BCC TAMIL

BCC TAMIL BCC TAMIL NEWS �உடனுக்கு உடன் உறிதிப்படுத்தப?

17/10/2022

BCC NEWS

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை குறைவடைந்துள்ளது...
2022,October 17

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாக குறைவடைந்துள்ளது. அதன் சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாக காணப்படுகிறது.சிறப்பு அங்காடிகளில் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலை 200 முதல் 210 ரூபா வரை விற்கப்படுகிறது.

உள்நாட்டின் வெள்ளை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. புறக்கோட்டையில் மாத்திரமன்றி, குருநாகல், மாத்தறை, பொலனறுவை, தென் மாகாணத்தின் பல நகரங்களிலும் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது.

*BCC NEWS* *கொழும்பில் 12 மணித்தியால நீர் வெட்டு....*2022,October 13➡️கொழும்பின் சில பகுதிகளில் *12 மணிநேர நீர் வெட்டு அ...
13/10/2022

*BCC NEWS*

*கொழும்பில் 12 மணித்தியால நீர் வெட்டு....*
2022,October 13

➡️கொழும்பின் சில பகுதிகளில் *12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.அதன்படி, சனிக்கிழமை (15) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (16) காலை 10.00 மணி வரை நீர்வெட்டு* அமுல்படுத்தப்படவுள்ளது.

*➡️கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும்* என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
*
GROUP 1👇* *https://chat.whatsapp.com/K3hqVURccjdCwWvxAaRSo8*

*GROUP 2👇* *https://chat.whatsapp.com/H47QAq7hyo452cdwYirs68*

*BCC NEWS* *வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்..*2022,October 13➡️தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் *அனைத்து வா...
13/10/2022

*BCC NEWS*

*வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்..*
2022,October 13

➡️தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் *அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக* தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது.

➡️இந்நிலையில், *மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகரிக்காமலும், 60 கிலோமீற்றர் வேகத்திற்கு குறையாத வகையிலும் பயணிக்குமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும் 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை என்பதோடு, அவதானத்துடன் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீ்ற்றருக்கும் அதிகரிக்காத வேகனத்தில் பயணிக்க முடியும்* எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➡️அத்துடன் *முகில் கூட்டங்கள் காணப்படுவதனால் சாரதிகள் மின் விளக்கினை ஒளிரச்செய்தப்படி பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் வேறு தகவல்கள் அவசியமாயின் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்றடுத்துமாறும்* தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் கேட்டுக்கொண்டுள்ளது
*GROUP 1👇* *https://chat.whatsapp.com/K3hqVURccjdCwWvxAaRSo8*

*GROUP 2👇* *https://chat.whatsapp.com/H47QAq7hyo452cdwYirs68*

02/08/2022
02/08/2022

நாவலப்பிட்டி கெட்டப்புல்லா தோட்டம்

*BCC NEWS* ➡️*BCC NEWS2022, June 01*➡️பிரபல பின்னணி பாடகர் இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடும்போது மாரடைப்பால் மரணம். பிரத...
31/05/2022

*BCC NEWS*

➡️*BCC NEWS
2022, June 01

*➡️பிரபல பின்னணி பாடகர் இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடும்போது மாரடைப்பால் மரணம். பிரதமர் இரங்கல்.

➡️பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர் கிருஷ்ணகாந்த் என்கிற கே.கே ( 53).

➡️இவர் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிரிழந்தார்.

➡️இவர் தமிழில் "காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.. உயிரின் உயிரே உயிரின் உயிரே... நினைத்து நினைத்து பார்த்தேன்... போன்ற பிரபலமான பாடல்களை பாடினார்.

➡️இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி என கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறார் கே.கே.

➡️இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர் ,, அதேவேளையில் பிரதமர் மோடியும் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

| | .

