Thiruma 2.0

Thiruma 2.0 பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்ப்பதே திருமா அறம்

21/07/2022
எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற க் குழு தலைவர்களின் கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் நடந்தது. நானும் தோழர் ரவிக்குமார் அவ...
21/07/2022

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற க் குழு தலைவர்களின் கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் நடந்தது. நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றோம்.

மத்திய புலனாய்வு அமைப்புகள் அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் மோடி அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிடுவது என்றும் நாடாளுமன்ற இரு அவையிலும் இந்நடவடிக்கைகளைக் கண்டித்துக் கடுமையாகக் குரல் எழுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
Thol.Thirumavalavan

அதன்டி 11.00 மணிக்கு மக்களவை கூடியதும் காங் கட்டணி கட்சிகள் வெல் பகுதியில் இறங்கிக் குரலெழுப்பினோம். அவை அரைமணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. Thol.Thirumavalavan

21/07/2022
 #இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விசிக சார்பில் நானும் விசிக பொதுச்செயலாளர் ரவி...
19/07/2022

#இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இன்று நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விசிக சார்பில் நானும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றோம்.

அப்போது நான் அளித்த கடிதத்தின் தமிழாக்கம்:

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பாத்காப்பு நலன்களையும் பொருளாதார நலன்களையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அந்த நாட்டின் மக்களுடைய நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். விசிக சார்பில் இந்திய அரசின் கவனத்துக்கு பின்வரும் விஷயங்களை முன்வைக்கிறோம்:

1. இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக ஒரு இடைக்கால அரசு அமைப்பதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

2. இடைக்கால அரசில் சிங்களவர்களின் பிரதிநிதிகள், தமிழர் பிரதிநிதிகள், மலையகத்தில் உள்ளவர்களின் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் பங்குபெறுவதை உறுதி செய்யவேண்டும்.

3. ராணுவத்தையும், அடக்குமுறை சட்டங்களையும் பயன்படுத்துவதை இலங்கையின் தற்காலிக அதிபர் கைவிட வலியுறுத்தவேண்டும்.

4. இலங்கை மக்களின் விருப்பம்போல வல்லுநர்கள், அறிவுஜீவிகளைக்கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டுதலில் இடைக்கால அரசு செயல்பட வேண்டும்.

5. அயல்நாடுகளிலிருந்து ராணுவ உதவி பெறுவதை தவிர்க்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

6. இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு இடைக்கால திட்டம் ஒன்றை தயாரிக்க இந்திய அரசு உதவ வேண்டும்.

6. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்

7. தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் போக்கை நிறுத்தவேண்டுமென இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

8. 2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள UNHRC கூட்டத்தில் 2009 இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்

9. இந்திய அரசு 2009 இல் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உடன்படுமாறு புதிதாக அமையும் அரசை வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்த வேண்டும் Thol.Thirumavalavan Thiruma 2.0

18/07/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when Thiruma 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share