JaffnaTimes

JaffnaTimes Welcome to JaffnaTimes. No : 1 Videography Service provider in Jaffna and North.

02/01/2025

ரவுடிகளின் கோட்டையாகும் யாழ்ப்பாணம். புதிய ஆண்டில் யாழில் பரபரப்பு

இ‌ன்று அ‌திகாலை யாழ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் யாழ் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் இஷாரா புடவையை கடைக்கு முன்பு மது போதையில் நின்று நடனமாடிய குழு ஒன்று வீதியால் சென்ற இளைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டனர்.

ஆடைகள் களையப்பட்டு கொலை செய்யும் நோக்கோடு இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயற்சித்த மட்டக்களப்பு பிரதேச இளைஞனும் தாக்கப்பட்டார் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் தெல்லிப்பழை ஆதாரத் வைத்திய சாலையிலும் மற்றவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும் உயிருக்கு போராடி வருகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களை யாழ் பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த ரவுடியான வசி என்பவரின் மகனும் அவரின் இரண்டு மருமக்களும் இன்னும் சில ரவுடிகளுமே தாக்கியுள்ளார்கள் இது தொடர்பாக இதுவரை யாருமே கைதுசெய்ய படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

வடக்கில் மழை தொடரும்இலங்கைக்கு தென்கிழக்காக நீடிக்கும் வலுக்குறைந்த காற்று சுழற்சியின் காரணமாக, வடக்கு கிழக்கு உள்ளடங்கல...
29/12/2024

வடக்கில் மழை தொடரும்

இலங்கைக்கு தென்கிழக்காக நீடிக்கும் வலுக்குறைந்த காற்று சுழற்சியின் காரணமாக, வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் சாதாரண மழையுடன் கூடிய சீரற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட இந்திய நிலப்பரப்பில் இருந்து வருகின்ற குளிரலையின் தாக்கம் தமிழக நிலப்பரப்புடன் கணிசமான அளவில் துண்டிக்கப்படுகிறது. அதனால் காற்று சுழற்சியின் மூலமாக வெப்ப நீராவியை சுமந்து வருகின்ற மழைக்காற்றின் ( Easterlies ) வீதம் வடகிழக்கு நிலப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.

இதன் விளைவாக வடக்கு கிழக்கில் அதிகமாக மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதுடன், அவ்வப்போது விட்டுவிட்டு பரவலான மழைவீழ்ச்சியும் கிடைக்கக்கூடும்.

காற்று சுழற்சியானது மேலும் வலுவடைய முடியாமல் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் மேற்கு நோக்கி நகர்ந்து, வருகின்ற ஜனவரி 1ம் திகதி புதன்கிழமை அளவில் அரபிக்கடலில் செயலிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

29/12/2024 : 05.15 PM

யாழில் வீதியில் விபத்தில் சிக்கிய முதலையாழ்பாணம் செம்மணி வீதியில் முதலை ஒண்று வாகனத்தில் மோதுன்டு சிறுகாயத்துடன் கிடக்கி...
21/12/2024

யாழில் வீதியில் விபத்தில் சிக்கிய முதலை

யாழ்பாணம் செம்மணி வீதியில் முதலை ஒண்று வாகனத்தில் மோதுன்டு சிறுகாயத்துடன் கிடக்கின்றது

முதலை உயிராக காணப்படுவதால் வீதியால் செல்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிராபார்க்கப்படுகிறது.

இன்று அதிகாலை  (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையி...
18/12/2024

இன்று அதிகாலை (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த NCG க்கு சொந்தமான அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதியதில் இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் தரை கடந்து மன்னார் வளைகுடாவுக்கு கீழே காணப்படுகின்ற தாழ்வுக்கு, வங்கக்கடலில் இருந்து வடக்கு மாகாணம் ஊடாக வெப்...
12/12/2024

இலங்கையின் தரை கடந்து மன்னார் வளைகுடாவுக்கு கீழே காணப்படுகின்ற தாழ்வுக்கு, வங்கக்கடலில் இருந்து வடக்கு மாகாணம் ஊடாக வெப்ப நீராவிகொண்ட காற்று பயணிக்கிறது. (Pull effect)

