Mihraj News

Mihraj News www.mihrajnews.com/ Mihraj News [email protected] call +94775690784, +94774672867
(1)

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை  பாராட்டி கௌரவிக்கப்பட்டார் கலாநிதி சிராஸ் ம...
27/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டார் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை பாராட்டி கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் கௌரவிக்கப்பட்டார்.

பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகத்தின் 37வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் ஒலுவில் இலவன் ஸ்டார் கழகம் ஏற்பாடு செய்திருந்ந பிரிமியல் லீக் கிரிகெட் சுற்றுத் தொடரிலும் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாலமுனை ஹிக்மா வித்தியாலய மைதானம், ஒலுவில் அல் ஜாயிஸா மகளீர் கல்லூரி மைதானத்திலும் அம்பாரை மாவட்டத்திலுள்ள முன்னணி கழகங்கள் பங்குபற்றிய இவ் போட்டி நிகழ்வுகளில் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் கழகங்களினால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 சம்மாந்துறை மக்களுக்கு உரித்து காணி ஆவணம் வழங்கும் நடமாடும் சேவை..!✍️ சர்ஜுன் லாபீர் 𝐑𝐄𝐀...
27/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 சம்மாந்துறை மக்களுக்கு உரித்து காணி ஆவணம் வழங்கும் நடமாடும் சேவை..!

✍️ சர்ஜுன் லாபீர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையில் 'உரித்து தேசிய வேலைத்திட்டத்தின்” கீழ் பொதுமக்களுக்கான நிபந்தனையற்ற பூரண அளிப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மக்களை தெளிவூட்டல் மற்றும் ஆவணங்களை பொறுப்பேற்றல் தொடர்பான நடமாடும் சேவை (26) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

இன்று(26)சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில் உரித்து காணி ஆவணம் வழங்கும் நடமாடும் சேவை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

இந் நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக கணக்காளர் ஐ.எம் பாரீஸ்,உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமில், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன் உட்பட காணி உத்தியோகத்தர்கள்,காணிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,கிராம சேவகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நாளில் 12 கிராம சேவகர் பிரிவுகளுக்கு இவ் நடமாடும் சேவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 பெருநாள் கலாசார நிகழ்வு..!✍️ யூ.எல்.அலி ஜமாயில்𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்ல...
27/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 பெருநாள் கலாசார நிகழ்வு..!

✍️ யூ.எல்.அலி ஜமாயில்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் சமூகங்களுக்கிடையில் கலாசார விழுமியங்களை மதித்து புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவுகளை மேற்கொள்ளவேண்டும், எனும் எண்ணப்பாங்கில் எமது பாடசாலையில் 2024.06.25ம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் கலாசார நிகழ்வுகள் அதிபர் திரு.ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில், பாடசாலை ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதன்போது அதிபர் அவர்களினால் ஹஜ் கடமை பற்றிய வரலாறு சுருக்கமாக ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டதோடு பெருநாள் கலாசார உணவுகளும் பரிமாறப்பட்டன.

இஸ்லாமிய ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை பாடசாலையின் சகோதர மத ஆசிரியர்கள் சார்பாக திரு. ரீ.வில்வராஜா அவர்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து ஏற்புரை வழங்கினார்.

இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!27/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
27/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
27/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!26/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
26/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
26/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!25/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
25/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
25/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!24/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
24/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
24/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 இலவன் ஸ்டார் பிரிமியல் லீக் - 2024 ; பிரதம அதிதியாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!✍️ எஸ். ...
23/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 இலவன் ஸ்டார் பிரிமியல் லீக் - 2024 ; பிரதம அதிதியாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த இலவன் ஸ்டார் பிரிமியல் லீக் - 2024' கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வு இவ் விளையாட்டு கழகத்தின் பிரதி தலைவர் அமீன் தலைமையில் இன்று (23-06-2024) ஒலுவில் அல்- ஜாயிஷா மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற அணிக்கும், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பிரதம அதிதியால் வெற்றிக்கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மெட்றோபொலிடன் கல்லூரியினால் இரண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அமானுல்லாஹ் அவர்களும் கலந்துகொண்டார்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அம்பாறை மாவட்டத்தில் ஊடக மன்றத்தை அமைக்கும் செயற்பாட...
23/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அம்பாறை மாவட்டத்தில் ஊடக மன்றத்தை அமைக்கும் செயற்பாடு முன்னெடுப்பு..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஊடக மன்றத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வு அம்பாறை மொண்டி உல்லாச விடுதியில் (22) இடம்பெற்றது.

