05/04/2023
.....
🎀கத்தோலிக்கசபைக்கு எதிராக
மார்ட்டீன்லூத்தர் 95காரியங்கள் வைத்தார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் என்னவென்று தெரியாது இதோ உங்களுக்காக..🎀
1️⃣.மனிதன் தினமும் செய்யும் பாவத்திற்கு தேவன் அனுதினமும் மனஸ்தாபபடுகிறார்.
2️⃣.பாதிரியார்கள் பாவமன்னிப்பு அளிக்க அனுமதி இல்லை.
3️⃣.பாவமன்னிப்பு உடலை வருத்திக் கொள்வதால் பெறமுடியாது.
4️⃣.உள்ளான மனம் வருந்துதல் நம்முடைய வெளிபடையான மாறுதலுக்கு வழிவகுக்கும்.
5️⃣.போப்பானவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லை.
6️⃣.தேவன் மன்னித்தால் ஒழிய போப்பானவருக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை.தேவமன்னிப்பை பற்றி அறிவிக்கவே அதிகாரம் உண்டு.
7️⃣.தன்னை தாழ்த்தி மனம் திருந்தாதவனுக்கு தேவன் பாவ மன்னிப்பை அருளுவதில்லை.
8️⃣.மரித்தவர்களுக்கு தேவ வெளிபடுத்துதல்(வேதம்)எவ்வித பயனும் இருக்காது.
9️⃣.போப் மரணம்,ஆபத்து என்று யாருக்கு தீர்ப்பளித்தாலும் தேவன் நம்மீது அன்புள்ளவராகவே இருக்கிறார்.
1️⃣0️⃣.அறியாமையினாலே குருமார்கள் உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு கூறுகின்றனர்.
1️⃣1️⃣.உத்தரிப்பு ஸ்தலம் என்பது திருச்சபைக்கும்
அதன் சட்டத்திற்கும் எதிராக விதைக்கபட்டது.
1️⃣2️⃣.மெய் மனம்திறும்புதலை கண்டறியவே தேவன் தண்டனைகளை அனுமதித்தார்.
1️⃣3️⃣.சபை மரித்தவர்கள் என்று தீர்ப்பு கூறினாலும் அவர்கள் மரணத்தின் வாயிலாக எல்லா தீர்ப்பு களிலிருந்து விடுதலை ஆவார்கள்.
1️⃣4️⃣.தேவபக்தி அற்று வாழ்ந்தால் உடல் நலம் குறையும்போது பயம் மேலோங்குகிறது.
1️⃣5️⃣.அந்த பயமே உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று நமக்கு போதிக்கிறது வேறொன்றுமில்லை.
1️⃣6️⃣.பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லாததால் தான் நமக்கு நரகம்,உத்தரிப்பு ஸ்தலம்,மோட்சம் என்பதை குறித்து பயம் உண்டாக்கிறது.
1️⃣7️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் ஆன்மாக்களின் துன்பங்கள் குறையும் என்பது பொய்யே.
1️⃣8️⃣.உத்தரிப்பு ஸ்தலம் என்பது வேதவசனத்தால் நிரூபிக்கபடவில்லை.
1️⃣9️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் ஒரு ஆன்மா வாழும்பட்சத்தில் நம்மை (இரட்சிக்கபட்டவர்கள்)
போல் முழு இரட்சிப்பின் நிச்சயம் அவர்கள் அடைந்ததாக நிரூபிக்கபடவில்லை.
2️⃣0️⃣.பரிபூரண மன்னிப்பு என்னும் போப்பின் வார்த்தை செல்லுபடி ஆகாது.
2️⃣1️⃣.பாவமன்னிப்பு சீட்டு என்பது ஒரு மனிதனையும் இரட்சிக்காது.மன்னிக்காது.
2️⃣2️⃣.உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள மரித்த ஆத்துமாக்கள் போப்பாண்டவராலோ அவரது பூசையாலோ பாதர்களின் பூசையாலோ மன்னிக்கபட்டு நித்தியவாழ்வை அடைவதில்லை.அவர்கள் இந்த பூமியில் வாழும்போது பாவமன்னிப்பு பெறவேண்டும்.
2️⃣3️⃣.பூரணமாக்கபட்ட(மனம்திறும்பிய)பரிசுத்தவான்களுக்கு பாவமன்னிப்பு அளிக்க நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவது.
2️⃣4️⃣.இப்படிபட்ட பொய் பாவமன்னிப்பால் அனேகர் ஏமாற்றபடுகிறார்கள்.
