Nanban - நண்பன் -

Nanban - நண்பன் - Magazine

13/11/2023
11/11/2023

🚨இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக இலங்கை ஐ.சி.சி.யிடம் மேன்முறையீடு செய்ய போவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு.

𝐈𝐫𝐮𝐠𝐚𝐩𝐚𝐭𝐫𝐮 💎 ||𝐓𝐚𝐦𝐢𝐥 𝟐𝟎𝟐𝟑🎬 படம் பார்த்து முடிச்சதும்  முதல்ல எனக்கு தோணினது Hey sinamika Movie-la யாழன் பேசின Dialogue த...
11/11/2023

𝐈𝐫𝐮𝐠𝐚𝐩𝐚𝐭𝐫𝐮 💎 ||𝐓𝐚𝐦𝐢𝐥 𝟐𝟎𝟐𝟑🎬

படம் பார்த்து முடிச்சதும் முதல்ல எனக்கு தோணினது Hey sinamika Movie-la யாழன் பேசின Dialogue தான்
"பிரியிறத்துக்கு ஆயிரம்
கோடி வழி இருக்கு ஆனா
சேர்ந்து வாழ ஒரே காரணம் காதல்.. ❤️"

Actually படத்தோட one line eh அதுதான் But ஒரு Relationship -la வார Problems& Solutions.
Boy perspective , Girl perspective எண்டு ரொம்ப Details ah இருக்கு!
ஒரு படத்தோட முக்கியமான அம்சம் Screenplay அந்த விதத்துல படத்துல அதிகமான Scenes Dialogues தான் வருது. அத Boare அடிக்காம சுவாரஸ்யமா Extraordinary Screenplay அமைச்சியிருக்கார் Director 𝐘𝐮𝐯𝐚𝐫𝐚𝐣 𝐃𝐡𝐚𝐲𝐚𝐥𝐚𝐧.

சந்தோசமான தருணங்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை..கஷ்டமும் நிரந்தரம் இல்லை.. எல்லாமே மாறும்
- 𝐈𝐫𝐮𝐠𝐚𝐩𝐚𝐭𝐫𝐮-

11/11/2023

🚨 இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முக்கிய கூட்டம் நவம்பர் 18 முதல் 21 வரை அகமதாபாத்திலும், அதன் இயக்குநர்கள் குழு கூட்டம் 21 ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

11/11/2023

இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் மூலம் பாகிஸ்தானை வெளியேற்றியது

11/11/2023

ENG won the toss and PAK is officially out of semi final race !
(unless they bowl out ENG under 35)
Meanwhile Bangladesh's aggressive batting ensures is well and out of
(Australia needs to knock off the runs under 22 overs to knock BAN out)

11/11/2023

இலங்கை கிரிக்கட் சபைக்குள் நடப்பது என்ன...

வழமையை விட சற்று நீண்டுவிட்டதென நினைக்கிறேன், நேரமிருந்தால் வாசியுங்கள் 🙏

தற்போது பதவியிலிருக்கும் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கட் சபை பதவியேற்ற காலம் தொடக்கம் ஊழல் மோசடி உட்பட பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமே...

இலங்கை கிரிக்கட் சபைக்கு இந்திய கிரிக்கட் சபையுடன் இருந்து வந்த வணிக ரீதியான தொடர்புகள், தேசிய கிரிக்கட் ஐ விட இலங்கை கிரிக்கட் சபை LPL தொடரை நடாத்துவதில் காட்டிய ஆர்வம், நாட்டில் நிலவிய கொவிட் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில. தொடர்ந்து 4 வருடங்களாக LPL தொடரை வெற்றிகரமாக நடாத்த முடித்தமை, அதிலும் குறிப்பாக ஆசிய கிண்ணம் மற்றும் உலக கிண்ணம் நடைபெற இருந்த காலத்தில் பொருத்தமற்ற ஒரு இடைவெளியில் வெறுமனே வருமானத்தை மட்டும் குறிவைத்து நடாத்தப்பட்ட LPL 2023. இலங்கையில் LPL இடப்பெறுவதில் இந்திய கிரிக்கட் மற்றும் வேறு சில இந்திய வர்த்தகர்களுக்கிருந்த இலாபங்கள் இறுதியாக இப்போது இலங்கையில் புதிதாக ஆரம்பிக்க உத்தேசிக்கபட்டுள்ள T10 தொடர் என இலங்கை கிரிக்கட் சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான விடயங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இதற்கிடையில் தான் உலகிக்கிண்ண தொடர் தோல்விகளின் இடையே அதிரடியாக செயற்பட்ட விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த 06/11/2023 அன்று தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி அர்ஜுன ரணதுங்க தலைமையிலான கிரிக்கட் சபையொன்றை தாபித்து விசேட வர்த்தமானி ஓன்றை வெளியிட்டிருந்தார்.

