Eastern Voice

Eastern Voice "தெரிவிப்பது நாங்கள்-
தீர்மானிப்பது ?

11/10/2024

தேர்தல் தொடர்பில் உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினால்
0757457454

இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்காக நேசித்த இ.தொ.கா விலிருந்து விடைபெறுகிறேன்!-மக்களுக்காக எடுத்த முடிவு என...
10/10/2024

இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்திற்காக நேசித்த இ.தொ.கா விலிருந்து விடைபெறுகிறேன்!
-மக்களுக்காக எடுத்த முடிவு என்கிறார் ரூபன் பெருமாள்-

பெரும்பாண்மை மக்களுக்கு மத்தியில் வாழும் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில், தமிழர்கள் ஓரணியில் ஒன்று திரண்டால் வாக்களிக்க தயாராக இருக்கும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தான் நேசித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொறுப்புகளுக்கு மிகவும் மனவுரறுக்கத்துடன் விடை பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப செயலாளரும், இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமாகிய ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு வரும் சோகமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்திருக்கிறது. எனினும், இம்முறை அந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் இங்கு வாழும் அரசியல் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் அனைவரையும் ஒன்றிணைத்து ஓரணியில் சென்றால் மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியுமான சூழ்நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில் பெரும்பாண்மை கட்சியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்வ ததானது, எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது எடுத்த முடிவாக அமைந்துள்ளமையால், மாவட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள தான் நேசித்த கட்சியிலிருந்து விடைப் பெற்று, தமிழ் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட முடிவு செய்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் இம்மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், கட்சியின் தவிசாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்கள் மற்றும் செந்தில் முத்துவிநாயகம் உள்ளிட்ட உடன்பிறவா சகோதரர்களாக அன்பு காட்டி ஆதரவு வழங்கிய கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் கண்ணீருடன் விடை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவை எடுப்பதற்கு காரணமாக அமைந்த "இரத்தினபுரி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம்" என்பதன் முக்கியத்துவத்தை கட்சியின் இம்மாவட்ட அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கி பழகிய அனைவரும் புரிந்துக் கொண்டு ஆதரவளிப்பார்கள் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் போதும் கவலை அடைந்த இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் இம்முறை, எமக்கு வழங்கும் ஆதரவிற்கு தனது உயிரை பணயம் வைத்தாவது, மாவட்ட மக்களுக்கான குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய முடியுமாக அமையும் எனவும் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

07/10/2024

சமூக சேவைகளில் மிக முக்கியமான சேவை அரசியல்-கிண்ணியாவைச் சேர்ந்த அஸ்ஷேஹ் அப்துல் அஸீஸ்

பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்புபுதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றத...
04/10/2024

பாதுகாப்பு படை பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சந்திப்பு

புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருமலை-வடக்கு  கல்வி வலயத்தில் ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயம் முதலிடத்தில்! திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் ரொட்ட...
29/09/2024

திருமலை-வடக்கு கல்வி வலயத்தில் ரொட்டவெவ முஸ்லிம் மஹா வித்தியாலயம் முதலிடத்தில்!

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயம் மாணவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் ஐந்து மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த போதிலும் ஐந்து மாணவர்களும் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் டி.ஜீ.பீ. நிரஞ்சன் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில்
1.சவாஹீர் முகமட் சதாம்
2. என்சிலூன் முகமட் மாஹீர்
3. ஜெய்னுதீன் முகமட் சனாட்
4. முஹம்மத் யசீர் முகமட்அத்தீப்
5. நிசார் முஹம்மட் முஹாத் ஆகியோர்கள் க.பொ.த.உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தற்போது திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு இடையில் கல்வி நடவடிக்கையில் போட்டி நிலவி வருவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கடந்த காலங்களை விடவும் தற்போதைய நிலையில் பெற்றோர்களின் ஒத்துழைப்பும், பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும் பாடசாலைக்கு அதிகரித்து காணப்படுவதினால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும், கல்விசார் செயற்பாடுகளும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் எல்லை கிராமமான ரொட்டவெவ கிராமம் கல்வி நடவடிக்கையில் ஒளிர வேண்டுமானால் பெற்றோர்களின் பங்களிப்பு தேவைப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் டி.ஜீ.பீ. நிரஞ்சன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது-பொதுமக்களுடன் கலந்துரையாடல்!எதிர் வரப்போகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எவ்வ...
28/09/2024

நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது-பொதுமக்களுடன் கலந்துரையாடல்!

