Sakthi

Sakthi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sakthi, TV/Movie Award, .

14/09/2023
ஓம் நமச்சிவாய
12/09/2023

ஓம் நமச்சிவாய

முருகப் பெருமான் அருள்பெற, பழிப்போர் பகை நீங்க, நினைத்த காரியம் சித்தி பெற இந்த பாடலை தினமும் விளக்கேற்றும் போ.....

09/09/2023

♥கஷ்ரப்பட்டு. வயித்துல சுமந்து.. பெத்து..... பொத்தி பொத்தி.. கவனமா வளர்த்து...
உடம்பு சரியில்லைன்னா மருத்துவம் செய்து.... குழந்தைக்கு எது நல்லது. எது கெட்டது. என்று பார்த்து பார்த்து...செய்து உணவு உடைகள் கொடுத்து....

♥ இந்தக்காலத்தில்.. படிப்பு. வரலைன்னாலும்.. ஆங்கிலவழிக்கல்வி என்ற பெயரில்..பெருமைக்கென்று. பணத்தை அள்ளி அள்ளி. தனது தகுதிக்கு மீறி படிக்க வைத்து... .

♥வேலைக்குப்போகவும்.. வேலைவாங்கவும் செலவழித்து....

♥தன்குழந்தையின் தவறை யாராவது சுட்டிக் காட்டினால்.. அதை மறைத்து. வரிந்து கட்டி அவர்களோடு. சண்டையிட்டு... குழந்தைகளுக்காக. வாக்காலத்து வாங்கி...

♥இதுபோன்ற. எல்லாத்தையும். பெத்தவங்களோ... அல்லது. வளர்த்த. காப்பாளர்களோ செய்யனும்...

♥ஆனால்.... காதல் மட்டும்....
வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது. மட்டும்..
தங்களின் விருப்பமாம்.... கேட்டால்.. என்னோட வாழ்க்கை..நான்தானே வாழ்ப்போகிறேன்னு. சொல்வாங்களாம்....
காதல் தெய்வீகமானதாம்...

♥இதற்கு கூஜாதூக்கிக்கொண்டு.. நண்பர்கள் கூட்டம் வேறு. பெத்து. வளத்தவங்களுக்கு துரோகம் செய்யும்படிக்கு. காதலுக்குத் துணையும். திருமணமும. செய்ஞ்சு வைப்பாங்களாம்...

♥இதற்குப் பெயர். புரட்சியோ... தெய்வீக்க்காதலோ. அல்ல...
செய்நன்றித் துரோகம்...

♥நன்றி: ஹேமாவதி
உலகத்தமிழ் மங்கையர் மலர்
பிரான்ஸ் 🇨🇵

28/08/2023

குழந்தை வரம் கேட்கு ம் பெண்களே இந் த செடியை எங்கு பா ர் த் தாலும் விடாதீ ங்க… எந்த பெ ண் ணையும் வேக.மாக க.ர்.ப்பம் த...

23/08/2023

#தங்கமனசு
எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!!

புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது.

நாற்காலி, மேசை எதுவும் இல்லை. திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் பசியாறிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான்.


84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோட புதுக்கோட்டைக்கு கூட்டிக்கிட்டு வந்திட்டாரு.

டீக்கடையை வச்சி பிழைப்பு ஓட்டிக்கிட்டு இருந்தோம். சமாளிக்க முடியலை. கொஞ்ச வருஷம் கழிச்சி இட்லிக்கடை ஆரம்பிச்சோம். கடை ஆரம்பிச்சப்ப இட்லி ரூ.10 காசு. மத்த கடைகளைவிட எப்பவும் நம்ம கடையில விலை கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும்.

நாம போதும்னு சொல்ற ஒரே விஷயம். சாப்பாடுதான். எவ்ளோ நல்ல சாப்பாடா இருந்தாலும், யாரா இருந்தாலும், வயிறு நிறைஞ்சதுக்கு அப்புறம் சாப்பிட முடியாதே. பணத்தை விட, நம்மள தேடி வர்றவங்களோட பசியை போக்குறது தான் முக்கியம்னு நினைச்சோம். அதனாலயே என்னவோ எங்களைத் தேடி நிறைய பிள்ளைங்க வருவாங்க. பலர் உங்களுக்கு எப்படி கட்டுப்பிடியாகுது?னு கேட்பாங்க. குறைஞ்ச லாபம் கிடைச்சா போதும்னு நினைக்கிறதாலதான் சமாளிக்க முடிஞ்சது. இப்பவும் முடியுது.

