Uduppiddy News

Uduppiddy News எமது ஊரின் செய்திகளும், ஊரவர்களுக்கு பயன்படும் செய்திகளும் இங்கே....
(6)

07/10/2024

சங்குச் சின்னத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது

பழைய அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்

06/10/2024
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் மற்றும் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சாதாரண தர மாணவர்களின் பெறுபேறுகள் இன்றைய ஈழநாடு பத்திரிகைய...
04/10/2024

உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் மற்றும் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சாதாரண தர மாணவர்களின் பெறுபேறுகள் இன்றைய ஈழநாடு பத்திரிகையில்,

இனி சுத்த சைவம் தான்....
02/10/2024

இனி சுத்த சைவம் தான்....

கீரிமலையிலிருந்து தொண்டமனாறு - வல்வெட்டித்துறை - பருத்தித்துறை- நெல்லியடி ஊடாக கொழும்பிற்கான  பேருந்து சேவை நேற்று  மீள ...
02/10/2024

கீரிமலையிலிருந்து தொண்டமனாறு - வல்வெட்டித்துறை - பருத்தித்துறை- நெல்லியடி ஊடாக கொழும்பிற்கான பேருந்து சேவை நேற்று மீள ஆரம்பம்...!

வடமராட்சி பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 01.10.2024 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில் கீரிமலையில் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சாலை முகாமையாளர் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த பேருந்து கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறையை இரவு 9:00 மணிக்கு வந்தடைந்து பருத்தித்துறையிலிருந்து மந்திகை மாலிசந்தி நெல்லியடி துன்னாலை ஊடாக வவுனியா அனுராதபுரம் புத்தளம் சிலாபம் வழியாக கொழும்பை சென்றடையவுள்ளது.

அந்தக் காலம்...!
01/10/2024

அந்தக் காலம்...!

மாபெரும் வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி நாளை திருநெல்வேலியில் ஆரம்பமாகிறது. #திருநெல்வேலி  #வடக்குவிவசாயகண்காட்சி
01/10/2024

மாபெரும் வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி நாளை திருநெல்வேலியில் ஆரம்பமாகிறது.

#திருநெல்வேலி #வடக்குவிவசாயகண்காட்சி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சாதித்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள்...    #உடுப்பிட்டிமகளிர்கல்...
01/10/2024

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சாதித்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள்...

#உடுப்பிட்டிமகளிர்கல்லூரி

வடமராட்சியின் பிரபல பாடசாலைகளின் க.பொ.த சாதாரண மாணவர்களின் சாதனைகள் #ஹாட்லி  #மெதடிஸ்  #நெல்லியடி  #வடமராட்சிஇந்துமகளிர்
01/10/2024

வடமராட்சியின் பிரபல பாடசாலைகளின் க.பொ.த சாதாரண மாணவர்களின் சாதனைகள்

#ஹாட்லி #மெதடிஸ் #நெல்லியடி #வடமராட்சிஇந்துமகளிர்

30/09/2024

🚨இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 92 - 21 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 311

ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ.283

சுப்பர் டீசல் ரூ.33 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.319

மண்ணெண்ணெய் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ஆக உள்ளது

பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையில் மாற்றம் இல்லை

Death notice - Mr. Rasaratnam Muthuratnanantham"We are deeply saddened by the passing of Mr. Rasaratnam Muthuratnanantha...
30/09/2024

Death notice - Mr. Rasaratnam Muthuratnanantham

"We are deeply saddened by the passing of Mr. Rasaratnam Muthuratnanantham, the former Northern Region General Manager of the Ceylon Electricity Board, a longstanding Executive Member of the Jaffna Diocese of the Church of South India, and Manager of the Board of Directors of Jaffna College.

His tireless dedication and commitment to public service, both within the professional sphere and in the church, have left an indelible mark on our community. His leadership, wisdom, and unwavering faith were a source of inspiration to many, and his loss is profoundly felt by all who knew him.

As we mourn his passing, we also remember and celebrate the remarkable contributions he made to the growth and development of the diocese, as well as to the community at large. His legacy of service and devotion will continue to guide and inspire us in the days to come.

