Srilankan news field tamil

Srilankan news field tamil Tamil srilankan news

02/11/2022
www.auth.cashvib.com
20/10/2022

www.auth.cashvib.com

Cashvib is a direct to consumer research and marketing platform that pays you for your online time and attention.

18/10/2022

*🌍சர்வதேச செய்திகள்*

*💥பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை யுக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.*

*ஆளில்லா விமான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.*

17/10/2022

_*🇱🇰வாகனங்களின் விலை பாரிய அளவு குறைந்தது - புதிய விலைப் பட்டியில் உள்ளே*_

*இலங்கை சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது . குத்தகை நிறுவனங்கள் வட்டி அதிகரிப்பு , உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு , அதிக விலை போன்றவற்றால் பயன்படுத்திய வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது . -தற்போது சந்தையில் வானங்களில் புதிய விலை*

*💫Vitz ( 2018 ) -60 இலட்சம் / முந்தைய விலை 80 இலட்சம்*

*💫Premio ( 2017 ) - 137 இலட்சம் / முந்தைய விலை 150 இலட்சம்*

*💫Aqua G ( 2012 ) - 50 இலட்சம் / முந்தைய விலை 60 இலட்சம்*

*💫Vezal ( 2014 ) - 63 இலட்சம் / முந்தைய விலை 80 இலட்சம்*

*💫Fit ( 2012 ) 50 இலட்சம் / முந்தைய விலை 60 இலட்சம்*

*💫Graze ( 2014 ) - 70 இலட்சம் / முந்தைய விலை 85 இலட்சம்*

*💫X - trail ( 2014 ) - 85 இலட்சம் / முந்தைய விலை 100 இலட்சம்*

*💫WagonR ( 2014 ) - 39 இலட்சம் / முந்தைய விலை 45 இலட்சம்*

*💫Alto ( 2015 ) 27 இலட்சம் / முந்தைய விலை 34 இலட்சம்*

*💫Alto japan ( 2017 ) -39 இலட்சம் / முந்தைய விலை 45 இலட்சம்*

*💫Panda ( 2015 ) -21 இலட்சம் / முந்தைய விலை 25 இலட்சம்*

17/10/2022

*🇱🇰இலங்கையின் முதலாவது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின் உற்பத்தி நிலையமான "சோபா தானவி மின் உற்பத்தி நிலையம்", அதிநவீன விசையாழிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.*

*இலங்கையில் பல வருடங்களாக புதிய மின்சாரத் திட்டம் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை, இந்த 350 மெகாவோட் இயற்கை திரவ எரிவாயு நிலையம் நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு பாரிய தீர்வாகவும், நாட்டின் மின்சாரத்துறைக்கு கிடைத்த தனிச்சிறப்புமிக்க வெற்றி எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.*

17/10/2022

*📰 NEWS UPDATE*

*✍🏼இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும் எனவும் அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.*

17/10/2022

⭕ *LOCAL NEWS*

*🇱🇰நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு. பொலிசாரும்* *தொடர்ந்தும் கைது நடவடிக்கையில்.*

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பொலிசாரின் கைது வேட்டையும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. ஹெரோயின் போதை பொருள் பாவணையாளர்கள் கைது செய்யப்படுவதுடன், விற்பனையாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் ஊசியை ஏற்றிய வண்ணம் இருந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட விசேட குற்றத் தடுப்பு பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை வேட்டையாடியுள்ளனர்.

இதன் போது இரண்டு கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏழு போதைப்பொருள் ஊசிகள், தேசிக்காய் என்பன கைப்பெற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு வயது 25 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூன்று சந்தேக நபர்களுக்கு திறந்த பிடியாணை உள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

17/10/2022

🚨அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, கடுமையாக தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய பிரதி அதிபர் இரண்டு மாணவர்களுக்கும் , அரசுக்கும் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல, அக்குரம்பொட வீர கெப்பெட்டிபொல மத்ய மகா வித்தியாலய மாணவர்களான இரண்டு மனுதாரர்கள் பாடசாலை சொத்துக்களை சேதம் விளைவித்ததாக 2012 ஆம் ஆண்டு பிரதி அதிபர் லொரி கொஸ்வத்த தமக்கு வழங்கப்பட்ட சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை அல்லது நடத்தப்பட்டதை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் மற்றும் தடையற்ற தாக்குதல் வன்முறையானது, இழிவானது மற்றும் மனுதாரர்களின் உடல் மற்றும் மன நலனில் தீங்கு விளைவிக்கும் என்பதை நீதிமன்றில் நிறுவிய நிலையில் பிரதி அதிபர், ஒழுக்காற்று அதிகாரியாக தனது அதிகாரங்களைத் தெளிவாக மீறினார் என்றும், அரசியலமைப்பின் 11 வது பிரிவை மீறும் வகையில் இரு மாணவர்களையும் கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனால் காயம் ஏற்படுத்திய இரண்டு மாணவர்களுக்கும் , அரசுக்கும் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

17/10/2022

✍🏼இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் திணைக்களத்தினால் இலங்கையில் இரண்டு புதிய நுளம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

17/10/2022

📰 NEWS UPDATE

✍🏼சிரேஷ்ட பிரஜைகளின் புதிய நிலையான வைப்புக்களை திறப்பதை நிறுத்தும் சுற்றறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது..

