News Hours

News Hours Welcome to News Hours TV NETWORK Sri Lanka
உலக வாழ் தமிழர்களுக்காக, தமிழோடு இணைவோம்.
(1)

பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது - ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்.(எஸ்.அஷ்ரப்கான்)புன...
17/04/2024

பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது - ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்.

(எஸ்.அஷ்ரப்கான்)

புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஸஹபான் மாத தலைபிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை விதைக்கும் ஒப்பந்தச் சிந்தனையாளர்களின் முயற்சிகளை மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கொழும்பு பெரிய பள்ளிவாசலை முன்னிறுத்தி பிறை பார்க்கும் பணியை எமது முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் இஸ்லாமிய மாத சுட்டெண்னையும் மாதாந்தம் அவர்கள் கணித்து வருகிறார்கள். கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவில் தற்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதன் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியான மற்றும் நம்பகமான தீர்மானங்களை எடுப்பதில் உள்ள சில காலதாமதங்களை முன்வைத்து சில ஒப்பந்தச் சிந்தனையாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சிதைத்து பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சதிகளை செய்ய முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில நாட்களாக சமூக ஊடகங்களில் கிழக்கு மாகாணத்தில் தனியாக பிறை பார்க்கும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சிலர் பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருவதை பார்க்கும் போது சந்தேகம் வலுப்பெறுகிறது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்த தேசிய பிறைக்குழு தனது அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன் சிலர் தமது சொந்த சமூக வலைத்தளங்களிலும் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் ஊடகங்களிலும் விமர்சித்திருந்தனர். சில சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் முந்திக்கொண்டு பிறை தொடர்பில் பிழையான தீர்மானத்தை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பி முஸ்லிம் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, கொழும்பில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீதான பிறைக்குழுவை குற்றம் சாட்டி, முஸ்லிம் சமூகம் மத்தியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கும் பிறைக்குழுவுக்கும் எதிரான கருத்தியலை உருவாக்கி வந்தனர். இதனூடாக முஸ்லிம் சமூகத்தினரிடம் பிளவுபடுத்தும் கருத்தியல் மனப்பான்மையை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திடம் பாகுபாட்டை உருவாக்குவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும்.

கிழக்கிலும், தெற்கிலும், வடக்கிலும், மேற்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு சக்தியாக ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மதக் கருத்தியல் பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தி, இந்த ஒப்பந்த பிரிவினைவாத சித்தாந்தங்கள் மற்றும் முஸ்லிங்கள் ஒருபோதும் சோரம்போக கூடாது. மட்டுமின்றி இந்த விடயங்களில் மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரே சமூக கட்டமைப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

பாலித தெவரப் பெரும காலமானார்களுத்துறை மாவட்டத்தின்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்பாலித தெவரப் பெருமசற்று முன் காலமானார்.....
16/04/2024

பாலித தெவரப் பெரும காலமானார்

களுத்துறை மாவட்டத்தின்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பாலித தெவரப் பெரும
சற்று முன் காலமானார்......

இவர் தனது வீட்டில் மின்சார இணைப்பு பழுது பார்த்தலில் ஈடுபட்டிருந்த
போது மின் தாக்கியதால் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அங்கு மரணமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இவர் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனப்பாதுகாப்பு அமைச்சருமாவார்

ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று உழைப்பேன் : உதுமான்கண்டு நாபீர்.(எஸ்...
12/04/2024

ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் அமைச்சர் பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று உழைப்பேன் : உதுமான்கண்டு நாபீர்.

(எஸ்.அஷ்ரப்கான், எம்.எஸ்.எம்.ஜஃபர், எம்.ஏ.றமீஸ், றியாஸ் ஆதம், ஐ.ஏ.சிராஜ், றிஸ்வான் சாலிஹு)

அம்பாறை மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியினையும் கிழக்கு மாகாணத்திற்கு அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒன்றிணையும் பெற்றுக்கொடுப்பதற்கு உத்தரவாதமளிக்கும் கட்சியோடு இணைந்து செயற்படுவதற்கு தான் தயாராக உள்ளதாக
நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.

சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வும் அண்மையில் போரத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்குறித்த மிக முக்கியமான இரு பதவிகளையும் மக்களுக்காக பெற்றுக்கொடுப்பதற்கு முன்வருகின்ற சிறுபான்மை அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளேன். அத்தோடு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் ஆயத்தமாகவுள்ளேன். இதனைப் பேரம்பேசி முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முஸ்லிம் கட்சிகள் தவறுமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டு குறித்த பதவிகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பேன்.

ஊடகவியலாளர்கள் உண்மைகளை எழுதுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் பணிகளை என்றும் பாராட்டுகின்றேன். அதேநேரம் ஊடகவியலாளர்கள் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் வறுமைக் கோட்டியின் கீழ் வாழும் மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்குரிய வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தயாராக உள்ளேன்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்களின் நிதியுதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களும் என்னிடமுள்ளது. தற்போது 32 வருடங்கள் சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் எனக்கு அரசியல் அதிகாரங்கள் கிடைக்கின்ற போது மேற்குறித்த பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும்

அரசியல் தலைவர்கள் உறங்க முடியாது. பொய் பித்தலாட்டங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. இப்போது மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து மக்களுக்கு அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி வாக்குகளை சூறையாடலாம் என நினைப்பது பகல் கனவாகும் என்றார்.

சிலோன் ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில், சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கலும்.(எஸ்....
11/04/2024

சிலோன் ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில், சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கலும்.

(எஸ்.அஷ்ரப்கான்)

சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக சேவையாளர் கௌரவிப்பும் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (09) அட்டாளைச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சிலோன் ஊடகவியலாளர் போரத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே.அமீர் கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.எல்.இஸ்மாயில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே.அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ் ஆகியோர் இந்நிகழ்வின்போது சிலோன் ஊடகவியலாளர் போரத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 35 ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன்; காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்தி...
10/04/2024

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன்; காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் - கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான்.

(எஸ்.அஷ்ரப்கான்)

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன்; காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

காஸா மக்களுக்கு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் இஸ்ரேலிய இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடாவடித்தனங்களுக்கு எதிராக இந்த புனிதமிகு நோன்பு பெருநாள் தினத்திலே இலங்கை முஸ்லிம்கள் இருகரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.

நாம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் எமது உறவுகளுடன் இந்த நோன்புப் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே, பாலஸ்தீன் காஸா மக்கள் தங்கள் உறவுகளை இழந்து, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வசிக்க வீடின்றி அல்லல் பட்டுக் கொண்டிருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.

தங்கள் உறவுகளை இழந்து அநாதையாக தவித்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நாங்கள் எங்களால் ஆன உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். இலங்கை அரசாங்கத்தோடு கைகோர்த்து நாம் இந்த மனிதாபிமான உதவிகளை செய்வதன் ஊடாக அந்த மக்களை ஓரளவுக்கேனும், நாம் துன்ப துயரங்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

இலங்கைத் திருநாட்டில் உள்ள சகல மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான வழியை நாம் அமைத்துக் கொள்ள இப்புனிதமான பெருநாள் தினத்திலே நாம் உறுதி கொள்வோமாக என்றும் குறிப்பிட்டார்.

அல்ஹம்துலில்லாஹ் நாளை இலங்கையில் புதன் 10 புனித நோன்புப் பெருநாள்.முஸ்லிம் பண்பாட்டளுவள்கள் கலாச்சார திணைக்களம்
09/04/2024

அல்ஹம்துலில்லாஹ் நாளை இலங்கையில் புதன் 10 புனித நோன்புப் பெருநாள்.
முஸ்லிம் பண்பாட்டளுவள்கள் கலாச்சார திணைக்களம்

புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை-2024 (கல்முனை ஹுதா திடலில் சரியாக 06.30 am க்கு தொழுகை ஆரம்பம்)குறிப்பு :- வுழுச்செ...
07/04/2024

புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை-2024 (கல்முனை ஹுதா திடலில் சரியாக 06.30 am க்கு தொழுகை ஆரம்பம்)

குறிப்பு :- வுழுச்செய்து கொண்டு முஸல்லாக்களுடன் வருகை தருமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தஃவா குழு ஏற்பாட்டில்,மாணவர்களுக்கான ரமழான் கால செயலமர்வு  "தவ்ரது ரமழான்" பரிசளிப்பு மற...
06/04/2024

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தஃவா குழு ஏற்பாட்டில்,
மாணவர்களுக்கான ரமழான் கால செயலமர்வு "தவ்ரது ரமழான்" பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு.