2️⃣5️⃣.போப்பாண்டவருக்கு உத்தரிப்பு ஸ்தலம் மீது எந்த அதிகாரமும் இல்லை.
2️⃣6️⃣.நல்லெண்ணத்தின் அடிபடையில் போப்பாண்டவர் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்களுக்காக வேண்டுதல் ஏறெடுக்கிறார்.ஆனால் அந்த வேண்டுதலை கடவுள் கேட்பதில்லை.
2️⃣7️⃣.காணிக்கை பெட்டியில் பணம் விழுகிற சத்தத்தின் அடிப்படையில் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்கள் விண்ணகம் செல்வதில்லை
2️⃣8️⃣.காணிக்கை பொருளாசையை பெருக வைக்கும்,பாவமன்னிப்பு தேவனால் அருளபடவேண்டும்.
2️⃣9️⃣.புனித செவரினு,புனித பாஸ்கல் உத்தரிப்பு ஸ்தலத்தில் நீண்ட காலமாக இருக்க விரும்பினார்களா?விலை கொடுத்து விண்ணேர.அவர்கள் விரும்பினார்கள் என்பது தவறு.
3️⃣0️⃣.மனஸ்தாபம் என்பது உண்மையாது என்று எவராலும் நிச்சயமாக கூற இயலாது முழு பாவமன்னிப்பு மனஸ்தாபம் அளித்ததாக கூறவும் இயலாது.
3️⃣1️⃣.பாவமன்னிப்பு பத்திரத்தை புரிந்து கொண்டு வாங்குகிறவனை அறிவது அறிது,உண்மையான மனஸ்தாப படுகிறவனை காண்பது அறிது.
3️⃣2️⃣.இப்படிபட்ட உறுதி அளிப்பவர்கள் (மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம்)ஆக்கினைக்கே உள்ளாவார்கள்.
3️⃣3️⃣.இப்போதனைகளை(மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் )போதிக்கின்றவர்களை குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
3️⃣4️⃣.மன்னிப்பு சீட்டு,சாத்திரமெந்துகள்,பிரயாசித்தங்கள் இவை அனைத்தும் மனித ஏற்பாடுகளே.
3️⃣5️⃣.மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் என்று போதிக்கிறவர்கள் மாறுபட்ட கிறிஸ்தவர்கள்.
3️⃣6️⃣.மெய் மனஸ்தாபம் உடைய எந்த கிருஸ்தவனும் இவை(பாவமன்னிப்பு சீட்டு)இல்லாமல் பூரண மன்னிப்பை கிறிஸ்துவினால் பெற்றிட உரிமை உண்டு.
3️⃣7️⃣.இயேசுவின் மீட்பால் மட்டுமே இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும் பாவமன்னிப்பு சீட்டு இல்லாமலே எல்லா இறையருள் பாக்கியங்கள் பெற முடியும்.
3️⃣8️⃣.இந்த உண்மையை கூறுவதால் போப்பானவர் கூறும் பாவமன்னிப்பை கேவலபடுத்த அல்ல. அதைவிட தேவவார்த்தை முக்கியம் அல்லவா.
3️⃣9️⃣.மன்னிப்பு பத்திரங்களின் மகத்துவத்தை மெய் மனஸ்தாபத்தின் அவசியத்தையும் எந்த பண்டிதர்களாலும்(ஒரே நேரத்தில்) விளக்க முடியாது.
4️⃣0️⃣.மெய் மனஸ்தாபம் பாவத்தின் தண்டனையில் இருந்த நம்மை காப்பாற்றவும் அப் பாவத்தை வெறுக்கவும் வழிவகை செய்கிறது.
4️⃣1️⃣.மன்னிப்பு சீட்டை எதிர்க்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காரணம்.ஏனெனில் நற்செயல்கள் மூலம் விண் பாக்கியம் பெற முடியும் என்கிற தவறை அவர்கள் செய்திட நேரிடும்.
4️⃣2️⃣.மன்னிப்பு சீட்டு ஒருபோதும் அறசெயலுக்கு நிகராகாது நாம் மக்களுக்கு போதிக்க வேண்டும்.
4️⃣3️⃣.பக்குவமாக ஏழைகளுக்கு இறங்குவதும் தேவைபட்டவர்களுக்கு கடன் தந்து உதவுவதும் ஏற்று செயல்கள் எனவும் பணம் கொடுத்து பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது தவறு என்று புரியவைக்க வேண்டும்.