இந்த நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிளியூ.டி. வீரசிங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் ஹில்மி அஸீஸ் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின ஊகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறான ஊடக மன்றங்களை அமைக்கும் பணிகள் குருநாகல, அநுராதபுரம், மொனராகல, கேகாலை, கண்டி, மாத்தளை, பொலநறுவ, வவுனியா, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, திருகோணமலை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளன.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 ஏறாவூர் நகர கலாசார மத்திய நிலையமும் ஏறாவூர் நகர சபையும் இணைந்து  ஹஜ்ஜுப் பெருநாளை முன்னி...
23/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 ஏறாவூர் நகர கலாசார மத்திய நிலையமும் ஏறாவூர் நகர சபையும் இணைந்து ஹஜ்ஜுப் பெருநாளை முன்னி்ட்டு நடாத்திய "ஹஜ்ஜுப் பெருநாள் - சுவைக்கதம்பம்
கலை நிகழ்ச்சிகள்..!

✍️ ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி கலை இலக்கியக்கழக கலைஞர்கள் மற்றும் ஏறாவூர் ஹனிமூன் கலா மன்ற கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் நகைச்சுவை நாடகங்கள், அபிநயத்துடனான குழுப்பாடல்கள், தனிப்பாடல்கள், கவிதைகள் மற்றும் மிமிக்ரி நகைச்சுவை கலைஞர் நஜாத் (தயிர் சட்டி) அவர்களின் கலை நிகழ்வுகள் என பல பல்சுவை நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் 11.00 மணி வரை இடம்பெற்றது.

கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி M.I.M.M.மஹ்பூழ் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை செயலாளர் M.H.M.ஹமீம் அவர்களும் ஏறாவூர் நகர பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி S.J.M.ஜலால்தீன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!23/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
23/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
23/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!22/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
22/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
22/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந...
21/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation Unit) பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிராந்திய பணிப்பாளர் நாடா வெட்டி புதிய பிரிவினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்தியத்தில் சுகாதார ரீதியாக மேலும் பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கு குறித்த பிரிவு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது..!✍️ மாளிகைக்காடு செய்தியாளர்  𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇✅👉 அ...
21/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது..!

✍️ மாளிகைக்காடு செய்தியாளர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 அம்பாறை மாவட்ட 32 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மோதிய கலாநிதி யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஜீனியஸ் விளையாட்டுக்கழகத்தை ஆறு விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்த கலாநிதி உதுமாங்கண்டு நாபீர் வெற்றிக்கிண்ண T -10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பும் சாய்ந்தமருது தலைவர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜீனியஸ் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் 09 விக்கட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றனர். அந்த அணியின் சார்பில் அப்ஹாம் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 09 பந்துகளில் அதிகபட்சமாக 24 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் விளாஸ்டர் அணியின் பவாஸ் இரண்டு ஓவர்கள் பந்துவீசி 03 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

73 எனும் வெற்றியிலைக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் 8.5 பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 04 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றியிலைக்கை அடைந்தது. சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சார்பில் ஆபாக், ஷஹீன் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்.

போட்டியின் நாயகனாக ஏ.என்.எம். ஆபாக் மற்றும் தொடரின் நாயகனாக இரண்டு சதமுட்பட குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்களை குவித்த அஸாருதீன் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழக தலைவர் எம்.பி.எம். பாஜில் நெறிப்படுத்தலில் கழக தவிசாளர் ஏ.எம்.ஏ. நிசார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதான அனுசரணை வழங்கியிருந்த நாபீர் பௌண்டஷன் தலைவரும், ஈ.சி.எம். நிறுவன பிரதானியுமான (கலாநிதி) பொறியியலாளர் யூ.கே. நாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்,

வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம்.ஐ. ரைஸுல் ஹாதி, கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். சபூர்தீன், சாய்ந்தமருது அனைத்துப் பொதுநிறுவனங்கள் சம்மேளன தலைவர் ஏ.எல்.எம். பரீட், அல்- ஜலால் வித்தியாலய பிரதியதிபர் ரீ.கே.எம். சிராஜ், சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.எம்.எம். முனாஸ், தொழிலதிபர் இஃரா யூ.எல். சத்தார் உட்பட சாய்ந்தமருது கிரிக்கட் சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 ஏறாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணியும...
21/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 ஏறாவூர் அல் அஸ்ஹர் உயர்தர பெண்கள் பாடசாலையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணியும் மாபெரும் கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியும்..!