➡️
*GROUP. 01*👇 *https://chat.whatsapp.com/K3hqVURccjdCwWvxAaRSo8

*GROUP. 02👇* *https://chat.whatsapp.com/H47QAq7hyo452cdwYirs68*

O/L சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!!கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை தொ...
02/03/2022

O/L சித்தியடையாத மாணவர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்களை தொழில் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற கல்லி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி, சித்தி பெறாத சுமார் 98,000 மாணவர்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு சித்தி பெறாத மாணவர்களின் தகவல்களை, பரீட்சைகள் திணைக்களம், தமக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜங்க அமைச்சு மற்றும் மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான மாணவர்களுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமளவிலான வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாட்டிலும் இவ்வாறான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள www.dome.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்குமாறு மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல கேட்டுக்கொண்டுள்ளார்.

90,000 மெற்றிக் தொன் சீன உரம் இறக்குமதி!!!எதிர்காலத்தில் சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எத...
12/01/2022

90,000 மெற்றிக் தொன் சீன உரம் இறக்குமதி!!!
எதிர்காலத்தில் சீனாவில் இருந்து 90,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

எதிர்வரும் பருவத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் சீன உர கையிருப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னர் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பலில் இருந்து உரம் எடுக்கப்பட மாட்டாது என்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் பல பகுதிகளில் கன மழை!!!வட கீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்ட...
04/01/2022

இன்றும் பல பகுதிகளில் கன மழை!!!
வட கீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, மேல், வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மேல், சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அதிக மழை காரணமாக பராக்கிரம சமுத்திரம் உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளன.

டிக் டொக் சர்ச்சை! - 17 வயது இளைஞர் குத்தி கொலை!!!கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டுள்...
04/01/2022

டிக் டொக் சர்ச்சை! - 17 வயது இளைஞர் குத்தி கொலை!!!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

17 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிக் டொக் காணொளி தொடர்பான தகராறில் குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதம்பிட்டிய லேனில் வைத்து குறித்த இளைஞரை கத்தியால் குத்தியதாகவும், இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரும் மேலும் இருவர் ரண்திய உயன வீட்டுத் தொகுதியை நோக்கி பயணித்ததாகவும், டிக் டொக் காணொளி தொடர்பாக ஒரு குழுவினர் அவர்களை தாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், பாதிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்தியதுடன், சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரமான செயல் ; தந்தை கைது!!!ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்தி...
03/01/2022

பெற்ற பிள்ளைகளுக்கு தந்தை செய்த கொடூரமான செயல் ; தந்தை கைது!!!
ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் 7 வயது சகோதரியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.
அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கிழயதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

திடீரென விலை குறைவடைந்த முக்கிய இரு உணவுப் பொருட்கள்!!!அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்ச...
03/01/2022

திடீரென விலை குறைவடைந்த முக்கிய இரு உணவுப் பொருட்கள்!!!
அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரையும், முட்டை ஒன்றின் விலை 3 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது.
26 ரூபாயாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

750 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 690 - 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை - களுதாவளையில் சம்பவம்!!!களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதி களுதாவளை பிரதேச...
03/01/2022

ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை - களுதாவளையில் சம்பவம்!!!
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதி களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த (28) வதுடைய கணேசன் சோபாலினி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று முன்தினம் (1) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது புதுவருட தினத்தன்று குறித்த பெண்ணுக்கும் தனது காதலனுக்குமிடையே தொலைபேசியில் ஏற்பட்ட தகறாற்றினால் தனது வீட்டின் அறையினுள் தனக்குத்தானே சுருக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சம்பவத்தினை கண்ட குடும்பத்தினர் தூக்கிலிருந்து மீட்டெடுத்து அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வைத்தியர்கள் யுவதி இறந்துள்ளதனை உறுதிப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழு மாவட்டங்களிற்கு வந்த எச்சரிக்கை!!!ஏழு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூற...
03/01/2022

ஏழு மாவட்டங்களிற்கு வந்த எச்சரிக்கை!!!
ஏழு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதென Disaster Management Centre விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (04) காலை 9 மணிவரையிலும் இந்த சீரற்ற வானிலை தொடருமென எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வானிலை இன்று (03) பகல் 12.30 மணிக்கு ஆரம்பித்துள்ளது.

