Saleem Ramees

Saleem Ramees Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saleem Ramees, Media, Addalachenai.

Permanently closed.
08/09/2023
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் றஊப் ஹக்கீம்(MP) அவர்களின் விசேட பணிப்புரமைக்கு அமைய நாடு மு...
04/09/2023

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் றஊப் ஹக்கீம்(MP) அவர்களின் விசேட பணிப்புரமைக்கு அமைய நாடு முழுவதும் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 31 கிராம சேவகர் பிரிவுகளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் கிளைகள் புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.2 கட்டமாக இறக்காம பிரதேசத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகளில் கட்சியின் கிளைகள் புனரமைப்பு தொடர்பான விஷேட கூட்டம் இன்று 04.09.2023ல் இறக்காமத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர்(முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்) பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை (முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்) அம்பாறை மாவட்ட செயலாளர் எ.சி.சமால்தீன் இறக்காம அமைப்பாளர் எஸ்.எல்.நிசார்(ஆசிரியர்) இறக்காம முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் ஜெமில் காரியப்பர் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்களான என்.எம்.ஆசிக்,எம்.சி.முஸ்னி இறக்காம பிரதேச கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இறக்காம பிரதேசத்தில் 12கிராம சேவகர் பிரிவுகளில் கட்சியின் கிளைகளை புனரமைப்பதற்காக கட்சி முக்கியஸ்தர்களின் விசேட கூட்டம் 11.09.2023 நடத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்...
04/09/2023

முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகில்,விவசாய அமைப்புக்களின் தலைவர்கள்,அதிகாரிகள் அட்டாளைச்சேனை,பாலமுனை விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கள விஜயம் மேற்கொண்டனர்

04/09/2023
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பா...
02/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின்போது
( 02.09.2023)
மருதமுனை
பிரதேசத்தில் முக்கியஸ்தர்களை சந்தித்தபோது......

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பா...
02/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின்போது
( 02.09.2023) மத்திய முகாம் பிரதேசத்தில் முக்கியஸ்தர்களை சந்தித்தபோது......

மரணித்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கெளரவ எம். எஸ். உதுமா...
02/09/2023

மரணித்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கெளரவ எம். எஸ். உதுமாலெப்பை. ஜேபி அவர்களின் தயாரின் இல்லத்திற்கு இன்று ( 02.09.2023 - அட்டாளைச்சேனை) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்களும், மு. கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் வருகை தந்த போது...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பா...
02/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின்போது இன்று ( 02.09.2023) நிந்தவூர், மாவடிப்பள்ளி மற்றும் மளிகைக்காடு முக்கியஸ்தர்களை சந்தித்தபோது......

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பா...
02/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின்போது இன்று ( 02.09.2023) அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை முக்கியஸ்தர்களை சந்தித்தபோது......

Masha Allah
02/09/2023

Masha Allah

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று...
02/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று ( 02.09.2023)அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது பொத்துவில் பிரதேசத்தில்......

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று...
01/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று ( 01.09.2023)அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது அக்கரைப்பற்றில்......

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று...
01/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று ( 01.09.2023)அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது சாய்ந்தமருதில்.....

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று...
01/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று ( 01.09.2023)அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது கல்முனையில்.....

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று...
01/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று ( 01.09.2023)அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது சம்மாந்துறையில்.....

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று...
01/09/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று ( 01.09.2023)அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது இறக்காமத்தில்.....

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்திய கல்வி அமைச்ச...
24/08/2023

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் நன்றி தெரிவிப்பு

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை அல் - இபாதா கலாசார மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்கள் சென்ற 2023.06.12 ஆம் திகதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்களை கல்வி அமைச்சில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை 80 வருட காலமாக தேசிய மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இலவச கல்வியின் தந்தை Dr. C.W.W. கன்னங்கார அவர்கள் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் இக்கல்லூரி உருவாக்கப்பட்டு இன்று வரை அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தேசிய மட்டத்திலும், கிழக்கு மாகாண மட்டத்திலும் கற்பித்தல் பயிற்சி பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.
அன்மையில் கல்வி அமைச்சில் இருந்து அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

நமது நாட்டில் தமிழ் மொழி ஆசிரியர்களை பயிற்சியிப்பதற்காக அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, கொட்டக்கலை, கோப்பாய் ஆகிய அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசலைகள் இயங்கி வருகின்றன.

