Netrikkan நெற்றிக்கண்

Netrikkan நெற்றிக்கண் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”
(1)

17/10/2024

தாயகம் ஒற்றுமையுற தமிழரசு வலிமை பெற அ.கருணாகரன் அவர்களை பாராளுமண்றம் அனுப்புவோம்!

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

காத்தான்குடியிலிருந்து சைக்கிளில்  கொழும்பிற்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் அலுவல...
14/10/2024

காத்தான்குடியிலிருந்து சைக்கிளில் கொழும்பிற்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்த மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கின்றார் எஸ்.வியாழேந்தின்!
11/10/2024

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கின்றார் எஸ்.வியாழேந்தின்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜனாதிபதி அனுர குமார தலமையிலான தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள தேசியப...
11/10/2024

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஜனாதிபதி அனுர குமார தலமையிலான தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளார். இலங்கை தேசியப்பட்டியலில் இவ்வாறான ஒரு வேட்பாளர் உள்வாங்கப்பட்டமை இந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜ...
11/10/2024

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு...
10/10/2024

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது இலங்கை தமிழரசு கட்சி!
10/10/2024

யாழ் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது இலங்கை தமிழரசு கட்சி!

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் “மரச்” சின்னத்தில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா...
10/10/2024

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் “மரச்” சின்னத்தில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஏனைய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடப் போவதில்லை என அறிவித்து...
10/10/2024

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியில் முன்னாள் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் யாழ் / கிளி தேர்தல் மாவடத்தில் போட்டிய...
09/10/2024

தமிழ் மக்கள் கூட்டணியில் முன்னாள் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் யாழ் / கிளி தேர்தல் மாவடத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று கட்டுப்பணம் செலுத்தினார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் தலைமையில் பொதுத்தேர்தலில் குதிக்கவுள்ள ஜனநா...
09/10/2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம் தலைமையில் பொதுத்தேர்தலில் குதிக்கவுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்

தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உமாகரன்..!தமிழரசுக் கட்சியில் இருந்தும், இதுவரை தமிழரசுக் கட்சிக்கு வ...
07/10/2024

தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய சட்டத்தரணி உமாகரன்..!

தமிழரசுக் கட்சியில் இருந்தும், இதுவரை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி வந்த ஆதவில் இருந்தும் விலகிக் கொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி உமாகரன் ராசையா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் சிலர் கட்சிக்குள் இருக்கும் வரை மீண்டும் கட்சியோடு இணைந்து செயற்படப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தலைவரால் காட்டப்பட்ட சின்னம் என்ற வகையில் நாங்கள் தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவும், மற்றும் தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தெடாடர்ச்சியான ஆதவையும் இதுவரை நாட்கள் நாங்கள் வழங்கி வந்தோம்.

நாடாளுமன்றத் தேர்தல் உட்பட கடந்த காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் கட்சிக்காக பணியாற்றியுள்ளோம். கட்சி சார்ந்த வழக்குகளில் முன்னிலையாகியிருக்கின்றோம். குறிப்பாக ஊதியம் ஏதும் இன்றி கட்சி சார்ந்த வழக்குகளில் முன்னிலையாகியிருக்கின்றோம்.

இவ்வாறு நாங்கள் தொடர்ச்சியாக கட்சியோடு நின்ற போதிலும், நான் உட்பட ஏராளமான புத்திஜீவிகளும், இளம் சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட இதர தொழிலில் இருக்கக் கூடியவர்களும், கட்சியினுடைய விசுவாசிகளும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட நிலைப்பாட்டை சமகால வேட்பாளர் தெரிவில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதன் அடிப்படையில் கட்சியின் சகல நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதோடு, கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தும் நாங்கள் விலகிக் கொள்கின்றோம்.

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும், தமிழ்த் தேசிய கொள்கைக்கும் நலன்களுக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயற்படும் நபர்கள் அந்தக் கட்சிக்குள் இருக்கும் வரைக்கும் மீள அந்தக் கட்சியோடு இணைந்து செயற்பட மாட்டோம் என்ற முடிவை அறிவிக்கின்றோம்.