எதிர் வரப்போகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து ஆதரவாளர்கள் சிலருடன் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அரசியல் பிரமுகர்களும் இளைஞர் அணியினரும் பங்குபற்றியிருந்தனர். எதிர்வருகின்ற பொதுத் தேர்தலுக்குத் தயாராவதற்கான யுக்தித் திட்டமிடல்கள் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தொடர்ச்சியான கலந்துரையாடல்கள்
நாளை, நாளைமறுதினமும் பிரதேசவாரியாக நடைபெறும்.

26/09/2024
கிழக்கு ஆளுநர் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதங்களை பெற்றதையடுத்து பதவியேற்பு-கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர தனது ...
26/09/2024

கிழக்கு ஆளுநர் சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதங்களை பெற்றதையடுத்து பதவியேற்பு-

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜயந்தலால் ரத்னசேகர இன்று (26) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி தொடக்கம் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மேலும், 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

24/09/2024

ஜனாதிபதி அநுரவின் ஆட்டம் ஆரம்பம் அமைச்சுக்களின் வாகனங்கள் காலிமுகத்திடலில் ஒப்படையுங்கள்.

அமைச்சுக்களின் பயன்படுத்திய அமைச்சுக்குக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தும் காலிமுகத்திடலில் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சுகளுக்கு சொந்தமான அனைத்து வாகனங்களும் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்....

அமைச்சுகளுக்கு சொந்தமான பல வாகனங்கள் கல்லுமோதர களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.... அமைச்சுக்கு சொந்தமான சில வாகனங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறக்குவாணை இளைஞர் மீது பெரும்பாண்மையினர் தாக்குதல் நடத்தியமையானது கண்டிக்கத்தக்க செயலாகும்!-இ.தொ.கா ரூபன் பெருமாள் கண்டன...
23/09/2024

இறக்குவாணை இளைஞர் மீது பெரும்பாண்மையினர் தாக்குதல் நடத்தியமையானது கண்டிக்கத்தக்க செயலாகும்!
-இ.தொ.கா ரூபன் பெருமாள் கண்டனம்-

இறக்குவாணை டெல்வின் ஏ தோட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை (விஜயகுமார்) வீடு புகுந்து தாக்கி, அவரது வீட்டினையும் சேதம் செய்தமையானது கண்டிக்கத்தக்க செயல் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக, குறித்த தோட்ட மக்கள் தனக்கு தெரிவித்ததையடுத்து குறித்த பெரும்பாண்மை கும்பலை கைது செய்யுமாறு இறக்குவாணை பொலிஸ் பொறுப்பதிகாரி, இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பவித்ர தயாரத்ன ஆகியோருக்கு அறிவித்து உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தாக்குதலுக்குள்ளான தமிழ் இளைஞர் இறக்குவாணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விடயத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு காவல் துறையினருக்கு அழுத்தங்களை கொடுப்பதாகவும் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்தார்.

23/09/2024

இலங்கையின் 9 வது நிறைவேற்று சனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தவேளையில் தேசத்திற்கு ஆற்றிய முழுமையான உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருக்கமான ஊடக அறிக்கை!“அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே, நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும...
22/09/2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருக்கமான ஊடக அறிக்கை!

“அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே,
நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை
உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு,

வணக்கம்

அன்புள்ள பிரஜைகளே,
செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.

இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது.

இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது.

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன்.

