வியூகம் News

வியூகம் News உடனுக்குடன் உண்மைச் செய்திகள்...

நிந்தவூர் அரபா வித்தியாலய அதிபர் அப்துல் பதியூ அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...அன்னாரின் மறுமை...
05/10/2024

நிந்தவூர் அரபா வித்தியாலய அதிபர் அப்துல் பதியூ அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரின் மறுமை ஈடேற்றம் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.ஐ.எம். அஸ்ஹர் அவர்கள் காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...அ...
05/10/2024

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம்.ஐ.எம். அஸ்ஹர் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர் சுவனப் பேறு கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.
ஆமீன்..!

பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்‌அவர்களின் வெற்றிக்கு முழுமூச்சாக செயல்படுவோம்;மகளிர் அமைப்பினர் தெரிவிப்பு!நாபீர் பவுண்...
03/10/2024

பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்‌
அவர்களின் வெற்றிக்கு முழுமூச்சாக செயல்படுவோம்;
மகளிர் அமைப்பினர் தெரிவிப்பு!

நாபீர் பவுண்டேஷன் சம்மாந்துறை மகளிர் அனுப்பினருடன் தேர்தல் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வு நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பின் தலைவி றஹீமா தலைமையில் நேற்று நடைபெற்றது இந்நிகழ்வில் நாபீர் பௌண்டேஷன்
செயலாளர் அறபா‌ உட்பட சம்மாந்துறை ஒவ்வொரு பிரிவுக்குமான மகளிர் அமைப்பின் தலைவிகள் உட்பட நாபீர் பவுண்டேஷன் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இம்முறை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் வெற்றிக்காக முழுமூச்சாக ஒவ்வொரு பிரிவிலும் செயற்பட உள்ளதாக தெரிவித்த நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பினர் தற்போதைய சம்மாந்துறையின் அரசியல் அதிகாத்திற்கு பொருத்தமானவர் என்றும்‌ குறிப்பிட்டனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகள் என தங்களை‌ அடையாளப்படுத்தி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி எமது வாக்குகளை பெற்றுச் சென்று அதன் பின்னர் சுயநல அரசியல் செய்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு ‌ முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு தேர்தலாக இதை பார்ப்பதாக குறிப்பிட்ட மகளிர் அமைப்பினர் ஆளுமையுள்ள, சிறந்த மனிதநேயம் உடைய மக்கள் சேவகன் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களின் வெற்றி இம்முறை உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட  19 வயதிற்கு உட்பட்ட(Under-19)கிரிக்கெட் போட்டிகளில் கிழக்கு மா...
27/09/2024

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட 19 வயதிற்கு உட்பட்ட(Under-19)கிரிக்கெட் போட்டிகளில் கிழக்கு மாகாண கடினபந்து அணிகளில் சிறந்த அணிக்கான விருதினை (EASTERN PROVINCE-BEST TEAM) கல்முனை சாஹிறா கல்லூரி பெற்றுக் கொண்டது.

🔴Live: எமது பிள்ளைகளின் புத்திக்கூர்மையினை மென்மேலும் பட்டை தீட்ட உதயமாகிறது Kids Engineering College 😍🥰 இது தொடர்பாக Ki...
26/09/2024

🔴Live: எமது பிள்ளைகளின் புத்திக்கூர்மையினை மென்மேலும் பட்டை தீட்ட உதயமாகிறது Kids Engineering College 😍🥰

இது தொடர்பாக

Kids Engineering College தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 29 ஆம் சாய்ந்தமருது Lee Meridian Reception Hall இடம்பெறவுள்ளது.|

🎙️அதிதி: Kids Engineering College மற்றும் பெற்றோர்களுக்கான விசேட கருத்தரங்கு தொடர்பாக பல்வேறு தகவல்களுடன் முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளரும், ஓய்வு பெற்ற கல்முனை சாஹிரா கல்லூரி அதிபருமான ஏ. பீர் முஹம்மது அவர்களுடனான விசேட நேர்காணல்...

📅24.09.2024 🕐8.30 PM

அதிகம் பகிருங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரைபிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதர...
26/09/2024

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.

அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும். தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது.

இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம்.

சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.

தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.

இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.

சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்.
எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம்.

பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம். செயற்திறன் மிக்க, நேர்மையான மற்றும் ஜனரஞ்சகமான அரச சேவையை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.

மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள அதிக வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் நிலை ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

தமது பிள்ளைக்கு நல்ல பாடசாலை மற்றும் சிறந்த கல்வியை வழங்க அந்த ஒவ்வொரு பெற்றோருக்கும் உரிமை உண்டு. அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம். எந்த நாட்டிற்கு நாம் சென்றாலும், விமான நிலையத்தின் தன்மையை வைத்து அந்த நாடு குறித்து ஒரு கண்ணோட்டைத்தை உருவாக்க முடியும். அதன் ஒழுங்கு, மக்களின் நடத்தை,செயல்பாடு, போன்றவற்றின் மூலமும் மறைமுகமாக அந்த நாட்டின் இயல்பு எடுத்துக் காட்டப்படுகின்றது.

அதையும் தாண்டி சுற்றுச்சூழலின் தூய்மை, வீதிகளில் வாகனங்கள் செல்லும் விதம், முதியோர்களை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்யும் முறை, விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதையும் உறுதிப்படுத்த முடியும். நம் நாட்டின் பிம்பத்தை அதே வகையில் தெளிவாக தெரியும் வகையில் கட்டியெழுப்ப நாம் திட்டங்களை தயாரித்து முடித்துள்ளோம். அந்த உருவாக்கத்திற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நாட்டின் கடவுச்சீட்டை உலகமே மதிக்கும் நிலைக்கு, நாம் நாட்டை கட்டியெழுப்புவது அவசியம். இந்த நாட்டின் பிரஜைகளுக்கு ‘நான் இலங்கையர்’ என்று பெருமையுடன் கூறக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். இந்த நாட்டின் பிரஜையாக இருப்பது பெருமை என்று நம் நாட்டு மக்கள் உணரும் வகையில் இந்த நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்கு உங்களின் கூட்டுப் பங்களிப்பு தேவை.

அனைத்து பிரஜைகளுக்கும் சமூக நீதியை நிறைவேற்றும் அரசொன்றை உருவாக்க நாம் பொறுப்புடன் பங்களிக்கிறோம். அறிவு, திறன்கள், கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை

ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் எமது சிறுவர்கள் மற்றும் இளைஞர் சந்ததிக்கு நம்பகமான எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவோம்.

நமது நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம்.

சகல நிறுவனங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்துவதற்கு நாம் செயற்படுவோம்.

அதற்கான எமது அர்ப்பணிப்பின் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே எமது பிரதமர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளோம். எமது சனத்தொகையில் பெருந்தொகையானோர் ஊனமுற்று விசேட சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டியவர்களாகும். அவர்களுக்காக பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன் குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம்.

நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமது பங்களிப்பை வழங்குவோம்.

மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். எம் மீதான சந்தேகம் காரணமாக நிச்சயமற்ற நபர்கள் இருப்பதை நாம் அறிவோம். எனது செயற்பாடுகளின் ஊடாக உங்களின் நம்பிக்கையை வெல்ல எதிர்பார்க்கிறேன்.

உங்களுடைய விமர்சனங்களை பொறுத்தமான தருணத்தில் ஏற்றுக்கொள்வேன். அதேபோல் நாங்கள் கட்டியெழுப்ப போகும் எதிர்காலத்தின் பங்குதாரர்களாக உங்களை வலுவூட்டுவோம். எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை கலைய முடியுமானால்,நமக்கிடையிலான இலக்கு சமமானவை என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் ஊடாக நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடியை ஏற்றுக் கொள்ளவும் அதன் ஊடாக முன்னோக்சிச் செல்வதற்குத் தேவையான மூலோபாயங்களை இணைந்து திட்டமிடவும் முடியும்.
இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன. மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது. இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன்.

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன.

அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்!

ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன்.

சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது..!

இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.

நன்றி.

ஜனாதிபதி முதன்முறையாக இன்று நாட்டு மக்களுக்கு உரை!ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட...
25/09/2024

ஜனாதிபதி முதன்முறையாக இன்று நாட்டு மக்களுக்கு உரை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை இன்று இரவு 7.30 மணிக்கு (25).

ජනපති ප්‍රථම වරට අද ජාතිය අමතයි.

