Lanka Tamil News 1st

Lanka Tamil News 1st தமிழ் எங்கள் மூச்சு

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு - தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு          ❤️
09/10/2023

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு - தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு ❤️

"தும்புத்தடி உடையும் வரை சாணக்கியனுக்கு அடிப்போம்"நாடாளுமன்றில் நேற்று மயிலத்தமடு மாதவனை தமிழ் பாற்பண்ணையாளர்களுக்கு ஆதர...
09/10/2023

"தும்புத்தடி உடையும் வரை சாணக்கியனுக்கு அடிப்போம்"
நாடாளுமன்றில் நேற்று மயிலத்தமடு மாதவனை தமிழ் பாற்பண்ணையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ்கு எதிராக மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமணரதன தேரர் தலைமையில், மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றவாசிகள் போராட்டம்.

 #முல்லை  #நீதிபதிக்கு நீதி கேட்டு கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில்!
09/10/2023

#முல்லை #நீதிபதிக்கு நீதி கேட்டு கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் தமிழீழத் தேசியக்கொடி ஏந்தி மரதன் ஓட்டம்!!
09/10/2023

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் தமிழீழத் தேசியக்கொடி ஏந்தி மரதன் ஓட்டம்!!

வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு!முன்ன...
12/01/2023

வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்டது.

அதேநேரம் நிலந்த ஜயவர்தன, பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் சொந்த நிதியில் இருந்து 75 மில்லியன் ரூபாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது சொந்த நிதியில் இருந்து 50 மில்லியன் ரூபாவையும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தனது சொந்த நிதியில் இருந்து 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் கணவன் மனைவி சண்டை - கிணற்றுக்குள் தூக்கி எறியபட்ட 7 மாதக் குழந்தை ? தாயும்  குழந்தையும் கிணற்றுக்குள் சடலமாக மீட்...
11/11/2022

யாழில் கணவன் மனைவி சண்டை -
கிணற்றுக்குள் தூக்கி எறியபட்ட 7 மாதக் குழந்தை ?
தாயும் குழந்தையும் கிணற்றுக்குள் சடலமாக மீட்பு!!

யாழ். மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் சடலங்களாக மீட்பு :
கணவன் கைது !

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
பொலிசாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இலங்கையில் இருந்து கனடா நாட்டிற்கு ஒவ்வொருவரும் கோடிக்கணக்கில் ஏஜென்ண்டுக்கு கொடுத்து களவாக செல்ல முனைந்த 300க்கும் மேற்...
09/11/2022

இலங்கையில் இருந்து கனடா நாட்டிற்கு ஒவ்வொருவரும் கோடிக்கணக்கில் ஏஜென்ண்டுக்கு கொடுத்து களவாக செல்ல முனைந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கப்பல் படகு நடுக்கடலில் ஓட்டையானதையடுத்து மூழ்க ஆரம்பிக்கவே வியட்நாம் அருகே ஜப்பான் மீட்பு குழுவால் மீட்டு சற்று முன் தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல தமிழர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அகப்பட்டு உள்ளனர்.

ஏஜேண்டுகளுக்கு கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தில் சொந்த தொழில் ஆரம்பித்தாலே உள்ளூரில் நன்றாக வாழலாம் கப்பலின் இஞ்சின் அறையில் வெள்ளம் போல கடல் நீர் புகுந்தது.

ஊருக்கு தெரிய படுத்த வேண்டாம், ஊடகங்களுக்கு ஊடாக உடனடியாக உதவி தேவை என அறிவியுங்கள் கனடா போய் டொலரில் சம்பாதிப்பதை விட உயிரோடு சிறையிலாவது இருப்பது மேல் என அவல குரல் எழுப்பினர்.

வெளிநாட்டு மோகம் பல இளைஞர்கள் யுவதிகள் குழந்தைகள் குடும்பங்களை உயிராபத்தில் தள்ளியுள்ளது.

இந்த பயணத்திற்கு மட்டும் ஏஜேண்டுகளுக்கு 450 கோடிக்கு மேல் செலுத்த பட்டிருக்கலாம் என ஊகம் வெளியாகியுள்ளது. இதே போல ஒரு மாதத்தில் பல பயணங்களுக்கு பணம் வாங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்டு திரும்பிய புதுமணப்பெண், வான் சாரதியுடன் மாயம்‼️‼️‼️‼️‼️கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சிய...
31/10/2022

கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்டு திரும்பிய புதுமணப்பெண், வான் சாரதியுடன் மாயம்‼️‼️‼️‼️‼️

கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை.

அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை பூர்வீகமாக கொண்ட குடும்பமொன்று கனடாவில் வசித்து வந்தது. சில வருடங்களின் முன்னர் பெற்றோர் சொந்த ஊருக்கு வந்து வசித்து வருகிறார்கள்.

அவர்களின் மகன் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் சொந்த ஊருக்கு வந்து திருமணம் செய்திருந்தார். வெள்ளாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை சேர்ந்த 24 வயதான யுவதியொருவரே மணமகள்.

திருமணம் முடிந்து, நுவரெலியாவிற்கு தேனிலவும் சென்றிருந்தனர்.

கடந்த வாரம் மணமகன் மீண்டும் கனடா திரும்பினார். மணமகனின் பிரதேசத்தை சேர்ந்த ஹைஏஸ் வாகனமொன்றையே, இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியின் தேவைகளிற்கு அழைத்திருந்தனர். அந்த வாகனத்திலேயே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சென்றிருந்தனர்.

கனடா மணமகன், மணமகள், மணமகனின் ஒன்றுவிட்ட தம்பிகள் இருவர் அந்த வாகனத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தனர்.

நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் ஒருநாள் தங்கியிருந்து விட்டு, மறுநாள் கனடா மாப்பிள்ளையை வழியனுப்பி விட்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.

இரவு உணவுக்காக சிலாபம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் வாகனத்தை நிறுத்திய போது, மணமகனின் இரண்டு தம்பிகளையும் சாப்பிட்டு விட்டு, தனக்கு இரண்டு பரோட்டா பார்சல் செய்து வாங்கி வருமாறு கூறிவிட்டு, மணப்பெண் வாகனத்திற்குள்ளேயே இருந்து விட்டார்.

வீதியோரமாக சற்று தள்ளி இயற்கை உபாதை கழித்து விட்டு வருகிறேன், நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள் என இரண்டு இளைஞர்களையும் வாகன சாரதியும் அனுப்பி வைத்துள்ளார்.

உணவகத்திற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், சாரதி வராததால் அவரது தொலைபேசியில் அழைப்பேற்படுத்தினர். தொலைபேசி இயங்கவில்லை.

சகோதரனின் மனைவியை அழைத்த போது பதிலிருக்கவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் அவர் அழைப்பையேற்று, இரண்டு இளைஞர்களையும் பேருந்தில் வீடு வருமாறு கூறியுள்ளார்.

தமது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த போது, சிலர் வந்து மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அவர்கள் கொள்ளையிட வந்தவர்களை போல தோன்றியதால் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக அவர்களிடம் கூறினார்.

மறுநாள் காலையில் இரண்டு இளைஞர்களும் வீடு திரும்பிய போது, மணமகள் வீட்டிலிருக்கவில்லை. மணமகளின் வீட்டிற்கும் செல்லவில்லை. வாகன ஓட்டியும் தனது வீட்டுக்கு செல்லவில்லை.

அன்று மதியம், கனடாவிலுள்ள தனது கணவனிற்கு அந்த யுவதி பேஸ்புக் ஊடாக தகவல் அனுப்பிய பின்னரே நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தன்னை மன்னித்து விடும்படியும், வாகன சாரதியும் தானும் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாகவும், தம்மை தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அன்றைய தினமே தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விடயத்தை கூறியுள்ளார் யுவதி.

அந்த ஜோடி தற்போது வவுனியாவில் தங்கியிருப்பதை அறிந்ததாகவும், எனினும், அவர்களை தொடர்பு கொள்வதை தவிர்த்து விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

புளியங்குளம் பெரியமடு A9 சாலையில்........சற்று முன்னர் பாரவூர்தி தடம்புரள்வு  சாரதி சிறுகாயங்களுடன் தெய்வாதீ்னமாக தப்பின...
27/10/2022

புளியங்குளம் பெரியமடு A9 சாலையில்........சற்று முன்னர் பாரவூர்தி தடம்புரள்வு சாரதி சிறுகாயங்களுடன் தெய்வாதீ்னமாக தப்பினார் என அங்குள்ள செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

🟥அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு27 அக்டோபர் 2022 அன்று காலை 05.30 மணி...
27/10/2022

🟥அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
27 அக்டோபர் 2022 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

மழையின் நிலை:
கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யும்.