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தஃவா குழு ஏற்பாடு செய்திருந்த 10 நாட்கள் கொண்ட ரமழான் செயலமர்வு தொடராக இண்டாவது வருடமாகவும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன் இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வு 05.04.2024 ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் இப்றாகீம் தலைமையில் பேஷ் இமாம் மெளலவி ஜே.எம்.சாபித் (ஸரயி, றியாதி) அவர்களின் வழி நடாத்தலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மெளலவி எஸ்.எம்.றிஷாத் ஸலீம்
(றியாதி) Phd கலந்து கொண்டு சிறப்பித்தார்.

70 மாணவர்கள் கலந்துகொண்டு அகீதா, பிக்ஃஹ், ஸீரா, அஹ்லாக், தஜ்வீத், பிக்ஃஹுஸ் ஸலா போன்ற பாடங்களை கற்று இறுதி பரீட்சையில் வெற்றியாளர்களாக தெரிவானோருக்கு, முதலாம் பரிசாக 10000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 7000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 5000 ரூபாவும் ஆறுதல் பரிசில்கள் 2000 ரூபாய்கள் வீதம் 12 மாணவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பங்கு கொண்ட 70 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக் கப்பட்டதுடன்,
கற்பித்த கண்ணியமான உலமாக்களும் அன்பளிப்புகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண பாடசாலை கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் முஷாரப் எம்.பி. இன் நேரடி தலையீட்டினால் இரத்து.!(எஸ்.அஷ்...
04/04/2024

கிழக்கு மாகாண பாடசாலை கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் முஷாரப் எம்.பி. இன் நேரடி தலையீட்டினால் இரத்து.!

(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்குமாகாண பாடசாலைகளில் காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் நேரடி தலையீட்டினை தொடர்ந்து, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் ஆளணி விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் தலையீடு மற்றும் முறையான பதிலீடுகள் எதுவும் இன்றியும் இடம்பெற்ற இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் கடந்த திங்கட்கிழமை 01.04.2024 நேரடியாக கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதன் விளைவாகவே மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்படி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

04/04/2024

விடுவிக்கப்பட்ட பின்னரும் சோதனையா?

01/04/2024

வைத்திய ஆலோசனையுடன் பெறப்பட்ட கண்ணாடி ஒன்று தொலைந்துள்ளது. கண்டெடுத்தவர்கள் தொடர்பு கொள்ள - 0772348508

மயோன் குரூப் ஒப் கம்பெனி இன் தவிசாளரும்  சமூக சேவையாளருமான ரிஸ்லி முஸ்தபா கல்முனை ஜனாஸா நலன்புரி வாகன கொள்வனவுக்கு நிதி ...
30/03/2024

மயோன் குரூப் ஒப் கம்பெனி இன் தவிசாளரும் சமூக சேவையாளருமான ரிஸ்லி முஸ்தபா கல்முனை ஜனாஸா நலன்புரி வாகன கொள்வனவுக்கு நிதி ஒதுக்கீடு.

(எஸ்.அஷ்ரப்கான்)

மயோன் குரூப் ஒப் கம்பெனி இன் தவிசாளரும் சமூக சேவையாளருமான ரிஸ்லி முஸ்தபா,
கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புடனான சந்திப்பில் ஜனாஸா நலன்புரி வாகன கொள்வனவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

நேற்று (29) இரவு அமைப்பின் காரியாலயத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில் அவசிய தேவையாகவுள்ள நலன்புரி சேவைகளுக்கான வாகன கொள்வனவுக்காக இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்களை தனது சொந்த நிதியிலிருந்து தருவதாக உறுதியளித்தார்.

