UCAN - உன்னால் முடியும்

UCAN - உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று
நம்பு, முயற்சிக்கும்
அனைத்திலும் வெற்றியே.

நம் தேசத்தின் பனை வளத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்யும் எம்முயற்சியில் உங்களையும் கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்...
29/06/2024

நம் தேசத்தின் பனை வளத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்யும் எம்முயற்சியில் உங்களையும் கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வவுனியா சமளங்குளத்தில் சந்திப்போம் இன்று!

யாழ்ப்பாணம் நவாலியைச் சொந்த இடமாகக்கொண்டு, தற்போது கொய்யாத்தோட்டம், புதுவீதியில் வசித்துவரும் திருமதி. ஜெலினா குமரன் எனு...
03/04/2023

யாழ்ப்பாணம் நவாலியைச் சொந்த இடமாகக்கொண்டு, தற்போது கொய்யாத்தோட்டம், புதுவீதியில் வசித்துவரும் திருமதி. ஜெலினா குமரன் எனும் குடும்பத்தலைவி தனது வீட்டு வேலைகளோட வீட்டில் இருந்தவாறே தையல் திறமை கொண்டு இன்றைய வர்த்தக உலகில் ஒரு முதலாளியாக உருவெடுத்து வெற்றிப் பெண்ணாக வலம் வந்துகொண்டிருக்கின்றார்.

குடும்பத் தலைவிகளுக்கு வீட்டில் ஆயிரம் வேலைகள் என்பதால் நேரம் என்பது பெரும் பிரச்சனை. ஆனால், அதனையும் தாண்டி கிடைக்கும் சொற்ப நேரத்தை தனது தையல் திறமைக்கு தீனிபோட்டார் திருமதி.ஜெலினா அவர்கள். ஒரு நாள் இரு நாள் அல்ல ஒரு வருடமாகவே பாடசாலைப் புத்தகப் பைகள், பெண்களுக்கான கைப் பைகளை துணியில் தைத்து பழகினார். தனது தேவைக்காக மட்டும் தைக்க பழகி ஒரு வருடத்தின் பின் அதில் தனித் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னரே அதை ஒரு தொழிலாக ஆரம்பித்து இன்று நன்மதிப்பான சிறந்த கைத்தொழில் முயற்சியாளராக உருவெடுத்து ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.
குடும்பத்தலைவிகளே, பெண்களே, இந்தக் காணொளி உங்களுக்காகவே எம்மால் தயாரிக்கப்பட்டது. வெளியில் சென்றுதான் பணம் சம்பாதித்து உங்கள் கனவுகளை நனவாக்கலாம் என்றில்லை. வீட்டில் இருந்துகொண்டே உங்களை நீங்கள் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.

இன்றைய அவசர உலகில் தேவைகள் எத்தனையோ எத்தனையோ. பெண்களிடம் இயல்பாக இருக்கும் திறமைகள் பல. கைவினை மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தலும் அலங்கரித்தலும், முகம் மற்றும் சிகை அலங்காரம், உணவு மற்றும் பானம் தயாரித்தல், கலைகள் மற்றும் பாடங்கள் கற்பித்தல், ஐசிங் கேக் தயாரித்தல், கால்நடை வளர்ப்பும் உற்பத்தியும், வீட்டுத் தோட்டம், சர்வதேச வலையமைப்பு ஊடான வர்த்தகம் என இன்னும்பல வேலைகளை வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம். உங்களை மதிப்பீடு செய்யுங்கள்! நல்லதோர் முயற்சியை இன்றே ஆரம்பியுங்கள்! வெற்றிகாணுங்கள்.