காற்று:
காற்று வடகிழக்கு அல்லது திசையில் மாறுபடும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ.

கடல் நிலை:
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிதமாக காணப்படும்.
27.10.2022

இன்றைய கருத்து ஓவியம்
26/10/2022

இன்றைய கருத்து ஓவியம்

ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு:ரணிலின் வாக்குறுதியை வரவேற்கிறார் சுமந்திரன் கூட்டமைப்பு முழு ஆதரவு எனவும்யாழில் இன்று...
26/10/2022

ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு:

ரணிலின் வாக்குறுதியை
வரவேற்கிறார் சுமந்திரன்

கூட்டமைப்பு முழு ஆதரவு எனவும்
யாழில் இன்று பகிரங்க அறிவிப்பு

"இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசமைப்பினூடாக ஒரு வருட காலத்துக்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புதிய அரசமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலைத்திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார்.

2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து நாடாளுமன்றம் அரசமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புக்காக வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது.

அந்த வழிகாட்டல் குழுவிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.

புதிய அரசமைப்பு தொடர்பான இரண்டு இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசமைப்பு வரைவு கூட அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்து ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன்நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அரசமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள், கலந்துரையாடல்கள், மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது.

அதனடிப்படையில் தொடர்ந்து முன் செல்ல ஜனாதிபதி ஆவணம் செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாகத் தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்துக்குள் இதனை முடிவுக்குக் கொண்டு வரலாம். ஒரு வருடம் கூடத் தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததைப் போலவே முழுமையான பங்களிப்பைப் கொடுப்போம் என ஜனாதிபதிக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இதேவேளை, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஜனாதிபதிக்கும், அரசுக்கும் நன்றிகள். சிறையில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை" - என்றார்.

யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் பங்கெடுக்க யாழ். வருகின்றார் மைத்திரீநாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆ...
26/10/2022

யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில்
பங்கெடுக்க யாழ். வருகின்றார் மைத்திரீ

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்' என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

'புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்' (Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தால் 'பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்' என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கையின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்கே கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், 'பாலினமும் அரசியலும்' என்ற தலைப்பில் குழு விவாதம் ஒன்றும் இடம்பெறவிருக்கின்றது.

இந்த விவாதத்தின் நடுவராக மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனும், பேச்சாளர்களாக கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பவித்ரா ஜெயசிங்கே, கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர், கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சீ.டி.எல்.ஜி செயற்றிட்ட முகாமையாளர் ஜூட் வோல்டன், யாழ். சமூக செயற்பாட்டு மைய இணைப்பாளர் நடராஜா சுகிர்தராஜ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இம் மாநாட்டில், பாலினச் சிறப்புப் பேச்சுக்களும், ஆய்வுக்கட்டுரை வாசிப்புக்களும் இடம்பெறவிருக்கின்றன. இந்த நிகழ்வில் பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், கல்விசார் - கல்வி சாரா ஊழியர்கள், வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கான ஆலோசகர்கள், பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டப் பணியாளர்கள், யாழ். சமூக செயற்பாட்டு மைய பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொரோனாப் பெருந்தொற்றுப் பரவலாக்கத்தின் பின்னரான புதிய இயல்பு நிலையில் மாற்றத்தைச் செழுமைப்படுத்துவதற்காக, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்துடன் இணைந்து பாலின சமத்துவத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த ஆய்வு மாநாட்டை நடத்துகின்றது.

இந்த ஆய்வு மாநாடு பாலினம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுபவப் பகிர்வுக்கான பயனுள்ள களமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பாலின சமத்துவமின்மையின் வெவ்வேறு பரிமாணங்கள் மற்றும் அது தொடர்பான கற்றல் மற்றும் செயற்பாட்டுக்கான உலகளாவிய உரையாடலை வலுப்படுத்துவதனூடாக சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான மாற்றங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த மாநாடு வழிசெய்யும் என நம்பப்படுகிறது.