17/10/2022

💥ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மின் கட்டணத்தை செலுத்த தவறியதால் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சென்று மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இன்ஜின் மூலம் மின்சாரம் இணைக்கப்பட்டே ஒளிபரப்பு இடம்பெறுகிறது

12/10/2022

*🛑யாழில் பறிபோகிறது தமிழர் நிலம்..!!*

*💥யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான நிலங்களை முழுமையாக பறிபோகவுள்ளது.குறித்த காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.*

*வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போதும் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது.இதில் இராணுவத்துக்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு 2022.09.23 காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகாவினால் தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.*

*இதேநேரம் வலிகாமம் வடக்கில் மீனவர்களின் நிலம் 212 ஏக்கரும், பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 612 ஏக்கரும் விடுவிக்கப்படும் என நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை கூண்டோடு இராணுவ மயமாக்களிற்கு முயற்சிக்கப்படுகின்றது.*

*அதேவேளை வலிகாமம் வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள நிலங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இவ்வாறான நிலையில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கொழும்பு காய்நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது*

இன்று முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழாவின் போது......
12/10/2022

இன்று முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழாவின் போது......

வாழ்த்துக்கள் மாணவிகளே,தங்கள் அனைவரினதும் திறமை மேலோங்கி இன்னும் பல விருதுகளை தம்வசமாக்க வாழ்த்துகின்றேன்.
11/10/2022

வாழ்த்துக்கள் மாணவிகளே,
தங்கள் அனைவரினதும் திறமை மேலோங்கி இன்னும் பல விருதுகளை தம்வசமாக்க வாழ்த்துகின்றேன்.

09/10/2022

💥வதந்திகளை நம்பவேண்டாம் நாளை பாடசாலைகள் நடைபெறாதென வரும் செய்திகளில் உண்மையில்லை*
💥திங்கள் அன்று பாடசாலை மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக பரவும் செய்தியில் எந்த விதமான உண்மையையும் இல்லை.*

*💥ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.*

*💥 _ஏனைய மாணவர்களுக்கும் பகிருங்கள்_*

01/09/2022

இலங்கையில் முதல் அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் 2022 செப்டெம்பர் 01அன்று இலங்கை பாராளுமன்றத்தில் நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.

News copy right
News field
Ratheepan victor

21/08/2022

*இன்று நாடளாவிய ரீதியில் 3 மணி நேர மின்வெட்டு அமுல் !*

*21 08 2022.*

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு பகலில் 1 ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

மேலும், சிசி பிரிவுகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம், என், ஓ, எக்ஸ், வை, இசட் ஆகிய மண்டலங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்

21/08/2022

*💥அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கான அவசரகால உதவிகளை Australian Dollar 75 மில்லியனாக அதிகரிப்பதாக அறிவித்துள்ளதுடன், 25 மில்லியன் Australian Dollar கூடுதல் நன்கொடையுடன் வழங்கப்படவுள்ளது.*

21/08/2022

*💥யாழ்.வடமராட்சி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.*
*இதன்போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது*

21/08/2022

*💥நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படும் என கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.*

*முட்டைக்கு அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.*

16/08/2022

*💥யாழ் பல்கலைகழக மாணவிகளுக்கு தொலைபேசி வழியாகதொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு*

10/08/2022

*யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.*

*இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப் பரீட்சைக்கு மருத்துவ பிரிவில் தோற்றிய குறித்த மாணவி, பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

19/07/2022

Breaking news

*பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதியில் மாற்றம்! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு.*

*19 07 2022.*

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குதட வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு சற்று முன்னர் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

இதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதியே பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18/07/2022

*🛑யாழில் ஆவா குழு தலைவர் மீது வாள்வெட்டு.!*

*💥ஆவா குழுவின் தற்போதைய தலைவன் என்று அழைக்கப்படும் வினோதன் வன்முறையாளன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.*
*படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.*

*10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.* *தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.*

*தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக இன்று நண்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.*

*ஆவா வினோதன் என்பவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று திரும்பிய போது வீதியில் நின்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துள்ளது.*

*சம்பவத்தில் படுகாயமடைந்த வினோதன் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.*

*தாக்குதலின் போது வாள் ஒன்று உடைந்துள்ளது.*

*தாக்குதல் நடத்தியவர்களில் அளவெட்டியைச் சேர்ந்த ஐவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.*

*கனி குழுவுக்கும் ஆவா குழுவுக்கும் இடையிலான முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.*

16/07/2022

தற்சமயம் சுன்னாகம் மாஸ்ட்டர் ஏரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வழங்கப்படுகின்றது.

Address

Tellipallai
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Srilankan news field tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Srilankan news field tamil:

Videos

Share


Other Media/News Companies in Jaffna

Show All