மிக மெதுவாக நகரும் இந்த நிகழ்வு இன்று பகல் முழுவதும் குறித்த இடத்தில் அங்குமிங்குமாக நீடிக்கும் வாய்ப்பு நிலவுவதனால், வடக்கில் குறிப்பாக யாழில் இன்று 12ம் திகதி விட்டுவிட்டு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

எனினும், மேலும் இது மேற்கே அரபிக்கடல் நோக்கி பயணிக்க தொடங்கியதும் மழையுடனான வானிலை சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

12.11.2024 - 05.20 AM

10/12/2024

🔴 Exclusive Leaked Video : யாழ் போதனா வைத்தியசாலையில் அதிரடியாக நுழைந்து வைத்தியர் சத்தியமூர்த்தியை மிரட்டும் பாராளுமன்ற உறுப்பினர் ராமனாதன் அர்ச்சுனா !!

30/11/2024

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் நின்ற புனிதமான வேப்பமரம் நேற்று முன்தினம் (27-11-2024) கடும் காற்றுடன் பெய்த மழையில் சரிந்து விழுந்தது.

28/11/2024

புதுக்குடியிருப்பு விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வீடு ஒன்றுக்குள் வந்த புலி

யாழ்நல்லூர் பகுதியில் தற்ப்போது உள்ள நிலைமை 26/11/2024 இரவு 10.00 மணி
26/11/2024

யாழ்நல்லூர் பகுதியில் தற்ப்போது உள்ள நிலைமை 26/11/2024 இரவு 10.00 மணி

26/11/2024

🔴முக்கிய அறிவித்தல் அதிகம் பகிரவும்🔴

👉வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.

எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬

அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
Point Pedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 0212211525.

தற்போது பெய்து வரும் அடை மழையினால் செல்லக் கதிர்காம முருகன் ஆலயத்தின் நிலை...
26/11/2024

தற்போது பெய்து வரும் அடை மழையினால் செல்லக் கதிர்காம முருகன் ஆலயத்தின் நிலை...

 #வன்னி வயல்வெளி, பனைக்காடுகளுக்கு நடுவே இரட்டை  #வானவில் 🌈அழகிய இயற்கை காட்சி 💚📷 -  P Đëv Mükünđ
26/11/2024

#வன்னி வயல்வெளி, பனைக்காடுகளுக்கு நடுவே இரட்டை #வானவில் 🌈

அழகிய இயற்கை காட்சி 💚

📷 - P Đëv Mükünđ

26/11/2024

வெள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பு:

தற்போது கனகாம்பிகைக்குளம் 06 அங்குலம் வான்பாய்ந்து கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்து வருவதால் புலிக்குளத்தில் இருந்து அதிகளவு நீர் கனகாம்பிகைக்குளத்திற்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. இதனால் வான்பாயக்கூடிய அளவு அதிகரிக்கலாம்.
எனவே கனகாம்பிகைக்குளத்தின் கீழ்பகுதியில் வசிக்கின்ற மக்கள் குறிப்பாக ஆனந்தபுரம், இரத்தினபுரம் ஆகிய பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன்,
வெள்ள அனர்த்தம் அதிகரிக்குமாக இருந்தால் கிராம சேவகர்களுக்கு அறிவித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,
கிளிநொச்சி.

26/11/2024

முத்தையன்கட்டு குளம்

 #இரணைமடுக்குளம் தற்போது 2 கதவு 1அடியும் 2 கதவு 1/2அடியும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு...
26/11/2024

#இரணைமடுக்குளம் தற்போது 2 கதவு 1அடியும் 2 கதவு 1/2அடியும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

26/11/2024

யாழ்_உடுப்பிட்டி பகுதியில் வீட்டுக்கு வந்த முதலை இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம்  சாவகச்சேரியில் நிறுவப்பட்ட பனை சீனி உற்பத்தி நிலையம் ❤️
25/11/2024

1970 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நிறுவப்பட்ட பனை சீனி உற்பத்தி நிலையம் ❤️

வெள்ளத்தில் மூள்கியது முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம்
25/11/2024

வெள்ளத்தில் மூள்கியது முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம்

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when JaffnaTimes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JaffnaTimes:

Videos

Share

Category