Unique Fact News

Unique Fact News life is very short

31/03/2024

*⭕அவசர உதவி |குருதிக்கொடை*

*◾யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஒருவருக்கு O- குருதி மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது.*
*யாரேனும் இருந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள்.*

*தொடர்புகளுக்கு :0779226707*

அனைவருக்கும் பகிர்ந்து உதவி செய்யவும்...

21/03/2024
 #அவதானத்துடன்_இருங்கள்!*தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் ஆகியவற்றை விழிப்புணர்வுடன் நோக்குமாறு வங்கிகள் வா...
21/03/2024

#அவதானத்துடன்_இருங்கள்!*

தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் ஆகியவற்றை விழிப்புணர்வுடன் நோக்குமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் எஸ்எம்எஸ் களுடன் வரும் லிங்குகளை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்த முயலாதீர்கள்... ஒரு நொடியில் உங்கள் வங்கி கணக்கிலிருந்து தொகையை திருடி விடுவார்கள்...*

தனது 13 வயதில் பாக்கு நீரிணையை  ித்தியாலம்_15_நிமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை புரிந்த தன்வந்த்க்...
01/03/2024

தனது 13 வயதில் பாக்கு நீரிணையை ித்தியாலம்_15_நிமிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நீந்தி கடந்து உலக சாதனை புரிந்த தன்வந்த்க்கு பாராட்டுக்கள்..! 🤗👌👌
Great Achievement

24/02/2024

புதிதாக பாடசாலைக்கு சேர்ந்த மாணவன் மீது தாக்குதல் : பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதி. நடவடிக்கை எடுக்காத கல்லூரி சமூகம்.*

தரமம் 6க்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் 10 கல்வி கற்கும் சில மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், காது வழியாக இரத்தம் வடிந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம் பெற்றுள்ளது.

யோககுமார் அக்யன் வயது 11 , என்ற மாணவனை இவ்வாறு பாடசாலையில் சேர்ந்து மறுநாள் சக மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

எது வித காரணமின்றி தரம் 10 மாணவர்கள் குறித்த மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்த சம்பவம் தொடர்பில் கல்லூரி முதல்வருக்கும் தெரியப்படுத்தப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

மாணவன் தாக்கப்பட்ட விடையம் தொடர்பில் கல்லூரி சமூகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் நெல்லியடி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

*🅽E𝐖Ꮥ|||✯

17/02/2024

சிதைந்த கனவுகள் ...

Northern uni ரம்பா கணவர் இந்திரகுமார் பத்மநாதன், ஹரிஹரனை மட்டும் வைத்து இசை நிகழ்ச்சியை நடத்தி , ஒரு வெள்ளோட்டம் பார்த்து , இன்னும் பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்திருக்கலாம். சாம்பார் இசை நிகழ்ச்சி கரும் புள்ளியாகிவிட்டது. யார் கொடுத்த இத்துப் போன கயிறோ தெரியாது. அது அறுந்து இசை நிகழ்ச்சி முடிந்து , அந்த மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாது யாழ்ப்பாணத்தை விட்டு அடுத்த நாளே டை கோட் மாலை மரியாதை எதுவுமே இல்லாமல் இந்திரகுமாருக்கு, குடும்பத்தோடு வெளியேற வேண்டி வந்தது.

இந்திரகுமாரது Northern uniயின் நோக்கம் நல்லதேயானாலும், அதை உணரக் கூடியவர்கள் கல்வி சமூகத்திலும் குறைவு என்பதை விட , இப்படியான மாற்றங்களை வரவே விடக் கூடாது என்போரே அதிகம் என்பதே உண்மை. இது இன்னொரு அரசியல்.

இலவசங்களால் அனைத்து வளமும் கொண்ட ஒரு அழகிய நாட்டையும் , மக்களையும் கையேந்த பழக்கிய நாட்டு தலைவர்களது அரசியல் சித்தாந்தங்கள் , இன்றைய நாட்டு தலைவர்களே , உலக நாடுகளிடம் போய் , பிச்சை எடுக்கிறோம் என சொல்லும் அளவுக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.

அதுபோல தனியார் கல்வி நிறுவனங்களால் , கல்வியை இலவசமாகக் கொடுக்க முடியாது. இலங்கை பல்கலைக் கழக அனுமதி கிடைக்காத , பணம் படைத்த மாணவர்களால் வெளிநாடு சென்று அல்லது தற்போது கொழும்புக்கு சென்று கற்கலாம். அதை விட வசதி குறைந்த கட்டணத்தில் , ஊருக்குள் கற்கலாம் என்றால் அதுவும் ஒரு நல்ல வாய்ப்பேயாகும். வெளிநாடுகளில், வாழும் ஊரில் அனைத்தும் உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில்தான் மூக்கு துடைக்கவும் தலைநகருக்கு போக வேண்டியுள்ளது.

பெரிய கட்டிடமும் , நிலமும் இருந்தால்தான், அது பல்கலைக் கழகம் என சிலரது கருத்துகளை காணும் போது சிரிப்பு வருகிறது. சிங்கள பகுதிகளில் சிங்களவர்கள் அனுமதிக்காத ஆங்கில பள்ளிகளை, அப்படித்தான் அன்று ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் உருவாயினர். அவற்றிலிருந்தே வடக்கில் கல்வி சமூகம் ஒன்று உருவாகியது. யாழ்பாணத்துக்கு பல்கலைக் கழகம் ஒன்று தேவையே இல்லை என தடுத்ததும் , அதே சமூகம்தான்.

பல்கலைக் கழகம் என்பது காணி பரப்பளவு அல்ல , அங்கு கொடுக்கப்படும் கல்விதான். வெளிநாட்டு குழந்தைகளிடமாவது இவை குறித்து கேளுங்கள். தவிர இணைய வழியிலேயே அனைத்தும், ஒரு கையடக்க மொபைலுக்குள் சுருங்கிவிட்டது என்பதாவது தெரியுமா?