அமைப்பின் இச் சேவைக்கு ஆதரவு வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில் அமைப்பின் தேவைகளை கேட்டறிந்து கொண்ட அவர், தொடர்ந்தும் தன்னாலான உதவிகளை வழங்குவதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பில், யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் எம். எம். மர்சூக் செயலாளர் எம். வை. பாயிஸ் பொருளாளர் எம்.எச் நியாஸ் மற்றும் உப தலைவர்களான எஸ். அஷ்ரப்கான், ஏ.எம். ஹில்மி, உப செயலாளர் மிப்ராஸ் மன்சூர், உப பொருளாளர் எம்.எச் இக்ரம், கணக்கு பரிசோதகர் ஏ. சி.பெளசர் முகாமையாளர் ஏ.வி அர்ஷாத் உட்பட உயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழ் பேசும் இளைஞர்கள் முன்னின்று செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது - உப வேந்தர் றமீஸ் அபூபக்...
25/03/2024

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழ் பேசும் இளைஞர்கள் முன்னின்று செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது - உப வேந்தர் றமீஸ் அபூபக்கர்.

(எஸ்.அஷ்ரப்கான்)

சமூக நல்லிணக்கத்தை, ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் பேசும் இளைஞர்கள் முன்னின்று செயற்படுவது மகிழ்ச்சியளிக்கிறது
என்று உப வேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இதழியல்துறை மாணவர்களின் "சமூக நல்லிணக்க இப்தார்" இதழியல் மாணவனும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஆசிரியருமான எஸ். அஷ்ரப்கான் தலைமையில், சாய்ந்தமருதில் நேற்று (24) மாலை, இதழியல் மாணவன் முஹம்மட் சிறாஜ் இன் முழுப்பங்களிப்புடன் இடம்பெற்றது.

இங்கு விசேட விருந்தினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பிடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் மற்றும் சிரேஷ்ட பேராசிரியரும் இதழியல் கற்கைத் துறையின் இணைப்பாளருமான ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் உட்பட அம்பாறை, மட்டக்களப்பு, கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த இதழியல்துறை தமிழ் மாணவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இங்கு விசேட விருந்தினர்களில் ஒருவராக கலந்து சிறப்பித்த உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

சமூகங்களிலே பல்வேறுபட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் மலிந்து காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்திலே இன நல்லிணக்கத்தின் ஊடாக இரு சமூகங்கள் மத்தியிலும் ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் பலர் செயல்பட்டாலும், இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்கள் முன் வந்து செயற்படுவது மகிழ்ச்சியை தருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் சமூக நல்லிணக்கம் என்பது வெறும் செயற்பாடுகளற்ற கூட்டங்கள் என்றும் அமைப்புக்கள் கூடி கலைவதுமாக இருப்பதையே நாம் அதிகமாக காண்கின்றோம். இவ்வாறு இருப்பதனால் நாம் பூரணமான ஒற்றுமையை அமைதியை எமது பிரதேசங்களில் காண முடியாதுள்ளது. என்றாலும் சில அமைப்புக்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவது பாராட்டப்பட வேண்டியதே.

ஆனால் துடிப்புள்ள தமிழ் பேசும் இளைஞர்கள் முன் வந்து சமூகங்களை ஒன்றிணைக்கின்ற கருத்து முரண்பாடுகளற்ற முறையில் ஒற்றுமைப்படுத்துகின்ற முயற்சியில் இறங்க வேண்டும். அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை இலங்கை திருநாட்டில் நாம் தீர்த்து வைக்க முடியுமாக இருக்கும்.

ஆன்மீக ரீதியிலும் பல்லின சமய அனுஸ்டானங்களை எல்லோரும் அறிகின்ற ஒரு சந்தர்ப்பத்தை இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் ஏற்படுத்தி இருக்கின்றது.