அர்ஜுன ரணதுங்க 2016ம் ஆண்டு தொடக்கம் இலங்கை கிரிக்கட் சபை தலைவர் பதவியை குறிவைத்து வந்தமையும் அவ்வாறு பதவி கிடைக்கப்பெற்றால் இலங்கை கிரிக்கட்டை சீர்செய்வதற்கு அவரிடமிருந்த திட்டங்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.

இருந்த போதிலும் நடைமுறையிலுள்ள கிரிக்கட் சபை தெரிவு முறையில் வாக்குரிமை பெற்றுள்ள கழகங்களிடம் அர்ஜுனவை விட ஊழல்வாதிகளுக்கே அதிக செல்வாக்கு இருந்து வருவதால் வழமையான கிரிக்கட் சபை தேர்தல் ஒன்றின் மூலம் அர்ஜுனவுக்கு எப்போதும் வெல்லவே முடியாது என்ற நிலையிலேயே விளையாட்டு அமைச்சர் இந்த அதிரடியில் இறங்கியிருந்தார்.

விளையாட்டு அமைச்சரின் துணிவையும் இங்கு பாராட்டியே ஆக வேண்டும்.

இவ்வாறு இடைக்கால கிரிக்கட் சபை ஒன்றை தாபிப்பதற்கான அதிகாரத்தை விளையாட்டு அமைச்சர் சட்ட கொண்டிருந்தாலும் வழமையாக ஜனாதிபதி மற்றும் கெபினட்டுடனான கலந்தாலோசனை ஒன்றினூடாகவே விளையாட்டு அமைச்சர்கள் இதை செய்து வந்துள்ளார்கள். ஆனால் இம்முறை அவ்வாறான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறாமலே விளையாட்டு அமைச்சர் இந்த இடைக்கால சபையை தாபித்திருந்தார்.

விசேட வர்த்தமானி வெளியிடப்பட்ட அன்று மாலை இடம்பெற்ற கெபினட் கூட்டத்தில் புதிய வர்த்தமானி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி கூறியிருந்ததில் இருந்து விளையாட்டு அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே காணப்பட்ட முறுகல் வெளிப்படையானது.

இதனைத் தொடர்ந்து புதிய சபை பதவியேற்று அடுத்த நாள் (08/11/2023) விசேட வர்த்தமானி மூலம் பதவி நீக்கப்பட்ட கிரிக்கட் சபை உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்று புதிதாக நியமிக்கப்பட்ட சபையின் நியமனத்திற்கெதிரான இடைக்கால தடையை பெற்றுக்கொண்டனர். அர்ஜுனவும் கனத்த மனதுடன் இலங்கை கிரிக்கட் சபை வளாகத்தை விட்டு வெளியேறினார்.

இதேவேளை உலக கிண்ணத் தோல்விகள் தொடர்பிலும் கிரிக்கட் சபை பற்றியும் பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் எழ ஆரம்பித்தது. ஈற்றில் எதிர்க்கட்சி தலைவரின் பிரேரணைக்கமைய இலங்கை கிரிக்கட்டை பற்றி ஆராய்ந்து விவாதிக்க அடுத்த நாள் (09/11/2023) திகதி குறிக்கப்பட்டு விவாதமும் இடம்பெற்று பலதரப்பட்ட விடயங்கள் சபையில் வெளிக்கொணரப்பட்டது.

