Mann Nala Maiyam

Mann Nala Maiyam மண் நலமே மக்கள் நலம்

வணக்கம். மண் நல மையம் வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி தற்போது செய...
01/07/2024

வணக்கம்.
மண் நல மையம் வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி தற்போது செயல்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து மண்நல மையம் கிராமக் கிளைகள் உருவாக்கி விவசாயிகளுக்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண துணை நிற்பது தான் மண் நல மையத்தின் அடிப்படை வேலை இந்த பணியில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க விவசாயம் படித்து வந்திருக்கும் இளைஞர்கள் தன்னார்வத்தோடு கருத்தாளர்களாக பணியாற்ற அழைக்கிறோம்.
அவர்களுக்கான நிரந்தர வேலைக்கு கிடைக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.
இந்த பணி அவர்களுக்கு ஒரு சிறந்த களப்பயிற்சியாக அமையும்.
இதில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம். உத்தேசமாக , 07.07. 2024 ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்படுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
வாழ்த்துக்களுடன், கு.செந்தமிழ் செல்வன் ஒருங்கிணைப்பாளர் மண்நல மையம்

9443032436

விண்ணப்பத்தை நிரப்பவும் https://forms.gle/TFqXtH4pJnAmy4mo9

Senthamil Selvan

03/03/2024

அறிவுத்தோட்டம், காளாம்பட்டு,
இலத்தேரி அருகில்
வேலூர் மாவட்டம்.

வணக்கம்.

10.03.2024, ஞாயிறு அன்று
இயற்கை ஆர்வலர்கள் மற்றும்
இயற்கை விவசாயிகள் சந்திப்பு
அறிவுத் தோட்டத்தில் நடைபெறுகிறது.

இயற்கை ஆர்வலர்கள் இயற்கை விவசாயம் குறித்து
நேரில் கண்டறிய இந்த வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

இயற்கை விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் தயாரிப்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வங்கியில் கிடைக்கும் கடன் வசதிகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்க
இருக்கிறோம்.

முகாம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

குறித்த நேரத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 9443032436 எண்ணில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

அன்புடன்,
கு.செந்தமிழ் செல்வன்
அறிவுத் தோட்டம்
94430 32436

மக்கள்  நலச்சந்தையின் பொங்கல் சிறப்பு சந்தை
13/01/2024

மக்கள் நலச்சந்தையின்
பொங்கல் சிறப்பு சந்தை

நாளை, 13 .01 .2024 சனிக்கிழமை, மக்கள் நலச் சந்தையின் பொங்கல் சிறப்பு சந்தை திருமகள் திருமண மண்டபம் காந்திநகர் வேலூரில் ந...
12/01/2024

நாளை, 13 .01 .2024 சனிக்கிழமை,
மக்கள் நலச் சந்தையின் பொங்கல் சிறப்பு சந்தை திருமகள் திருமண மண்டபம் காந்திநகர் வேலூரில் நடைபெறுகிறது.
இந்த மாதம் மட்டும் மண்டபத்தின் முதல் மாடியில் சந்தை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .
பொங்கல் திருநாளையொட்டி பல சிறப்பு பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அவசியம் சந்தைக்கு வர அன்புடன் அழைக்கிறோம்.
கு. செந்தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை

Makkal Nala Santhai
09/01/2024

Makkal Nala Santhai

Young student scientist program 2023Today .80 students from 40 Govt Schools from Ranipet and Vellore districts participa...
29/12/2023

Young student scientist program 2023
Today .
80 students from 40 Govt Schools from Ranipet and Vellore districts participated.
This project is supported by Tamil Nadu state council for Science and technology.
It's a great opportunity to host them in our farm and explain them the concept of organic farming.
Many of the students are from Agriculture family.They got inspired and we can expect some results in their farm.
Thanks to Auxilium College which is the project implementation organisation.

நாளை, 15.11.2023, புதன்கிழமை மக்கள் நலச்சந்தையின் வாரச்சந்தை நடைபெறுகிறது. தவறாமல் வருகை தாருங்கள்
14/11/2023

நாளை, 15.11.2023, புதன்கிழமை மக்கள் நலச்சந்தையின் வாரச்சந்தை நடைபெறுகிறது. தவறாமல் வருகை தாருங்கள்

மக்கள் நலச் சந்தையின் தீபாவளி சிறப்புச்சந்தை 11.11.2023 சனிக்கிழ்மை அன்று மிக உற்சாகத்துடன் நடைபெற்றது.மக்கள் திரளாக வந்...
13/11/2023