இவ்வாறான பணி எதிர்காலங்களில் தொடர்ந்தும் நடைபெற வேண்டும். பல்வேறு கோணங்களில் தமிழ் பேசும் சமூகங்களின் இளைஞர்கள் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதன் ஊடாகவே சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதோடு எதிர்கால சந்ததிகளுக்காக சிறந்த தேசத்தை நாம் உருவாக்கி கொடுக்க முடியும்.

எனவேதான், இந்த சமூக நல்லிணக்க இப்தாரை ஏற்பாடு செய்த இதழியல் மாணவர்களின் முயற்சியை நாம் பாராட்டுகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

கல்முனைத் தொகுதியின் கல்முனை 12ம் வட்டாரம் தொடக்கம் 17ம் வட்டாரம் வரைக்குமான ஐக்கிய தேசியக் கட்சியின்  அமைப்பாளராக எஸ்.எ...
22/03/2024

கல்முனைத் தொகுதியின் கல்முனை 12ம் வட்டாரம் தொடக்கம் 17ம் வட்டாரம் வரைக்குமான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக எஸ்.எல்.எஸ்.முஹீஸ் நியமனம்.

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனைத் தொகுதியின் கல்முனை 12ம் வட்டாரம் தொடக்கம் 17ம் வட்டாரம் வரைக்குமான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக எஸ்.எல்.எஸ்.முஹீஸ்
கட்சியின் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஐ.தே.க. தலைவியும் முன்னாள் பிரதியமைச்சருமான அனோமா கமகேவினால் இதற்கான நியமன கடிதம் நேற்று (22) வழங்கி வைக்கப்பட்டது.

முஹீஸ் மிக நீண்ட காலமாக கல்முனை பிரதேசத்தில் மிக நீண்ட காலம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளராக செயற்பட்டுவரும் இவர்,
கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் ஆவார்.

சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.(எஸ்.அஷ்ரப்கான் எம்.வை.அமீர்)சா...
16/03/2024

சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.

(எஸ்.அஷ்ரப்கான் எம்.வை.அமீர்)

சாய்ந்தமருதில் உள்ள பிரபல முன்பள்ளியான பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் இம்முன்பள்ளி, தமது 10 ஆண்டு நிறைவையொட்டி வெளியிடும் புதிய சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் LKG, UKG ஆகிய பிரிவுகளில் கல்வி பயிலும் 183 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நலன் பேணல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் கௌரவ அதிதியாவும் கலந்து கொண்டார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்.எம்.ஸாஜித், சாய்ந்தமருது மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.ஆர்.றிஸ்வான் முகம்மட், கல்முனை பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆயிஷா மற்றும் கல்முனை மெற்ரோபொலிட்டன் கல்லூரியின் கணக்காளர் எஸ்.லியாக்கத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது, "சிறுவர் உளவியல்" எனும் தலைப்பில் டொக்டர் றிபாஸ் மற்றும் "சிறுவர் போசாக்கு" தலைப்பில் டொக்டர் றிஸ்பின், "முன்பள்ளி கல்வியில் பெற்றோரின் வகிபாகம்" தலைப்பில் ஏ.எம்.ஆயிஷா, "சேமிப்பின் முக்கியத்துவம்" தலைப்பில் ஏ.ஆர்.றிஸ்வான் முகம்மட் ஆகியோரால் பெற்றோருக்கான விழிப்புணர்வு உரைகளும் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் போட்டி.!இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர...
12/03/2024

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் போட்டி.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற அதேவேளை குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்கள் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்துள்ளனர்.

புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விஷேட ஒன்றுகூடல் ஒன்றின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசார், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மாத்திரமே விண்ணப்பித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

கடந்த 2021.08. 09 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் 5 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது விண்ணப்பித்துள்ள ஏழு விண்ணப்பதாரிகளில் ஒருவர் ஆறாவது உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான  ஆய்வுகூட  திறப்பு  விழாவும்  கண்காட்சியும்.(எஸ்.அஷ்ரப்கான்)கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின்  விஞ்ஞான...
08/03/2024

விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவும் கண்காட்சியும்.

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா மற்றும் கண்காட்சி நிகழ்வுகள்
அதிபர் எம்.ஐ.அப்துல் றசாக் தலைமையில், பிரதி அதிபர் எம்.ஆர்.முஹம்மது நௌசாதின் நெறிப்படுத்தலில் பாடசாலையில் 2024.03.06ம் திகதி இடம்பெற்றது.

மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இவ் விஞ்ஞான ஆய்வுகூடம் ஒழுங்கமைக் கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக இரு நாட்கள் கண்காட்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எச்.எம்.றஸீன் முஹம்மட், கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.றியாஸா, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். ஸஹ்துல் அமீன் ஆகியோரும், விசேட அதிதிகளாக
பிரதி அதிபர் எம்.வை.எம்.
ஸாதீக், உதவி அதிபர்களான எம்.எஸ்.நிஹால் முஹம்மட், இஸட் ரீ.ஸியாம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு மாணவர்களால் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டு விளக்கங்களும் வழங்கப்பட்டது.

04/03/2024

நாங்களெல்லாம் மடையர்களா ?

03/03/2024

13 வயதான தன்வந்தின் சாதனை

29/02/2024

29.02.2024

எஸ்.எம்.எம். முஷாரப் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட உயர் நீதிமன்றம் அனுமதி !
==================
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்தது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வழங்கிய பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.

வாழ்வாதாரத்துக்கான எமது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். மீறினால்  தொடர் போராட்டத்துக்கு தயங்க மாட்டோம்; தென்கிழக்கு பல்...
29/02/2024

வாழ்வாதாரத்துக்கான எமது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். மீறினால் தொடர் போராட்டத்துக்கு தயங்க மாட்டோம்; தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்!

(எஸ்.அஷ்ரப்கான்)

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து அரசு ஏமாற்றி வருகின்றது.
எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளமை அப்பட்டமான உண்மை.

இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் நாங்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் இரண்டாம் நாளான இன்று (29.02.2024) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை சம்மாதுறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் நுழைவாயிலில் முன்னெடுத்தனர்.

கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் அவர்களின் தலைமையிலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளிலும் பெரும் அளவிலான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் காரணமாக இன்று 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு அடுத்த தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்; சர்வதேச ஆய்வரங்கும் ஒத்திவைப்பு!(எஸ்.அஷ்ரப்க...
28/02/2024

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்; சர்வதேச ஆய்வரங்கும் ஒத்திவைப்பு!

(எஸ்.அஷ்ரப்கான்)

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக இன்று (28.02.2024) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராடம் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகம் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.

நிறைவேற்று உத்தியோகத்தகள் சங்கத்தின் தலைவர் எம்.எச். நபார் மற்றும் கல்விசார ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் ஆகியோரது இணைந்த தலைமையில் இடம்பெற்ற குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பெரும் அளவான ஊழியர்கள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் காரணமாக 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு அடுத்த தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் போராட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் நாளை இடம்பெறவுள்ளது.

26/02/2024

அநுரவா, சஜித்தா, றணிலா (மக்கள் பலம் யாரிடம்)

Cholan Book of World Record கராத்தே பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தனது புலன் உறுப்புக்களால் உலக சாதனை நிகழ்த்தி Cholan ...
25/02/2024

Cholan Book of World Record

கராத்தே பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தனது புலன் உறுப்புக்களால் உலக சாதனை நிகழ்த்தி Cholan Book of World Record இல் தனது பெயரை பதிவு செய்த எம். எஸ். எம். பர்சான் அவர்களுக்கு அதற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இது கடந்த 19.02.2024 ம் திகதி இந்தியாவின் தஞ்சாவூரில் உள்ள Bharath College of Science and Management (Affiliated University) இல் நூற்றுக் கணக்கான கல்லூரி மாணவர்கள் முன்னிலையிலும் CBWR அதிகாரிகளின் மேற்பார்வையிலும் நிகழ்த்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ.(ஜனாதிபதி ஊ...
25/02/2024

ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

- மேற்கு மற்றும் கிழக்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் தெரிவிப்பு.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்திப் பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.
மேற்கு, கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை சுட்டிக்காட்டினார்.