பல்கலைக்கழகம் ஒரு சமூக நிறுவனம் என்பதால் அது சமூகத்தோடு இணைந்து சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், பாலினம் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியவர்களை வலுவூட்டுவதிலும் அக்கறை செலுத்துகின்றது. அதன் ஒரு பகுதியாகவே யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையமானது பால்நிலை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான அறிவை வெளிப்படுத்துவற்காக ஓர் ஆய்வு மாநாட்டை ஐரோப்பிய ஒன்றிய நிதி அனுசரணையுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சீ.டி.எல்.ஜி செயற்றிட்டம் மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்துகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், பல்கலைக்கழகத்தில் சட்டத்துக்குப் புறம்பான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலை அகற்றுவதற்கும், அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகின்ற, வேலை புரிவதற்கும், கற்றலுக்குமான கண்ணியமான சூழலை உருவாக்குவதன் ஊடாகப் பல்கலைக்கழகத்தில் ஆண், பெண் இருபாலாரும் தங்கள் முழுத் திறனை அடைவதற்கான சமத்துவத்தை ஊக்குவிக்கின்றது.

மேலும், பல்கலைக்கழகத்தில் கற்பித்தல், கற்றல் ஆராய்ச்சி மற்றும் தொழில் புரிவதற்கான சிறந்த சூழலை உருவாக்கி பாலினப் பிரச்சினைகளில் விழிப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது. பல்கலைக்கழகத்துக்குள்ளே மட்டுமல்லாமல் அது சார்ந்த சமூகத்திலும் பல விழிப்புணர்வு மற்றும் வாழ்வாதார வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

ஆஸ்திரேலியா அணியுடன் நேற்றைய உலகக்கிண்ண தோல்வியிலிருந்து இலங்கை அணி மீளுமா?
26/10/2022

ஆஸ்திரேலியா அணியுடன் நேற்றைய உலகக்கிண்ண தோல்வியிலிருந்து இலங்கை அணி மீளுமா?

22/10/2022

ஒரு நிமிடத்தில் நடந்ததைபாருங்கள்...

ஓடிக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது யாழ் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம...
22/10/2022

ஓடிக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது

யாழ் - மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.

பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றிரவு சாரதி மட்டும் பயணித்த போது இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற போதும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் கூறினர்

சம்பவத்தையடுத்து காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தீயணைத்த போதும் வான் முற்றாகச் சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது

"பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதன் மூலம்
சாலை விபத்துகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்"
இந்த சம்பவத்தை நினைவில் கொள்ள உதவும் வகையில் இந்த விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.

இன்று 22.10.2022சற்று முன்னர் முள்ளியவளை சந்தைக்கு முன் விபத்து..!
22/10/2022

இன்று 22.10.2022சற்று முன்னர் முள்ளியவளை சந்தைக்கு முன் விபத்து..!

 #தமிழகத்தில்  #கீழடி  #அகழ்வாய்வு  #திருப்புமுனை ஏற்படுத்திருக்கும் நிலையில்  #ஈழத்தின்  #திருகோணமலை  #தம்பலகாமத்தில்  ...
22/10/2022

