Ceylon Radar

Ceylon Radar ceylonradar

ஆரம்பிக்கலாமா
07/09/2022

ஆரம்பிக்கலாமா

16 வயதான ஒரு சகோதரனின் எதிர்காலம் இப்போது இறைவனின் உதவியிலும் பணத்திலும் தங்கி இருக்கிறது,காத்தான்குடி 6 ஜன்னத் மாவத்தைய...
27/08/2022

16 வயதான ஒரு சகோதரனின் எதிர்காலம் இப்போது இறைவனின் உதவியிலும் பணத்திலும் தங்கி இருக்கிறது,

காத்தான்குடி 6 ஜன்னத் மாவத்தையைச் சேர்ந்த முகம்மது பசாரத் எனும் இந்த வருடம் O/L எழுத இருக்கும் மாணவர் காலில் இருந்த ஒரு கட்டி புற்று நோய் என அறியப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இறைவனின் நாட்டம் நோய் அறிகுறிகள் கண்டு பிடிக்கப்பட்டு நோய் ஊர்ஜீதம் செய்யப்பட்டு என எல்லாம் இரண்டு மாதங்களுக்குள் நடந்து முடிந்திருக்கிறது,

காலை முழுமையாக அகற்றாமல் காலில் உருவாகி இருக்கும் அக் கட்டியை மட்டும் அகற்றுவதற்கு வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலமாக முயற்சி செய்வதாக கூறி இருக்கின்றனர்,

சத்திர சிகிச்சை செய்யும் வரை அவருக்கு சில மருந்துகளைச் செலுத்த வேண்டும். இருந்தும் நாட்டில் நிலவி இருக்கும் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக அம் மருந்துகளை வெளியில் இருந்தே வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது,

எல்லாவற்றுக்கும் மொத்தச் செலவாக 20 இலட்சங்கள் வரையான பாரியதொரு தொகை தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது,

இத் தொகையை எடுத்துக் கொள்ளுமளவு குடும்ப சூழல் இல்லாத நிலையில் அச் சகோதரனின் குடும்பத்தினர் அதற்கான உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றனர்,

உதவி செய்வதற்கு முடியுமானவர்கள் தங்கள் உதவிகளை கீழே உள்ள வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு நேரடியாக வழங்கலாம் அல்லது மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் இத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

தொலைபேசி இலக்கம் - 077 020 4861

வங்கிக் கணக்கு விபரம் -
Name - A.S.Nafeeya
Account Number - 6147315
Bank of Ceylon - Kattankudy.

இறைவன் பாரிய நோய்களில் இருந்து நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்..!!!

தமிழ்
26/08/2022

தமிழ்

07/04/2022

நாட்டில் நேற்று நிதியமைச்சர் இல்லை...
ஆளுநர் இல்லை…
நிதியமைச்சு செயலாளர் இல்லை..

ஆனால் ,இலங்கை மத்திய வங்கி நேற்று 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையில் 432.76 பில்லியன் ரூபா பணத்தை இலங்கை மத்திய வங்கி அச்சடித்துள்ளது.

06/04/2022
27/11/2021

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .

 ி_கோரல். மட்டக்களப்பு கன்னன்குடாவைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஆசிரியை ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப...
04/10/2021

ி_கோரல்.

மட்டக்களப்பு கன்னன்குடாவைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஆசிரியை ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி சத்திரசிகிச்சை மூலம் சிறுநீரகம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தனியார் வைத்தியசாலையில் ஏற்பாடாகியுள்ளதாக நண்பர் ஒருவரின் மூலம் அறியக்கிடைத்தது.

பலவழிகளில் முயன்றும் சத்திரசிகிச்சைக்கான பணம் முழுமையாக கிடைக்காத காரணத்தால் முகநூல் உறவுகளின் உதவியை நாடியுள்ளனர்.

தங்களால் முடிந்த உதவியை மேற்கொள்ள முடியுமானோர் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தங்களது உதவியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருமதி. பத்மசுதன் கயல்விழி
கன்னன்குடா.
+94767161153
+94776037921

#பகிரவும்.

பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும் பல சுற்றறிக்கைகள் திருத்தங்கள் உள்ள...
24/09/2021

பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும் பல சுற்றறிக்கைகள் திருத்தங்கள் உள்ளதால் தெளிவுக்காக சில தகவல்கள் :-
ஏதும் மாற்றங்கள் இருந்தால் நமது மாணவ செல்வங்களினை சரியான வழிப்படுத்தலின் கீழ் அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய உங்களது கருத்தினை எதிர்பார்த்தே இக்கட்டுரையினை வரைகின்றேன்
@ O/L pass என்பது 6 S ஆகும் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6 S பெற்றால் கணிதம் W எனில் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அம் மாணவன் O/L pass இம் மாணவர்கள் பாடசாலையில் Vocational stream இல் O/L எல்லாப்பாடங்களிலும் W என்றாலும் கற்க முடியும் மாறாக 6 S எடுத்தாலும் ஏனைய stream இல் கற்க முடியாது
@ பாடசாலைகளில் இணைந்து A/L
,.....................................................................
கற்பதற்கான நிபந்தனைகள் என்ன ......................................................................
1. எந்த stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3 C உம் 3 S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்
2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட 3 C உம் 3 S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்
3. Maths கற்பதாயின் 3 C 3 S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்
4. Commerce கற்பதாயின் 3 C 3 S உடன் அச் C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணித அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்
5. Arts கற்பதாயின் 3 C 3 S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் pass பண்ணி 2 C 4 S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும் எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை டாப்பில் பெயரினை எழுதி A/ L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்
3 C 3 S உடன் தமிழ் பாடம் W ஆயின் அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழ் பாடத்தில் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது அல்லது 3 C 3 S உடன் தமிழ் பாடத்தில் S எடுத்து கணிதப்பாடத்தில் W எடுத்தால் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது தமிழ் அல்லது கணிதம் W எடுத்த மாணவர்களின் பெயரினை Pending டாப்பில்தான் எழுதவேண்டும் மற்றய வழமையான டாப்பில் எழுத முடியாது இம் மாணவர்கள் அடுத்து வரும் O/ L பரீட்சையில் pass பண்ணி results இனை பாடசாலையில் காண்பித்த பிற்பாடே pending டாப்பில் உள்ள பெயரினை நீக்கிவிட்டு மற்றய டாப்பில் எழுத வேண்டும் இவ்வாறு பூர்த்தி செய்த மாணவர்கள் A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் பல்கலைக் கழகமும் தாராளமாகச் செல்ல முடியும் ஆனால் O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிற்பாடே வெளியாவதால் கணித பாட 2 வருட நிபந்தனையின் படி குறிப்பிட்ட மாணவர்களினை 2 வருடமும் பாடசாலையில் வைத்திருந்து பாடசாலையின் ஊடாக விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த பிற்பாடு குறித்த மாணவன் அடுத்த வருடம் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்காது அல்லது W சித்தி பெற்றால் இம் மாணவனுக்கு A/L பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க முடியாது அவ்வாறு அனுமதி அட்டையினை வழங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இம் மாணவன் கணித பாடத்தில் s எடுத்தால் பிரச்சினை எதுவும் இல்லை W எடுத்தால் பிரச்சினை ஆரம்பமாகிறது A/L விண்ணப்பம் செய்கின்ற போது கணித பாடம் W எடுத்த மாணவர்கள் கேட்குகின்ற கேள்வி ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கினதால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய முடியாது என மறுத்து அதனை உரிமை மீறலாகப் பார்க்கின்றனர் இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வுகாணலாம்