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் சுற்றுலா வலயங்கள் தொடர்பான மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புகளும் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
மொனராகலை பிரதேசத்தில் மேலதிகமாகக் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பயன்படுத்தி புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், நகர நெரிசலைக் குறைப்பதற்காக அவிசாவளை மற்றும் எஹெலியகொட உட்பட பிரதேசங்களின் மூலோபாய திறன்களைப் பயன்படுத்தி புதிய நகரங்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் வட கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை நிர்மாணித்தல் தொடர்பான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை முக்கிய முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலை நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு இந்திய-இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் குறித்த மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரை
யாடலில் கலந்துகொண்டனர்.

சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது.(எமது நிருபர்)சும...
25/02/2024

சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது.

(எமது நிருபர்)

சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவை தரகருக்கு கொடுத்து, போலியான ஆவணங்க​ளை தயாரித்து, விசாவை பயன்படுத்தி, ஐரோப்பிய நாட்டுக்கு தப்பியோடுவதற்கு வருகை தந்திருந்த வர்த்தக குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை (24) பிற்பகல் வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாத்தாண்டியவை வசிப்பிடமாகக் கொண்ட வாகன வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகரான 43 வயதான நபர் அவருடைய மனைவி (வயது 47) மற்றும் 21, 16 வயதுகளைச் சேர்ந்த அவ்விருவரின் மகன்மார் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் அதிக பணிச்சுமை இருப்பதால், அந்த நாடுகளுக்கு விசா வழங்குவது 'குளோபல் விசா வசதி சேவை (Global Visa Facilitation Service) என்ற அமைப்பால் செய்யப்படுகிறது.

தரகர், இந்த தொழிலதிபரை இந்தியாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று வாக்குறுதி அளித்த பணத்தை கொடுத்து இந்த விசாக்களை கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் (Gulf Airlines GF-145) விமானத்தில் செல்வதற்காக இந்த வணிக குடும்பம் சனிக்கிழமை (24) மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

முதலில் பஹ்ரைன் சென்றுவிட்டு மற்றொரு விமானத்தில் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள், வளைகுடா விமான சேவை அதிகாரிகளுக்கு அனுமதி பெறுவதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில், 'கிரேக்க' வீசாக்கள் குறித்து சந்தேகம் அடைந்து, அவர்களைஇ கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் இந்த விசாக்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்போது இந்த தொழிலதிபர் தனக்கு நேர்ந்ததை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதோடு, தனக்கு இந்த 'கிரேக்க' விசாக்களை ஏற்பாடு செய்த தரகரும் இவ்வாறு பணம் பெற்று மேலும் 20 பேருக்கு 'கிரேக்க' விசா வழங்கியதாக மற்றுமொரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குடிவரவு குடியகழ்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

25/02/2024

அதிகாரம் எங்கு உள்ளது.

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் சிறு தொகுதியை நண்பர் ஏ.எம். அன்வர்  எமது ஜனாஸா அமைப்புக்க...
23/02/2024

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு தேவையான கதிரைகள் சிறு தொகுதியை நண்பர் ஏ.எம். அன்வர் எமது ஜனாஸா அமைப்புக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த நன்கொடை ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் அதன் தலைவர் முஹம்மட் மர்சூக் உள்ளிட்ட குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.

இவருக்கு கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் கல்முனை மக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு
கல்முனை

நீதி அமைச்சர் அம்பாரை மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம். (எஸ்.அஷ்ரப்கான், கே.ஏ.ஹமீட்)நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அம்பா...
23/02/2024

நீதி அமைச்சர் அம்பாரை மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம்.

(எஸ்.அஷ்ரப்கான், கே.ஏ.ஹமீட்)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அம்பாறை மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது தீகவாபி ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன நல்லிணக்கம் தொடர்பான (ONUR) வேலைத்திட்டத்தினை மீண்டும் மார்ச் மாதம் ஆரம்பிக்கவிருப்பதாக இவ்விஜயத்தின் போது குறிப்பிட்டிருந்தார்.

இங்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜெயரத்னவும் கலந்துகொண்டதுடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.ஜெகதீசன், அட்டாளச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஷாபிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Hours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share