நானும், என்னோடு இருக்கும் ஆதரவாளர்களும் கட்சிக்கு ஆதரவு வழங்குவதை தளர்த்திக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ...
05/10/2024

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று (5) கூடியது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது.

இந்நிலையில் அக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.

இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonz...
02/10/2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர தொடர்புகள் மற்றும் நட்புறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த கியூபா தூதுவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை பலப்படுத்த கியூபா எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் டெங்கு ஒழிப்புக்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு கியூபா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படுமென இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

டெங்கு ஒழிப்புச் செயற்பாடுகளில் கியூபா பெற்றுள்ள வெற்றிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கியூபா தூதுவர், இலங்கைக்கு டெங்கு ஒழிப்புக்கு அவசியமாக பொதுச் சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கரிசனையோடு அணுகுங்கள்: ஜனாதிபதி உடனான சந்திப்பில் மேனாள் எம்.பி.சிறீதரன் கோரிக்கை.!ஜனாதிப...
01/10/2024

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கரிசனையோடு அணுகுங்கள்: ஜனாதிபதி உடனான சந்திப்பில் மேனாள் எம்.பி.சிறீதரன் கோரிக்கை.!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துரைத்த சிறீதரன், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் எழுத்துமூல கோரிக்கைக் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் நேரில் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலமாறுதல்களின் அடிப்படையில், இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்த எமது மக்களின் ஆணையை ஏற்று, இலங்கைத் தீவின் 9வது சனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் ஆட்சி, அதிகாரங்களின் மீது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைப் போலவே, இலங்கைத் தீவின் சுதேசிய இனத்தவர்களான ஈழத்தமிழர்களும், தமது அடிப்படை உரித்துகள் மீதான சாதக நகர்வுகள் தங்கள் ஆட்சிக்காலத்திலேனும் ஈடேறும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் என்ற செய்தியை, அந்த மக்களின் பிரதிநிதியாக தங்களிடத்தே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

கடந்த ஏழரைதசாப்த காலமாக இந்த நாட்டில், ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள நேர்ந்த இனவன்முறைப் பாதிப்புகள், அவற்றுக்கு நீதிகோரி மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்தேறிய போரின் விளைவுகள், போர் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் வலிந்து மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத, மொழி மற்றும் கலாசாரப் படுகொலைகள், கைதுகள், காணமலாக்கல்கள் உள்ளிட்ட துயரச் சம்பவங்கள் தினம்தினம் அரங்கேற்றப்பட்டு வருவதை அறிந்திருப்பதைப் போலவே, தங்கள் ஆட்சியில் அத்தகைய துயர வரலாறுகள் இடம்பெறாதிருக்கும் என்ற எமது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையையும் தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அந்தவகையில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி, மீள நிகழாமையை உறுதிசெய்தல், தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலை, மதத்தின் பெயரால் நடைபெறும் நிலப்பறிப்புகள் உள்ளிட்ட விடயங்களில் தங்களின் துரிதமானதும், சாதகமானதுமான நகர்வுகளையும், நடவடிக்கைகளையும் கோரி நிற்கிறேன்.

சமநேரத்தில், போர்க்காலச் சூழலில் இனத்திற்காகப் போராடி மடிந்த தமது புதல்வர்களை நினைவேந்தும் உரிமை கூட மறுக்கப்பட்ட இந்த தேசத்தில், போரியல் இயக்கம் ஒன்றின் வழிவந்த ஒருவராக எமது மக்களின் அக உணர்வுகளையும், அதிலுள்ள நியாயாதிக்கங்களையும் உணர்ந்து செயற்படும் மக்கள் தலைவராக, நாட்டின் நல்லிணக்கத்திற்கு துளியேனும் பாதிப்பை ஏற்படுத்தாத, உணர்வுநிலைப்பட்ட நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு, எமது மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரித்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும் தங்களைத் தயவோடு கோரிநிற்கிறேன்.