டீ, இட்லி வியாபாரம் செஞ்சே தான் பிள்ளைங்க மூணு பேரையும் வளர்த்தோம். மூணு பேரும் கல்யாணம் முடிஞ்சு நல்லாயிருக்காங்க. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, வீட்டுக்காரருக்கு கண்ணு ஆபரேசன் செஞ்சோம். அப்புறம் அவருக்கு கிட்னியில பிரச்னை வந்ததால டீக்கடையை நிறுத்திட்டோம்.


இட்லி கடையை மட்டும் நிறுத்தவே இல்லை. காலையில 5 மணிக்கெல்லாம் வேலைய ஆரம்பிச்சிடுவேன். ஸ்கூல் பிள்ளைங்க, ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க, கூலிக்கு வேலை பார்க்கிறவங்கன்னு தினசரி வாடிக்கையாளர்கள் பலர் வருவாங்க. அதிகபட்சமா ஒருநாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். ஒரு சிலநாள் வியாபாரம் பெருசா இருக்காது. அடுத்த நாள் உளுந்து, அரிசி வாங்கிறதுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கும். ஆனாலும், எல்லாத்தையும் சமாளிச்சிடுவேன்.

விறகு அடுப்புக்கு, சாயந்தர நேரத்துல காடு, கரைக்கு போய் விறகு எடுத்துக்கிட்டு வந்துடுவேன். மாவுக்கல்லு இருக்கு. இப்போ பையன் கிரைண்டரும் வாங்கிக் கொடுத்திருக்கான். பெரும்பாலும், மாவுக் கல்லுலயே மாவு ஆட்டிக்கிடுவேன்.

நாலு பேருக்கு தினமும் இட்லி கொடுத்துப் பழகிட்டேன். அவங்களும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க. நான் சாப்பிடுற பிள்ளைங்ககிட்ட கணக்கு கேட்கிறதேயில்லை. வேணுங்கிற இட்லியை எடுத்து வச்சிக்குவாங்க. சாப்பிட்டுட்டு சரியா கணக்குப் போட்டு கொடுத்துட்டு போயிடுவாங்க

ரொம்ப வருஷமா ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன். விலைவாசி உயர்ந்துகிட்டே இருந்தாலும் நான் மட்டும் விலையை ஏத்தாம தான் இருந்தேன். இப்போ ரெண்டு வருஷமாதான் ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதுகூட, தினமும் இங்க சாப்பிட வர்ற பிள்ளைங்கதான், உன் உழைப்புக்காகவது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுக்கணும்னு சொல்லி, அவங்களா விலையை ஏத்தி கொடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாங்க. அது அப்படியே மாறிருச்சு.

சாப்பிட வர்ற பிள்ளைங்க பலர், `உன் குடிசையை எடுத்துக் கட்டித் தர்றேன்'னு சொல்லுவாங்க. அதெல்லாம் வேண்டாம் ராசா, இந்த கிழவிக்கு இதுவே போதும்னு சொல்லிடுவேன். முடியாம இருந்த வீட்டுக்காரரை இட்லி வேலை செஞ்சே பார்த்துக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அவரு என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப கூட என் பிள்ளைங்க, எங்களோட வந்து ஓய்வு எடுங்கம்மான்னு சொல்லிக் கூப்பிடுறாங்க. ஆனா, இட்லி கடையையும், கடைக்கு வர்ற இந்த பிள்ளைகளையும் விட்டுப்போக மனசில்ல. இந்த கிழவியோட உயிரும் இட்லி கடையிலயே போகட்டும் ராசான்னு சொல்லி அவங்களை அனுப்பிடுவேன். வெந்த இட்லிகளை தட்டுக்கு மாற்றுகிறார் தனம் பாட்டி.

சிலரது வாழ்க்கை இப்படித்தான் அழகாகிக் கிடக்கிறது உழைப்பாலும் அன்பாலும்.