கல்வி அமைச்சினால் நமது நாட்டில் இயங்கி வருகின்ற எல்லா தமிழ் மொழி அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளையும் கல்விக்கல்லூரிகளுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. மாறாக 80 வருட காலமாக இயங்கிவரும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையினை மட்டும் தேசிய கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட நடவடிக்கையானது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பான விடயங்களை கேட்டறிந்த கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம் ஜயந்த அவர்கள் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையை அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியுடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக இடைநிறுத்துமாறும் இது சம்பந்தமான அறிக்கையினை சமர்பிக்குமாறும் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் திரு. புண்ணியதாச அவர்களுக்கு பணிப்புரைவிடுத்தார்.
இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்ட கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம் ஜயந்த மற்றும் பிரதம ஆணையாளர் திரு. புண்ணியதாசவையும் அண்மையில் கல்வி அமைச்சில் நேரடியாக சந்தித்து (2023.08.07) மக்கள் சார்பாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை நன்றியினை தெரிவித்துக்கொண்டார். Media Unit

14/08/2023
சம்புக்களப்பு,கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கான தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை ஆரம்பிக்குமாறு நீர்ப்பாசன அமைச்சர் ர...
14/08/2023

சம்புக்களப்பு,கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கான தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை ஆரம்பிக்குமாறு நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் றனசிங்க நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருக்கு பணிப்புரை.

அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று,ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு வடிச்சலுக்கு தடையாக நீர்த்தாவரங்கள் நிரம்பி உள்ளதாலும் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கு தடையாக உள்ளதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன்,இப்பிரதேசங்களில் முதலைகளின் தொல்லைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும்,பொதுமக்களின் நன்மை கருதியும் இவ் வடிச்சல் பணிகளை ஆரம்பிக்குமாறு முன்னால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சரும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை நீர்பாசன அமைச்சர் திரு.ரொசான் றனசிங்கவை நீர்பாசன அமைச்சில் சந்தித்து வேண்டுகோல் விடுத்தார்.
அத்துடன் சம்புக்களப்பு,அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சலை சீராக்கும் நோக்குடன் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அக்கறைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்துக்கு வழங்கப்பட்ட"எக்ஸ்வேட்டர் இயந்திரம்" நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் இப்பிரதேச நீர்பாசன வடிச்சல் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.எனவே இவ் இயந்திரத்தினை விரைவாக திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இவ்விடயத்தை கேட்டறிந்த நீர்ப்பாசன அமைச்சர் திரு. ரொசான் றனசிங்க சம்புக்களப்பு,கோணாவத்தை ஆற்றினை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை வழங்கியதுடன் அட்டாளைச்சேனை,ஒலுவில்,பாலமுனை பிரதேச விவசாய பாதைகளை புணரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கி உள்ளார்.

தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுனர் சந்திப்புதென்கிழக்கு கரையோர தனியார் பஸ் ...
10/08/2023

தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுனர் சந்திப்பு
தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கிழக்கு மாகாண ஆளுனர் திரு. செந்தில் தொண்டமானை கிழக்கு மாகாண ஆளுனரின் திருகோணாமலை அலுவலகத்தில் சந்தித்தனர்.இச் சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை,கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் திரு அணில்,கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு
டபிள்யூ எம் எச் உதயகுமார
கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலக திட்டப்பணிப்பாளர் பாயிஸ்,தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் சிம்ஸா
மௌலானா,செயலாளர் எம்.எஸ்.பைறுஸ் உட்பட நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பின்வரும் கோரிக்கைகள் ஆளுனரிடம் முன்வைக்கப்பட்டது
1.கல்முனை கதுருவெல வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ் ஒன்று 2023.07.09ம் திகதி மன்னம்பிட்டியில் விபத்தை ஏற்படுத்தி அப்பாவி பொதுமக்கள் 11பேர் பலியானதுடன் 40பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது சம்மந்தமாக கிழக்கு மாகாண ஆளுனரினால் விஷேட கொமிட்டு நியமிக்கப்பட்டு இது தொடர்பான உண்மைத்தன்மை வெளியிடுதல்