அதற்கமைய, ஈழத்தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளையும், அபிலாசைகளையும் உணர்ந்தும், ஏற்றும் செயற்படத்தக்க அரசியற் கூருணர்வும், சகோதரத்துவமும் மிக்க தங்களின் ஆட்சிக்காலம், இலங்கைத் தீவின் துயர வரலாறுகளை மீள நிகழ்த்தாத காலமாக, தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு நோக்கிய வரலாற்றின் திருப்பங்கள் நிகழும் காலமாக அமையவேண்டுமெனக் கோருவதோடு, அத்தகைய நகர்வுகள் சார்ந்த தங்களின் பயணத்தில் எமது பரிபூரண ஒத்துழைப்பு உங்களோடு இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என்றுள்ளது.

இன்று (01) முற்பகல்  ஜனாதிபதி அநுர குமார திசாயாயக்க மற்றும்  இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இடையே சந்திப...
01/10/2024

இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாயாயக்க மற்றும் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புதிய ஆட்சிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த தூதுவர் எஸ். ஜகார்யன, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தெரிவித்துக்கொண்டார்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இராஜதந்திர உறவுகளை பரஸ்பரம் மேம்படுத்துவதற்கு இரு தரப்பினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு, கலாசாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ...
01/10/2024

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

30/09/2024

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளது.*

பெட்ரோல் ஒக்டேன் 92 - 21 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 311

ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ.283

சூப்பர் டீசல் ரூ.33 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.319

மண்ணெண்ணெய் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ஆக உள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையில் மாற்றம் இல்லை.

தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் (28.09.2024) வவுனியாவில் உள்...
28/09/2024

தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் (28.09.2024) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.

மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிறிநேசன் ,சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட  உரையில் கூறியதாவது:**இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ...
25/09/2024

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் கூறியதாவது:*

*இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.*

*இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன்.*

*இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.*

*அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.*

*அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன். அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. அது இன்று இருப்பதை விடவும் சிறந்த நாடாகும்.*

*ஆனாலும், பல வருடங்களாக அது கனவாகவே போய்விட்டது என்பதையும் நானும் அறிவேன். சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம்,சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது.*

*இருப்பினும், எமக்கு வரலாற்றில் நழுவவிட முடியாத சந்தர்ப்பமொன்று கிடைத்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம்.*

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஏர்பூட்டு விழா! வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ...
25/09/2024

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஏர்பூட்டு விழா!


வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய ஏர் பூட்டு விழா நேற்று (24-09-2024)ஆம் திகதி விழாக்குழுத் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள், ஆலய குரு சிவஸ்ரீ வ. ஜோதிலிங்க குருக்கள் ஆசியோடு நிகழ்வு ஆலய காணியில் ஆரம்பமானது.

நிகழ்வில் அதிதிகளாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், பட்டிப்பளை பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் கலாபூஷணம் ஞானபேரின்பம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்களான இ. மேகராசா( தலைவர் ), சி.கங்காதரன்( செயலாளர் ),ச. கோகுலகிருஷ்ணன் ( பொருளாளர்) ஆகியோர் ஏர் பூட்டு விழாவை சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்கள்.

நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச முன்னாள் தவிசாளர் அதிபர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் விவசாயப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்படத்தக்கது.

பொதுத்தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கும், ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொ...
24/09/2024

பொதுத்தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கும், ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கும் திகதியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.பாராளுமன்றதத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்....
24/09/2024

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

பாராளுமன்றதத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்.

அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.

24/09/2024
உலகின் மூத்த மொழியான தமிழில் மொழியில்  இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்கூறிய  பிரான்ஸ் அதிபர்.
24/09/2024

உலகின் மூத்த மொழியான தமிழில் மொழியில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்கூறிய பிரான்ஸ் அதிபர்.

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Netrikkan நெற்றிக்கண் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrikkan நெற்றிக்கண்:

Videos

Share

Category