4️⃣4️⃣.பாவமண்ணிப்பு சீட்டு அடிப்படையில் எவரும் சிறப்படைவதில்லை.மாறாக அன்பின் அடிப்படையிலேயே சிறப்படைகின்றனர்.
4️⃣5️⃣.இக்கட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்யாமல் பாவமன்னிப்பு சீட்டுக்கு பணம் செலுத்துகிறவர்கள் மேல் தேவகோபம் வரும் என நம் விசுவாசிகளுக்கு போதிக்கவேண்டும்.
4️⃣6️⃣.பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காக சேமிக்க வேண்டுமே ஒழிய பாவமன்னிப்பு சீட்டுக்காக செலவழிக்க கூடாது என உபதேசிக்க வேண்டும்.
4️⃣7️⃣.பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது அவரவர் விருப்பம் அதை வாங்க யாரையும் கட்டாயபடுத்த கூடாது.
4️⃣8️⃣.போப்பானவர் மக்களின் பணத்தை அல்ல அவர்களின் மெய்யான மனந்திரும்புதலையே விரும்பவேண்டும்.
4️⃣9️⃣.பாவமன்னிப்பு சீட்டின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிக நன்மை அடைவார்கள். பாவமன்னிப்பு சீட்டை நிராகரித்து கடவுள் பயம் அற்றவர்கள் அதிக மோசத்திற்கு ஆளாவார்கள் என்று போதிக்கவேண்டும்.
5️⃣0️⃣.இபபத்திர முறைகேடுகளை போப்பரசர் அறிய நேர்ந்தால் பேதுரு ஆலயம் எரிந்து சாம்பலாகட்டும் என்பாரே அன்றி வேறு எந்த வகையிலும் ஆலயத்தை கட்ட முன்வரமாட்டார் என்று போதிக்க வேண்டும்.
5️⃣1️⃣.புனித பேதுருவின் ஆலயத்தை விற்றாவது அந்த மக்களுக்கு பணம் தந்து அவர்கள் சுறண்டபடுவதை தடுப்பது போப்பரசரின் கடமை என்று மக்கள் அறிய வேண்டும்.
5️⃣2️⃣.போப் அரசரோ அல்லது அவரது பிரதிநிதிகளே உத்தரவாதம் தந்தாலும் பாவமன்னிப்பு சீட்டு இரட்சிப்பு தறாது என்று போதிக்க வேண்டும்.
5️⃣3️⃣.பாவசீட்டை முன்நிறுத்தி பிரசங்கத்தை தடை செய்பவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரிகள்.
5️⃣4️⃣.பிரசங்கம் முக்கியமானது. அந்த நேரத்தை பாவமன்னிப்பு பத்திரத்தை பற்றி போதிக்க கூடாது.அப்படி செய்தால் ஆண்டவருடைய வார்த்தையை அவமதிப்பதுபோல ஆகும்.
5️⃣5️⃣.ஒருமுறை மணியடித்தால் ஒரு ஊர்வலம் ஒரு ஆராதனை என பாவமன்னிப்புக்காக செய்யபடும் பிரயாசங்கள் ஒழிந்து நூறுமுறை சுவிஷேசம் ஆராதனை என்னும் மணியோசை முழங்குவதை நாம் பிரபலபடுத்தவேண்டும் இதுவே போப் அரசரின் கருத்தாக இருக்க வேண்டும்.
5️⃣6️⃣.போப் அரசர் தானகவே பாவமன்னிப்பு தருகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
5️⃣7️⃣.பாவமன்னிப்பு பத்திர விற்பனையாளர்கள் விற்று தங்களுடைய பண வருவாயை பெருக்கிகொண்டுள்ளார்கள்.
5️⃣8️⃣.மன்னிப்பு சீட்டு எந்த பலனையும் அளிப்பதில்லை. இயேசுவின் சிலுவை மரணம் உயிர்தெழுதல் மனிதனுக்கு பாவமன்னிப்பை தருகிறது.
5️⃣9️⃣.புனித லாரன்ஸ் என்பவர் அக்கால கருத்துக்கு இசைய திருச்சபையின் ஏழைகளே திருச்சபையின் செல்வங்கள் என மொழிந்தார்.
6️⃣0️⃣.கிறிஸ்துவால் அருளபட்ட திறவுகோல் திருச்சபையின் செல்வம் என்று அதிகாரபூர்வமாக சந்தேகமின்றி துணிந்து கூறுகிறோம்.
