26/11/2023
online மூலமாக வீட்டிலிருந்தவாறே பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
1. https://online.ebmd.rgd.gov.lk/ எனும் இணையதள முகவரிக்கு சென்று சான்றிதழ் கோரிக்கை என்பதை Click செய்யுங்கள்.
2. தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல், பெயர் என்பவற்றை நிரப்பி PIN ஐ அனுப்புக என்பதை Click செய்யுங்கள்.
3. PINஐ உள்ளிடவும் எனும் இடைவெளியில் SMS ஊடாக பெறப்பட்ட PIN இலக்கத்தை type செய்யுங்கள்.
4. தொலைபேசி எண் வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்ட பின் சான்றிதழின் வகை, விநியோயோகிக்கும் முறை என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.
*சான்றிதழின் வகையை (பிறப்பு / இறப்பு / திருமணம்) தெரிவு செய்யுங்கள்
*விநியோயோகிக்கும் முறை இல் உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று பெறுவதாயின் Collect என்பதையும், கடிதம் மூலம் வீட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டுமாயின் Speed Post என்பதையும் தெரிவு செய்யுங்கள்.
*விநியோயோகிக்கும் முறை இல் Collect என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை சேகரிக்க விரும்பும் மாவட்டத்தையும் பிரதேச செயலக அலுவலகத்தையும் தெரிவு செய்யுங்கள்.
அல்லது
*விநியோயோகிக்கும் முறை இல் Speed Post என்பதை தெரிவு செய்தால் சான்றிதழை அனுப்ப வேண்டிய விலாசம் மற்றும் மாவட்டம், பிரதேச செயலகம் என்பவற்றை தெரிவு செய்யுங்கள்.
5. கோரும் சான்றிதழ் தொடர்பான விபரங்களை கொண்டு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
* பிறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக பிறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, பெயர், பால், சான்றிதழ் ஏதேனும் திருத்தம் அல்லது மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அத் திகதி என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.
*விவாகச் சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக விவாகச் சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் பதிவு செய்யப்பட்ட மாவட்டம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், திகதி, ஆணின் பெயர், பெண்ணின் பெயர், பதிவாளரின் பெயர், பதிவாளர் பிரிவு என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து "சமர்ப்பிக்க" என்பதை Click செய்யுங்கள்.
*இறப்பு சான்றிதழ் எனின் :-
சான்றிதழ் இலக்கம், தூதரக இறப்பு சான்றிதழ் எனின் தூதரகத்தையும் இல்லை எனின் இறப்பு மாவட்டம், பிரிவு செயலகம், மரணத்தின் பிரிவு செயலகம், பெயர், இறப்பு நிகழ்ந்த திகதி, இடம் என்பவற்றோடு சான்றிதழின் பிரதியை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க என்பதை Click செய்யுங்கள்.
6. வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்தது, "உறுதி செய்க" என்பதை Click செய்யுங்கள்.
7. கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் கோரிக்கை email / SMS மூலம் அனுப்பப்படும். பின் சரி என்பதை Click செய்யுங்கள்.
8. வேலை நாட்களில் கோரிக்கை செயல்படுத்த தொடங்கியவுடன் விண்ணப்பம் சரிபார்த்து பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரி SMS, e-mail மூலம் வழங்கப்படும் அதை Click செய்யுங்கள்.
9. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் தேவையான பிரதிகளின் எணிக்கையை குறிப்பிட்டு பணம் செலுத்துக என்பதை Click செய்யுங்கள்.
10. நீங்கள் நிச்சயமாக பணம் செலுத்த விரும்புகிறீர்களா என்பதில் "ஆம்" என்பதை Click செய்யுங்கள்.
11. பணம் செலுத்துவதற்க்கான இணைய முகவரியில் I Accept என்பதை தெரிவு செய்து *Choose your Payment Method: என்பதில் Any Visa/ Master Card (Paycorp) என்பதை தெரிவு செய்து "Proceed" என்பதை Click செய்யுங்கள்.
12. Confirm Payment Details பக்கத்தில் "Pay Now" என்பதை Click செய்யுங்கள்.
13. கடனட்டை அல்லது பற்று அட்டை விபரங்களை உள்ளீடு செய்து "Submit" என்பதை Click செய்யுங்கள்.
14. கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டவுடன் SMS, e-mail மூலம் உறுதி செய்யப்படும் பின் "சரி" என்பதை Click செய்யுங்கள்.
பின்னர் நீங்கள் தெரிவு செய்ததற்கு ஏற்ப பிரதேச செயலகத்தில் அல்லது தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.