Our thoughts and prayers are with his family, friends, and all those whose lives he touched during this time of sorrow. May God grant them comfort and strength, and may his soul rest in peace.

Mr. Rasaratnam Muthuratnanantham came to Jaffna College to study for his GCE (A/L) in 1965, entered Katubedde to pursue Engineering (electrical) in 1968, and graduated in 1972. Muthuratnanantham is the brother of Jeeva teacher.

“HOME CALL”
MR. RASARATNAM MUTHURATNANANTHAM, loving son of the late Rev and Mrs E D Rasaratnam of Udupiddi, beloved husband of NIRANJINI (nee Kanagaratnam), affectionate father of JOSHUA NIRESH, and father-in-law of JEMMY, passed away in Colombo, Sri Lanka.

He was a much-loved brother of Jeevanesarasathevi (Jeeva), late Amirtharatnathevi (Chinna), Ratnapakiathevi (Chudda), Nesaratnathevi (Thanga); except Jeeva, others called him “Muthu”.

He was educated at American Mission Boys’ School at Udupiddi till GCE (O/L), and then at Jaffna College, Vaddukoddai for GCE (A/L) in1965-66, entered in 1968 to do Engineering (Electrical) at Moratuwa University at Katubedde and graduated in 1972.

His father, Rev E D Rasaratnam, after a period of being a teacher in both the Mission and Government Schools, retired to do ministry in the JDCSI during the episcopate of Bishop Sabapathy Kulendran.

Mr. Muthuratnanantham was a former Deputy General Manager (DGM) of the Ceylon Electricity Board (CEB) in the Jaffna district when he retired. He was a longstanding member of the Executive Committee of the Jaffna Diocese of the Church of South India (JDCSI), member and manager of the Jaffna College Board of Directors (JCBD), a member of the JDCSI Colombo Church. His contribution to his profession, to the church, alma mater and community at large has been remembered with thanksgiving to God.

May he find rest eternal and rise in glory!"

Update on funeral arrangements.

His remains will lie at Lotus Hall, Jayaratne Funeral Parlour from 9.00am till 8.00pm on the 1st of October The funeral service will be held on the 2nd of October at 2:00pm & the funeral procession will begin at 3:30pm to the Borella Cemetery for cremation at 4:00pm.

29/09/2024

சங்கு சின்னம் தொடர்பில் பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஈடுபடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் பொதுச் சபையை சேர்ந்த அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த.(சா/த) பரீட்சை முடிவுகள் - சாதித்தஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவர்கள் ரி.தக்சயன்...
29/09/2024

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த.(சா/த) பரீட்சை முடிவுகள் - சாதித்த
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மாணவர்கள்

ரி.தக்சயன் 9ஏ (ஆங்கில மொழி)
பி.முகேஷானந் 9ஏ (ஆங்கில மொழி)
ஜெ.டினோசன் 8ஏ,1பி
கே.கபிலன் 7ஏ2பி (ஆங்கில மொழி)
எஸ்.பவிந்தன் 7ஏ,2பி
ரி.சுவர்ணன் 7ஏ,2பி
எஸ்.கிருஷிகன் 7ஏ,2பி
பி.பிரியந்தன் 6ஏ,2பி,1சி

#உடுப்பிட்டி

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 321 ஆவது ஞானச்சுடர் மலர் வெளியீடு  #ஞானச்சுடர் சந்நிதியான் ஆச்சிரமம் சந்நிதி
29/09/2024

சந்நிதியான் ஆச்சிரமத்தின் 321 ஆவது ஞானச்சுடர் மலர் வெளியீடு

#ஞானச்சுடர் சந்நிதியான் ஆச்சிரமம் சந்நிதி

வடமராட்சி தும்பளை கடற்கரை சிரமதானப் பணியில் லயன்ஸ் கழகம்  #லயன்ஸ்கழகம்
29/09/2024