அதேபோல இறுகிப் போன மனங்கள் , சைகாலஜிக்கலாக மனநலம் பெற , ரிலாக்சாக, கூத்தும் , கும்மாளமும் தேவை. பொழுது போக்குகள் இல்லாத போது போதை பொருட்களுக்கு இளையோர் அடிமையாவது விந்தை அல்ல. மன அழுத்தங்களால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. இந்தியாவில்தான் சினிமா மோகம் மிக அதிகம். அங்கு இலங்கை அளவு போதை அடிமைகள் இல்லை, குறைவுதான். இளைஞர்களிடமுள்ள மனஉளைச்சல் சீர்கேடுகளிலிருந்து (PTSD) புனர்வாழ்வு கொடுப்பது அரசியல்வாதிகளது கடமை. ஆனால் அவர்களே பதவி மோக நோயில் உள்ளனர்?

Northern uni இந்திரகுமார், இன்றைய சூழலை உணர்ந்து செயல்பட்டு Northern uni கல்வியால் இளையோருக்கு உதவ வேண்டும். இந்திரகுமார் போல , புலம் பெயர் தமிழ் ஆர்வலர்கள் அநேகர் , வடக்குக்கு போனதை விட வேகமாக ஆளைவிடு சாமி என ஓடி வந்துள்ளார்கள். அதே நேரம் , இந்திரகுமார் போன்ற ஒரு சிலராலேயே சிலவற்றை செய்ய முடிகிறது. அதற்கு பணம் மட்டுமல்ல , அரசியல் ஆதரவும்தான் காரணம். அவை தொடர்ந்தால் , இன்னும் பலர் நாட்டுக்கு வருவார்கள். உதவுவார்கள்: இந்த உணர்வு , அடுத்த புலம் பெயர் புதிய தலைமுறையிடம் வராது. புலம் பெயர் புதிய தலைமுறையினரது நாடு , இலங்கை அல்ல.

தவறான முருங்கை கொப்பு ஆலோசனைகளை புறம்தள்ளி , பேசுவுவதையும் , அறிக்கை விடுவதையும் தவிர்த்து , Northern uni மேம்பட நடப்பதே சிறப்பு! வாழ்த்துகள்!

Copied
ஜீவன்

சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தென்னம் த...
16/02/2024

சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்

ஆள் மறாட்டம் செய்து தங்கியிருந்த சந்தேக நபர்
இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண்மணி ஒருவர் சந்தேக நபருக்கு உணவு வழங்கிய நிலையில் சந்தேகநபரும் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். உணவு கொடுத்த பெண்மணியின் மகளும், கணவனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகளின் 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, 9 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, பிரதேசவாசிகள் இணைந்து சிறுமிய தேடியுள்ளனர்.

காவலாளி சிறுமியை அழைத்து சென்றதை பார்த்தாக அயவலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய , பிரதேச இளைஞர்கள் காவலாளியிடம் விசாரணை செய்தனர். எனினும் தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென கூறினார். இளஞர்கள் சிறுமியை தேடுவதில் ஈடுபட காவலாளி வீட்டு கதவுகளை பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.

இதையடுத்து காவலாளி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளிக்கு , தர்மஅடி கொடுத்து விசாரணை செய்தனர். தகவலறிந்து பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர். பொலிஸார் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது சிறுமியின் பின்னால் காவலாளி செல்வது தெரியவந்தது

சடலத்தில் அலங்கோலமாக கிடந்த மேலாடைகள்
இதனையடுத்து அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்புக்கு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன. அதோடு சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது

இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது

  ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ரிக்கெட் மூலம் பெறப்பட்ட பணத்தினை திரும்ப வழங்க முடிவு. 0777315262 இலக்கத்தினை தொடர்புகொண்டு...
15/02/2024

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ரிக்கெட் மூலம் பெறப்பட்ட பணத்தினை திரும்ப வழங்க முடிவு. 0777315262 இலக்கத்தினை தொடர்புகொண்டு பணத்தினை மீளப்பெறலாம்.

NorthernUni நிறுவனத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.✍️👇👇👇

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி
வெகுவிமரிசையாக NORTHERNUNI இன் ஒருங்கமைப்பில் அரங்கேறிய ஹரிஹரன் இசை நிகழ்ச்சி
மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம்

இந்திரகுமார் பத்மநாதன் ஆகிய நான் எனது பெரும்பாலான காலப்பகுதியை கனடாவிலே கழித்தது அனைவரும் அறிவீர்கள். எனினும் எனது தாய் மண்ணிற்கும் என் அருமை மக்களுக்கும் எவ்விதத்திலாவது
நன்மை புரிய வேண்டும் என்பது எனது நெடுங்காலக் கனவு. நிதி உதவியோ, பொருள் உதவியோ என்பது சிறிது காலத்திற்கே பயனளிக்கக்கூடியது. என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் அதுவே என் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. எமது மக்களுக்கு குறிப்பாக எம் இளைய தலைமுறையினருக்கு சிறந்த உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நோக்கிலே அமைக்கப்பட்டது NORTHERNUNI ஆகும். எவ்வித சுயலாபத்திற்காகவும் அமைக்கப்பட்டது அல்ல. மற்றும்
பட்டப்படிப்பின் பின்னரான தொழில்வாய்ப்புகளுக்காகவும் எம் சமூக இளைஞர்களின் திறமைகளை
வெளிக்கொணர்வதற்காகவும் அமைக்கப்பட்டதே MAGICK TECH நிறுவனம் ஆகும்.