#தமிழகத்தில் #கீழடி #அகழ்வாய்வு #திருப்புமுனை ஏற்படுத்திருக்கும் நிலையில் #ஈழத்தின் #திருகோணமலை #தம்பலகாமத்தில் #தமிழ்க்கல்வெட்டு
---------------------------------
பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தலைவவர்
வரலாற்றுத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
1796 காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் அவர்கள் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும்,
அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இக்கல்வெட்டை 1930களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம்கல்வெட்டின் மைப்பிரதி பேராசிரியர் பரணவிதானவினாலேயே எடுக்கப்பட்டதாகத் தெரிய
வருகின்றது. ஆயினும் இக்கல்வெட்டு மைப்பிரதியில் உள்ள 11 வரிகளில் தெளிவாக உள்ள ஐந்து வரிகள் மட்டுமே ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருந்ததால் தம்பலகாமம் பற்றிய
வரலாற்றாய்வில் இக்கல்வெட்டு முழுமை பெற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் தமிழ்
அறிஞர்கள் சிலர் இக்கல்வெட்டை நேரில் பார்வையிட்டுப் படியெடுக்க முயற்சித்த போதும் குறித்த கல்வெட்டு தம்பலகாமம் வயல்வெளியில் காணப்படவில்லை. இதனால் அவர்களது ஆய்வுகளில் இக்கல்வெட்டு மறைந்த அல்லது மறைக்கப்பட்ட கல்வெட்டாகவே பார்க்கப்பட்டு
வந்தது.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வரும் தம்பலாகமத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி தங்கராசா ஜீவராஜ் அவர்கள் தமது குழுவைச் சேர்ந்த திரு. விஜயானந்தன் விஜயகுமார்,
வைரமுத்து பிரபாகர் ஆகியோரின் உதவியுடன் தம்பலகாமத்தில் இரு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதற்கு வருமாறு எம்மை அழைத்திருந்தார். அதன் பேரில் கடந்த வாரம் தொல்லியல் விரிவுரையாளர் திரு.கிரிகரன்,
தொல்லியல் இறுதி வருட மாணவர்களான திரு.கசிந்தன் மற்றும் சுதர்சன் ஆகியோருடன் தம்பலகாமம் சென்றிருந்தோம். இவ்விடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான வசதிகளை வைத்திய கலாநிதி ஜீவராஜ் வரலாற்று ஆர்வலர் பிரபாகர் ஊடாகச் செய்திருந்ததால் ஒரே நாளில் இரு இடங்களிலும் உள்ள கல்வெட்டுக்களைப் பார்வையிட முடிந்தது. அவற்றுள் சில கல்வெட்டுகள் கட்டிட அழிபாடுகளுடன் தம்பலகாமம் காட்டுப்பகுதியில் உள்ள ஆழமான ஆற்றில் புதைந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றில் இறங்கி புதையுண்ட கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படிக்க முடியவில்லை. ஆயினும்
இவ் ஆறு வற்றிய காலத்தில் அக்கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படியெடுத்துப் படிக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
1930இல் மறைந்த அல்லது மறைக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு
இக்கல்வெட்டு தம்பலகாமம் நாயன்மார்திடல், மாவிலாங்கடி பிள்ளையார் ஆலயத்தின்
காணப்படுகின்றது. இக்கல்வெட்டை இவ்வாலயத்தின் தலைவர் முத்துக்குமார் குணராசா அவர்கள் தம்பலகாமத்தில் தனியார் காணியில் இருந்து கண்டெடுத்து தனது ஆலயத்தில்வைத்து பாதுகாத்து வருகின்றார். இதன் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு (கி.பி.12- 13ஆம் நூற்றாண்டில்) முன்னர் பொறிக்கப்பட்டதென்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. இதில் பொறிக்கப்பட்ட தெளிவான தமிழ்ச்சொற்களை வாசித்தபோது இக்கல்வெட்டையே இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் ஆளுனர் தம்பலகாமம் வயல்வெளியில் பார்வையிட்டுள்ளார் என்பது
தெரியவந்தது.

1930களில் இக்கல்வெட்டை படியெடுத்த பேராசிரியர் பரணவிதான கல்வெட்டின் முன் பக்கத்தில்
மட்டும் 11 வரிகளில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாம் கல்லின் பின் பக்கத்தை நன்கு துப்பரவு செய்து பார்த்த போது அதிலும் 11 வரிகளில்
சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஆயினும் இக்கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்கு மேல் வயல்வெளிகளிலும், தனியார் காணிகளிலும், வீடுகளிலும் சரியாகப் பாதுகாக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் பல வரிவடிவங்கள் அழிவடைந்தும்,தேய்வடைந்தும் காணப்படுகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு இக்கல்வெட்டை பல்வேறு
முறைகளில் படியெடுத்து தென்னாசியாவின் தலைசிறந்த கல்வெட்டறிஞர் பேராசிரியர் சுப்பராயலு மற்றும் சிரேஷ்ட கல்வெட்டறிஞர் கலாநிதி இராஜகோபால் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் உதவியுடன் இக்கல்வெட்டை ஓரளவிற்கு வாசிக்க முடிந்துள்ளது. அதன் வாசகம்
பின்வருமாறு:
வரி:
1 ----
2 ----------மாதி
3 ------
4 யிரண் ----தி
5 ருக்கோணமலை
6 உலையான் நிச்ச
7 யித்த ஜகதப்பழூ
8 கண்டன் சந்தி
9 க்கு நிலையாக ஜதரஸ
10 தம்பலகாம ஊ
11 ரை நான் கெல்
12 லைக்கு உள் எல்லா
13 வினியோ
14 கங்கொள்
15 ளும்படிக்கு
16 ம் இதுக்கு
17 மேற் பன்னி
18 நான் ஒரு –
19 ---------------
20 –மாகில் நா
21 – காகத்து
22 க்கும் பிறந்வர்கள்.
இக்கல்வெட்டில் இருந்து திருகோணமலை உடையாரின் வேண்டுதலுக்கு இணைங்க ஜகதப்ப கண்டன் (சந்தி) பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு (ஆலயப்பணிகளுக்கு) தம்பலகாமம் ஊரின் அனைத்து வரிகளும் (அனைத்து விநியோகமும்) வழங்கப்பட்ட செய்திகளையும், ஆணையையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. திருகோணமலை உடையாரின் தீர்மானத்திற்கு அமைவாக இத்தானம் உருவாக்கப்பட்டதால் தம்பலகாம ஊரின் வரிகள் அந்த ஊரில் இருந்த ஆலயத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டதா அல்லது திருகோணமலையில் இருந்த ஆலயத்திற்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இக்கல்வெட்டில் வாசிக்க முடியாதிருக்கும் சில வரிகள் எதிர்காலத்தில் வாசிக்கப்படும் போது இவ்வாலயம் எங்கிருந்ததென்ற உண்மை தெரியவரலாம்.