21/08/2023

"உலகிற்கே *இந்தியர்கள்தான் *சத்தான *இயற்கை *உணவை *உண்ண *சொல்லிக்கொடுத்தவர்கள்... எப்படி...???இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அது சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்...
*இன்று அதையே*
==============
*BARBECUE (சுட்ட கோழி)என்றும் BC,*
*KFC ,*
*MACDONALDS இல் விக்கிறான்.*
===============

*2). உப்பு, ஆலமர, வேப்பங்குச்சி + கரியை கொண்டு பல் தேய்த்தான்.*
*இன்று உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க கேக்கிறான், TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்றும் கேட்கிறான்.*
==============

*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம், *உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை பெரிய அதிசயம் போல கொள்ள லாபத்தில் STAR HOTELகளில் விக்கிறான் .*
=============

*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*உடலுறவு கொள்ளாத விந்தனுவில் உருவாக்கிய "ஜெர்சி" மாட்டை அறிமுகப்படுத்தினான்.*
=============
*இன்று அவனே அந்த இன மாடுகள் அவன் நாட்டு மக்களுக்கு ஆபத்து என இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் (விந்தனுவை) ஏற்றுமதி செய்கிறான்.*
===============

*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI, SPIRT, 7UP, ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகர டப்பாவில் அடைத்து நம்மிடமே விற்கிறான்.*
==============

*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் நாம் "*
================

*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============

*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை வரப்பில் அள்ளிப்போட்டு காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழு பூச்சியை உண்ண கோழியை விட்டோம்,*
==============

*வளர்த்ததெல்லாம் விற்க மனசு இல்லாமல் அய்யனார் / நாக்கூர் ஆண்டவர் / மேரி மாதாக்கு என சிலவற்றை நேர்ந்துவிட்டோம்,*
===============

*நேர்ந்துவிட்ட அதுகளை ஊர் உண்ண திருவிழா வச்சோம்,*
==============

*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============

*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============

*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============

*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============

*நம் பாரம்பரியத்தை தொலைத்து ஆஸ்பத்திரி மருந்துகடையை தேடிதான் அழைகிறோம் *
================

*" நாமெல்லாம் "நாகரிக கோமாளிகளாக" மாறிவிட்டோம்"*
================
பகிர்வு நன்றி

09/08/2023

Salamon Paappaiya Aplauded Madurai tirupathi Vilas - பள்ளிக்கூடம் கட்ட பணத்தை வாரி வழங்கிய வத்தல் வியாபாரியை பாராட்டிய பாப்பையா.

04/08/2023

#கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........

#கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.

#பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.

#பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கும் இல்லை.

#தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.

#பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் ஊற்ற தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.

#ஒரு_வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப் படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே அனைத்துவிடும்.

#கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

#புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....

#எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.😍

01/08/2023
கெடுவான் கேடு நினைப்பான்
21/07/2023

கெடுவான் கேடு நினைப்பான்

தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை

நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!

கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!

கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!

காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்....

பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ

மட்டுமே இருந்தது !!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!

‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!

‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!

இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!

இது தான் உலகநியதி !!

நாம் எதைத் தருகிறோமோ

அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும் !!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,

ஆனா....

நிச்சயம் வரும் !!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும் !!

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
19/07/2023

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்

சிந்தனை நேரம்
17/07/2023

சிந்தனை நேரம்

🍅 தக்காளி விலை ஏறிவிட்டது ,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பாகற்காய் விலை ஏறிவிட்டது
சுரைக்காய் விலை ஏறிவிட்டது
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது,
இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்😩..

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்!!

என் மகனை ஆசிரியர் ஆக்குவேன்
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என் மகனை தொழிலதிபராக்குவேன் என்று கூறும் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை
விவசாயி ஆக்குவேன் என்று கூறுவதில்லை😌..
ஏன்,விட்டிற்கு ஒரு தோட்டம் அமைத்துப் பாருங்களேன்?
மாடித் தோட்டம் கூட அமைக்கலாம்.
பட்டால் தான் தெரியும் பார்ப்பவனுக்கு!!

COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்.

(காய்கறிகள் மட்டும் ஏறவே கூடாது
மற்றொன்று,இந்த விலையேற்றத்தால் விவசாயிக்கொன்றும் லாபமில்லை).

எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள்..🤔

6 மாதம்
1 வருடம் ,
தண்ணீர் இல்லாமல்
எத்தனையோ செலவு செய்து, வெயிலில் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல்
ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா?

விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா? இல்லை JAVA, C++, PHP PROGRAM ல் உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???..

சிந்தியுங்கள் மக்களே!

🌾🌾விவசாயியையும், விவசாயத்தையும் வாழவிடுங்கள்.. 👍

இல்லையேல்
, கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் விஷமேறி.,
கடைசி மீனும் பிடிபடும்
போதுதான் உரைக்கும்,

பணத்தை சாப்பிட முடியாதென்று..!

அப்போது உரைத்து ஒரு பயனும் இல்லை...☹️...

விழித்திடுங்கள்🌱🌴🌳🌾

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share