Media News 1st

Media News 1st " சமூகத்தின் விடிவுக்காக என்றும் விழ?

இஸ்ரேல் பிரதமரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - இயான் பெல்லராஇனப்படுகொலை நடத்த முயலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவ...
16/10/2023

இஸ்ரேல் பிரதமரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - இயான் பெல்லரா

இனப்படுகொலை நடத்த முயலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை போர் குற்றவாளியாக அறிவிக்க சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென ஸ்பெயின் அமைச்சர் இயான் பெல்லரா அறிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் தற்போது இஸ்ரேலுக்கு எதிரான இது போன்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சவூதி இளவரசர் MBS - தன்னைச் சந்திக்க வந்த அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரை காத்திருக்க வைத்து - அடுத்த நாள் வருமாறு அவமானப்...
16/10/2023

“சவூதி இளவரசர் MBS - தன்னைச் சந்திக்க வந்த அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரை காத்திருக்க வைத்து - அடுத்த நாள் வருமாறு அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பியுள்ளார்”

“அடுத்த நாள் சந்திப்பில் காஸா முற்றுகையை முடிவிற்குக் கொண்டுவராமலும் தாக்குதலை நிறுத்தாமலும் - பேசிப் பிரயோசமில்லை எனக்கூறி - அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரை வழியனுப்பியுள்ளார்”

- அமெரிக்கா ஊடகங்கள் -

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலால், கொடூரமாக கொல்லப்பட்ட தனது இளம் குழந்தைக்கு, பாலஸ்தீனிய தந்தை விடை கொடுக்கிறார்.
09/10/2023

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலால், கொடூரமாக கொல்லப்பட்ட தனது இளம் குழந்தைக்கு, பாலஸ்தீனிய தந்தை விடை கொடுக்கிறார்.

பாலஸ்தீன போராளிகளுக்கு இறுதிவரை துணை நிற்போம் ; ஈரான் அறிவிப்பு        இஸ்ரேல் மீது பலஸ்தீனை சேர்ந்த அமைப்புகள் நடத்தும்...
07/10/2023

பாலஸ்தீன போராளிகளுக்கு இறுதிவரை துணை நிற்போம் ; ஈரான் அறிவிப்பு


இஸ்ரேல் மீது பலஸ்தீனை சேர்ந்த அமைப்புகள் நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன போராளிகளை வாழ்த்துவதாகவும், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம் எனவும் ஈரான் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் டாங்கிகளை கைப்பற்றியுள்ள பாலஸ்தீனியர்கள், அவற்றின் முன்  வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை வ...
07/10/2023

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் டாங்கிகளை கைப்பற்றியுள்ள பாலஸ்தீனியர்கள், அவற்றின் முன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை விளக்கும் படங்களையே இங்கு காண்கிறீர்கள்

28/09/2023

✅T20 வரலாற்றில் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி, முழு கிரிக்கட் உலகையும் திரும்பி பார்க்க வைத்தது நேபாள அணி..!

ஒரு முஸ்லிம் குடும்பம் செங்கலடியில் விபத்து .NC:3402 வாகனம் உரியவர்களிடம் சென்றடைய உதவுங்கள்....
18/09/2023

ஒரு முஸ்லிம் குடும்பம் செங்கலடியில் விபத்து .NC:3402 வாகனம் உரியவர்களிடம் சென்றடைய உதவுங்கள்....

*🏏🏏 எட்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா அணி....*  2023, September 17⚡16ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரி...
17/09/2023

*🏏🏏 எட்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா அணி....*
2023, September 17

⚡16ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி எட்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

⚡இந்தப் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

⚡கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

⚡இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஓட்டங்களுக்கு சுருண்டது.

⚡இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 17 ஓட்டங்களையும் துஷான் ஹேமந்த ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

⚡இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

⚡இதனைத்தொடர்ந்து 51 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 6.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.

⚡இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

⚡இதன்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மான் கில் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் இசான் கிசான் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

⚡இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆறு விக்கெட்டுகளை சாய்த்த மொஹமட் சிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

⚡இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்றில் பதிவான மிக மிக மோசமான தோல்வியான இப்போட்டியின் தோல்வி பார்க்கப்படுகின்றது.

  dedicates his players of the match award and cash prize to the Sri lankan ground staff...முஹம்மது சிராஜ் தனக்கு கிடைத்...
17/09/2023

dedicates his players of the match award and cash prize to the Sri lankan ground staff...
முஹம்மது சிராஜ் தனக்கு கிடைத்த ஆட்ட நாயகனுக்கான விருது மற்றும் பணப்பரிசினை இலங்கையின் மைதான பராமரிப்பாளர்களுக்கு சமர்பித்தார்...