அத்துடன் நின்றுவிடாது பொழுதுபோக்கிலும் அவர்களை மகிழ்விக்க எண்ணி ஏற்பாடு
செய்யப்பட்டதே ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம். முன்னதாக முழுவதுமே இலவச நுழைவு என அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஆசன பகுதியில் தமக்கும் இடம் வேண்டும் என வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்பு கொண்டதுடன் பணம் செலுத்தி டிக்கட்டினைப் பெறுவதற்கும் தயாராக இருந்தனர். இதனை நோக்குகையில் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று பலர் நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இலவச டிக்கட்டுக்களைப் பெற்று ஆசனங்களைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாக ஆசனங்களை பகுதி பகுதியாக பிரித்து குறிப்பிட்ட தொகைகளுக்கு கேட்பவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருத்தாலும் டிக்கட் நுகர்வினை கட்டுப்படுத்தும் நோக்குடனே விலைகள் நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் 90 வீதமான ஆசனங்கள் இலவசமாக எமது கல்வி சார்
உத்தியோகத்தர்கள், எமது மாணவர்கள் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் எமக்கு உறுதுணையாக
இருக்கும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இவ் டிக்கட்டுக்கள் விற்பனை மூலம்
கிடைக்கப்பெறும் நிதியை யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு ( 𝐘𝐄𝐒 - 𝐘𝐚𝐫𝐥 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 𝐅𝐮𝐧𝐝)

வழங்குவதற்கு தீரமானித்தோம். இவ் நிதியத்தின் ஊடாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த
வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியை தடையின்றி
பெற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும்.என் அன்பு மக்களுக்கு நான் எப்பொழுதும் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் பலதரப்பட்ட போலி பரப்புரைகள் மற்றும் விமர்சனங்கள் வந்த போதிலும் அலைகடலென ஒரு
இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இரசிகர்கள், எனது மக்கள் எமக்கும் கலைஞர்களுக்கும் பெரு
ஆதரவு அளித்தீர்கள். நல்லதொன்று இருப்பின் என்றும் கெட்டதொன்று இருப்பது வழமையே. ஆரம்பத்திலே
விமானநிலையத்தில் நான் அளித்த பேட்டியொன்றில் கலைஞர்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு வருவதில்
உடன்பாடு இல்லை. நாங்கள் தான் அவர்களை அழைத்து வருகின்றோம் என கூறியது பெரிதும்
விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்ததும் நான் அறிவேன். அக்கூற்று யாரையேனும் புண்படுத்தும் நோக்கில்
கூறப்பட்டது அல்ல. அதற்கான உண்மையான காரணங்கள் பல இருந்தன. ஆனால் இந்திய கலைஞர்கள் யாழ் வருவது விருப்பமல்ல என்பது அதன் பொருளல்ல. இவ்வாறாக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே
சில வேண்டத்தகாதவர்களால் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பல தடைகள் மற்றும் போலி
விமர்சனங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் நிகழ்வானது நாம்
எதிர்பார்த்தவாறு மாலை 6 மணிக்கு எமது உள்நாட்டு கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே
ஆரம்பமானது. 6:25 மணிக்கு, தமிழா தமிழா நாளை நம் நாடே எனும் பாடலைப் பாடி ஹரிஹரன் மக்களின்
மகிழ்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். 9:10 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த
வேளையில் குழப்பங்கள் மற்றும் தடங்கல்களை வேண்டுமென ஏற்படுத்தி நிகழ்வினை இடைநிறுத்தும் நோக்கில் உள்நுழைந்த விசமிகளால் சுமார் 15 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. எனினும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நிலைமையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஆரம்பித்து நாம் திட்டமிட்டவாறு அனைத்து நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு 12மணியளவில் நிகழ்வானது நிறைவுபெற்றது. இதன்படி 4மணித்தியாலங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்வு இறுதியில் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்விற்கு 46,055
மக்கள் பதிவுசெய்திருந்த போதிலும், பல எதிர்ப்புக்கள் மற்றும் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும் மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு என்பதற்கிணங்க நிகழ்வின் அன்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை
தந்திருந்திருந்ததே எமக்கும் வருகை தந்த கலைஞர்களுக்கும் பெரு மகிழ்ச்சியாகும். NORTHERNUNI ஆனது இவ்வாறானதொரு நிகழ்வினை திட்டமிட்ட வேளையில் அந்நிகழ்வினை
நடாத்துவதற்கான தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தினால் இதனை முறையாக
அரங்கேற்றுவதற்கு 3ம் நபர் நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை அணுகி அனைத்து பொறுப்புக்களையும் கொடுத்திருந்தோம். இதில் மேடை, ஒலி, ஒளி ஒழுங்கமைப்பு மற்றும் பாதுகாப்பும் உள்ளடங்கலாகும். சில விசமிகளால் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம். எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய்
முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன். தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட,
பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.
இவ்வாறான முதலீடுகள் மற்றும் நம் மண்ணின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை ஊக்குவிக்காது அதனை தடுக்கும் முகமாக எமது மக்களுக்கோ மண்ணுக்கோ ஒரு செயலேனும் செய்யாத
பகுத்தறிவற்ற சிலர் விசமிகளை ஏவி விடுதல், அவதூறாக விமர்சித்தல் மற்றும் போலிப் பரப்புரைகளை
பரப்புதல் பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகின்றது. எனினும் எம்மவர்களில் பலர் எமது மண்ணின்
முன்னேற்றத்திற்காக பல செயற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளனர். அவர்களுடன் இணைந்து
எவ்வாறான தடைகள் ஏற்படினும் நானும் எனது நிறுவனமும் எப்பொழுதும் எனது மக்களின் நலனுக்காகவும் மண்ணின் முன்னேற்றத்திற்காகவும் பணிபுரிவோம் என உறுதியளிக்கின்றேன்.