இக்கல்வெட்டு திருகோணமலை மாவட்டத்தின் அதிலும் சிறப்பாக தம்பலகாமத்தின் இடைக்கால வரலாற்றுக்கு நம்பகத் தன்மையுடைய புதிய சில ஆதாரங்களைத் தருவதாக உள்ளது. தம்பலகாமம் பிராந்தியத்திற்கு 2500 முற்பட்ட வரலாறு உண்டு. அதை அப்பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் ஆதியிரும்புக்கால குடியிருப்புகளும், பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உறுதிசெய்கின்றன. இப்பிராந்தியம் பண்டுதொட்டு திருகோணமலைக் கோணேஸ்வரர் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததற்குப் பல ஆதாரங்கள்காணப்படுகின்றன. அத்தொடர்பின் காரணமாகவே 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்ட போது அவ்வாலயத்தை நினைவுபடுத்தி தம்பலகாமத்தில் 17ஆம் நூற்றாண்டில் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைக்கப்படக் காரணமாகும். தற்காலத்தில் தம்பலகாமம் என அழைக்கப்படும் இப்பிராந்தியம் கல்வெட்டில் தம்பலகாம ஊர் எனக் கூறப்பட்டிருப்பதில் இருந்து இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியம் தமிழரின் பூர்வீக இடமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதி செய்கின்றது.

ஆதிகால, இடைக்கால வரலாற்று இலக்கியங்களில் திருகோணமலையும், அங்குள்ள துறைமுகமும் கோணா, கோகர்ணம், கோகர்ணபட்டினம், திரிகூடகிரி, கோணமாமலை என அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இக்கல்வெட்டில் இப்பிராந்தியம் திருக்கோணமலை எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இப்பெயர் வழக்கில் இருந்ததற்கு இக்கல்வெட்டு மேலுமொரு சான்றாகக் காணப்படுகின்றது.

இக்கல்வெட்டு திருக்கோணமலை உடையார் பற்றிக் கூறுகின்றது. சாசன வழக்கில் உடையார் என்ற சொல் அரசனை அல்லது பெருநிலக்கிழாரான அரச பிரதிநிதியைக் குறிப்பதாகப் பேராசிரியர் பத்மநாதன் கூறுகின்றார். இவற்றிலிருந்து 12ஆம் அல்லது 13ஆம் நூற்றாண்டில் திருகோணமலைப் பிராந்தியம் அரசனின் அல்லது அரசபிரதிநிதியின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடமாக இருந்ததெனக் கூறலாம். இக்கல்வெட்டு திருகோணமலை உடையாரின் வேண்டுதலுக்கு இணங்க தம்பலகாம ஊரில் ஜகதப்ப கண்டன் பெயரில் தானம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜகதப்ப கண்டன் என்பது இருவேறுபட்ட பொருளில் அமைந்த பெயராகும். ஜகதப்ப என்ற பெயர் அரசன் அல்லது போர்வீரனின் விருதுப் பெயரைக் குறிக்கின்றது. கண்டன் என்பது போர்வீரனைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றில் இருந்து ஜகதப்ப கண்டனை தம்பலகாமத்தில் இருந்த அரசனாக அல்லது படைத் தலைவனாகக் கருத இடமுண்டு.