2022(2023) கல்வியாண்டு க்கான பல்கலைக்கழக நிகழ்நிலை  விண்ணப்பத்தை பூரணப்படுத்தும் முறைநன்றி - பஸ்மின் BSc
13/09/2023

2022(2023) கல்வியாண்டு க்கான பல்கலைக்கழக நிகழ்நிலை விண்ணப்பத்தை பூரணப்படுத்தும் முறை

நன்றி - பஸ்மின் BSc

🚨பெட்ரோல் விலை அதிகரிப்புஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின...
31/07/2023

🚨பெட்ரோல் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 லீட்டர் பெட்ரோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு லீட்டர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீட்டர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.

Heart Touching 🥺😭
31/07/2023

Heart Touching 🥺😭

🔴 வைத்தியர் நவீன் விஜேகோனை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகி...
31/07/2023

🔴 வைத்தியர் நவீன் விஜேகோனை
கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில்
சிறுநீரக அறுவை சிகிச்சையின்போது
மருத்துவ அலட்சியத்தாலோ, அல்லது வேறு மறைமுக காரணங்களாலோ தனது இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த மூன்று வயது சிறுவன் முஹம்மது ஹம்தி 27.07.2023 பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர்,
ஹம்தியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்திற்குப் பின்னர்,
அங்கு குழுமிய மக்கள், ஹம்தியின்
மரணத்திற்கு நீதி வேண்டும், இதில் உள்ள மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest demanding the arrest of
doctor Naveen Wijekoon.

Muhammad Hamdi, a three-year-old boy who
lost both his kidneys during kidney surgery at
Lady Ridgeway Hospital Colombo due to
medical negligence or other hidden causes,
died tragically on 27.07.2023.

In this case, after 4 days, Hamdi's
Janaza was cremated on Sunday (30).
After the Janaza, a group of people
protested there, demanding justice for
Hamdi's death and exposing the fraud involved.

(Maximum Share பண்ணுங்க!)

 #இச்செயல்_பாராட்டக்கூடியதே!!!  #பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது நாட்டு மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 12,000 ...
29/04/2020

#இச்செயல்_பாராட்டக்கூடியதே!!!

#பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது நாட்டு மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 12,000 ரூபா கொரோனா நிதி உதவித் தொகையாக கொடுத்தது உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடையமே.

அன்றாடம் கூழித்தொழில் செய்யக்கூடியவர்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள், மற்றும் கடைகளில் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் இந்த உதவியால் பெரிதும் பயனடைந்துள்ளார்கள்.

இவரைப் போல் கொரோனாவில் பாதிக்கப்பட்ட சக நாட்டுத்தலைவர்களும் தமது பிரஜைகளுக்கு நிதியுதவி வழங்கினால் மக்கள் பசியோடு இருக்க மாட்டார்கள்...

Source: News தமிழ்

முன்னாள் அமைச்சர்  #ரிஷாட்  #பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!ஊடகப்பிரிவு -இடம்பெயர்ந்து புத்தளத்த...
29/04/2020

முன்னாள் அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

ஊடகப்பிரிவு -

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வேண்டுமென்றே குற்றங்களைச் சுமத்தி, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால், அதற்கு எதிராகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழ் இயங்கி வந்த, நீண்டகால இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்ற அமைச்சின் திட்ட முகாமைத்துவ பிரிவின் ஊடாக, குறித்த போக்குவரத்துக்கான அனுமதி அரசிடம் முறைப்படி பெறப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், நிதியமைச்சின் ஒப்புதலுடன், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இந்தப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு, அவரைக் கைது செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையிலேயே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 #தொலைகாட்சி_சேவைகளின்_ஊடாக_கற்பித்தல்_நடவடிக்கைகள்கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையால்...
20/04/2020

#தொலைகாட்சி_சேவைகளின்_ஊடாக_கற்பித்தல்_நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையால் தொலைகாட்சியூடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதற்கமைய நாளை முதல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் Channel Eye மற்றும் Nethra TV ஆகிய இரு தொலைகாட்சி சேவைகளின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் இம் மாதம் 8 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது.