ජනපති අනුර කුමාර දිසානායක මහතා ජාතිය අමතා කරන විශේෂ ප්‍රකාශය අද රාත්‍රී 7.30ට (25).

President to Deliver Inaugural Address to the Nation Today.
President Anura Kumara Dissanayake will deliver a special address to the nation at 7:30 PM today (25).

ජනාධිපති මාධ්‍ය අංශය
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
President’s Media Division (PMD)
25-09-2024

இலங்கையின் தேசிய வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சி நிலையங்களுக்கு  புதிய தலைவர்கள் நியமனம்.!இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்த...
25/09/2024

இலங்கையின் தேசிய வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சி நிலையங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்.!

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன (SLRC) தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. செனேஸ் திஸாநாயக்கவும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன (SLBC) தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. உதித்த கயாஷனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம்...- ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினி, விஜித ஹேரத் இடையே 15 அமைச்சுகள் பகிர்வு*ஜனாதிபத...
24/09/2024

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம்...

- ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினி, விஜித ஹேரத் இடையே 15 அமைச்சுகள் பகிர்வு

*ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

1. பாதுகாப்பு
2. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
3. வலுசக்தி
4. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய
5. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்
6. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
7. பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
8. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
9. சுகாதாரம்

விஜித ஹேரத்
10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிவிவகாரம்
14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை

தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சைஎழுதிய மாணவர்களுக்கு 2 மாத காலபயிற்சி நெறியை அறிமுகம் செய்யும்பெற்றோர்களுக்கான வழிகாட்டல...
24/09/2024

தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சை
எழுதிய மாணவர்களுக்கு 2 மாத கால
பயிற்சி நெறியை அறிமுகம் செய்யும்
பெற்றோர்களுக்கான வழிகாட்டல்
கருத்தரங்கு...

அதிகம் பகிருங்கள்

மத பெரியார்களின் ஆசியை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள்...
24/09/2024

மத பெரியார்களின் ஆசியை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள்...

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதவியேற்றுள்ளதை முன்னிட்டு சாய்ந்தமருதில்  துஆப் பிரார்த்தனை!இலங்கை ஜனநாய...
24/09/2024

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதவியேற்றுள்ளதை முன்னிட்டு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியின் கீழ், நாட்டில் இன ஐக்கியம், சுபீட்சம் ஏற்பட்டு, வளமான நாடு உருவாகும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட துஆப் பிரார்த்தனை நிகழ்வு (23) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

-ஸாஹிர்-

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பொறுப்பாளர் சபையின் செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்
கல்முனை தேர்தல் தொகுதி இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா உட்பட சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் தோழர்கள்
,இளைஞர்கள், பொதுமக்கள், ஜமாஅத்தார்கள் எனப் பலரும்
இந்த துஆப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

ஊடக வெளியீடு:வணக்கம் அன்புள்ள பிரஜைகளே,செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான ...
22/09/2024

ஊடக வெளியீடு:

வணக்கம் அன்புள்ள பிரஜைகளே,
செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.

இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது.

இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது.

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என எனப் பிரார்த்திக்கிறேன்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன்.

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

2024.09.22

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 வது ஜனாதிபதி தோழர். அநுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
22/09/2024

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 வது ஜனாதிபதி தோழர். அநுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்ககொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமை...
21/09/2024

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க
கொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

ராஜகிரியவில் தனது பாரியார் ஜலனி பிரேமதாச சகிதம் வரிசையில் நின்று வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச!
21/09/2024

ராஜகிரியவில் தனது பாரியார் ஜலனி பிரேமதாச சகிதம் வரிசையில் நின்று வாக்களித்தார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது பாரியார் பேராசிரியர்.மைத்ரி விக்கிரமசிங்கவும் வாக்களித்த பின்னர்...21.09.2024
21/09/2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரது பாரியார் பேராசிரியர்.மைத்ரி விக்கிரமசிங்கவும் வாக்களித்த பின்னர்...
21.09.2024

நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நடவடிக்கை.!தற்போதைய நிகர கடன் பெறுமதியில் 40.3 வீதத்திற்கு  நிவாரணம் பெறுவதற்கும் சுமார்...
19/09/2024

நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நடவடிக்கை.!

