TTF வாசன் இன்றைய விபத்தின் CCTV காட்சிகள் #ttfvasan #accident
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் காற்றுடன் மழை
#குடவாசல் #Kodavasal #Thiruvarur #Tiruvarur
பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாணவிகள் 75 நாட்கள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் வழங்கி வருகின்றனர்.இதில் சந்திராபுரம் கிராமத்தில் ர.காவியா என்ற மாணவி பஞ்சகாவ்யா இயற்கை பூச்சி விரட்டி எப்படி உற்பத்தி செய்வது என்பதை மக்களுக்கு எடுத்துத்துரைத்தனர்.பின்பு பஞ்சகாவ்யா மூலம் மண்வளம் மற்றும் செடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதையும்.நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறையும் என்பதையும் கூறினார்கள். பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குழு மாணவிகள்
அ.ர.கார்த்திகா
ப. கார்த்திகா
ர.காவியா
ர.காவியா
சு.கீர்த்தனா
ம.லலிதா
கே.லக்ஷ்மி தீபிகா
அ.லயீக்கா ஃபர்ஹீன்
சா.மணிஷா
சே.மோ
விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் ஆபத்தான பயணத்தில் பள்ளி மாணவர்கள்
விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் ஆபத்தான பயணத்தில் பள்ளி மாணவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் ஊரில் இருந்து பரமக்குடி செல்லும் தனியார் பேருந்துகள் காலை நேரத்தில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆபத்தான பயணத்தில் செல்கின்றனர் இதனால் அந்த வாகனத்தில் செல்லும் பள்ளி மாணவர்கள் படிகளில் ஆபத்தான பயணத்தில் செல்கின்றனர் இதனை உடனடியாக பரமக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் வாகன போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
இராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்: முசாபர் அலி
சுமை பணி தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி நலவாரிய அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
திருவாரூரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பாக கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், டைலர் தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமை பணி பணியாளர்களுக்கு நலவாரிய பயன்களை இரட்டுப்பாக்கிட வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலும் திறந்த வெளி சேமிப்பு கிடங்கிலும் பணிபுரியும் சுமை பணி தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ஊதியம் 10ரூபாய் வழங்கிட வேண்டும், அடையாள அட்டை உடனடியாக வழங்கிட வேண்டும், பதிவு செய்த சுமை பணி தொழிலாளர்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கடந்த கால
இஸ்லாமியர்களை அச்சுருத்தும் வகையில் பேசிய பாஜக எம்.பியை கைது செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
*சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புகளுடன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது*
மதுரை மாவட்ட அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
சர்க்கரை ஆலை திறப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனால் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
*தேர்தல் ஆணையம் மட்டுமல்ல பொதுவெளியிலும்., பல்வேறு குளறுபடிகளை செயற்கையாக சிலரால் உருவாக்கப்பட்டு வருகிறது - மதுரை விமான நிலையத்தில் OPS பேட்டி.*
மதுரையிலிருந்து டெல்லி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.,
அதிமுகவின் சட்ட விதிகளின் படி கழக ஒருங்கிணைப்பாளர்., இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தான் இருந்தோம்.
தற்போதுவரை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் இன்று வரை அப்படித்தான் கடிதம் அனுப்பி உள்ளது.
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவ,மாணவிகள் 3 தங்கம் பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம், மூன்று வெண்கலம் பதக்கம் வென்று சாதனை
பங்களாதேஷ் நாட்டில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடந்த 28 , 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதில் இந்தியா,இலங்கை, நேபால், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள்,வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் இந்தியாவில் இருந்து 80 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.இதில் தமிழகத்தை சேர்ந்த ஆல் இந்தியா கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் 7 மாணவ மாணவிகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு மூன்று தங்க பதக்கம்,இரண்டு வெள்ளி பதக்கம், 3 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதையடுத்து பங்களாதேஷில் இருந்து சென்னை வந்த வீரர்களு
புதுச்சேரி காமராஜர் சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டு, இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆயில் கொட்டியது. அப்போது அந்த வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த 7 மேற்பட்டோர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார், தீயணைப்பு துறை க்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கீழை கொட்டிய எண்ணெய்யை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுப்பட்டனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளம் பெண் வழுக்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிவலிங்கம் நிருபர் புதுச்சேரி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டி நகராட்சியில் 26 ஆவது வார்டு கவுன்சிலர் ஷாகுல் ஹமீத் இவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர். பள்ளப்பட்டியின் திமுக நகர செயலாளர் பஷீர் அகமது இவருக்கு அலைபேசியின் மூலமாக நகர் மன்றத் தலைவி முனவர்ஜானை ஆபாச வார்த்தைகளால் பேசிய ஆடியோவை பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக இவர் மீது பஷீர் அஹமத் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சூழ்நிலையை எதிர்பார்த்த நகர செயலாளர், இரண்டாவது வார்டு கவுன்சிலர், நகராட்சியின் துணைத் தலைவருமான திமுகவைச் சேர்ந்த பஷீர் அஹ்மத் தனது சக ஆதரவுள்ள கவுன்சிலர்களை தூண்டிவிட்டு நகர்மன்ற கூட்டம் முடிந்து வெளியேறியதும் ஒருவருக்கொருவர் கைகலப்பு ஏற்பட்டு சாகுல் அமீத் நாற்காலிகளால் தாக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வர
திருவாரூரில் முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் 1144 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்சியில் 1144 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் திருச்சியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து
ஓ.பன்னீர்செல்வம் தான் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கையை பெற்றவர் எனவும் அவர் தலைமையில் தான் அதிமுக கூட்டணி அமையும் எனவும் அவரது ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அளித்த பேட்டியில்,
"அதிமுக தலைமை கழகத்தில் கூட்டம் கூட்டியதற்காக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் அல்ல. எடப்பாடி இல்லாத அதிமுகவை கட்டமைக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சி பலன் அளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை விட்டு பலர் விலகும் முடிவை தடுக்கவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தப்பட்டது
#OPS #ADMK #EPS
ஸ்கூட்டி ஓட்டிட்டு வரும்போது உன்ன யார்ரா ஓரமா நிக்க சொன்னது 😂🚶மூமன்ட், பாவம்யா பசங்க
Advertisement - விளம்பரம்
PVM Express (Speed Parcel Service) Opening Soon
Next Day Delivery - Online Tracking - Digital Payment
#pvmchennai #pvmmadurai #pvmcoimbatore #pvmpondicherry #pvmhosur #pvmtirunelveli #pvmvellore #pvmtrichy
PVM Express
முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியர்.
முஸ்லிம் என்றாலே தீவிரவாதியா.? - Yasar Arafhat
மேற்கு தொடர்ச்சி மலை மராட்டியம், குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 முதல் 1000 மீட்டர்கள்.
#ooty #Nilgiri Thanks முஹம்மது அலி