நடுவன்

நடுவன் - செய்திகளின் நடுநிலையாளன் -
- மக்களின் ஒற்றன் -
-PEOPLE's SPY-

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C60 ராக்கெட்!👉விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ப...
30/12/2024

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C60 ராக்கெட்!
👉
விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதற்கான முன்​தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்​ ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவையாகும். இவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (டிசம்பர் 30) இரவு 10.00 மணிக்கு விண்​ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

இந்த விண்கலன்கள் புவி​யில் இருந்து 476 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. சில மாதங்களுக்கு பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர ராக்கெட் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

#இஸ்ரோ

வீடியோ: 👉    https://shorturl.at/4SvTfநூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்த விமான விபத்து!பதைபதைக்கும் வீடியோ காட்சி!!
29/12/2024

வீடியோ: 👉 https://shorturl.at/4SvTf

நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்த விமான விபத்து!

பதைபதைக்கும் வீடியோ காட்சி!!

மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!!---------------முன்னாள் இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான...
27/12/2024

மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!!
---------------

முன்னாள் இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான மன்மோகன் சிங், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 92ஆவது வயதில் காலமானார்.

மன்மோகன் சிங் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவரகள் உள்ளிட்ட இந்திய அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், உலக நாடுகளின் தலைவர்களும் மன்மோகன்சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மன்மோகன்சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி மன்மோகன் சிங் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் அவர் மீதான பற்றை வெளிப்படுத்தும் எண்ணற்றவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன் ” என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப்பில் 1932ஆம் ஆண்டு பிறந்த மன்மோகன் சிங், இரண்டு தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடக்கூடியது.

#மன்மோகன்சிங்

செய்தி:   https://shorturl.at/4Izsh2 வயதுக் குழந்தையின் உயிரைக் காவுகொண்ட கிளிநொச்சி கோர விபத்து..ஒரே குடும்பத்தைச் சேர்...
25/12/2024

செய்தி: https://shorturl.at/4Izsh

2 வயதுக் குழந்தையின் உயிரைக் காவுகொண்ட கிளிநொச்சி கோர விபத்து..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் படுகாயம்!

செய்தி இணைப்பு:     https://shorturl.at/MB3vv'அஸ்வெசும' புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி!
25/12/2024

செய்தி இணைப்பு: https://shorturl.at/MB3vv

'அஸ்வெசும' புதிய அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி!

வீடியோ இணைப்பு-  https://shorturl.at/GAqJD67 பயணிகளுடன் வீழ்ந்து நொருங்கியது விமானம்!வீழ்ந்து நொருங்கும் பதைபதைக்கும் வீ...
25/12/2024

வீடியோ இணைப்பு- https://shorturl.at/GAqJD

67 பயணிகளுடன் வீழ்ந்து நொருங்கியது விமானம்!

வீழ்ந்து நொருங்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சி..!

கைதான தமிழ்நாடு மீனவர்களுக்கு விளக்கமறியல்!!இராமேசுவரத்தில் வேலை நிறுத்தம்! -------தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி கடற...
24/12/2024

கைதான தமிழ்நாடு மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

இராமேசுவரத்தில் வேலை நிறுத்தம்!
-------
தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 17 தமிழ்நாடு மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை இரவு குறித்த மீனவர்க்ள மன்னாரின் வடக்குக் கடற்பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுப்பட்ட நிலையில், குறித்த 2 படகுகளைக் கைப்பற்றிய கடற்படை மற்றும் கடற் பாதுகாப்புத் திணைக்களம் அதிலிருந்த 17 மீனவர்களைக் கைதுசெய்தது.

தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மீனவர்கள், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மதியம் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 17 மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தமது உறவுகனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

பாடசாலை ஆரம்பம் குறித்த விசேட அறிவிப்பு!👉அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அடுத்த கல்வி நடவடிக்கைகள்...
23/12/2024

பாடசாலை ஆரம்பம் குறித்த விசேட அறிவிப்பு!
👉
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அடுத்த கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2025, ஜனவரி 2ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் இதன்போது ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும்,அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

#கல்விஅமைச்சு

22/12/2024

செல்ஃபி எடுத்த போது எமனாக வந்த தொடருந்து - தாயும் மகளும் உயிரிழப்பு!!

முகாமுக்குச் செல்லாமல் மீண்டும் திருகோணமலைக்குத் திருப்பியனுப்பட்ட மியன்மார் அகதிகள்!செய்தி இணைப்பு:   shorturl.at/gWtcs...
21/12/2024

முகாமுக்குச் செல்லாமல் மீண்டும் திருகோணமலைக்குத் திருப்பியனுப்பட்ட மியன்மார் அகதிகள்!