அதற்கமைய நாளை தொடக்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு (மே மாதம் 3 ஆம் திகதி வரை) தொலைகாட்சியூடான கற்பித்தலுக்கான நேர அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந் நேர அட்டவணைக்கு அமைய வாரத்தில் 7 நாட்களும் முழு நேரமும் கற்பித்தல் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அதிகாலை 4 மணிக்கு இந்நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகி இரவு 11.55 வரை தொடரும். ஒவ்வொரு பாடவேளைக்கும் 55 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு ஒவ்வொரு 55 நிமிட இறுதியிலும் 5 நிமிடங்கள் இடைவெளிக்காக பொழுதுபோக்கு நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் மாலை 7 மணி தொடக்கம் 7.30 மணி வரை செய்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நேர அட்டவணையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம், சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் மாணவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் நடவடிக்கைகள் மாத்திரமின்றி பரீட்சைகளும் பரீட்சை வினாத்தாள் திருத்தம் என்பனவும் முன்னெடுக்கப்படவுள்ளன. தமிழ் ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழி மூலமும் இந்த கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 #மாறியில்_முஸ்லிம்களின்_சனத்தொகை_குறிப்பிடப்பட்டிருப்பது_அறிவீனத்தையே_காட்டுகிறது - ரவூப் ஹகீம்இலங்கை SARS-CoV-2 தொற்றி...
19/04/2020

#மாறியில்_முஸ்லிம்களின்_சனத்தொகை_குறிப்பிடப்பட்டிருப்பது_அறிவீனத்தையே_காட்டுகிறது - ரவூப் ஹகீம்

இலங்கை SARS-CoV-2 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்கள் சம்பந்தமான அரச வைத்தியர் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் களங்கப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த அறிக்கை கண்டனத்துக்குரியது.

SARS-CoV-2 தொற்றிலிருந்து இலங்கை வெளியேறுவதற்கான வழிகாட்டல்கள் எனும் குறித்த இவ்வறிக்கை ஜனாதிபதி அவர்களுக்கு 2020 ஏப்ரல் 4ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை அவமானப்படுத்தி, இன குரோதத்தை ஏற்படுத்தும் குறித்த அறிக்கையில் “முஸ்லிம் சனத்தொகை” SARS-CoV-2 தொற்றை பரப்பும் மாறிகளுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை நேரடியான கண்டனத்துக்குரியது.

நான் இந்த அறிக்கையை தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது, சம்பந்தப்பட்ட ஆவணத்தில் முஸ்லிம்களை SARS-CoV-2 ஊக்குவிப்பு மாறியாக காட்டும் வாசகம் திருத்தப்பட்டிருப்பதை அறிந்தேன். ஆனாலும், குறித்த ஆவணம் ஏற்கனவே வெளியிடப்பட்டு, சுற்றுக்கும் விடப்பட்டுள்ளதால் நான் இந்தக் கண்டனத்தை பதிவுசெய்வது அவசியமாகின்றது.

“இலங்கை SARS-CoV-2 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்களை வெளிப்படுத்தும் இலங்கை அரச மருத்துவர் சங்கம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் என்பவற்றின் அறிக்கை”யில் பிரதேச செயலாளர் மட்டத்தில் SARS-CoV-2 தொற்றை கட்டுப்படுத்தும் ஏனைய 3 மாறிகளுடன் முஸ்லிம்களின் சனத்தொகையும் ஒரு மாறியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் தரப்பட்டுள்ள மாறிகள் பின்வருமாறு;

1. SARS-CoV-2 நோயாளிகளின் எண்ணிக்கை
2. தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
3. சனத்தொகை செறிவு
4. முஸ்லிம் சனத்தொகை (பிரதேச செயலாளர் மட்டத்தில்)

முஸ்லிம் சனத்தொகை செயலாளர் பிரிவு மட்டத்தில் SARS-CoV-2 பரவலுக்கான ஆபத்துக் காரணியாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதை இங்கு தெளிவாக காணமுடிகிறது.

அறிக்கையின் 19ஆவது பக்கத்தில், ஒவ்வொரு மாறிக்கும் கொடுக்கப்பட வேண்டிய பெறுமான அட்டவணை ஒன்றும் தரப்பட்டுள்ளது. அந்த பெறுமான அட்டவணையில் “முஸ்லிம் சனத்தொகை” என்ற மாறிக்கு அதி உயர் குணகப் பெறுமானம் கொடுக்கப்பட்டுள்ளது. அது 0.9446 ஆகும். இது SARS-CoV-2 நோயாளி என்ற மாறிக்கு கொடுக்கப்பட்டுள்ள 0.8260 என்ற குணகப் பெறுமானத்தை விடவும் உயர்வானதாகும்.