நன்றி
இந்திரகுமார் பத்மநாதன்
Chairman Northern Uni

அன்றொரு நாள் மாலைப்பொழுதில்அழகிய தருணங்களில் சில படங்கள்நல்ல எண்ணங்களை மனதில் விதைத்துநல்லவற்றை மாத்திரம் எடுத்துச் செல்...
13/02/2024

அன்றொரு நாள் மாலைப்பொழுதில்
அழகிய தருணங்களில் சில படங்கள்

நல்ல எண்ணங்களை மனதில் விதைத்து
நல்லவற்றை மாத்திரம் எடுத்துச் செல்லோம் ❤️


Credit Godwin Christianson

13/02/2024

இந்திரனின் கல்வி முயற்சியைக் காப்பாற்றவேண்டும்!

தமிழ் இளைஞர்-யுவதியரின் கல்வி முன்னேற்றத்துக்காக பாரிய முதலீட்டை முதன்முதலில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னுதாரணமான மனிதர் இந்திரன்.

இவரது இந்த முதலீட்டு முயற்சி பற்றிக் கேள்விப்பட்டது முதலே அதுகுறித்து மிகவும் மகிழ்ந்து பலருக்கும் அதைப் பாராட்டிக் கருத்து வெளியிட்டு வந்தவன் நான்.

2009இல் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடனேயே, ஊடகவியலாளராக இருந்த எனக்கு அந்தக் காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதி அந்தஸ்து பெற்றுச்செல்லும் வாய்ப்பை சக ஊடக நண்பர்கள் ஏற்படுத்தித் தந்தபோதும் மறுத்துவிட்டு,

வடக்கு இளைஞர் யுவதியருக்கான கல்வி-தொழில் மேம்பாட்டின் ஊடாக வடக்கை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்தும் கனவுடன் கொழும்பிலிருந்து ஊர் திரும்பி சிகரம் நிறுவனத்தை ஆரம்பித்து அதன்மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை தொழில் திறன் மிக்கவர்களாக உருவாக்கி, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்பாடுகளையும் செய்துகொடுத்திருந்த எனக்கு, இந்திரனின் சிந்தனை நன்கு பிடித்துப்போயிருந்தது.

வரையறைக்குட்பட்ட எனது பொருளாதார சக்தியுடன் முடிந்தளவுக்கு நான் மேற்கொண்ட பணிகளை, பொருளாதார பலம் கொண்ட இந்திரனால் இன்னும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்று நம்பிக்கை கலந்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால், இடையில் நடந்தேறியிருக்கும் சம்பவங்கள் அவரது இந்த முயற்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது வேதனையானது.

இந்திரனின் பாரிய முதலீட்டுடன் நடைபெறுவதாக கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த ஹரிஹரன் இசை நிகழ்ச்சி அண்மையில் சாத்தியமாக்கப்பட்டபோது, புதிதாக அதில் தமன்னா உட்பட தமிழ் சினிமா பிரபலங்களும் உள்ளடக்கப்பட்டு நிகழ்ச்சியின் வடிவம் திடீர் மாற்றம் பெற்ற பின்னர் அது யாழ்ப்பாணம் மாத்திரமன்றி வடக்கின் - இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமானவர்களை நிகழ்ச்சியை நோக்கி ஈர்த்தது.

கடந்த ஆண்டே 40ஆயிரத்தைத் தாண்டிவிட்டிருந்த நிகழ்ச்சிக்கான பார்வையாளர் முற்பதிவுகள், அனைவருக்குமாக நிகழ்ச்சி திறந்துவிடப்பட்டபோது இலட்சத்தைத் தாண்டிய பார்வையாளர் பங்கேற்பாக “வீங்கி“ப் பெருத்துவிட்டது. இதுவே அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகிவிட்டது எனலாம்.

இலக்குப் பார்வையாளர் யார் என்பதைச் சரியாகத் திட்டமிடாமல், எதிர்பார்க்கப்படும் பார்வையாளர் எண்ணிக்கை தொடர்பான சரியான மதிப்பீடும் இல்லாமல் திறந்தவெளி அரங்க நிகழ்வாக இது நடாத்தப்பட்டதால் அலையென படையெடுத்த பார்வையாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ச்சி சிதறுதேங்காய் ஆகிவிட்டது.

முன்னரே அறிவிக்கப்பட்டபடி நிகழ்ச்சி ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியாகவே இருந்திருந்தால் இத்தனை அனர்த்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. திடீரென மேற்கொள்ளப்பட்ட தமன்னாவின் நுழைவு, நிகழ்ச்சியின் தன்மை, மதிப்பு அனைத்தையும் மாற்றியமைத்துவிட்டது(இதற்கு பாவம் அவரைக் குற்றஞ்சொல்ல முடியாது).

தமன்னா போன்றதொரு திரைப் பிரபலம் கலந்துகொள்ளும் நிகழ்வை நடாத்துவதாக இருந்தால், அது உள்ளக அரங்கில், நுழைவுக் கட்டணங்களுடன், மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளரைக் கொண்டதாக அமைந்திருக்கவேண்டும். அதைவிடுத்து அனைத்தையும் “திறந்து“விட்டதே அனர்த்தக்குக் காரணமாகிவிட்டது.

இது யாழ்ப்பாண மக்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதுடன், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கடல் கடந்து வந்த தமன்னா உள்ளிட்ட இந்திய சினிமா கலைஞர்களுக்கும் ஒரு துர் அனுபவமாக அமைந்துவிட்டது. இரண்டு தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த துன்பியல் அனுபவத்திலிருந்து மீண்டுவரவேண்டியது அவசியமாகும்.