இக்கல்வெட்டின் சமகால இலங்கை அரசியல் வரலாறு கூறும் பாளி, சிங்கள இலக்கியங்கள் கலிங்கமாகனது ஆட்சியில் சிங்கள, பௌத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பொலநறுவை இராசதானியும், சிங்கள மக்களும் தெற்கு நோக்கி நகர்ந்தபோது வடஇலங்கையில் கலிங்கமாகன் தலைமையிலான அரசு தோன்றியதாகக் கூறுகின்றன. இவனது அரசின் தலைநகர் எங்கிருந்த தென்பதை இவ்விலக்கியங்கள் கூறவில்லை. ஆயினும் அவனது படைகள் நிலை கொண்டிருந்த இடங்கள் நிர்வாக ஒழுங்குகள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள கோகர்ணம், கந்தளாய், கட்டுக்குளம் கொட்டியாரம் ஆகிய இடங்களில் கலிங்கமாகன் படைகள் நிலை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம். கலிங்கமாகன் ஆட்சியோடு கிழக்கிலங்கையில் வன்னிமைகளின் ஆட்சி தோன்றியதாகக் கூறுகின்றது.

கோணேஸ்வரர் கல்வெட்டு முதலான தமிழ் இலக்கியங்களும், ஒல்லாந்தர் கால ஆவணங்களும் திருகோணமலைப்பற்று, கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று மற்றும் தம்பலகாமப்பற்று முதலான வன்னிமைகளின் ஆட்சி பற்றிக் கூறுகின்றன. இங்கே கல்வெட்டில் கூறப்படும் தம்பலகாமத்து ஜகதப்ப கண்டனனை அரசனாக அல்லது படைத்தலைவனாகக் கொள்ளுமிடத்து இக்கல்வெட்டு வடக்கில் கலிங்கமாகன் ஆதிக்கம் இருந்ததற்கான முதலாவது நம்பத்தகுந்த ஆதாரம் என்ற சிறப்பை பெறும். எதிர்காலத்தில் இக்கல்வெட்டுப் பற்றிய விரிவான ஆய்வுகள் இக்கருத்தை உறுதிசெய்யலாம்.

இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் கல்வெட்டுக்கள் நம்பகத்தன்மை உடைய சான்றுகளாகும்.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் அதிக எண்ணிக்கையிலானவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ஆயினும் அக் கல்வெட்டுக்களை ஒன்றுசேர ஆவணப்படுத்தி குறிப்பிட்ட ஒரு இடத்தில் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் ஆர்வலர்கள்
மத்தியில் காணப்படுகின்றது. ஆயினும் திருகோணமலை மக்களிடையே தமது பிரதேசத்தின் வரலாற்றுச் சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு 1960 களில் இருந்து தோன்றிய வரலாறு காணப்படுகின்றது. அதனை சமகாலத்தில் முன்னெடுத்துச் செல்லும் துடிப்புள்ள இளைஞர்களில் ஒருவராக வைத்திய கலாநிதி ஜீவராஜ் அவர்களைப்
பார்க்கின்றேன். இதற்கு இவரின் தந்தை திரு.தங்கராசா, பேரன் அமரர் வேலாயூதம் ஆகியோர் ஆதிகோணநாயகர் கோயிலின் மரபுவழி அறங்காவலர்களாகும்.

இவர்கள் புத்திரிகை, கலை, இலக்கிய, வரலாறு ஆகிய பணிகளால் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். இப்பின்புலத்தின் வழிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவான வைத்திய கலாநிதி ஜீவராஜூம், அவரின் சகோதரியான தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி
ஜெயகௌரி ஸ்ரீபதியும் சமகாலத்தில் தமக்குரிய கடமைகளுக்கு அப்பால் தம்பலகாமத்தின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறித்து ஆவணப்படுத்தும் பணிகளில் கடுமையாக உழைத்து வருவது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வுக்குப் புதுவழி காட்டுவதாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் மனைவியும் 2022.10.19 க்அன்று. அதாவது நேற்று  மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில...
20/10/2022

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் மனைவியும் 2022.10.19 க்அன்று. அதாவது நேற்று மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்.