இலங்கையில் ஒரு புவியியல் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகையை ஒரு புள்ளிவிபர தொகுதியில் SARS-CoV-2 தொற்றுக்கான ஆபத்துக் காரணியாக வகைப்படுத்துவதற்கான விடயத்துக்கு தொற்று தொடர்பான எந்த அடிப்படையும் இல்லை. இது விடயமாக SARS-CoV-2 தொற்றுக்கான காரணிகளுள் ஒன்றாக ஓர் இனத்தை பெயர் குறிப்பிடுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும்.

குறித்த அறிக்கையை நாங்கள் கேள்விக்குட்படுத்துகிறோம் என்பதோடு, ஏனைய மதங்களுக்கு மாறுபட்ட வகையில் செயலாளர் பிரிவு மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகையை தனிப்படுத்தி ஏனைய புள்ளி விவர தொகுதிகளுடன் எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் என்று இந்த அறிக்கையை தயாரித்தவர்களிடம் கேட்கின்றோம்.

அதேசமயம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கலாநிதி சஞ்ஜீவ வீரரத்ன, தனது டுவிட்டர் பதவில் இந்த அறிக்கை வரம்பு மீறியதும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் சம்பந்தப்படாததுமான “ஒரு குப்பை” என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முஸ்லிம் சனத்தொகையை ஒரு மாறியாக பயன்படுத்துவது அறிவு சார்ந்த குறைபாட்டைக் காட்டுவதாகவும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்பதோடு, இந்த அறிக்கையுடன் தான் ஒருபோதும் உடன்படவில்லை என்றும் இவ்வாறான மோசமானதொரு செயற்பாட்டுடன் தன்னால் ஒருபோதும் இணங்கிப்போக முடியாது என்றும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினருக்காக தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது .

இந்த அறிக்கையானது ஒரு சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான இனத் துவேஷத்தை வளர்க்கும் கலாசாரத்தை கற்பிக்கும் செயற்பாட்டுக்கு மிகத் தெளிவான சான்றாகும். எந்தவொரு தெளிவான காரணங்களும் இல்லாக நிலையில், முஸ்லிம்களை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதும் ஓரங்கட்டுவதும் இதன் நோக்கமாகும்.

இப்போது நடந்தேறும் சிறுபான்மை மக்களை உளவியல் ரீதியாக ஓரங்கட்டும் நவீன யுக்திகளில் இதுவும் ஒன்றாகும். இரகசியமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான பாரபட்சமான விபரக் குறிப்புகள் அப்பாவி பொதுமக்கள் மத்தியில் “தெளிவான உண்மைகள்” என்று சர்வதேச மயப்படுத்தப்படுகிறது. இவ்வாறான துணைபுரை பிணைப்புக்கள், சிறுபான்மை இனத்தை காலாசார ரீதியாக ஓரங்கட்டும் நிறுவனமயப்படுத்தலுக்கு பெரிதும் துணை போகின்றன. இது கண்டிக்கப்படவேண்டிய சமூக அநீதியாகும். அத்துடன் சமூக கட்டமைப்பை தகர்க்கும் வன்முறையுமாகும் .

இந்த அறிக்கையானது அதன் அசல் வடிவத்தில் பலருக்கும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. எனக்கும் இது கிடைக்கப்பெற்றுள்ளது. என்னைப்போல பலரும் இதனை பெற்றக்கொண்டுள்ளனர். இந்த அறிக்கையை உடனடியாக நிராகரிக்குமாறும், முஸ்லிம் சனத்தொகையை SARS-CoV-2 ஊக்குவிப்பு மாறியாக குறிப்பிட வேண்டாம் எனவும், பாரபட்சமான கணித்தல் முறையை ஒரு இனத்துக்கு எதிராக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் அநீதியானதும் பக்கச்சார்பானதுமான முறையில் SARS-CoV-2 தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடு என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இப்படியான செயற்பாடுகளை அரசு மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நாங்களும் இலங்கையரே, எங்களையும் சமமாக கணித்து நடத்துமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.

மக்கள் அரசாங்கத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட வேண்டாம். முஸ்லிம்களை தனிமைப்படுத்தி பார்ப்பதை நிறுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் உண்டாகிவரும் ஆழமான பிரிவினைகளை தவிர்க்கலாம்.

ரவுப் ஹக்கீம்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

 #மலேசிய_அரசாங்கத்திற்கு_எச்சரிக்கை_விடுத்த_முன்னாள்_பிரதமர் !!தற்போது அமுலில் இருக்கும் மக்கள் நடமாட்ட தடையுத்தரவை ரத்த...
19/04/2020

#மலேசிய_அரசாங்கத்திற்கு_எச்சரிக்கை_விடுத்த_முன்னாள்_பிரதமர் !!

தற்போது அமுலில் இருக்கும் மக்கள் நடமாட்ட தடையுத்தரவை ரத்து செய்ய வேண்டாமென மலேசிய அரசாங்கத்திற்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதிர் எச்சரிக்கை.