6️⃣1️⃣.போப் அரசரால் தீர்ப்பிடபட்ட ஆக்கிணைகளை மன்னிதிட அன்னாரின் அதிகாரமே போதுமானது.
6️⃣2️⃣.கடவுளின் மகிமை, கடவுளின் கிருபை ஆகியவற்றிலான அதி பரிசுத்த சுவிஷேசமே மெய் செல்வம் ஆகும்.
6️⃣3️⃣.எனினும் இச்செல்வம் மனிதனின் இயல்புபடி வெறுக்கபடுகிறது.
6️⃣4️⃣.ஆனால் இச்செல்வங்களுக்கு மாறாக மன்னிப்பு பத்திரிங்கள் முதல் நிலைக்கு மாற்றபட்டுள்ளது.
6️⃣5️⃣.எனவே சுவிஷேசமாகிய செல்வத்தை வலையாக பயன்படுத்தி முற்காலத்தில் செல்வந்தர்களை பிடித்தனர்.
6️⃣6️⃣.தற்போது மன்னிப்பு பத்திரத்தின் என்கிற வலையால் மக்களின் செல்வத்தை வாரிகொள்கிறார்கள்.
6️⃣7️⃣.மன்னிப்பு பத்திரங்களையெல்லாம் மகா உன்னத கிருபை என்று குதர்க்கவாதிகள் உளறுகிறார்கள்.
6️⃣8️⃣.ஆயினும் அவற்றை கடவுளின் கிருபையோடும் சிலுவையின் பக்தியோடு ஒப்பிடுகையில் அவை மிகமிக மலிவான கிருபையே ஆகும்.
6️⃣9️⃣.மன்னிப்பு பத்திர பிரச்சாரம் செய்பவர்களை வரவேற்க அத்தியட்சர்களும்,குருக்களுக்கும் கடமை உள்ளதுதான்
7️⃣0️⃣.ஆயினும் இப்படி பிரசங்கம் பண்ண வருகிறவர்கள் தங்களுடைய சுயகதைகளை எண்ணங்களை பிரசங்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
7️⃣1️⃣.பாவமன்னிப்பு பத்திரத்தின் எதார்த்தத்தின் உண்மை தன்மைக்கு மாறாக வசனிப்பவர்கள் புறம்பார்க்கபடனும் சபிக்கபட்டவனுமாவான்
7️⃣2️⃣.இப்படி பிரசங்கிப்பவர்கள் கொண்டுள்ள வரம்புக்கு மீறிய அதிகாரம் மற்றும் அவர்களின் பொருளாசை ஆகியவற்றை எதிர்த்து நிற்பவன் ஆசீவதிக்கபட்டவன்.
7️⃣3️⃣.பாவமன்னிப்பு பத்திர வியாபாரம் பாதிப்படையும்படி சூழ்ச்சி செய்கிறார்கள் என்று கூறி அத்தகையோருக்கு எதிராக போப் அரசர் முழங்குகிறார்.
7️⃣4️⃣.ஆனால் தூய இறையன்பு வாய்மை ஆகியவை பாதிப்பு உள்ளாகும் என்பவற்களுக்கு எதிராகத்தான் போப் அரசர் இடியென முழங்கவேண்டும்.
7️⃣5️⃣.ஆண்டவரின் தாயாருக்கு அவபெயர் வரும்வகையில் நிந்தனை செய்வது பெரும் குற்றம் அதை மன்னிக்கும் ஆற்றல் மன்னிப்பு பத்திரத்திற்கு உண்டு என்று என்னுவது பைத்தியகாரதனமானது.
7️⃣6️⃣.சுலபமாக நம் பாவங்களை மன்னிப்பு பத்திரம் மன்னிதிடாது என்பது தான் உண்மை.
7️⃣7️⃣.தற்போதைய போப் அரசராக பேதுரு பதவிவகுத்தாலும் பெரிதான கிருபைகளை அவரால் அருள முடியாது என கூறுவது பேதுருக்கும் போப் அரசருக்கு எதிரான நிபந்தனையாகும்.
7️⃣8️⃣.1கொரிந்தியர் 12:28ன்படி பெரிதான ஈவுகளுக்காக சுவிஷேசம் ஆன்மீக ஆற்றல் மற்றும் குணபடுத்தும் வரங்கள் ஆகியவை போப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை தான்.
7️⃣9️⃣.போப்பரசரின் இலட்சினையிள் பொரிக்கபட்டுள்ள சிலுவை சின்னம் கிறிஸ்துவின் சிலுவை சின்னம் ஒப்பு உம்மையுடையதே என்று சொல்வது தெய்வ நிந்தனையாகும்.