தற்போதைய நிகர கடன் பெறுமதியில் 40.3 வீதத்திற்கு நிவாரணம் பெறுவதற்கும் சுமார் 17.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை அதன் வணிகக் கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்த உடன்பாட்டின் ஊடாக குறிப்பிடத்தக்க கடன் நிவாரணம் கிடைக்க இருப்பதோடு கடன் வட்டி செலுத்தும் தொகை குறைவடைவதன் மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.

වත්මන් ශුද්ධ ණය වටිනාකමින් 40.3% ක් සඳහා සහනයක් ලබාගනිමින්, දළ වශයෙන් ඩොලර් බිලියන 17.5 ක විදේශ ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම සඳහා ශ්‍රී ලංකාව සිය බාහිර වාණිජ ණය හිමියන් සමඟ එකඟතාවකට එළැඹ තිබේ. මෙමඟින් සැලකිය යුතු ණය සහනයක් හිමිවන අතර ණය පොලී ගෙවීම් අඩු කරමින් මෙරට මූල්‍ය ස්ථාවරත්වය ශක්තිමත් කිරීමට හැකියාව ලැබේ.

Sri Lanka has reached agreements with external commercial creditors to restructure approximately USD 17.5bn of external debt, achieving a 40.3% Net Present Value (NPV) concession. This provides significant debt relief & reduces interest payments, strengthening the country's financial stability.

President's Media Division

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையைகுளியாப்பிட்டியவில் நேற்று(17) ஜனாதிபதி திறந்து வைத்தார்..*நாட்...
18/09/2024

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை
குளியாப்பிட்டியவில் நேற்று(17) ஜனாதிபதி திறந்து வைத்தார்..

*நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எவருக்கும் நிறுத்த இடமளியேன்..

*2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 10 வருடங்கள் தாமதமானதால் இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது.

*Western Automobile புதிய தொழிற்சாலையினால் குளியாப்பிட்டியுடன் நாடும் பெரும் அபிவிருத்தி காணும்..

-ஜனாதிபதி-

குருநாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நடைபெற்ற மக்கள்...
18/09/2024

குருநாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நடைபெற்ற மக்கள் பேரணி... 17.09.2024

#இயலும்ஸ்ரீலங்கா #ரணிலால்இயலும்

தேசிய மக்கள் சக்தியின் அநுர ஆட்சியில் நாடு முழுவதும் சில்லறைக் கடைகள் போன்று மதுபானச் சாலைகள் திறக்கப்படும்.!செவ்வாய்(17...
18/09/2024

தேசிய மக்கள் சக்தியின் அநுர ஆட்சியில் நாடு முழுவதும் சில்லறைக் கடைகள் போன்று மதுபானச் சாலைகள் திறக்கப்படும்.!

செவ்வாய்(17) மாளிகைக்காடு பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஹிஸ்புல்லா உரை...

மெல்சிரிபுரவில் அநுர கலந்து கொண்ட பிரச்சார பேரணி..!
18/09/2024

மெல்சிரிபுரவில் அநுர கலந்து கொண்ட பிரச்சார பேரணி..!

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்!    #சஜித்           #வெல்லும்சஜித்
17/09/2024

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்!


#சஜித் #வெல்லும்சஜித்

அம்பாரையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது...     #இயலும்ஸ்ரீலங்கா  #ரணில்...
17/09/2024

அம்பாரையில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது...

#இயலும்ஸ்ரீலங்கா #ரணில்

17/09/2024

உயிர்த்த ஞாயிறு தாகுதலுடன் வெ தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்;
இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும்.
-சஜித் பிரேமதாசதிட்ட வட்டம்-

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜபுத்திரன் சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள்,இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட, தொகுதி,பிரதேச மற்றும் கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி,மகளிர் அணியினருடன் கலந்துரையாடினார்.

இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களும் கலந்து கொண்டார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் அவர்கள் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர் , பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் , வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உடைய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், மட்டக்களப்பு மகளீர் அணித் தலைவி ரஞ்சினி கனகராசா, அம்பாறை இளைஞரணி பொதுச் செயலாளர் நிலாம்சன் உட்பட இலங்கை தமிழரசு கட்சியினுடைய மாவட்ட , தொகுதி, மத்திய , பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுஜகட்சியின் உடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கை தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டனர் .

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when வியூகம் News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வியூகம் News:

Share


Other Media/News Companies in Kalmunai

Show All