இப்போது நாட்டில் அமுலில் இருக்கும் மக்கள் நடமாட்டத் தடையுத்தரவை அவசரமாக ரத்து செய்வது நாட்டிற்கு ஆபத்தென மேலும் தெரிவித்தார்.

அமுலில் இருக்கும் நடமாட்ட தடை உத்தரவை சில கட்டுப்பாடுகளோடு, அரசாங்கம் ரத்து செய்யப்போகிறது என செய்தி வெளியான சில மணி நேரத்தில் துன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

மேலும் பேசிய துன், இப்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கம் அவசரம் காட்டாமல், தடை உத்தரவை மொத்தமாக விலக்காமல், ஒவ்வொன்றாக ரத்து செய்வதே புத்திசாலித்தனம், மேலும் சுகாதார துறையின் நிபுணர்களுடன், அரசாங்கம் முதலில் ஆலோசனை நடத்தி அவர்களின் வழிகாட்டுதல் படியே நடக்க வேண்டும் என்றார்.

நான் கணிப்பது என்னவென்றால், கோவிட்-19 தொற்று நோய் இப்போது
முடிவுக்கு வராது, மேலும் நாடு வழக்க நிலைக்குத் திரும்ப சில காலம் ஆகலாம் என்பதால் மக்கள் முகக் கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை அனுசரிப்பது, வீட்டிலேயே இருப்பது போன்ற அரசாங்கத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் துன் வழியுறித்தினார்.

#மலேசியசெய்திகள்

தகுதியுடைய அனைவருக்கும் 5000/- கொடுப்பனவு சென்றடைய வழிசெய்யுங்கள் - ஆப்தீன் எஹியா வேண்டுகோள்(ஊடகப்பிரிவு)அரசாங்கத்தால் வ...
19/04/2020

தகுதியுடைய அனைவருக்கும் 5000/- கொடுப்பனவு சென்றடைய வழிசெய்யுங்கள் - ஆப்தீன் எஹியா வேண்டுகோள்

(ஊடகப்பிரிவு)

அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக அறிவித்த 5000/- ரூபாவை அவசரமாக வழங்குமாறும், ஊரடங்கு சட்டம் 22ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தளர்த்தப்படவுள்ளதாக அறிவித்தல்கள் வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்த முன்னர் மக்கள் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அவசரமாக 5000/- கொடுப்பனவை வழங்குமாறு முந்தல் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலாளர்களிடம் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவரின் கோறிக்கையில்,
அரசியல் அதிகாரங்கள் உட்பிரவேசித்து தங்களின் உறவினர்கள் ஊடாக தங்களின் கட்சி சார்ந்தோருக்கு மாத்திரம் 5000/- ரூபா கொடுப்பனவுகள் முன்னுரிமையளித்து வழங்கப்படுவதாகவும், பல ஏழைகளுக்கு இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் கிடைக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது.

சராசரி ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவில் நான்கில் ஒரு பங்கினையே வழங்குகின்ற போதும் ஒரு மாதகாலமாக தொடர் ஊரடங்கு சட்ட அமுலினால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு இது வரை இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை, இதே நேரம் அதிகாரிகள் மூலம் இக்கொடுப்பனவுகள் பாமர ஏழைகளை சென்றடைய வழிசெய்யுமாறு வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதே நேரம் முச்சக்கர வண்டி சாரதிகள்,கூலித்தொழிலாளிகள், என பலர் பலதரப்பட்ட சவால்களை எதிர்நோக்கும் இக்கால கட்டத்தில் அரசியல் தலையீடுகள்,அரசியல் பழிவாங்கள்கள் இடம்பெறாத வகையில் இக்கொடுப்பனவுகள் அனைவரையும் சென்றடைய தாங்களின் விஷேட மேற்பார்வையில் கிராம சேவகர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் ஊடாக பெயர்ப்பட்டியல் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளர்களிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 #தேர்தலுக்கான_திகதி_அறிவிப்பில்_அவசரம்_வேண்டாம் - றிஷாட் பதியுதீன்தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை த...
19/04/2020

#தேர்தலுக்கான_திகதி_அறிவிப்பில்_அவசரம்_வேண்டாம் - றிஷாட் பதியுதீன்

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட்ட பல்துறை சார்ந்தவர்களால், தற்பொழுது அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் உறுதியாக நீக்கப்படலாம் என்று தீர்க்கமாக அறிவிக்கப்படும் வரை, பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய திகதியானது அறிவிக்கப்படக் கூடாதென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சகல அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் தேர்தல் திகதி தொடர்பில் கலந்துரையாடி, சிறந்த முடிவுகளை மேற்கொள்ளுமாறு சுட்டிக்காட்டுவதோடு, அதுவரையில் தேர்தலுக்கான அறிவிப்பு திகதியை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

- ஊடகப் பிரிவு -

 #றியாஜ் ,  #இஜாஸ் ஆகியோரின் கைதுகள்சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டியவை !அரசியல் பழி தீர்க்க வேண்டாம் !!முன்னாள் இராஜாங்க...
17/04/2020

#றியாஜ் , #இஜாஸ் ஆகியோரின் கைதுகள்
சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டியவை !