தமது கனவுத் திட்டமான Northern Uni யில் நடாத்திய மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்பாளர்களுடனான கலந்துரையாடலில், போர் நெருக்கடிக்குள் வாழ்ந்த யாழ் மக்களுக்கு களிப்பூட்டல் அவசியமாகிறது என்று தெரிவித்திருந்த இந்திரன், அந்தக் களிப்பூட்டல் சினிமா தாரகையாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதே சிக்கலுக்குக் காரணம்.

எது எப்படியோ, இந்திரன் முன்னெடுத்த கல்வி முயற்சிக்கான அடிப்படை அத்திவாரம் யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்தியான கந்தர்மடம் சந்தியில் பெரும் கட்டிடமாக எழுந்து நிற்கிறது. தொடர்ந்து காங்கேசன்துறையில் அதனை விரிவாக்கி மேம்படுத்தும் திட்டங்களுடன் அவர் இருக்கிறார்.

இந்த அரிய கல்விப் பணித்திட்டத்தில் நியாயமானளவு களிப்பூட்டலும் இருப்பதில் பங்கமேதுமில்லை. ஆனால், அது “அளவு“க்கு மிஞ்சியதால் அவர் எமது இளைஞர் சமுதாயத்துக்கு வழங்கத் திட்டமிட்டிருக்கும் கல்வி-தொழில் அமிர்தம் நஞ்சாகிவிட்டது.

எது எப்படியோ, நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இது இந்திரனுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்திருக்கும் என்று நம்பலாம்.

எனவே, நடற்தேறிய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தனது ஆரம்பத் திட்டமான கல்வி வளர்ச்சித் திட்டத்தை மீளச் சரியாக நிலைப்படுத்தி, சரியான திசையில் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க அவர் முன்வரவேண்டும்.

ஒரு தவறு நடந்துவிட்டது என்பதற்காக, ஒரேயடியாக இந்திரனின் முயற்சியை தூக்கி எறிந்து ஒரு புலம்பெயர் முதலீட்டாளரிடமிருந்து முன்னுதாரணமாக வடக்குக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை உதறித்தள்ளாமல், நிதானமாக யோசித்து இந்திரனுக்கு சரியாக வழிகாட்டி அவரது எண்ணங்களும், நம் இளைஞர்களின் தேவைகளும் நிறைவேற வழிசெய்வோம்.

Copied
Rushangan Kodeeswaran

11/02/2024

எனக்கென்னமோ என் கனவு அரசியல்வாதி கோஷ்டிக்கும் ரம்பா கோஷ்டிக்கும் வியாபார பனிப்போர் மோதல் ஒன்று நடக்கிறது போல தோன்றுகிறது ஆனால் கட்டாயம் கொடுக்கல் வாங்கல் முதலீடுகள் தொடர்பாக இருக்கும் அரசியல் காரணம் இல்லை.

ஒவ்வொரு நடவடிக்கை அறிக்கைகள் event management காறர்கள் யார் என்பதை எல்லாம் கவனித்து பார்த்தால் புரியும்.

Copied

11/02/2024

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம் ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட குளறுபடி

ஷியா நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு

10/02/2024

சம்பவம்

10/02/2024

இன்றைய இசை நிகழ்ச்சியின் வெளிப்பாட்டில் முக்கியான ஒன்று இறுதியில் நடந்த கலவரம் .
அங்கு வந்த மக்கள் ஏறத்தாழ 70000 பேர் வரும்.

யாழ்ப்பாணத்தில் இனி ஒரு 10 ஆயிரத்துக்கு மேல் மக்கள் கூடினாலே இதுதான் நிலமை வரும் . நான் பார்த்தவை
பனையில் ஏறுதல்
கதிரைகள் தூக்கியெறிந்து சண்டை
ஆயிரக்கணக்கானோர் மூடு வெறி .18,19 20 வயது
குழந்தையின் மேல் தண்ணீர் போத்தல் வீச்சு
வயது போனவர்கள் மீது நெரிசலால் விழுதல்
கோடிக்கணக்கான பெறுமதியான camara பொருகளின் மேல் ஏறி ஆட்டம்
300 m ஓட்டம்
மக்கள் மத்தியில் குடி , புகை
தூசன வார்த்தைகள்
அடுத்த 05 வருடத்தில் யாழ்ப்பாணம் எப்பிடி இருக்கும் ??????????😡😡😡😡

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு (9) ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போத...
10/02/2024

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று இரவு (9) ஹரிஹரன் இசை நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக

தெரிவிக்கபப்டுகின்றது
அதேவேளை நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் , 06 பேர் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , இலவசமாக இசை நிகழ்வை கண்டு கழித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

களேபரமான முற்றவெளி
அங்கு , கட்டண அனுமதி பெற்று , இசை நிகழ்வை கண்டு களித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் வலயத்தினுள் நுழைந்து , மேடை வரையில் சென்று இடையூறு ஏற்ப்டுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது , கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த உயரமான மேடைகள் , ஒலி அமைப்புக்கள் செய்யப்பட்டிருந்த மேடைகள் , பனை மரங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறி அட்டகாசத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் இசை நிகழ்வு இடையில் சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டு , பொலிஸார் , விசேட பொலிஸ் அதிரடி படையினர் மேலதிகமாக மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

Harikaran star nightநிகழ்ச்சி ஒழுங்காக தான் சென்றது. யாழ்ப்பாணத்து ஒரு பகுதி குழப்ப இளைஞர்கள் செய்த வேலை தான் இது பொழுது...
10/02/2024

