![அமானிதம் பேணிய இரு குடும்பங்களின் ஈமானியப் பிள்ளைகளும், தாய்மார்களும்.===========================அட்டாளைச்சேனை கடற்கரை...](https://img5.medioq.com/070/780/1014604660707805.jpg)
16/01/2025
அமானிதம் பேணிய இரு குடும்பங்களின் ஈமானியப் பிள்ளைகளும், தாய்மார்களும்.
===========================
அட்டாளைச்சேனை கடற்கரையில் அமைந்துள்ள " ஸாறா " திருமண மண்டபத்தில் 2025.01.12 ம் திகதி வலீமா நிகழ்வு நடைபெறுகிறது
நெருங்கிய உறவினர்கள் பலரும் குடும்பமாக பிள்ளைகளோடு கலந்து கொள்கிரார்கள்.
அன்றய தினம் அன்நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு குடும்பத்தினரின்
12.63 கிராம் நிறைகொண்ட
ஒன்னரைப் பவுன் அதாவது
337,000.00 ரூபா சந்தைப் பெறுமதி மதிக்கத்தக்க தங்கக் கைவளையல் ஒன்று தொலைந்து போகிறது.
சற்று தாமதமாக வருகைதந்த இரண்டு இளைஞர்கள் வாகனத் தரிப்பிடத்தில் கடற்கரை ஒரமாக அதனைக் கண்டு எடு்த்துக் கொள்கிரார்கள்.
மாலை 3.00 மணிவரை யாராவது தேடுகிறார்களா என சுமார் இரண்டு மணித்தியாலங்களாக அவ்விடத்திலே அவ்விளைஞர்கள் எதிர்பார்த்து காத்து நிற்கிரார்கள்.
யாருமே அதனை அப்போது தேடிவரவில்லை என்பதனால் விடயத்தை தங்கள் தாயிடம் தெரியப்படுத்துகிரார்கள்.
அட்டாளைச்சேனை சேர்ந்த அந்தத் தாய் அன்று வலீமா சாப்பாடு ஏற்பாடு செய்த மாப்பிள்ளை வீட்டாரிடம் விபரங்களை கூறிவைக்கிறார்.
மாப்பிள்ளை வீட்டார் மண்டப உரிமையாளரிடம் 3ம் நாள் (14) காலை விடயத்தை எத்திவைத்து யாராவது காப்பு தொலைந்துவிட்டதாக தெரிவித்தால் அறியத்தரவும் என்ற செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
காப்பு உரிமையாளர்கள் அன்றயதினம் இரவு ( 12 ), மறுநாள் காலை (13) கார் நிறுத்திய இடங்கள் , மண்டபவம், சென்ற வழிகளில் தேடியபோது மண்டப உரிமையாளர் இதனை
2 ம் நாள் (13) காலை அவதானித்துக் கொள்கிறார்.
உரிமையாளர்களிடம் விடயத்ததை கேட்டறிந்து கொண்ட அவர் ஏதாவது செய்தி கிடைத்தால் அறியத்தருவதாக கூறுகிறார்.
செவ்வாய் (14) காலை மண்டப உரிமையாளர் காப்பைத் தொலைத்த உரிமையாளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து காப்பை வைத்துள்ளவர்களை சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
உரிமையாளர்கள் (14) காலை மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று வினவிய போது அவர்களின் எதிர்வீட்டுத் தாயை அழைத்து விடயத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அத்தாய் அவரது ஒலுவிலில் திருமணம் முடித்துள்ள தனது மகனின் மருதமுனை நண்பனே அதனை பொறக்கி வைத்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
எனவே அந்தத் தாய் தனது மகன் திருமணம் முடித்துள்ள ஒலுவில் வீட்டை காட்டுவதற்காக தனது சிறிய மகனை அவர்கள் கூடவே அனுப்பிவைக்கிறாள்.