அரசியல் பழி தீர்க்க வேண்டாம் !!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் #ஹரீஸ்

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளன என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் திடீர் கைதுகளை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டிய விடயமாகும். இதனை வைத்து யாரும் அரசியல் பழி தீர்க்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் சிறந்த சட்டத்தரணியாகும். இவரின் கைதினை சமூகம் கவலையுடன் பார்க்கின்றது.

மேலும் றியாஜ் பதியுதீனின் கைது ஒரு அரசியல் பழிவாங்லாகவும் இருக்கலாம். இக்கைது நடவடிக்கைகளை வைத்து அரசியல் செய்யும் தருணமில்லை என்பதை புரிந்து சகலரும் சமூக கூட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் அரசின் தீர்மானத்திற்கு எதிராக நான் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றோம்.

மேலும் இவ்விடயமாக தொடர்பாக கொழும்பிலுள்ள பேராசிரியர் கமால்தீன் தலைமையிலான புத்திஜீவிக்ள குழுவினர் நாட்டின் அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடமும் சுகாதார அமைச்சின் வைத்திய நிபுணர்களிடமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இவ்விரு முயற்சிகளும் வெற்றியளிக்க முஸ்லிம் சமூகம் இறைவனிடம் துஆச் செய்து கொள்மாறும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : M.R

 #கொரோனா_தொற்றால்_உயிரிழந்தோரை_புதைக்க_அனுமதி_வழங்க_வேண்டும்! முன்னாள் சுகாதார அமைச்சர் - ராஜித சேனாரத்ன.இலங்கையில் கொறோ...
17/04/2020

#கொரோனா_தொற்றால்_உயிரிழந்தோரை_புதைக்க_அனுமதி_வழங்க_வேண்டும்!

முன்னாள் சுகாதார அமைச்சர் -
ராஜித சேனாரத்ன.

இலங்கையில் கொறோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் உடலங்களை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கமைவாக புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலை தமக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருந்த அதேவேளை இது தொடர்பிலான தனது விஞ்ஞான பார்வையை ஒரு ஆவணமாக தயாரித்து அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, குறித்த ஆவணத்தை ஜாதிக சமகி பலவேகய அனுமதித்தால் கட்சியின் நிலைப்பாடாகவே வெளியிடுவதற்குமான முயற்சி இடம்பெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மருத்துவர் ராஜித சேனாரத்னவின் கருத்தடங்கிய ஆவணம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Source : yazhnews

 #தேவையுடையோரை_தேடிச்_செல்லும்_பொக்கிஷம்_பர்ஹானாஎனது முகநூல் பதிவில் 11 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் அவசியமாக உள்ளது என...
17/04/2020

#தேவையுடையோரை_தேடிச்_செல்லும்_பொக்கிஷம்_பர்ஹானா

எனது முகநூல் பதிவில் 11 குடும்பங்களுக்கு உலர் உணவுகள் அவசியமாக உள்ளது என்று பதிவிட்டேன்.

பர்ஹானா ரியாஸ், மாத்தளை (ஹெம்மாதகம)

எனது முகநூல் நண்பரின் உதவியுடன் 30 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களை இன்று வழங்கி வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்

மிக மிக தேவையுடைய குடும்பங்களுக்கே இந்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. அதே இடத்தில் இன்னும் பல குடும்பங்கள் எந்த உதவியும் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் ஊருக்கு இது வரை யாருமே வரவில்லை என்ற தகவலை சொன்னார்கள். முதற் தடவையாக நாம் தான் சென்றுள்ளோம் என்பது புலனாகியது.
இது போன்ற பல குடும்பங்களின் நிலமை வேதனையளிக்கிறது.

இன்ஷா அல்லாஹ் எமது சக்திக்குட்பட்டு முடியுமான வரை உதவி செய்வோம்.

உங்கள் ஸகாத், ஸதாகாக்களை ரமழான் வரும் வரை காத்திருக்காமல் இது போன்ற பல குடும்களை தேடி சென்று வழங்குமாறு தயவாய் வேண்டுகிறேன்.