2.கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட 13சொகுசு பஸ் வண்டிகளுக்கான அனுமதிபத்திரங்கள் கல்முனை மேல் நீதி மன்றத்தினால் இரத்து செய்யப்பட்டது.இந்த விடயமாக கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் கொழும்பு மேன்முறையிட்டு நீதிமன்றத்தினால் வழக்கு தொடர்ந்துள்ளமை தொடர்பான விடயம்

3.கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் இடம்பெற்று வந்த நிதி மோசடி மற்றும் ஊழல்கள் சம்மந்தமான. ஆதாரங்கள் வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்காமை.

4.கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட பஸ் அனுமதிபத்திரங்கள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரால் இடை நிறுத்தப்பட்ட பஸ் வண்டிகளின் அனுமதிபத்திரங்களை சென்ற 2023.07.27ம் திகதி அன்று தவரான முறையில் நீடித்து கொடுக்கப்பட்டது

5.கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் ஊழல்,மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் சங்கம் கோரிக்கை விடுப்பதனால் தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் சங்கத்தை கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் தொடர்ச்சியாக பழிவாங்கும் செயல்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.

மேற்படி விடயங்களை கேட்டரிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் திரு செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்,கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர்,கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் திரு செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

03/08/2023

WP BFH-8780

எனும் மோட்டார் சைக்கிள் இன்று காலை 9:30 மணி அளவில் அட்டாளச்சேனை இலங்கை வங்கிக்கு முன்னாள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.....

தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அறியத் தரவும்.
0772989102.
தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

கிழக்கு மாகாண ஆளுநர் திரு.செந்தில் தொண்டமானை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் 2023.07.19ம் தி...
21/07/2023

கிழக்கு மாகாண ஆளுநர் திரு.செந்தில் தொண்டமானை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் 2023.07.19ம் திகதி புதன் கிழமை கிழக்கு மாகாண முன்னாள்
வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது...

1. பல்லின சமூகங்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் சகல சமூகங்களும் பயன்பெறக்கூடிய வகையில் முன்னெடுக்கப்படவேண்டும். இதனூடாக நிரந்தரமாக இனங்களுக்கிடையில் ஐக்கியமான இனஉறவு ஏற்படக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறும்

2. கடந்த 2008ம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் 05 அமைச்சுக்களின் செயலாளர்கள் விகிதாசார அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். அண்மைக்காலமாக இவ்விகிதாசார முறை பேணப்படாமையினால் கிழக்கு மாகாணத்தின் நிர்வாக செயற்பாடுகளில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை நிபர்த்தி செய்து கிழக்கு மாகாணத்தின் 05 அமைச்சுக்களின் செயலாளர்களையும் விகிதாசார அடிப்படையில் நியமித்து கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் இன ஒற்றுமையை ஏற்படுத்துமாறும்

3. கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பதவிக்கான வெற்றிடம் ஏற்படுகின்ற போது கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சிரேஷ்ட தரத்திலுள்ள செயலாளர்களை நியமிக்காமல் வெளிமாகாணத்திலிருந்து பிரதம செயலாளரை நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்ட செயலாளர்களுக்கு உரிய இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆகவே, எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருக்கான பதவி வெற்றிடம் ஏற்படுகின்ற போது கிழக்கு மாகாணத்திலுள்ள சிரேஷ்ட செயலாளரை நியமிக்க சிபாரிசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாண ஆளுநருடனான இச்சந்திப்பின் போது இறக்காம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆசிக், முஸ்னி, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார், அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.பைறூஸ், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய பிரதி அதிபர் ஸாகிர் உஸைன், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் பாயிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Address

Addalachenai
6

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saleem Ramees posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Media in Addalachenai

  • East1st

    East1st

    Main Street Addalaichenai
Show All