1. O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக வெளியாக வேண்டும் அல்லது
2. பாடசாலையில் கணிதபாடத்தில் W சித்தியில் இணைந்தோர் அடுத்து வரும் ஆண்டில் ( ஒரு வருடத்திற்குள்) S சித்தி பெற வேண்டும் அவ்வாறு பெறாவிட்டால் ஒரு வருடத்தால் அம்மாணவர்களினை பாடசாலையில் இருந்து நீக்கிவிட வேண்டும் இதுதான் தற்போது அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறையாக இருக்குமென நினைக்கின்றேன்.
அம்மாணவர்களினை நீக்கிவிடுகின்ற போது அவர்களிடம் கூறவேண்டும் ஒரு வருடம் தவறிவிட்டீர்கள் அடுத்து வரும் வருடம் O/L பரீட்சையில் S எடுத்தால் A/L பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாகத் தோற்றி பல்கலைக் கழகம் செல்ல முடியும் என்று கூறுங்கள் 2 வருடமும் தவறினால்தான் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.
என மாணவர்களினை சரியான முறையில் தகுதியானவர்களினைக் கொண்டு வழிப்படுதல் ஆலோசனை சேவையினை வழங்குங்கள் குறிப்பாக தமிழ் பாடத்தில் W பெற்றவர்கள் ஒரு வருடத்தால் மீண்டும் W பெற்றால் அம்மாணவர்கள் தாமாகவே பாடசாலையினை விட்டு விலகிக்கொள்வர் இம் மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினாலும் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.
# தொழில் நுட்ப்ப் பிரிவில்( Technical stream) பொறியியல் தொழில் நுட்பம்(E-Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 S உடன் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் S இருந்தால் போதுமானது கணித பாடத்தில் அல்லது விஞ்ஞான பாடத்தில் W இருந்தால் இத்துறையில் கற்க முடியாது உயிரியல் தொழில் நுட்பம் ( B- Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 உடன் கணித பாடத்தில் W என்றாலும் பிரச்சினை இல்லை ஆனால் விஞ்ஞான பாடத்தில் S சித்தி அவசியமாகும் கணித பாடத்தில் W ஆயின் நிபந்தனையின் பெயரில் இணைக்கப் பட்டு உரிய காலத்திற்குள் S பெறவேண்டும்
#இரு வருடங்களின் O/L பெறுபேற்றினைக்கொண்டு கலைத்துறையில் பாடசாலையில் மாணவர்களினை இணைப்பதாயின் முதல் வருடத்தில் 3 C 2 S பெற்று 5 பாடம் என இருந்தால் அடுத்து வரும் வருடம் O/L பெறுபேற்றினையும் இணைத்து இம் மாணவர்களினை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் குறித்த வருடம் 3 C 2 S இல்லாத மாணவர்களினை தவறான முறையில் இணைத்து விட்டு அடுத்து வருட O/L பெறுபேற்றோடு கற்க அனுமதி வழங்க முடியாது
Note:- ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் மாணவர்களினை பாடசாலையில் இணைக்க முடியாது அதாவது கணிதமும் தமிழும்W அல்லது கணிதம் அல்லது தமிழ் W இருந்தால் 6 பாட சித்தியுடன் 2 C தான் எனில் 3 வது C இற்காக SBA பார்க்க முடியாது.
# கலைப் பிரிவுக்கும் B- Tech இற்கும் நிபந்தனை அடிப்படையில் பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் அது தவிர Bio Maths Commerce E- Tech போன்ற பிரிவுகளில் முடியாது
# என் அன்புக்குரிய ஆசிரியர்களே பிரத்தியேக வகுப்பிற்கு(tution) அதிகமான மாணவர்களினை தன்வசம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் தவறான வழியில் மாணவர்களினை தயவு செய்து வழிப்படுத்த வேண்டாம் .

22/09/2021
22/09/2021
_தமிழ்
22/09/2021

_தமிழ்

 #பகிருங்கள் பலர் பயன்பெறட்டும்மேலதிக தகவல்களுக்கு பின்வரும் குழுவில் இணைந்திருங்கள்.https://t.me/joinchat/ML2L9Vt5dn5kM...
21/09/2021

#பகிருங்கள் பலர் பயன்பெறட்டும்

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் குழுவில் இணைந்திருங்கள்.
https://t.me/joinchat/ML2L9Vt5dn5kM2Y1

கனவு மெய்ப்பட - பொறியியல் பீடம் நோக்கி

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Radar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Radar:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share