மக்கள் நலச் சந்தையின் தீபாவளி சிறப்புச்சந்தை 11.11.2023 சனிக்கிழ்மை அன்று மிக உற்சாகத்துடன் நடைபெற்றது.
மக்கள் திரளாக வந்திருந்து வாங்கி ஆதரவளித்தது மிக மகிழ்ச்சியான தருணங்கள். நுகர்வோர்களும் விவசாயிகளும் தொழில் முனைவோர்களும் மன நிறைவுடன் சென்றனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்பாக மரு . தில்லை வாணன் அவரிகளின் உரை அமைந்தது. நோயில்லா வாழ்விற்கு நச்சில்லா இயற்கை உணவு என்ற தலைப்பில் எளியமையாக கருத்துக்களை முன் வைத்தார்.பெரிய பெரிய மேடைகளுக்கு போட்டியிடும் சமுதாயத்தில் மக்களுடன் சந்தையிலேயே உரையாடி கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு மகிழ்ச்சியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடன், மரு.பிரவீன்குமார், திரு தமிழ் செல்வன் , திரு அருட் செல்வன் அவர்கலையும் அழைத்துவந்து நிறப்பித்தது மகிழ்ச்சி. திரு செ.நா. ஜனார்தனன, துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அவர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி.
18 மாதங்களாக மக்கள் நலச் சந்தை தனது தொடர்பு வட்டத்தினைப் பெரிதாக்கிக் கொண்டே முன்னேறுகிறது.
தொடர்ந்து மக்கள் ஆதராவுடன் மேலும் முன்னேறுவோம்
அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
கு,செந்தமிழ் செல்வன்
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் நலச் சந்தை
9443032436

09/11/2023
04/11/2023
அன்புடையீர் , வணக்கம்.மக்கள் நலச் சந்தை கடந்த  ஓராண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இது ஒரு தனித்துவமானச் சந்தை...
17/10/2023

அன்புடையீர் ,
வணக்கம்.
மக்கள் நலச் சந்தை கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒரு தனித்துவமானச் சந்தை:
 இயற்கை விவசாய உற்பத்தியில் காய்கறிகள் பழங்கள் கீரைகள் விற்பனை
 பாரம்பரிய அரிசி வகைகள் , மரச் செக்கு எண்ணெய் வகைகள், தேன் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள்
 விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நேரிடையாக நுகர்வோர்களுக்கு விற்பனை
 அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் நியாய விலையில் விற்பனை
 ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாதாந்திர சந்தை நடைபெறும் . இதுவரை 12 மாதாந்திரச் சந்தை நடைபெற்றுள்ளது.
மாதச் சந்தை நடைபெறும் இடம்: திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூர் 632006
 ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் வாரச்சந்தையும் நடைபெறுகிறது. காலை 6.00 முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது. நடைபெறும் இடம் : அசோக் பிளாண்ட் நர்சரி, காந்தி நகர், வேலூர் இதுவரை 20 வாரச் சந்தை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
 முதலாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் 2023, ஜூன், 10 & 11 தேதி களில் நடைபெற்றது. சிறப்புக் கண்காட்சி, மாண்வரகளுக்கு போட்டிகள், ஆண்களுக்கு சமையல் போட்டிகள் இன்னும் நிறைய நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

மக்கள் நலச் சந்தை தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவிக்க மூன்று வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இதில் 2500 உறுப்பினர்கள் தகவல் பெற்று வருகின்றனர். பிற இணைப்புள்ள குழுக்களிலும் பகிரப்படுகிறது. இயற்கை விவசாயப் பொருட்களின் சிறப்பு ,பாரம்பரிய அரிசிகளின் பயன்கள், பழங்களின் மகத்துவம் போன்ற பல பயனுள்ள தகவால்கள் மக்கள் அறிந்து கொள்ள பகிரப்படுகிறது. பலர் இந்த பகிர்வுகளைப்பாராட்டி வருகின்றனர்.
புதிதாக இணைய விருப்புபவர்கள் “MN santhai News 3“ என்ற குழுவில் கீழ்கண்ட இணைப்பின் வழி குழுவில் இணைய வேண்டுகிறோம்.
https://chat.whatsapp.com/JkwUXVJcvIfBvv3ig7C7CW
தங்களது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கீழ்கண்ட எனது எண்ணிற்கு தெரியப்படுத்தலாம்.
மூன்று குழுவிலும் ஒரே தகவல்தான் பகிரப்படும். ஏற்கனவே உள்ள இரண்டு குழுவில் இருப்பவர்கள் இந்தக் குழுவில் இணைவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.
இது உள்ளூர் சந்தைக்கானது. எனவே, வெளி நாட்டு எண்களை அனுமதிக்க இயலாது.
தங்கள் மூலமே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்குத் தகவல் சேரும். தவறாமல் அவர்கள் இணைவதை உறுதிப்படுத்துங்கள்.
இது
விற்கும் இடமல்ல
கற்கும் களம்.
இது
வியாபாரத்திற்கானது அல்ல
விசை கொள்ள வேண்டிய இயக்கத்தின் ஒரு புள்ளி
இயற்கை விவசாயம் ஆதரிப்போம்
ஆரோக்கியமன உணவு உண்பதை
அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவோம்
இயற்கை நேசிப்பில்,
கு.செந்தமிழ் செல்வன்,
ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை 9443032436

14.10.2023 அன்று,  மக்கள் நலச்சந்தையின் மாதாந்திர சிறப்பு சந்தையில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் சந்திப்பு.சிறப...
17/10/2023

14.10.2023 அன்று, மக்கள் நலச்சந்தையின் மாதாந்திர சிறப்பு சந்தையில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் சந்திப்பு.
சிறப்பு தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது.
அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்.

அடுத்த மாதம் தீபாவளி சிறப்பு சந்தை...
விரைவில் புதிய திட்டங்கள் அறிவிப்பு வருகிறது...
Senthamil Selvan
Makkal Nala Santhai

Address

Vellore

Telephone

+919443032436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mann Nala Maiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mann Nala Maiyam:

Videos

Share

Category

Nearby media companies