Sky தமிழ்

Sky தமிழ் முகநூல் தொலைக்காட்சி

இலட்சிய சாதனை படைத்த சஹ்மி சஹீட் ; இலங்கையை சுற்றிவரும் சாதனையில் வெற்றி!Show Me The View
26/08/2024

இலட்சிய சாதனை படைத்த சஹ்மி சஹீட் ;
இலங்கையை சுற்றிவரும் சாதனையில் வெற்றி!

Show Me The View

கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் குவைத் தூதுவர் சந்திப்பு.!------(எம்.என்.எம்.அப்ராஸ்)குவைத் நாட்டின் இலங்...
22/08/2024

கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் குவைத் தூதுவர் சந்திப்பு.!
------

(எம்.என்.எம்.அப்ராஸ்)

குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹலாஃப் பு தாய்ர் அவர்களின் விஷேட அழைப்பின் பேரில்,கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் கடந்த செவவாய்க்கிழமை (20)சந்தித்தார்.

இதன்போது கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் பொது மக்கள் தேவைப்பாடுகள் தொடர்பில் இதன் போது தூதுவரிடம் ரஹ்மத் மன்சூர் தெரிவித்துடன் இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தூதுவர் உறுதியளித்ததாக ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலத்தில் குவைத் அரசாங்கத்தின் மூலம் தென் கிழக்கு பல்கைக்கழகத்தில் இடம் பெற்ற உதவி திட்டங்களுக்கு இதன் போது நன்றியினை ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்

தனது புதல்வரும்,இளம் தொழிலதிபருமான அக்கீல் அப்துர் ரஹ்மானும் இச்சந்திப்பின்போது கலந்து கொண்டார்.

14/08/2024

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 40 வேட்பாளர்கள் | தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04 | 408 முறைப்பாடுகள் | 14-08-2024

https://www.youtube.com/watch?v=3gA5quHrH3Y

🔴BREAKING NEWSவீதியில் பாரிய விபத்து – மூவர் உயிரிழப்புகொழும்பு – கண்டி பிரதான வீதியின் வேவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற ...
12/08/2024

🔴BREAKING NEWS
வீதியில் பாரிய விபத்து – மூவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வேவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேவெல்தெனிய பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் பின்புறத்தில், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று மோதுண்டுள்ளது.

இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆசனங்கள் வெற்றிடம்ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் பாராளுமன்ற ஆசனங்கள...
12/08/2024

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆசனங்கள் வெற்றிடம்

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் பாராளுமன்ற ஆசனங்கள் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

அண்மையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியில் குறித்த இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் அதிகரித்தாலும் அதற்கான நிதியை வழங்கத் தயார் – ரஞ்சித் சியம்பலாபிட்டியதற்போது 279 பொருட்களுக்கு மாத்திரமே இற...
12/08/2024

வேட்பாளர்கள் அதிகரித்தாலும் அதற்கான நிதியை வழங்கத் தயார் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தற்போது 279 பொருட்களுக்கு மாத்திரமே இறக்குமதி தடை அமுலில் - பதில் நிதி அமைச்சர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிதியினை வழங்க தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு பிரச்சினையல்ல அதற்காக நிதியை ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடு 100 கோடி ரூபாயை தாண்டவில்லை. அதற்கு 10 பில்லியன் தான் ஒதுக்கியுள்ளோம். தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளுக்குப் பின்னர் இன்னும் பணம் மீதம் உள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டு அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர,
அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் உள்ளன.

தேர்தலுக்கான நிதி குறித்து நிதி அமைச்சகம் எந்த சந்தேகமும் கொள்ளக்கூடாது, ஏனெனில் செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே பணம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ICCயின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவுஐ.சி.சி.யின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளி...
12/08/2024

ICCயின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு

ஐ.சி.சி.யின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ள அத்தபத்து தற்போது மூன்றாவது தடவையாகவும் ஜூலை 2024க்கான ICCஇன் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்புஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்...
12/08/2024

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூலை 31 முதல் நேற்று (11) வரை 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

பேச்சுவார்த்தை வெற்றி – அறிவிப்பு வெளியானது------------------------- 2024/08/12-------------------------பெருந்தோட்ட தொழி...
12/08/2024

பேச்சுவார்த்தை வெற்றி – அறிவிப்பு வெளியானது
-------------------------
2024/08/12
-------------------------
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று (12) வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

1700 ரூபாய் சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஸ்கை தமிழ் விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2024.............................................நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரி...
20/07/2024

ஸ்கை தமிழ் விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2024.............................................

நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும்
"ஸ்கை தமிழ் விருது - 2024"க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கட்டாரில் உள்ள ஆளுமைகளை மிக பிரம்மாண்டமான முறையில் கௌரவித்த ஸ்கை தமிழ், இம்முறை இலங்கையிலுள்ள ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கவுள்ளது

விருது வழங்கப்படும் பிரிவுகள்:

* ஊடகம் மற்றும் பத்திரிகை
* இலக்கியம்
* சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்
* கலை மற்றும் கலாசாரம்
* விளையாட்டுத்துறை
* சமூக சேவை
* வணிகம் மற்றும் தொழில்முனைவோர்
* கல்வி & தொழில்நுட்பம்
* விவசாயம் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இவ்விருதுக்கு நீங்கள் தகுதியானவர் எனக்கருதினால், கீழே தரப்பட்டுள்ள Google விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் சுயவிபரங்களுடன் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் எமக்கு அனுப்பிவையுங்கள்.

விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியதாக Google படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

உங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பிவைக்க...
https://forms.gle/Yn2vf8DECFzVUhe59

மேலதிக தகவல்ககளை அறிய : 0757000791 | +97431060249 என்ற வட்ஸ்அப் இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அல்லது www.awards.skytamilnews.com என்ற இணையத்தள முகவரிகளுக்குச் செல்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Address

Main Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Sky தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky தமிழ்:

Videos

Share

Category


Other TV Networks in Kalmunai

Show All