தேவையான நேரத்தில் தேவையுடையோரை தேடிச்சென்று தேவைகளை பூர்த்தி செய்வோரே இறைவனின் உகப்புக்கு பொறுத்தமானவர்கள்.

பர்ஹானா ரியாஸ்
மாத்தளை
(ஹெம்மாதகம)

 #சகோதரரது_அநீதியான_கைது_தொடர்பில்_உரிய_சட்ட_நடவடிக்கை_எடுக்கப்படும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!எனது சகோதரர்...
16/04/2020

#சகோதரரது_அநீதியான_கைது_தொடர்பில்_உரிய_சட்ட_நடவடிக்கை_எடுக்கப்படும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக் கைது செய்து, ஊடகங்கள் வாயிலாக அதனைத் தெரியப்படுத்தினர். எனது சகோதரரர் அநீதியாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், பழிவாங்கலுக்கு எதிராகவும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகின்றோம்’ என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சகோதரரின் கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நானோ, எனது குடும்பத்தினரோ அல்லது சகோதரர் ரியாஜ் பதியுதீனோ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதச் சம்பவத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாதவர்கள் என்பதை, மிகவும் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவாகுவதற்கு ஒருபோதும் நாங்கள் உதவமாட்டோம். அனுமதிக்கவும்மாட்டோம். அதற்கெதிராக அனைத்துக் கட்டங்களிலும் செயற்பட்டிருக்கின்றோம். செயற்பட்டு வருகின்றோம். ஆனால், இந்தப் பயங்கரவாதச் சம்பவத்துடன் எனது சகோதரரை தொடர்புபடுத்தி, இவ்வாறானதொரு அநியாயச் செயலை செய்திருப்பது, எனது அரசியல் மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியே காரணமாகும் எனவும், அதனால்தான் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் நம்புகின்றேன்.

பாதுகாப்புத் தரப்பினர் நடத்துகின்ற விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவது எமது கடமை என்ற வகையில், சகோதரர் ரியாஜ் பதியுதீனும் பூரண ஒத்துழைப்பை இந்த விசாரணைக்கு வழங்குவார். ஆனால், அவரது விசாரணை தொடங்கி, அது நிறைவடைவதற்கு முன்னரே, மறுகணத்திலிருந்தே “இந்தச் சம்பவத்துடன் அவர் தொடர்புடையவர்” என்ற பொய்யான செய்தியை நாடு முழுவதும் இனவாத ஊடகங்கள் பரப்பி வருகின்றன. உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினத்தில், அடுத்த நிமிடத்திலிருந்தே “ரிஷாட் பதியுதீன் இந்தச் செயலுடன் தொடர்புற்றிருக்கிறார்” என அபாண்டங்களைப் பரப்பினர்.

எமது அரசியல் கருத்துக்கு மாறாக இருந்தவர்கள், கடந்த காலங்களில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்தினால், ஒருசில அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக இந்த சம்பவத்துடன் என்னை தொடர்புபடுத்தி மோசமாகப் பேசினர். பிழையான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்தனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், பொலிஸ் மா அதிபர் மூன்று விசாரணைக் குழுக்களை அப்போது அமைத்ததுடன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூலம், ரிஷாட் பதியுதீனுக்கு இதில் சம்பந்தம் இருந்தாலோ அல்லது இந்தச் சம்பவத்துடன் அவர் தொடர்பான தகவல்கள் இருந்தாலோ பொலிஸில் வந்து முறையிடுமாறு, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் செய்தி பரப்பினார்கள். அதற்கான கால அவகாசமும் கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

என்மீதான இந்த விசாரணைக்கென மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், வழங்கப்பட்ட அத்தனை தகவல்களும் ஆவணங்களும் பொலிஸ் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் முடிவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலோ, வேறு எந்த பயங்கரவாதத்துடனோ ரிஷாட் பதியுதீனுக்கு எதுவித தொடர்புமில்லை என பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிவித்தனர். தற்போதிருக்கும் பதில் பொலிஸ்மா அதிபரே, இந்த விசாரணை அறிக்கையை எழுத்து மூலம் அப்போது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வழங்கினார். இந்த விடயங்கள் அனைத்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.

