார் அர்ச்சுனா.........................................................................................................................

பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் டாக்டர் இராமநாதன் அர்ஜுனா அமர்ந்துள்ளார்

அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என அவர் கேட்டார்.

புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது. சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

20/11/2024

பெரிய பரந்தனில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு

பெரிய பரந்தனில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு...................................................................
20/11/2024

பெரிய பரந்தனில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு..........................................................................................................................

கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் இன்று(20) பிற்பகல் நடைபெற்றது.

பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.

பெரிய பரந்தன் வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் இங்கு கெளரவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் சுப்புராசா ஜெயலட்சுமணன் காலமானார்............................................................
20/11/2024

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் சுப்புராசா ஜெயலட்சுமணன் காலமானார்.........................................................................................................................................................................................

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் சுகவீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் சுகவீனம் முற்றிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(19) உயிரிழந்தார்.

கிளிநொச்சி டி4மருதநகர் பகுதியைச் சேர்ந்த37 வயதுடைய சுப்புராசா ஜெயலட்சுமணன் எனும் ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது இறுதிகள் நாளை(21) அவரது டீ4மருதநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

17/11/2024

மூன்றில் இரண்டு அதிகாரம் பெற்ற அனுரகுமார அரசாங்கம் இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என நம்புகின்றேன்- தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருள்மொழிவர்மன்

17/11/2024

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

17/11/2024

காத்தான்குடியில் றமீஸ்குழு கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்; விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு......................................
17/11/2024

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு...........................................................................................................................................................................................

பொதுத் தேர்தல் பெறுபேறுகளுக்கமைய தேசிய மக்கள் சக்திக்குக் கிடைக்கப்பெற்ற 18 தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்கவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிமல் ரத்நாயக்க, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி அநுர கருணாதிலக்க, பேராசியரியர் உபாலி பன்னிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருண ஜயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியபெரும, ஜனித ருவான் கொடிதுவக்கு, ஸ்ரீ குமார ஜயகொடி, நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, அபுபக்கர் ஆதம் பாவா மற்றும் ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப. சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானம்.................................
17/11/2024

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப. சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானம்.......................................................................................................................................................

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப. சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(17) காலை இடம்பெற்றது.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப. சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு.....................................................
17/11/2024

மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு................................................................................................................................................

மண்ணுக்காக மரணித்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் இன்று(17) இடம்பெற்றது.

விசுவமடு சந்தியிலிருந்து மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

அத்துடன் மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதன்போது 400க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

மூன்றில் இரண்டு அதிகாரம் பெற்ற அனுரகுமார அரசாங்கம் இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என நம்புகின்றேன...
17/11/2024

மூன்றில் இரண்டு அதிகாரம் பெற்ற அனுரகுமார அரசாங்கம் இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என நம்புகின்றேன்- தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன்............................................................................................................................

நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என நாம் நம்புகின்றோம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருள்மொழிவர்மன் தம்பிமுத்து தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்துவின் ஊடக சந்திப்பு இன்று(17) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது இலங்கையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்க இருக்கின்றது.
அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அவரது தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் முழுமையாக பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அதை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் அவர்களுக்கு வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதேபோல் எமது ஆதரவாளர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியானது 20 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் புத்தெளிச்சி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நான் கூற விரும்பும் விடயம் என்னவென்றால் எமது செயல்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். தமிழர் விடுதலை கூட்டணியானது தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில் இருந்து முழுமையாக புத்தெளிச்சி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கான வேலைத் திட்டங்களில் நான் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன்.

எமது ஆதரவாளர்களுக்கு நான் கூறியிருக்கின்றேன். மட்டக்களப்பிலே மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றேன்.

அதன் அடிப்படையில் நாங்கள் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருக்கின்றோம்.
இன்று மட்டக்களப்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன.

நிச்சயமாக எமக்கான நிலப் பிரச்சினை இருக்கின்றது. இன்னும்சொல்ல வேண்டுமென்றால் மேய்ச்சல் தரை பிரச்சனை இருக்கின்றது, வளங்கள் சூறையாடப்படும் நிலைமை காணப்பட்டு வந்திருக்கின்றது. இதற்கெல்லாம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் ஒரு நிழல் பாராளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது நிலைப்பாட்டை, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியர் கைது.....................................................
17/11/2024

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியர் கைது................................................................................................................................................................................................................................

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியொருவர் சியம்பலாகொட, பொல்கசோவிட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 66 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வேலை தேடுபவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து ரூ 2,00,000 முதல் ரூ. 3,00,000. வரை கட்டணம் வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நில உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.................................
17/11/2024

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நில உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.......................................................................................................................................................................................................................

நில மீட்புக்கான செயற்றிட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, நில உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலை சர்வோதயம் கேட்போர் கூடத்தில் இன்று(17) இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வரும் காணிப் பிணக்கு தொடர்பான தெளிவு, காணி பிணக்குக்கு தீர்வை பெறக் கூடிய வழிமுறைகள், காணி உரிமை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதனை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இச்செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக காணி பிணக்குகள் உள்ள மூதூர், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த காணி உரிமைகளை இழந்தோர், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பினர்கள் கலந்து கொண்டு தெளிவுகளை பெற்றுக் கொண்டனர்.

இப் பயிற்சிநெறியில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ. மதன், சட்டத்தரணிகள், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவிக் கணக்காளர் கு. சஞ்சலிதா மற்றும் கள இணைப்பாளர் சி. லீனா ஆகியோர் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Address

Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when BATTI TODAY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share