தொழில் முயற்சிகளுக்கான வழிகளை அறியத்தந்து, உங்கள் மனங்களில் நம்பிக்கையை விதைத்து, உழைப்பில் உங்களை முழுமையாக உருவாக்கிக்கொண்டிருக்கும், இன்னும் இன்னும் உருவாக்கவும் SAHO Creations குழுமம் என்றும் உங்களுடன் துணைநிற்கும்.
https://youtu.be/d7nOYyD2Vqg

“ #அரசியல் ஒரு சாக்கடை என்ற கண்ணோட்டத்தில் இருக்காது இந்த சாக்கடையை சுத்தம்செய்ய  பெண்களாகிய நாம் மக்கள் நலனோடு துணிந்து...
01/04/2023

“ #அரசியல் ஒரு சாக்கடை என்ற கண்ணோட்டத்தில் இருக்காது இந்த சாக்கடையை சுத்தம்செய்ய பெண்களாகிய நாம் மக்கள் நலனோடு துணிந்து களமிறங்கவேண்டும்.”
🤜🤛☝🏼👇🏻
திருமதி கௌசலா சிவா
Kowsala Siva /


வணக்கம் உறவுகளே,எமது "UCAN_உன்னால் முடியும்" தளத்திற்கு தமது அனுபவங்களைப் பகிரக்கூடியவர்கள், அல்லது பொருத்தமான நபர்களினை...
21/03/2023

வணக்கம் உறவுகளே,

எமது "UCAN_உன்னால் முடியும்" தளத்திற்கு தமது அனுபவங்களைப் பகிரக்கூடியவர்கள், அல்லது பொருத்தமான நபர்களினை இங்கு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பம் மூலமாகத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதன் மூலமாக எம்மிடையே உள்ள சாதனையாளர்களினை வெளிக்கொணர்வோம்.

அன்புடன் விருஷன்

18/03/2023

உயர்தரப் பரீட்சையில் முழுப்பாடங்களிலும் தோல்வியடைந்து, விடா முயற்சியின் மூலம் துவண்டு விடாது மென்பொருள் வடிவமைப்பு மற்றும் Website Development ல் 20 வருடங்களுக்கு மேலாக சாதனை புரியும் Speed It Net நிறுவுனரின் கதை இது.

Degree யோ அல்லது Certificate க்கோ உங்களை தகுதி உடையவனாக வைத்திருக்கிறீர்களா

முடியாது என்று இல்லை எதுவும் முடியும் துறைசார்ந்த அறிவு வேண்டும்.

தொழிலை தொடங்குபவர் இலக்கை நோக்கிய பாதையை மிகத் தெளிவாக முடிவெடுத்து வைத்திருக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=3rxAzUnk-ag

https://youtu.be/3rxAzUnk-ag
18/03/2023

https://youtu.be/3rxAzUnk-ag

Speed IT Net ன் நிவுனர் தங்கராஜா தவரூபனின் வெற்றிப்பயணம்.எமது நலன் விரும்பிகள் குழுவில் இணைய லிங்கை அழுத்துங்கள்.https://cha...

11/03/2023

இந்த வருடம் தை மாதம் அளவில் புதிய வெளிச்சம் அமைப்பினூடாக "இயற்கை விவசாய வாரம்" எனும் நிகழ்வு இலங்கை முழுவதும் நடைபெற்றது

இலங்கை முழுவதும் உள்ள தமிழ் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் பாசறைகள், விழிப்புணர்வுகளினை ஏற்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து இயற்கை விஞ்ஞானிகளினை வரவளைத்து பல நிகழ்வுகளினை நாடாத்தினார் ஆனந்தராச் நவஜீவன்.

மேலும் அந்த நாட்களில் நீண்ட பயணங்களிலும், சந்திப்புக்களிலும் நேரமே இல்லாமல் சமூக வேலைகளில் ஈடுபட்ட நவஜீவனிற்கு நாம் எமது UCAN ஸ்டுடியோவிற்கு வந்து ஒரு காணொளி பதிவினை தந்துதவுமாறு வேண்டுகோளை விடுத்திருந்தோம்.

தனது வேலைப்பளுவின் மத்தியிலும் நமக்காக எமது ஸ்டுடியோவிற்கு விஜயம் செய்து இரவு 9 மணி அளவில் இந்த காணொளி பதிவினை மேற்கொண்டு இரவு 12 மணியளவில் நிறைவு செய்து மறுநாள் தனது சமூகப் பணிகளில் மீண்டும் ஈடுபட்டார்.

எமது நாட்டில் உள்ள மக்கள் மீதான அதிருப்தியை தனது காணொளிப்பதின் மூலம் விளக்கப்படுத்தினார்.