இறுதியில் ஏகமனதான பாராளுமன்றின் முடிவின் அடிப்படையில் ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கட் சபை மீண்டும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு நின்று விடாது ஷம்மி சில்வாவின் சபைக்கு எதிர்வரும் 14ம் திகதி COPE குழுவில் விசாரணைக்கு ஆஜராகவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

விசேட வர்த்தமானி மூலம் விளையாட்டு அமைச்சரால் கலைத்து விடப்பட்ட சபை அப்படியே கலைந்த நிலையிலேயே இருந்திருந்தால் கிரிக்கட் சபையின் சீர்திருத்தத்தில் விளையாட்டு அமைச்சருக்கே க்ரெடிற் கிடைத்திருக்கும்; அவர் ஹீரோ ஆகிருப்பார். இதை விரும்பாத ஜனாதிபதி அதே விடயத்தை மீண்டும் பாராளுமன்றின் மூலம் செய்வித்து விளையாட்டு அமைச்சருக்கு வரவிருந்த க்ரெடிட்டை இல்லாமல் செய்திருப்பார் என ஊகிக்க முடியும்.

ஜனாதிபதிக்கும் - விளையாட்டு அமைச்சருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக காணப்பட்டு வரும் முரண்பாடுகளை வைத்து இதை கூற முடிகிறது.

ஆரம்பத்தில் அமைச்சரால் கலைக்கப்பட்ட முடிவுக்கெதிராக நீதிமன்றம் சென்று இடைக்கால தடையை பெற்றுக்கொண்டவர்கள் இம்முறை இன்று (10/11/2023) ICC யிடம் சென்று கிரிக்கட் சபை தெரிவில் அரசியல் தலையீடு இடம்பெற கூடாதென்ற ICC யின் விதிகளை தமக்காதரவாக கொண்டு வந்து அது இங்கே மீறப்பட்டுள்ளதாக காட்டி அதன் மூலம் ஒட்டு மொத்த இலங்கை கிரிக்கட் இன் ICC உறுப்புரிமையை இடை நிறுத்த வைத்துள்ளார்கள்.

ICC யின் Suspension என்ன சொல்கிறது ?

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இடைக்கால தடை காலத்தில் ICCயினால் இலங்கை கிரிக்கட்டுக்கென எந்த வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாத அதேநேரம் இலங்கை கிரிக்கட் சபையில் அரசியல் தலையீடுகள் இடம்பெறாமையை இறுக்கமாக நடைமுறைகளினூடாக உறுதி செய்ய வேண்டும் என்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேநேரம் இது தொடர்பான விரிவான அறிக்கையையும் ICC யினால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வழமையான தேர்தல் முறை மூலம் புதிய சபையொன்று தேர்ந்தெடுக்கப்படும் வரை இவ் இடைக்கால தடை அமுலில் இருக்கும் அதன் பின்னர் தடை அகற்றப்படும் என ஊகிக்கலாம்.

"கலகம் பிறந்தால் நீதி பிறக்கும்" என்பது போல் உருவாகியுள்ள சிக்கல்களின் பின்னர் ஒரு தெளிவான சிந்தனையுள்ள குழு ஒன்றிடம் இலங்கை கிரிக்கட் சபை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

நன்றி 🙏

Post from Hisham Awm

இந்த Exam ஏன் என்டு அவனுகளுக்கும் தெரியா எழுதின நமக்கும் தெரியா🤣
07/11/2023

இந்த Exam ஏன் என்டு அவனுகளுக்கும் தெரியா எழுதின நமக்கும் தெரியா🤣

07/11/2023

இடைக்கால குழுவுக்கே இடைக்கால தடை விதித்த முதலாவது நாடு நாமளா தான் இருக்க முடியும்

07/11/2023

இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளார்

Virat Kohli equals Sachin Tendulkar's record for the most ODI centuries on his 35th birthday 🎂
05/11/2023

Virat Kohli equals Sachin Tendulkar's record for the most ODI centuries on his 35th birthday 🎂

04/11/2023

இன்று ( 4) நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்துரொட்டி, ப்ஃரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு : உணவக உரிமையாளர்கள் சங்கம்