ஒலுவிலுக்கு சென்ற பாேது அச்சகோதரர் உரிய காப்பு அதனை பொறக்கிய மருதமுனை இளைஞரிடம் இருப்பதாக கூறி , உரிமையாளர்களை மருதமுனைக்கு அழைத்துச் செல்கிறார்.
இரண்டு நாட்களாக யாரும் அதனை தேடி வராததன் காரணமாக இது போலித் தங்கமாக இருக்குமாே ? என்ற சந்தேகத்தில் அதனை உறுதி செய்துகொள்ள நகைக்கடையில் காட்டி வினவியபோது அது சவூதி அரேபியாவில் செய்யப்பட்ட தங்கக் காப்பு என்பதனை உறுதி செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள் அந்த மருதமுனை இளைஞனும் தாயும்.
அங்கு சென்று மருதமுனையில் உரியவரை சந்தித்து விபரமாக குறிப்பிட்டபோது அவரது தாய் பொருளாதார நெருக்கடியுடன் இருந்தபோதும் பிறர் சொத்தை பாதுகாத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததனை அவாதானிக்க முடிந்ததாக உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
இரு பிள்ளைகளின் தாய்மார்களும், அவர்களது பிள்ளைகளும் தங்களது பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையிலையும் , 337,000 ரூபா பெறுமதியான தங்கக் காப்பாக இருந்த போதும் அமானிதம் பேணலின் வகிபாகத்தை சரியாக புரிந்தவர்களாகவும்
நம்பிக்கை
நாணயம்
நேர்மை
பிறர் சொத்தில் ஆசையின்மை
போன்ற இஸ்லாமிய விழுமியங்களின் சொந்தக்காரர்களாக இரு குடும்பங்களினதும் தாய் உட்பட பிள்ளைகள் அனைவரும் இருந்தமை சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிடுகிறார்கள்.
மேற்சொன்ன இஸ்லாமிய பண்புகள் சமூகத்தின் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் , நாளாந்த வாழ்க்கைச் சுமைகளோடு வாழும் அதிகமான குடும்பங்களில் பரவலாக அவதானிகாக முடிகிறது , அல்ஹம்துலில்லாஹ்.
இது இறைவன் தனது அருள் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கு செய்திருக்கின்ற மிகப் பெரிய நிஃமத்தும் , ரஹ்மத்துமாகும்.
முன்மாதரியான பிள்ளை வளர்ப்பின் வெளிப்பாடுகளே அவை.
உரிமையாளர்கள் தங்கள் பொருளை கண்டெடுத்து பாதுகாத்து ஒப்படைத்தமைக்காக , சந்தேசமாக பூரண மனத்திருப்தியுடன் வழங்க முற்பட்ட நன்கொடைப் பொதியை இரு குடும்பங்களின் தாய்மார்களும், பிள்ளைகளும் தங்களுக்கு பணத்தேவைகள் இருந்த போதும் அதனை மிகக் கடுமையாக மறுத்தமை உரிமையாளர்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டனர்.
தங்களது பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டிக் கொண்ட அவர்கள் அமானிதப் பொருளை உரியவர்களிடமே ஒப்படைத்த உச்ச திருப்த்தியில் முழுக்குடும்பமும் இருந்ததாக குறிப்பிட்ட உரிமையாளர்கள் , தங்களை சிறந்தமுறையில் சிற்றூண்டிகள் பரிமாறி வழியனுப்பி வைத்ததுடன் தங்களுக்கும், பிள்ளைகளுக்கும் பிராத்திக்குமாறு வேண்டிக் கொண்டது அந்த ஈமானியக் குடும்பம் எனவும் பகிர்ந்து கொண்டார்கள்.
புகழுக்குரியவன் வல்ல இறைவனே
அல்ஹம்துலில்லாஹ்.
இரு குடும்பங்களும் ஈமானிய உறுதியோடு அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று ஈருலகிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக வாழ வல்ல இறைவன் துணைபுரிவானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
எம்.ஜே.எம்.நிஃமத்துல்லா
பாலமுனை
15.01.2025.