செய்தி இணைப்பு: shorturl.at/gWtcs

#மியன்மார்அகதிகள்

உள்ளூராட்சித் தேர்தல்!-----------எதிர்வரும் 2025 தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும...
21/12/2024

உள்ளூராட்சித் தேர்தல்!
-----------

எதிர்வரும் 2025 தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேர்ர்களைச் சந்தித்ததன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலும் எதிர்வரும் வருடத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.

#உள்ளூராட்சித்தேர்தல்

ஞானசார தேரருக்குப் பிடியாணை!-----இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ...
19/12/2024

ஞானசார தேரருக்குப் பிடியாணை!
-----
இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைதுசெய்து முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர், நீதிமன்றில் முன்னிலையாகாததால் இவ்வாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்த நிலையில் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதேவேளை, கட்சிக்காரருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாமல் போனதாக ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன், ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் சில மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.கொழும்பு, கண்ட...
18/12/2024

நாட்டின் சில மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, காலி மற்றும் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டம் வரை உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

17/12/2024

இலங்கையின் புதிய சபாநாயகர் தெரிவானார்!

#சபாநாயகர்

ஜனாதிபதி அநுர - பிரதமர் மோடி சந்திப்பு!! தமிழர் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி குறித்து பிரதமர் மோடி இலங்கைக்கு வழங்கிய ச...
16/12/2024

ஜனாதிபதி அநுர - பிரதமர் மோடி சந்திப்பு!!

தமிழர் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி குறித்து பிரதமர் மோடி இலங்கைக்கு வழங்கிய செய்தி!!

-----------------

தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமெனத் தாம் நம்புவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான உறுதிமொழியினை அநுர அரசு நிறைவேற்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்துள்ளார்.

மேலும், மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,

👉அபிவிருத்தி தொடர்பாக, முதலீட்டு அடிப்படையிலான திட்டங்கள்.

👉இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வலையமைப்பிற்கான இணைப்பு மற்றும் பல்பொருள் பெற்றோலிய உற்பத்திகளை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பத்தல்.

👉சம்பூர் சூரியக் கல மின்சக்தி திட்டத்தை துரிதப்படுத்தல்.

👉ETCA உடன்படிக்கையினை நிறைவேற்றும் முயற்சி
மாகோ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில் பாதை சமிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக மீளமைப்புக்காக நன்கொடை ஆதவு.

👉கிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில்
👉அடுத்துவரும், ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி.

👉வீடமைப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுடன் இலங்கையின் விவசாயம் பால்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளுக்கும் இந்தியாவின் ஆதரவு.

👉இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தில் இந்தியா பங்காளர்.

👉பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையை உடனடியாக அமுல்படுத்தல்.

👉கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய விடயங்களிலும் ஆதரவு.

👉இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினை ஆரம்பிக்கத் திட்டம்.

👉சுற்றுலாத் துறையினை முன்னேற்றும் திட்டம்.

👉மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறை.

போன்ற திட்டங்களை செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவுக்கு சிறப்பு வரவேற்பளித்த இந்தியா!!
16/12/2024

ஜனாதிபதி அநுரவுக்கு சிறப்பு வரவேற்பளித்த இந்தியா!!

...

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு!முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!!---...
15/12/2024

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு!

முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!!

-----------

இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்று முதல் வெளிநாட்டுக் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை 5.30 மணியளவில் டெல்லியைச் சென்றடைந்த அநுரவை மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் உள்ளிட்ட இராஜதந்திரிகள் வரவேற்பளித்தனர்.

இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதி அநுரவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது, இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது.

மேலும், இந்தியச் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீன்பிடித்துறை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமை குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உடனான சந்திப்பில் ஆசிய வலயத்தின் பாதுகாப்புக் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு்த தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பில் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர, அடுத்தடுத்து, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடக்கூடியது.

#அநுர

செய்தி இணைப்பு:  https://shorturl.at/gezY8வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா அதிரடி விலகல்!விஜய்யை வம்பிழுக்கும் அரசியல் ...
15/12/2024

செய்தி இணைப்பு: https://shorturl.at/gezY8

வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா அதிரடி விலகல்!

விஜய்யை வம்பிழுக்கும் அரசியல் களம்..!!

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when நடுவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share