04/11/2023

🔴JUST IN
இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் மொஹான் டி சில்வா சற்றுமுன் தனது இராஜினாமாவை கையளித்துள்ளார்

Good morning! ❤️❤️
04/11/2023

Good morning! ❤️❤️

03/11/2023

🚨இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி ஒரு கிலோ- பொதி செய்யப்படாதது ரூ.275
பொதி செய்யப்பட்டது -ரூ.295;

சிவப்பு சீனி ஒரு கிலோ பொதி செய்யப்படாதது- ரூ.330
பொதியிடப்பட்டது ரூ.350

Srilanka Cricket
03/11/2023

Srilanka Cricket

31/10/2023

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம்.

92 ஒக்ரெய்ன் பெற்றோல் லிட்டருக்கு 9 ரூபாவால் குறைப்பு. புதிய விலை 356 ரூபா

ஒக்ரெய்ன் 95 பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 423 ரூபா

ஓட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 356 ரூபா

சுப்பர் டீசல் 10 ரூபா அதிகரிப்பு புதிய விலை 431 ரூபா

மண்ணெண்ணெய் 7 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை 249 ரூபா -

CEYPETCO

31/10/2023

செய்தி - 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18% ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

❤ தந்தையின் அன்பு விலை உயர்ந்தது.
23/10/2023

❤ தந்தையின் அன்பு விலை உயர்ந்தது.

21/10/2023

பகிருங்கள் யாராவது ஒருவர் பயன்பெறுவார்கள்
நாளை (21.10.2023) முதல் கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை புகையிரத நேரத்தில் மாற்றம் .
■கொழும்பு -வவுனியா,காங்கேசன்துறை
●4021 A/C புகையிரதம் 05.30 (சனிக்கிழமைகளில் மட்டும்)
●4077 யாழ் தேவி 05.45 (கல்கிஸ்ஸ 05.10)
●4017 உத்தர தேவி 11.50
●4089 இரவு தபால் கடுகதி 20.00
●4091 யாழ் நிலா புகையிரதம் 22.30 (கல்கிஸ்ஸ 22.00) [வெள்ளிக்கிழமை மட்டும்]

■வவுனியா-காங்கேசன்துறை
●4021 A/C புகையிரதம் 10.09 (சனிக்கிழமைகளில் மட்டும்)
●4077 யாழ் தேவி 11.26
●4443 யாழ் ராணி 15.35 (அனுராதபுரம் 14.30)
●4017 உத்தர தேவி 16.31
●4089 இரவு தபால் கடுகதி அதிகாலை 01.43
●4091 யாழ் நிலா புகையிரதம் 03.40 [சனிகிழமை அதிகாலை மட்டும்]

■காங்கேசன்துறை - வவுனியா ,கொழும்பு
●4018 உத்தர தேவி நகர்சேர் கடுகதி 05.30 (யாழ்ப்பாணம் 06.10)
●4880 யாழ்ராணி 06.00 (யாழ்ப்பாணம் 06.35)
[சனிக்கிழமை தவிர] [அனுராதபுரம் வரை]
●4880A யாழ்ராணி 05.45 (யாழ்ப்பாணம் 06.35)
[சனிக்கிழமை மட்டும்] [அனுராதபுரம் வரை]
●4078 யாழ் தேவி 10.00 (யாழ்ப்பாணம் 10.30)
●4022 A/C புகையிரதம் 13.15 (யாழ்ப்பாணம் 13.40) [ஞாயிற்று கிழமை மட்டும்]
●4090 இரவு தபால் புகையிரதம் 19.00 (யாழ்ப்பாணம் 19.40)
●4092 யாழ் நிலா புகையிரதம் 21.30 (யாழ்ப்பாணம் 22.00) [ஞாயிற்று கிழமை
மட்டும்]