அத்துடன், எனது சகோதரரோ, எனது குடும்பத்தினரோ இந்த பயங்கரவாதச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கமாட்டார்கள் என, நான் உறுதியுடன் மீண்டும் கூற விரும்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : rishadbathiudeen.lk

 ுதந்திரத்தை_உறுதி_செய்யுமாறு_ஐ_நா_ஜனாதிபதியிடம்_கோரிக்கைகொரோனாவில் மரணிப்பவர்களை எரிக்க மட்டுமே முடியும் என முடிவெடுத்த...
14/04/2020

ுதந்திரத்தை_உறுதி_செய்யுமாறு_ஐ_நா_ஜனாதிபதியிடம்_கோரிக்கை

கொரோனாவில் மரணிப்பவர்களை எரிக்க மட்டுமே முடியும் என முடிவெடுத்தமைக்கான காரணங்களை தெளிவு படுத்துங்கள் - இலங்கை ஜனாதிபதியிடம் ஐ.நா கேள்வி

உடல்களை அடக்கம் செய்வது பற்றிய WHO வின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுரை.

இறுதிச் சடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஐநா, முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது, மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப் பெட்டிக்குள் வைக்க வேண்டும், உடல்களை எரிக்கவேண்டும், என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள், மார்ச் 31 ம் திகதி 2020 நீர்கொழும்பில் முஸ்லீம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும், அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவிலான தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளிற்கு எதிரானதாக அமையக்கூடிய இலங்கையின் அரசாங்கம் தவிர்த்துக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், தங்கள் அன்புக்குரியவர்களிற்கு உரிய இறுதிச்சடங்கினை வழங்க முடியாது அல்லது புதைக்க முடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட் 19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் அனைத்து சுகாதார நிபுணர்களுடனும் தொடர்புபட்டவர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் விசேட அறிக்கையாளர் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தெரியப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானம் பாகுபாடற்றது, அவசியமானது ,உரிய நோக்கத்திற்கு சமாந்திரமானது என்பதை உறுதி செய்வதற்காக உரிய சுகாதார நிபுணர்கள் சிவில் சமூகத்தினர்,மற்றும் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா என்பதை தெரியப்படுத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா? உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களிற்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மத சுதந்திரத்திற்கான உரிமை இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா? பின்பற்றப்படுகின்றதா? என்பதையும் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

முஸ்லீம்களிற்கும் இலங்கையின் ஏனைய மத இன சிறுபான்மை மக்களிற்கு எதிரான குரோதப்பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது, கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் நோயாளிகளின் அடையாளங்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துங்கள்.

உங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக வெளியாகும் ,மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையில் அது சேர்க்கப்படும் என விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

Source: வீரகேசரி

 #மல்வான_பிரதேச_மக்களின்_மனித_நேயப்_பணி மல்வான பிரதேச முஸ்லிம்களின் நிதி சேகரிப்பில் அப்பகுதி சகோதர இன மக்களுக்கு உலர் உ...
14/04/2020

#மல்வான_பிரதேச_மக்களின்_மனித_நேயப்_பணி

மல்வான பிரதேச முஸ்லிம்களின் நிதி சேகரிப்பில் அப்பகுதி சகோதர இன மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 4 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாம்.

புகைப்படம் எடுப்பது தவறு என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்!

ஆனால் இதுபோன்ற புகைப்படங்கள் நாம் செய்யும் உதவிகளை வெளிக்கொண்டு வருவதற்காக அல்ல!

முஸ்லிம், தமிழ், சிங்கள என பிரிவுகள் இல்லாது நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்தை ஒருசில பிரிவினை வாதிகளும் உணரவேண்டும்/ உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற புகைப்படங்களை பெறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
Source : MP

 #கற்பிட்டியில்_தொடர்ந்தும்_உலர்_உணவுப்_பொருட்கள்_வினியோகம்கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அக்மல் அவர்களின் முயற்சியில் ...
14/04/2020

#கற்பிட்டியில்_தொடர்ந்தும்_உலர்_உணவுப்_பொருட்கள்_வினியோகம்

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அக்மல் அவர்களின் முயற்சியில் கற்பிட்டியில் அன்றாட கூழி தொழில் செய்யும் குடும்பத்தினருக்கு நேற்று இரவு கடும் மழையின் போது வழங்கி வைக்கப்பட்டது.

U.M.M.AKMAL அவர்களின் முயற்சியில் நடை பெற்று வரும் உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டத்தின் 20ம் கட்டம் நேற்று (13)ம் திகதி இறைவனின் உதவியோடு எந்தவொரு அரசியல், கட்சி இலாபமும் இல்லாமல் இன மத வேறுபாட்டுக்கு அப்பால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source : UMM.Akmal

Address

Mardana
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Media News 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media News 1st:

Share

www.medianews1st.com

இது ஒரு கடிவாளமற்ற குதிரை ......


Other News & Media Websites in Colombo

Show All