Harikaran star night

நிகழ்ச்சி ஒழுங்காக தான் சென்றது. யாழ்ப்பாணத்து ஒரு பகுதி குழப்ப இளைஞர்கள் செய்த வேலை தான் இது பொழுதுபோக்கினை பொழுதுபோக்காக பார்க்க வேண்டும். இது ஏதோ உறியடிக்க போன ஆட்கள் மாதிரி கேமரா மேடை மேல ஏறி நின்று குழப்பியது எல்லாம் யாழ் எல்லோரும் இல்லை ஒரு பகுதி யாழ்ப்பாண இளைஞர்கள் தான். 1.இங்கு போடப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
2.பொலிஸாரே தடைகம்பியை தாண்டி போங்கள் என்று சைகை காட்டியது.
3.நிகழ்வு ஒழுங்கமைப்பு செய்தவர்கள் முழுக்க முழுக்க காசு அறவிட்டு செய்திருக்கலாம்.இது ஒரு திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம் ஏன் என்றால் யாழ்ப்பாண மக்கள் நல்ல நிகழ்வுகளை காணகூடாது என்ற வகையில் உலக அரங்கில் யாழ்ப்பாண மக்களை நாகரிகம் தெரியாதவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
4.இப்போது தான் நாகரிகம் அற்ற யாழ்ப்பாணம் வளர்ந்து வருகிறது 2009 க்கு முன் நாகரிகமா தான் இருந்தது. நிகழ்ச்சி நடத்துவதால் நாகரிகம் அற்றுப்போகாது போதைக்கு அடிமையான இளைஞர் கூட்டத்தின் அசுர வளர்ச்சியை இது காட்டி நிற்கிறது.
5.காட்டுவாசிகள் கூட இப்படி இருக்க மாட்டார்கள். இசையை ரசிக்க தெரியணும். இப்படி ஒரு பிரமாண்ட இசை நிகழ்வு இங்கு உள்ள ஒரு சிலருக்கு தேவை இல்லை.
ஹரிஹரன் அவர்களை கூப்பிட்ட நேரம் டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ் ச கூப்பிட்டு இருக்கலாம் அவர் வந்திருந்தால் ஒரு மொழிபெயர்ப்பாளருடன் இணைந்து இப்படி தான் சொல்லியிருப்பார்
ஹேய் இங்க பாருங்க நா இப்போ காட்டப்போறது பார்த்தீங்கிண்ணா ஏய் அங்க பாரு கேமரமேன் ஸ்டான்ட் மேல மர அணில் மாதிரி ஏறுறாரு.அங்க ஏதோ கூட்டம் கூட்டமாக நம்மல நோக்கி ஏதோ கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் ஓடுங்க ஓடுங்க எல்லாம் ஓடுங்க என்று சொல்லி அசத்தியிருப்பார்..........😆

ஒரு சிலரால் அரங்கேற்றப்பட்ட இந்த குழப்பத்தால் இனி ஒரு நிகழ்வை பார்க்க மாட்டீர்கள்.

இந்த நிகழ்ச்சி இனால் தான் யாழ்ப்பாணம் சிதைவது என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது ஏற்கனவே யாழ்ப்பாணம் சிதைந்து கொண்டுதான் செல்கிறது. முதலில் எங்களை நாமே திருத்த வேண்டும் அதற்கு அப்புறம் தான் மற்றவர்களை திருத்த வேண்டும்.
யாழ்ப்பாண இளைஞர்களே பியர் சாராயம் சிகரெட் நிகழ்வு அமைவிடத்திற்கு உள்ளே வைத்து உள்ளெடுக்கிறார்கள். நிகழ்ச்சி கண்டு இரசிக்க கூடியதாக மனநிலையில் நிகழ்வை காண வரவேண்டும். அத விட்டிட்டு கையில பியர் ரின் சிகரெட் உடன் வந்தால் இப்படி தான் நிகழ்வு முடியும். இதை ஒரு பாடமாக எடுத்து திருந்துங்கள். இனி ஒரு லெஜெண்ட் இங்கு வரமாட்டார்.
இங்க கூட்டம் கூட்டமாக வந்த இந்த ஆட்கள் ஏன் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான எழுச்சிப் போராட்ட நிகழ்வுகளுக்கு அலை அலையாக வருவதில்லை. 😡😡
ஹரிஹரன் மற்றும் அவரது சக பாடககர்களை மட்டும் அழைத்திருந்தால் நிகழ்வு இப்படி முடிந்திருக்காது.

லாடம் இல்லாத குதிரைகளாக யாழ் இளைஞர்கள்........!நேற்று நடந்த இசை நிகழ்ச்சியை காண குறிப்பாக ஹரிகரனை நேரில் காணும் ஆவலில் ந...
10/02/2024

லாடம் இல்லாத குதிரைகளாக யாழ் இளைஞர்கள்........!

நேற்று நடந்த இசை நிகழ்ச்சியை காண குறிப்பாக ஹரிகரனை நேரில் காணும் ஆவலில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன்.
அங்கு காணக்கிடைத்த காட்சிகள் பெரிதும் மனதை வருத்தியது. கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் எடுத்த மண்ணில் தறிகெட்டு தறுதலையாக போதையில் ஒழுக்கம் கெட்டு நிகழ்ச்சியை காண வந்த இருபது வீதமான இளைஞர்கள்.....!

இவர்களால் நிகழ்சியை காண வந்த எண்பது வீதமான மக்களில் கணிசமான மக்கள் மன வெறுப்புடன் அங்கிருந்து விலகி சென்றதை அவதானிக்க முடிந்தது. காடையர்களாக அவர்களின் முக லட்சனங்கள்.... !

தமக்குள் சல்மானகான் சாருக்கான் என்ற நினைப்பில் குருவி கூடு கட்டிவிடும் அளவுக்கு கொண்டை வளர்ந்து கத்தரிக்கோல் சவரக்கத்தியே மாதக்கணக்கில் காணாத தறுதலைகள் நிறைவெறியுடன் நிகழ்வுகளை காண வந்திருந்தனர். அவர்கள் வரும் போதே தாய் தங்கைகளின் பிறப்பு உறுப்பையும் காவி வந்தவர்கள் போல் வாயை திறந்தால் தூசண ( கெட்ட) வார்த்தைகள் கொட்டோ கொட்டென கொட்டி தீர்த்தனர்.