✍️ ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 பாடசாலையின் அதிபர் SMM நவாஸ் அவர்களின் தலைமையில் 18.06.2024 இல் ஆரம்பித்து 19.06.2024 இல் நிறைவுற்றது.பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான MHM றமீஸ்,TM செய்யத் அஹமட்,MA முபாஸ்தீன் மற்றும் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் MS நளீம்,ஏறாவூர் நகரசபை விசேட ஆணையாளர் MHM ஹமீம் அவர்களும்,முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள்,பாடசாலை நிறைவேற்று குழு செயலாளர் உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க செயலாளர் உறுப்பினர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் அனுசரணையாளர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் பொன் விழாவுக்கான Logo மற்றும் பொன் விழா கீதம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன.
குறிப்பிடத்தக்கது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம் 2024; பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள்  மு...
21/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம் 2024; பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த 'சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம்- 2024' கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (20-06-2024) பாமுனை அல்-ஹிக்கா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற அணிக்கும், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பிரதம அதிதியால் வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

-ஊடகப்பிரிவு-

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!21/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
21/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
21/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!✍️ யு.எல்.அலி ஜமாயில்𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 ...
20/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!

✍️ யு.எல்.அலி ஜமாயில்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளிற்கு நீண்ட நாள் தேவையாக இருந்த கற்றல் உபகரணங்கள் இன்று 20/06/2024 2008 O/L பிரிவு மாணவர்களால் வழிநடாத்தப்படும் Bahriyan Breeze அமைப்பினாரால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் MSM.பைசால் சேர் , ARM.முஸாஜித் சேர், UL.ரியால் சேர், பழைய மாணவர் சங்க செயலாளர் சகோதரர் UL.ஹாஜா அவர்களும் கலந்துகொண்டனர்

இந்நிகழ்விற்கு உதவி புரிந்த 2008 O/L பிரிவு மாணவர்களிற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 கனேடிய அரசியல் மற்றும் வர்த்தக பிரதானிக்கும் - கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்கும் இடையிலா...
20/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 கனேடிய அரசியல் மற்றும் வர்த்தக பிரதானிக்கும் - கலாநிதி சிராஸ் மீராசாஹிப்புக்கும் இடையிலான சந்திப்பு…!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 கனேடிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக பிரதானி டேனியல் பூட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருடமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் இடையிலால சந்திப்பொன்று கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நிலைப்பாடுகள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான உயர்கல்வித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!20/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
20/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
20/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 அரசு எங்களை சாகும் வரையான உண்ணாவிரதத்துக்கு நகர்த்துகிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழிய...
19/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 அரசு எங்களை சாகும் வரையான உண்ணாவிரதத்துக்கு நகர்த்துகிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில்..!

✍️ நூருல் ஹுதா உமர்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 நியாயமான மற்றும் எங்களுக்கு வழங்குவதாக அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்திக்குமாறு கோரி நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக போராடிவரும் இன்றைய சூழலில் அரசும் சம்மந்தப்பட்ட நிருவாகிகளும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எங்களை சாகும்வரையான உண்ணாவிரதத்துக்குள் தள்ள எத்தனிப்பது போன்று உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக தாங்களது போராட்டங்களை பல்வேறு வியூகங்களை வகுத்து போராடி வரும் நிலையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று 2024.06.19 ஆம் திகதி சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தையும் சத்தியாக்கிரக போராட்டத்தயும் பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆரம்பித்துள்ளனர்.

சுழற்சி முறையான உண்ணாவிரத போராட்டத்தில் முதற்கட்டமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் மற்றும் எஸ். றிபாயுத்தீன், எம்.எச்.எம். நாஸார் ஆகியோர் குதித்துள்ளனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் முகமது காமில், நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஊழியர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன இதனால் மாணவர்களின் கல்விநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது மாணவர்களோ கவலைப்பட்டதாக தெரியவில்லை.அவ்வாறு அவர்கள் கவலைப்பட்டிருந்தால் எங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் கருத்துக்களையாவது வெளியிட்டிருப்பர்.

ஊழியர்கள் போராடிவரும் சூழலில் குறித்த வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தாங்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமாக இருந்தால் உடனடியாக கடமைக்கு திரும்ப தயாராய் இருப்பதாகவும் இல்லையெனில் நாங்கள் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை நோக்கியே நகரவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்களும் பணியாற்றும் எல்லா தரப்பு ஊழியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதைவிட கவைப்படக்கூடிய ஒன்றாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் உபகரணங்கள் மற்றும் சூழல் என்பன பராமரிப்பின்றி பழுதடையும் நிலையை எட்டுவதாகவும் இவை எல்லாவற்றியும் அரசு கருத்தில்கொண்டு உடன் தீர்வைத்தர முற்படவேண்டும் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழினுட்ப உத்தியோகத்தர் ஏ.எல்.எம். பைறோஜி தெரிவித்தார்.