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை தீவிரமடைவதால், நாட்டின் கிழக்குப் பகுதியில் கடும் மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களே எச்சரிக்கை! இப்படியும் உணவகங்கள் உள்ளன!சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்தினை சுகாதார தரப்பினர் தற்காலிகமாக...
14/12/2021

பொதுமக்களே எச்சரிக்கை! இப்படியும் உணவகங்கள் உள்ளன!
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்தினை சுகாதார தரப்பினர் தற்காலிகமாக மூடி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றே இவ்வாறு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகளில் உள்ள வர்த்தக நிலையங்களை கரைச்சி பிரதேச சபையினரும், சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து விசேட சோதனை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த உணவகத்தில் காணப்பட்ட சுகாதார சீர்கேடு தொடர்பில் குறித்த தரப்பினால் கிளிநொச்சி சுகாதார பரிசோதகர்களிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூட பணித்துள்ளனர்.
இதேவேளை உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம்!!!சம்மாந்துறை  பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி 1 கிராம சேவையாள...
02/12/2021

சம்மாந்துறையில் கேஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம்!!!
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி 1 கிராம சேவையாளர் பகுதியில் இன்று (2)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது

இன்று காலை 10 மணியளவில் தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து வேறு வேலை செய்து கொண்டிருந்த வேளைஅவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய்பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

குறித்த எரிவாயு வெடிப்பு சம்பவத்தின் போது எதுவித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசாருக்கும் கிராமசேவகர் அலுவலருக்கும்அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது!பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்...
02/12/2021

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது!
பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம் 20 ரூபாயாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பினை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் நாளுக்கு நாள் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ கேஸ் நிறுவனம் பொது மக்களிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!!சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சோப் நுரை மற்றும் பிற பொரு...
02/12/2021

லிட்ரோ கேஸ் நிறுவனம் பொது மக்களிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!!!
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சோப் நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் பொது மக்களிடம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.
எரிவாயு சிலிண்டரை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பது ஆபத்தான நிலை என நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜானக பத்திரத்ன தெரிவித்தார்.

கடையில் இருந்து வீட்டிற்கு எரிவாயு சிலிண்டரை கொண்டு வரும்போது சீல் வைக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சீல் அகற்றப்பட்டால், ஒரு ரெகுலேட்டர் அல்லது பாதுகாப்பு மூடி இணைக்கப்பட வேண்டும்.

வால்வை திறந்து சிலிண்டரை சோதனை செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு மூடியை சரிசெய்து சிலிண்டரை வெளியில் வைத்த பின்னர் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1311 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்புக்கொள்ளுமாறும் பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

தரமற்ற கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இணைக்கும் குழாய்களால் நாட்டில் அண்மைய நாட்களில் பல எரிவாயு கசிவு வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கசிவு அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், பொதுமக்கள் சிலிண்டரை வளாகத்திற்கு வெளியே வைத்திருக்க வேண்டும் அத்துடன் 1311 ஹொட்லைன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

580 ஆண்டுகளின் பின்னர் இன்று ஏற்படவுள்ள விசேட சந்திரகிரகணம்! இலங்கைக்கு தென்படுமா!!!!சுமார் 580 ஆண்டுகளின் பின்னர் இன்று...
19/11/2021

580 ஆண்டுகளின் பின்னர் இன்று ஏற்படவுள்ள விசேட சந்திரகிரகணம்! இலங்கைக்கு தென்படுமா!!!!
சுமார் 580 ஆண்டுகளின் பின்னர் இன்று விசேட சந்திரகிரகணம் இடம்பெறும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிழக்கு பகுதி, அமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பிராந்திய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எவ்வாறெனினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் பார்வையிட முடியாது. இந்த சந்திர கிரகணம் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கும்.

இலங்கை நேரப்படி முற்பகல் 11.32 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகும். இதேவேளை, இந்த நாட்களில் ஞாயிற்றுக் குடும்பத்தின் பிரகாசமான கிரகங்களான வியாழன், சனி மற்றும் வெள்ளி கிரகங்களை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வெறும் கண்களினால் தெளிவாக பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சிறந்த விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த இலங்கையர்கள்!!உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கை...
28/10/2021

உலகின் சிறந்த விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த இலங்கையர்கள்!!
உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர்.
அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்“ இது குறிப்பிடப்பட்டுள்ளது

எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர தடுப்பு காப்பு சேவை சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற நிலையில், இந்த அறிக்கை எமது நாட்டு நிபுணர்களின் சிறப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திகா வித்தானகே, கலாநிதி அனுஷ்கா யூ ராஜபக்ஸ ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சாரதியின் தூக்க கலக்கத்தினால் ஏற்பட்ட விபத்து!!திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்...
28/10/2021

சாரதியின் தூக்க கலக்கத்தினால் ஏற்பட்ட விபத்து!!திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் கந்தளாய் குளத்தினை அண்டிய பகுதியிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!!!மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்...
12/10/2021

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!!!
மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என மேல் மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.
அதன்படி, வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பு செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், மேல் மாகாணத்தில் ஓகஸ்ட் 12, 2021 ஆம் திகதி முதல் டிசம்பர் 31, 2021 ஆம் திகதிவரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் விதிக்காது சலுகைக் காலத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து செல்லமுற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது!!!நியூஸிலாந்திற்கு கடல்மார்க்கமாக படகு மூலம் செல்லத் திட்டமிட்ட 6...
12/10/2021

நியூஸிலாந்து செல்லமுற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது!!!
நியூஸிலாந்திற்கு கடல்மார்க்கமாக படகு மூலம் செல்லத் திட்டமிட்ட 63 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் திருகோணமலை – ஓர்ஸ்ஹில் என்ற பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை திருகோணமலை பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைதாகியிருக்கின்றனர்.

கைதாகிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்உள்ளிட்ட பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறறது.
அரச புலனாய்வுப் பிரிவின் திருகோணமலை அலுவலகத்திற்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாமனாரின் கையை துண்டித்து ஆற்றில் வீசிய மருமகன் கைது!!!கிளிநொச்சி – கண்டாவளையில் மருமகனின் தாக்குதலால் இடது கை துண்டிக்க...
12/10/2021

மாமனாரின் கையை துண்டித்து ஆற்றில் வீசிய மருமகன் கைது!!!
கிளிநொச்சி – கண்டாவளையில் மருமகனின் தாக்குதலால் இடது கை துண்டிக்கப்பட்ட 57 வயதான மாமனார் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிசிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

காணி பிணக்கு காரணமாக நேற்று (11) மாலை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இன்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதுவரை காலமும் விவசாயம் செய்து வந்த மாமனாரின் காணி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான மாமனாரின் இடது கை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மருமகன் கண்டாவளையில் ஆற்றில் வீசியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 37 வயதான மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு நீக்கம்!!!இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிக...
11/10/2021

விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு நீக்கம்!!!இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு விமானத்தில் முன்பு அதிகபட்சமாக 75 பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற பயணிகளுடன் சேவையை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளது.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொத்து, தேநீர், சாப்பாட்டு பார்சல் விலைகளும் அதிகரித்தன!!!நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட ப...
11/10/2021

கொத்து, தேநீர், சாப்பாட்டு பார்சல் விலைகளும் அதிகரித்தன!!!
நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கொத்து, தேநீர்,சாப்பாட்டு பார்சல் உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திக்கோடை பிரதேசத்தில் தனது வயலினை பார்வையிடச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!!வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்க...
11/10/2021

திக்கோடை பிரதேசத்தில் தனது வயலினை பார்வையிடச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் தனது வயலினை பார்வையிடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (10) மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் களுதாவளை பிரதேசத்தைச்சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை கந்தசாமி வயது (63) என்பவரே நேற்று காலை தனது வீட்டிலிருந்து திக்கோடை பிரதேசத்தில் உள்ள தனது வயலினை பார்வையிட சென்றதாகவும் அதன் பின்னர் தனது வயலில் மயக்கமுற்று கிடந்ததனை கண்ட அருகில் நின்ற நபர் ஒருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்று கடமையில் இருந்த வைத்தியர்கள் பரிசோதித்த போது குறித்த நபர் மரணமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்டதனை உறுதிப்படுத்தியதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Kaluwanchikudy
Batticaloa
30200

Alerts

Be the first to know and let us send you an email when BCC TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCC TAMIL:

Videos

Share


Other Media/News Companies in Batticaloa

Show All

You may also like