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2024-09-22

22/09/2024

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை அது நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பயணிப்பதற்கு பொலிஸ் நிலையங்களினால் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசர சேவைகளுக்காக பயணிக்கும் போது உங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

ஊடகவியலாளர்  மீது தாக்குதல்-மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு(பாறுக் ஷிஹான்)ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகக் கடமைகளில் ...
21/09/2024

ஊடகவியலாளர் மீது தாக்குதல்-மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

(பாறுக் ஷிஹான்)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகக் கடமைகளில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதியில் உள்ள மருதமுனை பொது நூலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது

மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் வாஹிட் முகம்மது ஜெஸீல் என்பவரே தாக்குதலில் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத் தாக்குதல் தொடர்பில் கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் பெரிய நீலாவணை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்தடன்ஊடகவியலாளரின் கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் உடைக்கப்பட்டுள்ளன.சம்பவம் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
18/09/2024

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்பது போலி வாக்குறுதிகளாகும் - இம்ரான் எம்.பி தெரிவிப்பு(அபு அலா) 400 ப...
16/09/2024

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்பது போலி வாக்குறுதிகளாகும் - இம்ரான் எம்.பி தெரிவிப்பு

(அபு அலா)

400 பேரின் ஊழல் தொடர்பான பைல்கள் தன்னிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடைகளில் கூறி வருகிறார். அப்படியாயின், அந்த ஊழல் பைல்களை இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஒப்படைத்து அது தொடர்பான முறைப்பாடுகளை இன்னும் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கேள்வியைத் தொடுத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது வலுவான ஊழல் ஒலிப்பு சட்டங்கள் உள்ளன. அதன் மூலம் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பலப் படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பலர் அண்மையில் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தண்டனை விதிக்கப்பட்டனர்.

இவ்வாறு இருக்கின்றபோது, 400 பேரின் தகவல் பல தன்னிடம் இருப்பதாகக் கூறும் அனுரகுமார, அது குறித்து இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், அதிகாரம் கிடைத்தபின் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வது ஒரு சிறுபிள்ளைத்தனமான வேடிக்கையான கதையாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்று, பல தேர்தல் மேடைகளில் போலியான வாக்குறுதிகளை வழங்கும் அனுரகுமார, அதிகாரம் கிடைத்தால்கூட ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்பதையே அவரின் போலியான தேர்தல் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றது.

இந்நாட்டில் ஊழல் ஒழிய வேண்டுமென்று, அவர் விரும்புவாராயின் தன்னிடமுள்ள ஆதரங்களில் சிலவற்றையாவது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவர் நடவடிக்கை எடுக்கத் தயாராகிறார் என்று நம்ப முடியும். இதனை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே தேர்தல் மேடைகளில் போலியான வாக்குறுதிகளை வழங்குவதில் எந்தப் பயனுமில்லை என்பதை நான் அவருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Horowpothana ගේ නව දේශපාලන ප්‍රවේශය නුදුරු අනාගතේ! ஹொவபொத்தனையின் புதிய  அரசியல் பிரவேசம் எதிர் வரும் காலங்களில்! Horowp...
16/09/2024

Horowpothana ගේ නව දේශපාලන ප්‍රවේශය නුදුරු අනාගතේ!

ஹொவபொத்தனையின் புதிய அரசியல் பிரவேசம் எதிர் வரும் காலங்களில்!

Horowpothana s' new political entry is in the near future

16/09/2024

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாள் கைது செய்யப்படுவார்கள் -சஜித் திட்ட வட்டம்.

பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட , தொகுதி, பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி , மகளின் அணியுடனான விசேட கலந்துரையாடல் ( 15 ) இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களும் கலந்து கொண்டார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இக் கூட்டம் இடம்பெற்றது.

களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபன் அவர்கள் வரவேற்று , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர் , பின் களுவாஞ்சிகுடியில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு , பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும் , வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இவ்வாறான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுதிட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உடைய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், மட்டக்களப்பு மகளீர் அணித் தலைவி ரஞ்சினி கனகராசா, அம்பாறை இளைஞரணி பொதுச் செயலாளர் நிலாம்சன் உட்பட இலங்கை தமிழரசு கட்சியினுடைய மாவட்ட , தொகுதி, மத்திய , பிரதேச , கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுஜகட்சியின் உடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கை தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டனர் .

16/09/2024

மாவட்டத்தில் இடம்பெறும் சம்பவங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த whatsapp குழுமபத்துடன் இணைந்திருங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இதனை ஷேயார் செய்யவும்.