8️⃣0️⃣.இத்தகைய நிந்தனைகள் மக்கள் மத்தியில் பரப்பும் அத்தியட்சர்கள் குருமார்கள் வேதவிற்பனர்கள் தேவனுக்கு பதில் கூறியே ஆகவேண்டும்.
8️⃣1️⃣.தான்தோன்றிதனமான மன்னிப்பு பிரச்சார பத்திரத்தின் விளைவாக போப்பின் மீதுள்ள மதிப்பும் மரியாதைம் குறைந்து போகிறது.
8️⃣2️⃣.உதாரணமாக ஆலயத்தை கட்டும் பணிக்கென பெறப்பட்டு பணத்தால் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்களை போப்பரசரால் வெளியே கொண்டுவர கூடுமானால் எல்லா ஆன்மாக்களையும் ஏன் வெளியே கொண்டுவர இயலாது.
8️⃣3️⃣.மீட்கபட்டவர்களுக்காக ஜெபம் தேவையில்லை என்றால்,அது தவறு என்றால் இறந்தவருக்காக சடங்குகள் ஆண்டுஇறுதி நினைவுகூறல் பூசைகள்ஏன் நிரூபிக்கபடவில்லை.
8️⃣4️⃣.அவபக்தி உள்ள ஒரு ஆத்துமாவை உத்தரிப்பு ஸ்தலத்தில் பணத்தால் வெளிகொணர முடியுமாகில் நல்ல ஒரு ஆத்துமாவை அன்பின் பெயரால் உத்தரிப்பு ஸ்தலத்தில் நின்று வெளிகொணர கூடாதா?
8️⃣5️⃣.வேதவசனம் இப்போது செயல்படவில்லை என்றார் எப்படி பாவமன்னிப்பு பத்திரம் உயிர்பெற்றதும் செயலாற்றுவதுமாய் இருக்கும்.
8️⃣6️⃣.சீசரைவி பெரும் செல்வந்தரான போப் ஏன் தன் சொந்த பணத்தை செலவிட்டு ஆலயம் கட்டாமல் ஏழை பாமர விசுவாசிகளின் பணத்தை செலவிட்டு ஆலயம் கட்ட முயற்சிக்கிறார்.
8️⃣7️⃣.மெய் மனஸ்தாபத்தால் பூரண மன்னிப்பையும் பெரும் வாழ்வையும் பெற்றிடும் உரிமையாளருக்கு வேறு எதனை கொடுக்க விலைகிறார்.
8️⃣8️⃣.ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே போப் அரசரால் தரப்படுகிற மன்னிப்பும் ஆசிகளும் ஒரே நாளில் நூருமுறை தரப்படுமானால் திருச்சபைக்கு இதைவிட சிறந்த சிலாக்கியம் இருக்கமுடியாது.
8️⃣9️⃣.பணவருவாயை எதிர்பார்க்காமல் ஆத்துமாக்களின் மீட்பை போப் நாடுகிறார் என்றால் எனில் சரிநிகர் திராணியுள்ளவர்களுக்கு மன்னிப்பு சீட்டைகளை ஏன் நிருத்திவைக்கிறார்.
9️⃣0️⃣.தனி அதிகாரத்தை பயன்படுத்தி திருச்சபைக்கு அடக்குவது கிறிஸ்தவர்களை துக்கபடுத்துவதாகும்.
9️⃣1️⃣.போப்பின் விருப்பமாகவே மன்னிப்பு பத்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே அனைத்தும் சுமூக முடிவுக்கு வரும்.
9️⃣2️⃣.சமாதானம் சமாதானம் எனக் கூறியும் சமாதானம் கொடுக்க முடியாத போலி தீர்க்கதரிகள் ஒழியட்டும்.
9️⃣3️⃣.சிலுவை சிலுவை என்று சொல்லி கிறிஸ்தவர்களின் துன்பம் ஒழிய செய்யும் மெய் தீர்க்கதரிகள் வாழட்டும்.
9️⃣4️⃣.தண்டனை மரணம் நரகம் ஆகியவற்றையே அறிந்து கிறிஸ்துவுக்கு பின் செல்லநாம் வழிகாட்ட வேண்டும்.
9️⃣5️⃣.பல உபவத்திரங்களோடே நாம் மோட்சத்திற்குள் பிரவேசிக்கவேண்டுமே தவிர போல் உத்திரவாதத்தினால் பிரவேசிக்க முடியாது