இனம் தெரியாதோரின் இடியன் துப்பாக்கிச்சூட்டில் இளம் யுவதி பரிதாபப்பலி சிவா நகர் நெடுங்கேணியில் பயங்கரம்........குறித்த சம...
19/10/2022

இனம் தெரியாதோரின் இடியன் துப்பாக்கிச்சூட்டில் இளம் யுவதி பரிதாபப்பலி சிவா நகர் நெடுங்கேணியில் பயங்கரம்........

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது நேற்று இரவு 8.30மணியளவில் தனது சொந்த கடமையின் நிமித்தம் வீட்டிற்கு வெளியே வந்த குறித்த இளம் யுவதியை வீட்டிற்கு பின்னால் மறைந்திருந்தோர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் சன்னங்கள் துளைக்கப்பட்டு குறித்த இளம் யுவதி சம்பவ இடத்திலே பலியானார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சிவாநகர் நெடுங்கேணியைச்சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா(வயது-21) என்பவராவார்.

சம்பவ இடத்திற்கு இன்று காலை வவுனியா நீதிவான் வருகைதந்து மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த யுவதியின் சகோதரர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தின் போது மரணமடைந்ததுடன் யுவதியின் தாய் கடந்த வருடம் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கதுடன் அக்குடும்பத்தின் தொடர்ச்சியான இழப்புக்களால் தந்தையும் ஏனைய பிள்ளைகளும் மிகுந்ததுயருக்குள்ளாகியுள்ளார்கள்.

2022.10.15 மாலை  A9  நெடுஞ்சாலையின் எழுதுமட்டுவாழ் பகுதிக்கும் முகமாலை சந்திக்கும் இடையில் வாகன விபத்து ஒன்று இடம் பெற்ற...
15/10/2022

2022.10.15 மாலை A9 நெடுஞ்சாலையின் எழுதுமட்டுவாழ் பகுதிக்கும் முகமாலை சந்திக்கும் இடையில் வாகன விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது

மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனமும் கன்னிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மேலதிக விசாரணங்களை பளை பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி அபிவிருத்திகளை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் இனியொரு போதும் எதிர்ப்புக்...
15/10/2022

திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி அபிவிருத்திகளை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் இனியொரு போதும் எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது : ஜனாதிபதி

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி அபிவிருத்தி ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியத்துவமுடையதாகும். 2003 இல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. எனவே இனியொரு போதும் இத்திட்டம் குறித்த எதிர்ப்புக்களுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல. இது எதிர்கால சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் பிரகாரம் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்கும் போது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்களை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எண்ணெய் தாங்கிகளை வழங்கும் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டம் அடுத்த தேர்தலுக்கானதல்ல. அடுத்த தலைமுறைக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம். 2023 இல் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.

எனவே 2018-2050 திட்டங்களை 2020-2048 என்று குறைப்போம். இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். அடுத்த 5 வருடங்களில் இதனை செய்ய முடியும் என்று நான் கூறவில்லை, மாறாக அதனை ஆரம்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றேன். இந்த இடத்திலிருந்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

பொலன்னறுவை தலைநகராக இருந்த போது திருகோணமலை துறைமுகம் பெரிய துறைமுகமாக இருந்தது. அன்று திருகோணமலையைச் சுற்றி வங்காள விரிகுடா வரைபடம் காட்டப்பட்டது.

3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் ! DIGITAL DESK ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ...
15/10/2022

3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !

DIGITAL DESK

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ், காலி க்ளடியேட்டர்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்குபற்றுகின்றன.

இவ் வருடம் லங்கா பிறீமியர் லீக் போட்டிகள் அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று இரண்டு தடவைகள் சந்திப்பதுடன் மொத்தம் 20 லீக் போட்டிகள் நடைபெறும். இறுதிச் சுற்றில் 4 போட்டிகள் நடைபெறும்.

லீக் சுற்று போட்டிகள் டிசம்பர் 6ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 19ஆம் திகதிவரை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

டிசம்பர் 21ஆம் திகதி முதலாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியும் நீக்கல் போட்டியும் 22ஆம் திகதி 2ஆவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியும் நடைபெறவுள்ளன.

இறுதிப் போட்டி டிசம்பர் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது

Address

Colombo
Colombo
00600

Alerts

Be the first to know and let us send you an email when Lanka Tamil News 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lanka Tamil News 1st:

Videos

Share