■வவுனியா -கொழும்பு
●4018 உத்தர தேவி நகர்சேர் கடுகதி 08.09
●4880 ,4880 A யாழ்ராணி 09.14
[சனிக்கிழமை தவிர] [அனுராதபுரம் வரை]
●4078 யாழ் தேவி 12.50
●4022 A/C புகையிரதம் 15.30 [ஞாயிற்று கிழமை மட்டும்]
●4090 இரவு தபால் புகையிரதம் 22.26
●4092 யாழ் நிலா புகையிரதம் 00.04 [ஞாயிற்று கிழமை மட்டும்]

நன்றி

19/10/2023

Sri Lanka 🇱🇰 🏏 Sqaud Summary

Sep 26:
Sri Lanka Squad: Dasun Shanaka (c), Kusal Mendis, Kusal Perera, Pathum Nissanka, Dimuth Karunaratne, Sadeera Samarawickrama, Charith Asalanka, Dhananjaya de Silva, Dushan Hemantha, Maheesh Theekshana, Dunith Wellalage, Kasun Rajitha, Matheesha Pathirana, Lahiru Kumara, Dilshan Madushanka

Travelling Reserve: Chamika Karunaratne

Oct 15:
Sri Lanka Squad: Kusal Mendis (c), Kusal Perera, Pathum Nissanka, Dimuth Karunaratne, Sadeera Samarawickrama, Charith Asalanka, Chamika Karunaratne, Dhananjaya de Silva, Dushan Hemantha, Maheesh Theekshana, Dunith Wellalage, Kasun Rajitha, Matheesha Pathirana, Lahiru Kumara, Dilshan Madushanka

Travelling Reserve: Dasun Shanaka

Oct 19:
Sri Lanka Squad: Kusal Mendis (c), Kusal Perera, Pathum Nissanka, Dimuth Karunaratne, Sadeera Samarawickrama, Charith Asalanka, Chamika Karunaratne, Dhananjaya de Silva, Dushan Hemantha, Maheesh Theekshana, Dunith Wellalage, Kasun Rajitha, Matheesha Pathirana, Lahiru Kumara, Dilshan Madushanka

Travelling Reserve: Dasun Shanaka, Angelo Mathews, Dushmantha Chameera

16/10/2023

Leo Ticket Prince in

5000/=
3000/=
2000 /=

நல்லாவோ இருக்கமாட்டிங்கடா

ஆக மொத்தம் 58 நாள் 😅
15/10/2023

ஆக மொத்தம் 58 நாள் 😅

14/10/2023

இன்று புரட்டாசி அமாவாசை

இன்றுடன் நிறைவடையும் மஹாளயம்

மஹாளயம்’ என்றால் `பெரிய கூட்டம் என்று பொருள்’. மஹாளயத்தின் சிறப்பிற்குக் காரணம் இருக்கிறது. ஆடி அமாவாசைக்கு, பித்ருக்கள் உலகத்திலிருந்து இந்த நில உலகத்திற்கு வருகின்றார்கள். பித்ருக்கள் உலகம் என்பது உடலைவிட்ட ஆன்மாக்கள் தங்களுக்கு வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். பித்ரு லோகம் எங்கே இருக்கிறது என்பது ஒரு கேள்வி? பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும் நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24) கூறுகிறது. மறைந்த நம் முன்னோர், மொத்தமாக நம் வீடு தேடி வரும் காலமே மஹாளயபட்சம். “பட்சம்” என்றால் பதினைந்து நாள்கள். மறைந்த நம் முன்னோர்கள், பித்ருலோகத்திலிருந்து இந்தப் பதினைந்து நாட்கள் நம்மோடு தங்குகிறார்கள்.

13/10/2023

💯

08/10/2023

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது.

07/10/2023

மேல் , சப்ரகமுவ, தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டவியல் திணைக்களம்

06/10/2023

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (08) காலை 08.00 மணிவரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், கொழும்பு – 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது..

🚨Litro சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு (4) அதிகரிப்பின் பின் மாவட்ட ரீதியிலான புதிய விலைகள் .
05/10/2023

🚨Litro சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு (4) அதிகரிப்பின் பின் மாவட்ட ரீதியிலான புதிய விலைகள் .

04/10/2023

🚨2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்-

Address

Colombo, Western
Colombo
01

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nanban - நண்பன் - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category