வடமராட்சி தும்பளை கடற்கரை சிரமதானப் பணியில் லயன்ஸ் கழகம்

#லயன்ஸ்கழகம்

28/09/2024

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துங்கள்
- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கண்ணீர் காணிக்கை - அமரர் தம்பிதுரை ஐயா விக்னேஸ்வரன் (மணி ஐயா)
27/09/2024

கண்ணீர் காணிக்கை -
அமரர் தம்பிதுரை ஐயா விக்னேஸ்வரன் (மணி ஐயா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கு இராணுவபுலனாய்வு பிரிவினர் நிதிஉதவி ? முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டு...
26/09/2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கு இராணுவபுலனாய்வு பிரிவினர் நிதிஉதவி ? முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சிஐடியின் முன்னாள் இயக்குநர் வேண்டுகோள்

https://www.virakesari.lk/article/194837

26/09/2024

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுறேுகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வௌியிடப்படும் -
பரீட்சை ஆணையாளர் நாயகம்

25/09/2024

அதிரடி ஆரம்பம்...

மரண அறிவித்தல் - இறுதிக்கிரியை விபரம் இணைப்புஅன்னை மடியில்:- 09.11.1946ஆண்டவன் மடியில்:- 25.09.2024 பண்டகை,  உடுப்பிட்டி...
25/09/2024

மரண அறிவித்தல் - இறுதிக்கிரியை விபரம் இணைப்பு

அன்னை மடியில்:- 09.11.1946
ஆண்டவன் மடியில்:- 25.09.2024

பண்டகை, உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொட்டியவளை, பத்தமேனி, அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தம்பித்துரை ஐயா விக்கினேஸ்வரன் ஐயா (மணி ஐயா ) அவர்கள் 25.09.2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற தம்பித்துரை ஐயா கண்மணி அம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்ற அழகுசுந்தரம் ஐயா சொர்ணாம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், மனோகரதேவி அம்மாவின் பாசமிகு கணவரும், பாலமுருகன் (டென்மார்க்), பாலசேந்தன் ஐயா, அனுசூயா, தங்கப்பிரியா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.09.2024 அன்று முற்பகல்-10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டுப் பத்தமேனி தீர்த்தாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:- 0773999904

தற்காலிக அமைச்சரவையின் அமைச்சர்கள் விபரம்...
24/09/2024

தற்காலிக அமைச்சரவையின் அமைச்சர்கள் விபரம்...

யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பிரதான ...
24/09/2024

யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் செல்வி ராஜ்யலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாமகள் கிருஸ்ணபிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பிரதம விருந்தினருக்கான நினைவுச் சின்னமும் பாடசாலை சமூகத்தினரால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

#மகளிர்கல்லூரி

23/09/2024

நாடு அநுரவோடு..
நாம் நம் கடமைகளோடு..

அலுவலகம் செல்லும் நாட்களில் 8.30 - 4.30 என் Mobile phone Data mode on செய்ய மாட்டேன்.. ஐந்தாறு வருடங்களாக இதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றேன்.

அத்தோடு இந்த நேரத்திற்குள் அலுவலக கடமைகளன்றி எந்தவொரு Social மீடியாவையும் பயன்படுத்துவதில்லை. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன் மதிய இடைவெளியில் பயன்படுத்தினேன்.
இப்பொழுது அதுவுமில்லை ..

அலுவலக விடயம் தவிர ஏனைய தனிப்பட்ட அழைப்புகள் மிக அத்தியாவசியம் எனும் பட்சத்தில் தான் எடுப்பேன்.

இப்படி எத்தனை அரச அலுவலர்களால் துணிந்து சொல்ல முடியும்...
முடிந்தால் நீங்களும் என் தோழர் ❤️

Asviny dias -

*📸 பேசும் படம்**"" வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள்,* *தமிழர்களுக்கு அது புரியும் ""**இந்தப் ...
23/09/2024

*📸 பேசும் படம்*

*"" வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள்,* *தமிழர்களுக்கு அது புரியும் ""*

*இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும்.*

*போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்,*

*காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி.*
(பதிவு :Amalraj)

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uduppiddy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uduppiddy News:

Videos

Share