புலம்பெயர் தேசத்திலிருந்து இங்கு வந்து எமது மக்களுக்காக பல்வேறு கருமங்களை ஆற்றும் #நவஜீவன் அவர்களது செயற்பாடுகள் மேலும் மேலும் விருத்தியடையவும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்

19/02/2023

#உன்னால்_முடியும் என்று நாம் கூறுவது சாதாரண விடயமல்ல.

விளையாட்டுத்துறையில் சாதித்தது மட்டுமல்லாமல், பொறியியல் கல்வியிலும் சாதிக்கும் சாதனையாளன் #அபினயன்.

https://youtu.be/_gmdXM8TNFs

17/02/2023

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் ஊக்கியில் கல்விகற்று மென்பொருள் பொறியியலாளராகி, தனியாக கம்பனி ஒன்றினை நிறுவி வியாபாரத்தில் சாதிக்கத்துடிக்கும் யுவதி அஞ்சலிகாவின் அனுபவப்பகிர்வு.

இந்தமாதம் 25 ஆம் திகதி ( February 25) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள கல்விக் கண்காட்சிக்கு Jaffna ExpoEduவிற்கு உங்களாதரவினை வழங்குங்கள்.
காணொளி முழுவதனையும் பார்ப்பதற்கு லிங்கை அழுத்துங்கள்.
https://youtu.be/FhW49nasZv0

உலகின் மூத்த மொழி தமிழ் மொழியையும், இந்து மதத்தின் தொன்மையையும் பறை சாற்றும் ஆதாரங்களாக அன்று மூதாதையர்கள்; ஆக்கிய கல்வெ...
15/02/2023

உலகின் மூத்த மொழி தமிழ் மொழியையும், இந்து மதத்தின் தொன்மையையும் பறை சாற்றும் ஆதாரங்களாக அன்று மூதாதையர்கள்; ஆக்கிய கல்வெட்டுக்களும், கல், மரம், மண்ணாலான பாண்டங்களும், கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுமே. அருவம் உருவம் அருவுருவமுமான எம் இந்துக் கடவுள்களை மனதில் நிறுத்தி வணங்குவதற்கு ஏதுவாக கற்களில் சிற்பங்களை வடித்தனர்.

ஆம், மிகப் பழமையான காலம் முதல் எம் மூதாதையரிடம் இருந்து வந்த சிற்பக் கலை இன்றும் உயிர் வாழ்கின்றது என்றால் அது இவர் போன்றவர்களால்தான். எம் தமிழ் இனத்தினதும், தமிழ் மொழியினதும் ஆரம்பப் பழமைப் பெருமையையும், இந்து மதத்தின்; தோற்றத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டியதில் அன்றைய எம் மூத்த குடிகளிடம் இருந்துவந்த சிற்பக் கலை நாகரிகத்துக்கும் பெரும் பங்குண்டு.

கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பக் கலை என்பது இலகுவான ஒன்றல்ல. எதுவுமே அற்ற ஒரு கல்லிற்கு உயிர்கொடுக்கும் சிற்பம் அற்புதமான கலையாகும். எம்மைப் படைத்த இறைவனின் திருவுருவைக் கண்டு நாம் வழிபட கல்லில் அந்த இறைவனை உருவாக்குவது என்பது இறைவரம் மிக்கது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைக்கும் சிற்பங்களை வடிக்கும் இந்தச் சிற்பிக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

எம்மை அடையாளப்படுத்திய சிற்பக் கலை இன்று அருகிவருகின்றது. நீடிக்கும் தன்மையற்ற பொருட்களிலான சிற்பங்களுக்கு நாம் காட்டிவரும் ஆர்வமும் இதற்கு ஒரு காரணமாகும். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான சிற்பக் கலையைத் தாங்கிப் பிடிக்கும் இவர் போன்ற சிற்பிகளுக்கு நாம்தானே கைகொடுக்கவேண்டும். கல்லில் சிலை வடிக்கும் இச் சிற்பிக்கு நாம் கரம் கொடுப்போம். கலையை பாதுகாப்போம்.

