Prime Top News - Tamil

Prime Top News - Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prime Top News - Tamil, News & Media Website, Colombo.

08/01/2023

Pettah Cosmetic league 2023 football final

08/01/2023
31/05/2022

#அறிவித்தல்

மழை மற்றும் வெள்ள நிலை காரணமாக தமது பரீட்சை நிலையத்துக்கு செல்ல முடியாதவர்கள், நமக்கு அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

20/05/2022

🔴BREAKING NEWS

புதிய அமைச்சர்கள் 09பேர் பதவியேற்பு...

1. ஹரின் பெர்னாண்டோ - சுற்றுலா மற்றும் நிலம்

2. மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

3. கெஹலிய ரம்புக்வெல்ல - ஆரோக்கியம்

4. விஜயதாச ராஜபக்ச - நீதி, சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்

5. நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள்

6. ரமேஷ் பத்திரன - தோட்டத் தொழில்

7. சுசில் பிரேமஜயந்த - கல்வி

8. நலின் பெர்னாண்டோ சுவடு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு

9. டிரான் அலாஸ் - பொது பாதுகாப்பு

17/05/2022

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ தெரிவு .

16/05/2022

இன்றைய தினம்(16) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றிரவு(16) 11 மணி முதல் நாளை(17) அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

16/05/2022

🔴BREAKING NEWS
இன்று இரவு 08 மணி முதல் நாளை காலை 05 மணி வரை மீண்டும் ஊரடங்கு !!!

13/05/2022

நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு நாளை மறுதினம் 15ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

🔴 JUST NOW : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்.
13/05/2022

🔴 JUST NOW : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்.

12/05/2022

நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை(13) காலை 6 மணியுடன் நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12/05/2022


இலங்கையின் 26 வது பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ (6 வது தடவையாக) சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டார்.

12/05/2022

🔴 BREAKING
முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் ஜொன்ஸ்டனுக்கு வெளிநாடு செல்ல தடை!
- கோட்டை நீதவான் நீதிமன்றம் -

11/05/2022

எம்.பிக்களின் வீடுகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகர் கோரிக்கை..

11/05/2022

மேல்மாகாணத்தில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (12) விடுமுறை

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் - பாதுகாப்புச் செயலாளர்அசம்பாவிதங்கள் ...
11/05/2022

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் - பாதுகாப்புச் செயலாளர்

அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி ,பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி...
11/05/2022

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கை இராணுவ விசேட படையணியின் போர் ரைடர்ஸ் படையானது இலங்கை இராணுவத்தின் அனைத்து வீதித் தடைகளையும் உள்ளடக்கி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

மேலும், அதுருகிரிய, கொடகம மற்றும் ஹோமாகம பகுதிகளில் நடமாடும் ரோந்துப் பணிகளுக்காக கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருண...
11/05/2022

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.

குறுகிய நோக்கங்களுக்காக மக்களின் அழுத்தத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் சில குழுக்களின் முயற்சிகளை முறியடிக்க உங்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

02/04/2022

Breaking News : இன்று மாலை 6.00 மணி முதல் திங்கள் காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தள்ளது.

01/04/2022

அவசர நிலை பிரகடனம்

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பொது அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

03ஆம் திகதி பொதுமக்கள் வீதிகளில் இறங்கத் தயாராகிவரும் நிலையில். இந்த பொது அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அவசர நிலை என்றால் என்ன?

அவசர நிலை அமுலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே பொலிசாருக்கு அதிகாரங்கள் அதிகரிக்கும்.

குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைதுசெய்து குறிப்பிட்டகாலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாமல் பொலிசார் தடுத்துவைக்க முடியும்.

தேவைப்படும் இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவும் பொலிசாருக்கு அதிகாரம் இருக்கும்.

பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகளைக்கூட அமைக்கலாம்.

பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் உருவாவதைத தடுக்க பயன்படுத்தப்படும்.

வன்முறைகள் ஏற்படும் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் பொலிசாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.

தேவையான இடங்களில் ஊரடங்குச் சட்டங்களை பிறப்பிக்க முடியும்.

ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கைகள் அமுல்படுத்தப்படும்.

01/04/2022

மேல் மாகாணத்தில் இன்று (1) நள்ளிரவு முதல் சனிக்கிழமை (2) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்.

01/04/2022

Breaking News

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prime Top News - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All