நபிகள் நாயகம் போதித்த அரசியல் அமைப்பை தேர்தலில் பயன்படுத்துவோம் - மீலாத் வாழ்த்துச்செய்தியில் கலீலுர்ரஹ்மான்இலங்கையில் த...
15/09/2024

நபிகள் நாயகம் போதித்த அரசியல் அமைப்பை தேர்தலில் பயன்படுத்துவோம் - மீலாத் வாழ்த்துச்செய்தியில் கலீலுர்ரஹ்மான்

இலங்கையில் தேர்தல் ஒன்று நடைபெற்று வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கும் போது, ​​இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்களும் இஸ்லாமிய மத போதகரான கண்மணி நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் நபிகளார் கற்றுத் தந்த அரசியல் ஆட்சிமுறையை சிந்தித்து நமது வாக்கு செலுத்தலை தீர்மானிக்க இந்த பெருநாளில் முடிவெடுப்போம் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொருளாதார நெருக்கடியின் போது இறைவனின் உதவியால் நாம் மீண்டோம். அதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை செய்தனர். அதற்காக நாம் முயற்சிகளை செய்தவர்களுக்கு, இறைவனுக்கும் நன்றி செலுத்துவோம், மோசடி, ஊழல், ஏமாற்று ஆகியவற்றைத் தவிர்த்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், பராமரிக்கவும், இஸ்லாமிய போதனைகளையும், நபிகளாரின் அறிவுரைகளைப் பின்பற்றவும் நாம் திடசங்கடம் பூண்டு வரவிருக்கும் தேர்தலில் நமது செயல்பாடுகளை செய்தால், அந்த உன்னத நபியின் ஆசீர்வாதத்தை சந்தேகத்திற்கு இடமின்றி பெறுவோம்.

எனவே, முஸ்லிம் சமூகத்தில் உள்ள மத, அரசியல், சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்தை நபிகள் நாயகத்தின் பாதையில் நடக்கச்செய்ய வழிகாட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் முஸ்லிம் சமூகம் தமது குறுகிய அரசியல் அதிகாரத்தையும் இலக்குகளையும் அடைவதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?--------------------------------------------------------------------...
15/09/2024

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
--------------------------------------------------------------------------
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 21.09.2024 அன்று இடம்பெறவுள்ளது. இதற்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை 14.09.2024 அன்றுடன் முடிவடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள்
1.முதலில் உங்கள் கிராம சேவகருடன் தொடர்பு கொண்டு வாக்காளர் இடாப்பில் உங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனை பின்வரும் இணைப்பை கிளிக் செய்து உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் உங்கள் பகுதியின் விபரங்களை உள்ளீடு செய்து பரிசோதித்துக் கொள்ள முடியும்.
https://eservices.elections.gov.lk/pages/myVoterRegistrationElection.aspx

2.உங்களது கிராம சேவகர் பிரிவில் உங்களது பதிவு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டையை காண்பித்து வாக்காளர் அட்டையை கோர முடியும்.

3.தபால் நிலையத்திலும் வாக்காளர் அட்டை கிடைக்காத பட்சத்தில் தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் உங்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை எனின் வாக்காளர் இடாப்பில் உங்களுடைய பெயர் இருக்குமாயின் தேசிய அடையாள அட்டையுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்களுக்கான வாக்குகளை அளிக்க முடியும். அங்கே உங்கள் பகுதிக்கான கிராம உத்தியோகத்தரும் கடமையில் இருப்பார்.

14/09/2024

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

திருகோணமலை மாவட்ட நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸாக் சத்தியப்பிரமாணம்!(அப்துல்சலாம் யாசீம்)திருகோணமலை மாவட்ட நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸ...
13/09/2024

திருகோணமலை மாவட்ட நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸாக் சத்தியப்பிரமாணம்!

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்ட நீதிபதியாக பயாஸ் ரஸ்ஸாக் இன்று (13) மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேம சங்கர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் பிரதான நீதவானாக கடமையாற்றிய பயாஸ் ரஸாக் மாவட்ட நீதிபதியாகவும் , மேலதிக நீதவானாக கடமையாற்றிய ஜீவராணி கருப்பையா பிரதம நீதவானாகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Address

Trincomalee

Website

http://Trincomedia.lk/

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Trincomalee media companies

Show All