அங்கு குடும்பசகிதம் வந்தவர்கள் இதனால் நிகழ்ச்சியை காணாமல் விட்டு அகன்றதை கண்டேன். அதோடு முன்னால் காட்சியை ஒளிப்பதிவை மேற்கொகொள்ள அமைத்த தற்காலிக வலுவில்லாத மேடையில் நிகழ்ச்சி ஒருகினைப்பாளர்களின் தயவான வேண்டுதலையும் புறம்தள்ளி அதன்மேல் ஏறி தம்மை பெற்றவர்கள் மனிதர் அல்ல கருங்குரங்குகள் தான் என பறைசாற்றி கொண்டிருந்த பலரை காணமுடிந்தது.

இதிலிருந்து நான் அவதானித்த விடயம் என்னவெனில் இலங்கை காவல்துறையால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. மாகாணத்துக்கான காவல்துறை அதிகாரமும் மென் போக்கான சர்வதிகார சட்டமும் இருந்தால் தான் இந்த காடையர்களை நல்வழிப்படுத்த முடியும்.

யாழ்நகரத்தில் காணும் இடமெல்லாம் நிறை போதையில் இருபதுக்கும் இருபத்தி முன்று வயதுக்கிடைப்பட்ட இளைஞர்கள் அதோடு கஞ்சா பாவித்து வாய்கள் பிதற்றியபடி பலரை காணமுடிந்தது. இவ்வாறானவர்கள் சமூக விரோதிகளாக வகைப்படுத்தி சிறையிலடைத்து புனர்வாழ்வு அளித்தல் அவசியம்.

இந்த அவலட்சணத்தையுடைய சமூகத்தை நாம் வைத்துகொண்டு தென்னிந்திய கூத்தாடிகளால் எமது இளைஞர்கள் கெட போகிறார்கள் என வசைபாடுவது தமிழ்த்தேசியவாதிகள் மல்லாக்க படுத்திருந்து துப்புவதை போல் உள்ளது.

விரைவாக ஒரு தீர்வை காண வேண்டிய அவசியத்தை சமூக சீரழிவு எம்மை சுட்டிக்காட்டுகிறது. இல்லையேல் படுகேவலமான சமூக கட்டமைப்பை கொண்ட சமூகமாக வடமாகாணம் உருவாகும். இதற்கான அடித்தளத்தை உருவாக்க அரசியல்வாதிகள் சமூக பற்றாளார்கள் நிலைமையின் வீரியத்தை அறிந்து விரைவாக செயல்படுதல் அவசியம்.

Copied
வேல் ஸ்ரீரங்கன்.

10/02/2024

கலாசாரம் சீரழியுது
பாரம்பரியம் கெட்டுப் போகுது எண்டுறானுகள்
எவளவுக்கு தமிழ் சமூகம் நாசமாகிட்டுது எண்டு
நேற்று பார்க்க முடிஞ்சுது
ஒரே நாளில ஒண்டும் கெட்டுப் போகாது
இவளவு நாள் கெட்டுட்டு இருக்கிறதுக்கான
காரணத்தை இல்லாம செய்யுங்க
இசை என்பது எங்க கலாசார சீரழிவு பட்டியல்ல இருக்கு. அது எல்லாராலும் விரும்பப் படுவது. சிலருக்கு உயிரும் கூட.
கட்டாயக்கல்வி வயது கவனிப்பாரல்ல
போதை ஒழிப்ப செயற்படுத்துற மாதிரி இல்லை
லஞ்சம் வாங்கிறது குறைஞ்ச மாதிரி இல்லை

அடிப்படை கல்வி கூட இல்லாம
சொல்லுற தமிழ் கூட விளங்காம
நாகரீகம் தெரியாத
இவங்கள வச்சுக் கொண்டு
என்னத்த செய்யிறது.

தெளிவாக இருந்தால் பிரித்தறியிற தன்மை இருக்கும்
நாங்கள் இப்படியான நிகழ்ச்சிகளை விரும்புகிறோமே தவிர. அதற்கு அடிமைகள் அல்ல!
உங்களை விடவும் கலாசாரத்தை மதிப்பவர்கள் நாங்கள். களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்களும் நாங்கள் !

வீட்டில் இருந்துவிட்டால் கலாசாரம் காப்பாற்றப்படும் என்ற ரியல் சங்கிகளுக்கான சமர்ப்பணம்

Copied

04/02/2024

இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்பட்ட திரைப்படத்தின் சில காட்சிகள்

இன்று அதிகாலை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலியா...
25/01/2024

இன்று அதிகாலை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலியானார்.

இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் மரணித்துள்ளனர்.

20/01/2024

*20 - 21ஆம் திகதிகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!*

நாட்டில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் அந்த தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் இதனை தெரிவித்துள்ளார்.

9 மாதம் முதல் 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு குறித்த தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 6 மாதம் முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான மேலதிக சின்னம்மை தடுப்பூசிகளும் எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு சென்று குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

01/01/2024

எரிபொருட்கள் விலை 12 % ஆல் அதிகரிக்கின்றது

குறிப்பாக 92 பெற்றோலின் விலை ரூபா 40 னால் அதிகரிக்கின்றது

95 பெற்றோல் விலை ரூபா 35 வினால் உயருகின்றது

டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது

சமையல் எரிவாயு விலை 16% வால் அதிகரிக்கின்றது

அதாவது 12.5 KG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 500 வால் அதிகரிக்கின்றது

பஸ் கட்டணம் 15% ஆல் அதிகரிக்கின்றது.