இன்றைய போராட்டத்தின்போதும் சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரியும் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!19/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
19/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
19/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!18/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
18/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
18/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰Eid -Ul - Adha Mubarak 2024! ✨🌙 ✅👉 As we celebrate this blessed occasion, may your hearts b...
17/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

Eid -Ul - Adha Mubarak 2024! ✨🌙

✅👉 As we celebrate this blessed occasion, may your hearts be filled with joy, peace, and gratitude. Let's cherish the moments with our loved ones and spread kindness wherever we go.

"May the divine blessings of Allah bring you hope, faith, and joy on Eid and forever. Eid Mubarak!"

Wishing everyone a joyous and prosperous Eid!

Sinees Khan
Media Secretary,
Hon. MS Thowfeek MP.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!17/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
17/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
17/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉  நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போ...
16/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போன்றவற்றை எமது வாழ்விலும் முன்மாதிரியாக கொள்வோம். - எம். எஸ் தௌபீக் எம்.பி..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற இன்றைய ஈகைத்திருநாளில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொண்டு எமது வாழ்விலும் அவற்றைக் கடைப்பிடித்தொழுக திடசங்கற்பம் பூணுவோம் என திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம் எஸ் தௌபீக் அவருடைய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இறைவனின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது அன்பு மைந்தன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறு எமக்கு முக்கிய படிப்பினையாக அமைந்திருக்கிறது.

புனித ஹஜ் கடமை என்பது முஸ்லிம்களிடையே எவ்வித பேதமுமில்லை என்கிற மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துவதுடன் நமது தனிப்பட்ட அபிலாஷைகளை முற்றாக புறமொதுக்கி விட்டு இறைவனுக்கு அடிபணிதல் எனும் கொள்கையை மாத்திரம் கடைப்பிடிக்கின்ற இஸ்லாமியர்களாக, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

எமக்குள் பலமாக இருக்க வேண்டிய ஐக்கியத்தை தொலைத்து விட்டு, கருத்து முரண்பாடுகளினாலும் பிளவுகளினாலும் எமது நாட்டில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து, அல்லலுறுகின்ற எமது சகோதரர்களின் நிம்மதியான வாழ்வுக்காகவும் சில அரபு நாடுகளில் தமது சொந்த மண்ணிலேயே யுத்த கோரப்பிடிக்குள் சிக்குண்டு குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என்ற பாரபட்சமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்ற எமது முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்காகவும் இப்புனிதத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையன்பை பெற்றுக்கொள்வோம். - கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!✍...
16/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையன்பை பெற்றுக்கொள்வோம். - கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!

✍️ எஸ். சினீஸ் கான்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக இன்றைய ஈகைத்திருநாளில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது
இந்தத் தியாகத் திருநாளில் எம்மனைவர் மீதும் இறையருள் பொழிய, இறையன்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களினதும், அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹ் இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். தனிமனிதர்களின், குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே தேசம் வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும். இஸ்லாம் தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றி அடைய முடியுமென்பதை போதிக்கின்றது.

எனவே நாங்கள் எமது வாழ்க்கையிலும் தியாகங்கள் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது. எமது தியாகங்கள் இறைவனுக்காக செய்யப்படுபவையாக இருக்கும்போதுதான் நாம் இறைவனின் நற்கூலியையும் இறையன்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய எமது நாட்டு பொருளாதார சூழ்நிலையில் முஸ்லிம்களும், சகோதர இன மக்களும் பல பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கின்றனர், அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. நாம் எம்மால் முடிந்ததை வழங்கி அவர்களது வாழ்விலும் ஒளியேற்றுவோம்.

அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என அவரது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✅👉 மலர்ந்திருக்கும் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்ற எமது வாசகர்கள் அனைவருக்கும் Mihraj News ஊடக வலையமைப்பின் குழுமத்தினர்மனம்...
16/06/2024

✅👉 மலர்ந்திருக்கும் ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்ற எமது வாசகர்கள் அனைவருக்கும் Mihraj News ஊடக வலையமைப்பின் குழுமத்தினர்
மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!16/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
16/06/2024

📌𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
👉 தினகரன் பத்திரிக்கையின் முதற் பக்கம்!
16/06/2024 ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰✅👉 சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிக...
15/06/2024

📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰

✅👉 சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் பங்கேற்பு..!

✍️ ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்

𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇

✅👉 உணவு மற்றும் போசணையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணர்வத்தன மற்றும் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கான இலத்திரனியல் கோழிக் குஞ்சு பொறிக்கும் இயந்திரங்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட், ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் சமன்பிரிய ஹேரத்,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, யூகே சுமித் உடுகும்புற , மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே குணரத்தின, மாவட்ட அரசாங்க அதிபர் ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

🌎 www.mihrajnews.com

✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

Address

169/4 A Mathavan Road Kalmunai 03
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Mihraj News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mihraj News:

Videos

Share


Other Media/News Companies in Kalmunai

Show All