உலகின் மூத்த மொழி தமிழ் மொழியையும், இந்து மதத்தின் தொன்மையையும் பறை சாற்றும் ஆதாரங்களாக அன்று மூதாதையர்கள்; ஆக...

O/L சித்தியடையத் தவறியவரால் பட்டதாரியாக முடியும். எவ்வாறு?
19/01/2023

O/L சித்தியடையத் தவறியவரால் பட்டதாரியாக முடியும். எவ்வாறு?

Click the link to join with us through whatsapp, https://chat.whatsapp.c...

வியாபாரநிலையங்கள் மற்றும் உள்ளூர் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருட்களை businesboard ஊடாக பதிவு செய்வதன்மூலம்  வியாபாரத்த...
15/01/2023

வியாபாரநிலையங்கள் மற்றும் உள்ளூர் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருட்களை businesboard ஊடாக பதிவு செய்வதன்மூலம் வியாபாரத்தை சர்வதேச ரீதியில் விரிவுபடுத்துவதற்கு
உதவிக்கரம் நீட்டும் அவுஸ்ரேலிய இளைஞன் சுஜன் செல்வனின் அனுபவ பகிர்வு

இதுபோல் உங்கள் அனுபவங்களையும் எங்களோடு பகிர்நதுகொள்ள வரவேற்பதோடு எங்கள் UCaN காணொளிகளை உங்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்து வெற்றியாளர்களின் அனுபவங்களுக்கு ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது புதிய Youtube channel இனை Subscribe செய்வதன் மூலம் உங்களாதரவினை வேண்டி நிற்கின்றோம்.

ிப்படைக் கணனி அறிவு இல்லாமையைப் போக்க அவுஸ்திரேலிய இளைஞனின் முயற்சி.Website: https://busine...

15/01/2023
14/01/2023

தொழில் முயற்சியில் சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சாதனைபயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள் , போராட்டங்களை தகர்த்தெறிந்து வெற்றியை எட்டிப்பறித்த வெற்றியாளர்களின் வலிப்பயணத்தின் அனுபவ பகிர்வே “தடைகளைத் தாண்டி வெல்லத்துடிக்கும் நம்மவர் ” எனும் ன் நிகழ்வாகும்.
அதனைவிடப் புதிய ஒரு தளமாக (Youtube Channel) கல்வியிலோ, சிறப்புத் தேர்ச்சியிலோ, தாம் எண்ணும் சிந்தனைகளையோ, புதிய படைப்புக்களையோ, அறிவியல் சார் விடயங்களையோ, அல்லது
நம்மில் சாதிக்கும் முயற்சியில் இந்த சமூகத்தோடு எதிர்நீச்சல் போட்டு சலிப்படைந்து துவண்டு போய்க்கொண்டிருப்போரும், தோல்வியைக்கண்டு பயப்படாதீர்கள் அது நமக்கான ஓர் வழிகாட்டி என்று இடித்துரைத்து எதிர்கால வெற்றியாளர்களுக்கும் களமமைத்துக்கொடுக்க நாம் உருவாக்கும் புதிய தளமே ்னால் முடியும்.

நம்மில் ஒளிந்திருக்கும் திறமையானவர்களை நமக்கு இனம் காட்டுங்கள் அல்லது அறிமுகம் செய்யுங்கள் அவர்களை வெளிக்கொணர நாம் தயாராகவுள்ளோம்.
இதற்கான காணொளித்தயாரிப்பினை மேற்கொள்ளும் தளமாக யாழ் விரசிங்கம் மண்டபத்தின் 5வது மாடித்தளத்தினை எம் கலையகமாக உருவாக்கியுள்ளோம்.

எவரும் எம் முயற்சிக்கு உதவலாம், எம் கருமங்களை நேரடியாக நீங்களும் காணலாம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

எமது புதியதளம் தைப்பொங்கல் தினத்தன்று அனைவர் பார்வைக்கும் காண்பிக்கப்படும்.

Youtube - https://www.youtube.com/

நன்றி

https://www.youtube.com/watch?v=O8DRfz8qs64
13/01/2023

https://www.youtube.com/watch?v=O8DRfz8qs64

ொழில் முயற்சியில் சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சாதனைபயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள.....

