Kick - கிக்

Kick - கிக் magazine for youths

சன் பிக்சர்ஸின் ‘பீஸ்ட்’ படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர் விஜய் - இயக்குநர் நெல்சன் திலீப் குமார்  |
11/12/2021

சன் பிக்சர்ஸின் ‘பீஸ்ட்’ படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர் விஜய் - இயக்குநர் நெல்சன் திலீப் குமார்
|

கடந்த வார ஜிகினா கேள்வி பதில்கள்...⚫️ பேஸ்புக் பாவனையை நிறுத்த எண்ணியுள்ளேன் ஜிகினா?▪️ நமனாதன் - மட்டக்குளி ❗️ நான் தொலை...
10/12/2021

கடந்த வார ஜிகினா கேள்வி பதில்கள்...

⚫️ பேஸ்புக் பாவனையை நிறுத்த எண்ணியுள்ளேன் ஜிகினா?
▪️ நமனாதன் - மட்டக்குளி
❗️ நான் தொலைக்காட்சி செய்திகளையே பார்ப்பதில்லை. இப்போ கூலாக இருக்கிறேன்.. நல்லதும் கெட்டதும் நாம் தேடிக்கொள்வதே..

⚫️ கேஸ் சிலிண்டரை வீடுகளில் ஆண்கள் மட்டும் தானா பொருத்த வேண்டும்?
▪️ ஹரன் - புத்தளம்
❗️ வீடுகளில் பெண்கள் மட்டும் தான் சமைக்க வேண்டுமென கட்டாயம் இருக்கிறதா ஹரன்?.

⚫️ உங்கள் பதில்கள் சற்று ஆபாசம் கலந்ததாக இருக்கிறதே ஜிகினா? கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படக் கூடாதா?
▪️ நிரோஷா - ராஜகிரிய
❗️ ஓ! அப்படியா. உங்களின் கருத்துக்கு மதிப்பளித்து இனி அப்படி அதிகமில்லாமல் வரையறை செய்துகொள்கிறேன் அக்கா. ஆனால், சைவம் அசைவம் இருப்பதுபோல் இது அசைவ பகுதி (ஹா.. ஹா..)

⚫️ கடந்த ஒரு வருடகாலமாக தொழில் இல்லாமல் இருக்கிறேன். யாரும் மதிக்க மறுக்கிறார்கள் ஜிகினா?
▪️ தஸ்லிம் - சம்மாந்துறை
❗️ தொழில் இல்லாமல் இருந்தால் முதலில் வீட்டிலேயே மதிக்கமாட்டார்கள். இதையெல்லாம் நினைத்து கவலைப்படாமல் கிடைக்கும் தொழிலொன்றை பெற்று அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்.

⚫️ ஜிகினாவின் பொழுதுபோக்கு யாதோ?
▪️ மெண்டிஸ் - வத்தளை
❗️ வெட்டிக்கேள்விகளுக்கு பதிலளிப்பது தான்.

⚫️ தாயா, தாரமா ஆணுக்கு முக்கியம்?
▪️ சத்யா - மட்டக்களப்பு
❗️ வலது கண்ணா இடது கண்ணா முக்கியமென கேட்காதீர்கள். இரண்டுமே முக்கியம்.

⚫️ பெண்களுக்கு அழகா, குணமா முக்கியம்?
▪️ ரேகா - அவிசாவளை
❗️ முன்னர் ஒருகாலத்தில் டயானாவா, தெரேசா அம்மையாரா மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவரென்று அறிய ஆய்வு நடத்தப்பட்டதாம். அதில் பெரும்பான்மையானோர் டயானாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார்களாம். சமூகத்துக்கு யார் என்ன செய்தாலும் சமூகம் எதை விரும்புகிறது என்பதை பார்த்தீர்களா?

⚫️ எனது மகன் எப்போது பார்த்தாலும் கைத்தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறானே. அதற்கு தீர்வில்லையா?
▪️ சதாசிவம் - வட்டவளை
❗️ இது இப்போது பெற்றோர் முன்னுள்ள பெரும் சவால். பிள்ளைகளை விளையாட்டுகள் மற்றும் இதர பொழுதுபோக்கு பயிற்சிகளில் ஈடுபட பழக்க வேண்டும். ஓய்வு நேரங்களில் அவர்களை புத்தக வாசிப்புக்கு பழக்க வேண்டும்.

⚫️ பாடசாலைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது பற்றிய உங்களின் கருத்தென்னவோ?
▪️ இரத்தினராஜா - திருகோணமலை
❗️ அடியாத மாடு படியாது. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டர். ஆனாலும் அடிப்பது மட்டும் தீர்வல்ல. அடிக்கிற கைதான் அணைக்கும் உங்களுக்கு தெரியாதா?

⚫️ ரீட்டாவின் அம்மாவுக்கு 3 பிள்ளைகள். ஒருவரின் பெயர் ரேகா, மற்றவர் சேஷா. இன்னொருவரின் பெயர் என்ன, கூறுங்கள் பார்க்கலாம்?
▪️ வினோத் - தெஹிவளை
❗️ நான் நிஷா என்று கூறுவேன் என்று நினைத்தீர்களாக்கும். இதெல்லாம் பழைய ஜோக்ஸ் ஹி... ஹி... அவர் பெயர் ரீட்டா.

தமிழன் வார இதழுடன் இலவச இணைப்பிதழாக... கிக்
24/11/2021

தமிழன் வார இதழுடன் இலவச இணைப்பிதழாக... கிக்

Address

91, Wijerama Mawatha, Colombo 7
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Kick - கிக் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kick - கிக்:

Share

Category

Nearby media companies