அதாவது குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூபா 35 ஆக உயருகின்றது

முச்சக்கர வண்டி கட்டணம் இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் ரூபா 100 வால் அதிகரிக்கின்றது

PickMe-Uber கட்டணங்கள் 20 % ஆல் அதிகரிக்கின்றது

மின்சார கட்டணத்தில் மாற்றம் ஏற்படாத போதும் Solar Panels 20 % ஆல் அதிகரிக்கின்றது

நீர் கட்டணம் குறைந்தது 3% அதிகரிக்கின்றது

தபால் கட்டணம் குறைந்தது 7 % ஆல் அதிகரிக்கின்றது

அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றது

மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ரூபா ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கின்றது

மொபைல் போன் விலைகள் 35 % வீதம் அதிகரிக்கின்றது.

அதாவது ரூபா100,000 மதிப்புள்ள மொபைல் போன் நாளை முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது

நகை மற்றும் தங்க விலைகள் 20 % ஆல் அதிகரிக்கின்றது

சிற்றுண்டிகளின் விலை ரூபா 10 வால் அதிகரிக்கின்றது

பால் தேநீர் விலை ரூபா 10 வாலும் சாதாரண தேநீர் விலை ரூபா 5 வாலும் அதிகரிக்கின்றது

சோறு மற்றும் கொத்துரொட்டி பார்சல் விலை ரூபா 25 வால் அதிகரிக்கின்றது

பேக்கரி பொருட்களின் விலைகள் ரூபா 5 முதல் ரூபா 15 வரை அதிகரிக்கின்றது

இது போதாதென்று மரக்கறி விலைகள் உச்சத்தை தொட்டு இருக்கின்றன

குறிப்பாக பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 2,400 ஆக உயர்ந்து இருக்கின்றது

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ ரூபா 600 ஆக உயர்ந்து இருக்கின்றது

முட்டை ரூபா 50 ஆக இருக்கிறது

இலங்கை தீவின் சகல சமூக தள வாசிகளுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்

பிரபல நடிகரும்அரசியல்வாதியுமான விஜயகாந்த்காலமானார்.சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனாதொற்றுக்குள்ளானதால் சிகிச்சைபலனின்றி உயி...
28/12/2023

பிரபல நடிகரும்
அரசியல்வாதியுமான விஜயகாந்த்
காலமானார்.
சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா
தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மியாட்
மருத்துவமனையில் வழக்கமான
மருத்துவ பரிசோதனைக்காக நேற்று
முன்தினம் அனுமதிக்கப்பட்ட
விஜயகாந்துக்கு கொரோனா
தொற்று உறுதியானது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்
வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர
சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும்
அது பலனளிக்கவில்லை.

21/12/2023

நேற்று இலங்கை - ஈழம் பிரச்சினை ஓடிக்கொண்டிருந்தது..
இன்று என்னடாவென்றால் காற்சட்டைப் பிரச்சினை !

இதெல்லாம் ஒரு கேள்வியா என்ன ?

சில இடங்களுக்கு இப்படித்தான் உடையுடுத்திப் போகவேண்டும்; அங்கே இவ்வாறு தான் நடந்துகொள்ளவேண்டும் என்றால் அவ்வளவு தான் !
அதற்கு மேல் மறுபேச்சே தேவையில்லை.
'கட்டுடைப்பு' என்ற பெயரில் கண்டமேனிக்கு நாம் இப்படித்தான் நடப்போம், இல்லாவிட்டால் அடக்குமுறை என்று எங்கெல்லாம் எங்களால் இலகுவாக குரல் எழுப்பமுடியும் என்று தெரிகிறதோ அந்த இடங்களில் மட்டும் உங்கள் வீராவேசமும் காணொளி போட்டு புரட்சியும் !
(இதே போல நல்லூர் கோவிலிலோ, தலதா மாளிகையிலோ ஒரு சர்வதேச கூட்டம் நடக்கும் இடத்திலோ சட்டம் பேசியிருக்க முடியுமா?)

காற்சட்டை தான் உங்களுக்கு Comfortable என்றால் கடற்கரைக்கோ, mall or theatreக்கு போகலாம்.
யாழ் பல்கலைக்கு மட்டுமல்ல, இலங்கையில் பல பாடசாலைகள், வழிபாட்டிடங்கள் ஏன் அலுவலகங்களுக்குக் கூட எழுதப்படாத ஆனால் மதிக்கப்படவேண்டிய நடைமுறைகள் இருக்கின்றன.
அந்தப் பல்கலையும் ஒரு வழிபாட்டிடம் போலத் தான் !

எல்லாவற்றுக்கும் எழுத்தில் தான் காட்ட வேண்டுமென்றால் அந்தக் காவல்கார ஐயா அப்படித்தான் எகிறுவார்.
காணொளியைப் பார்த்து கடுப்பாயிட்டன்.

என்னுடைய ஆடைத் தெரிவில் பிடித்ததும் இலகுவானதும் காற்சட்டை/ Jumper/ bermudas தான்..
அதற்காக எனது (முன்னைய)அலுவலகத்துக்கோ, தற்போதைய சட்டக் கல்லூரி, அல்லது ஏதாவது கூட்டங்களுக்கோ, பிள்ளைகள் கற்கும் பாடசாலையின் உள்ளேயோ நான் அணிந்துபோக முடியுமா ?
பிள்ளைகளை பாடசாலைகளில் pick/drop செய்யப்போகின்றபோதும் கூட வாயில் தாண்டுவதாக இருந்தால் அதற்குப் பொருத்தமான ஆடையுடன் நாம் செல்வது தான் முறை.
அதிலும் இது பல்கலைக்கழகம் !
கொஞ்சமாவது பகுத்தறிவுடன் செயற்படப்பாருங்கள்.
Copy # ARV Loshan

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Unique Fact News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Fact News:

Videos

Share


Other Media/News Companies in Jaffna

Show All

You may also like