நேற்றைய நேயர் - புதிய வெளிச்சம் நவஜுவன்.
10/01/2023

நேற்றைய நேயர் - புதிய வெளிச்சம் நவஜுவன்.

தொழில் முயற்சியில் சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சாதனைபயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள் , போராட்டங்களை தகர்த்தெறிந்த...
08/01/2023

தொழில் முயற்சியில் சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சாதனைபயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள் , போராட்டங்களை தகர்த்தெறிந்து வெற்றியை எட்டிப்பறித்த வெற்றியாளர்களின் வலிப்பயணத்தின் அனுபவ பகிர்வே “தடைகளைத் தாண்டி வெல்லத்துடிக்கும் நம்மவர் ” எனும் ன் நிகழ்வாகும்.

அதனைவிடப் புதிய ஒரு தளமாக (Youtube Channel) கல்வியிலோ, சிறப்புத் தேர்ச்சியிலோ, தாம் எண்ணும் சிந்தனைகளையோ, புதிய படைப்புக்களையோ, அறிவியல் சார் விடயங்களையோ, அல்லது
நம்மில் சாதிக்கும் முயற்சியில் இந்த சமூகத்தோடு எதிர்நீச்சல் போட்டு சலிப்படைந்து துவண்டு போய்க்கொண்டிருப்போரும், தோல்வியைக்கண்டு பயப்படாதீர்கள் அது நமக்கான ஓர் வழிகாட்டி என்று இடித்துரைத்து எதிர்கால வெற்றியாளர்களுக்கும் களமமைத்துக்கொடுக்க நாம் உருவாக்கும் புதிய தளமே ்னால் முடியும்.

நம்மில் ஒளிந்திருக்கும் திறமையானவர்களை நமக்கு இனம் காட்டுங்கள் அல்லது அறிமுகம் செய்யுங்கள் அவர்களை வெளிக்கொணர நாம் தயாராகவுள்ளோம்.

இதற்கான காணொளித்தயாரிப்பினை மேற்கொள்ளும் தளமாக யாழ் விரசிங்கம் மண்டபத்தின் 5வது மாடித்தளத்தினை எம் கலையகமாக உருவாக்கியுள்ளோம்.

எவரும் எம் முயற்சிக்கு உதவலாம், எம் கருமங்களை நேரடியாக நீங்களும் காணலாம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

எமது புதியதளம் தைப்பொங்கல் தினத்தன்று அனைவர் பார்வைக்கும் காண்பிக்கப்படும்.

Facebook - https://www.facebook.com/profile.php?id=100089096207896&mibextid=ZbWKwL

Youtube - https://www.youtube.com/

நன்றி

அன்புடன் விருஷன் சிவானந்தம்.
094772487201

உலகத்தின்  பார்வையை தன்பக்கம் திருப்பிய சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சாதனைபயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள் , போராட...
06/01/2023

உலகத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பிய சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சாதனைபயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள் , போராட்டங்களை தகர்த்தெறிந்து வெற்றி என்னும் கனியை எட்டிப்பறித்த வெற்றியாளர்களின் வலிப்பயணத்தின் அனுபவ பகிர்வே “உன்னால் முடியும் (U can) ” நிகழ்வாகும்.

நம்மில் சாதிக்கும் முயற்சியில் இந்த சமூகத்தோடு எதிர்நீச்சல் போட்டு சலிப்படைந்து துவண்டுபோய்க்கொண்டிருப்போருக்கு , தோல்வியைக்கண்டு பயப்படாதீர்கள் அது நமக்கான ஓர் வழிகாட்டி என்று இடித்துரைத்து எதிர்கால வெற்றியாளர்களாக இந்த உலகில் எழுந்து நிற்க ஓர் ஊன்றுகோலாக உங்களுக்காக ““உன்னால் முடியும்” உங்களோடு பயணிக்க இருக்கின்றது.

உங்கள் அனுபவங்கள் எங்கள் வழிகாட்டி …

்னால்

Address

Veerasingham Hall 5th Floor, Jaffna Town
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when UCAN - உன்னால் முடியும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Jaffna

Show All