15/07/2023
மேலப்பாளையத்தில் கடை அடைப்பு போராட்டம் ஏன்?
நடந்தது என்ன....
கடந்த சில நாட்களுக்கு முன் நமதூர் அம்பை ரோட்டில் காரில் வந்த வெளியூரை சேர்ந்த வக்கில் ஒருவர் அவ்வழியே சென்ற வெளியூரை சேர்ந்த ஆட்டோ காரர் ஒருவரும் நடு ரோட்டில் காரை நிறுத்தி சன்டையிட்டு கொண்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது சந்தை முதல் வி.எஸ்.டி பள்ளிவாசல் வரை நெருக்கடி ஏற்பட்டது எனவே அப்பகுதியில் டீக்கடையில் நின்ற நமதூரை சேர்ந்த சகோதரர்கள் சிலர் தலையிட்டு சமாதானப்படுத்தி ரோட்டில் வாகனங்களை நிறுத்தி சன்டையிட்டு கொள்ளாதீர்கள் ஓரமாக நின்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பேசுங்கள் என்று கூறி அமைதிப்படுத்தி சமாதானம் செய்தனர்,
ஆனால் மேற்படி வக்கில் சமாதானம் செய்ய சென்ற மக்களிடம் கடுமையாக பேசி வாக்குவாதம் செய்து உள்ளார். தான் ஒரு வக்கில் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்ககூடாது என்றும் நான் அப்படி தான் நடுரோட்டில் நிற்பேன் என்றும் பேசியுள்ளார், அதன்பின்னர் காவல்துறை வந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விட்டனர்.
இந்நிலையில் மேற்படி வக்கில் மேலப்பாளையத்தை சேர்ந்த 15 நபர்கள் தன்னையும் தனது மனைவி மீதும் தாக்குதல் நடத்தி வாகனத்தை சேதப்படுத்தி விட்டதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார் மேலும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து அதனடிப்படையில் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் காட்டகூடிய மேலப்பாளையத்தை சேர்ந்த
15 பேர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து... கடந்த 4/7/2023 அன்று மேலப்பாளையம் காவல் துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருக்கும் நபர்கள் மற்றும் அங்கு நின்று கொண்டு இருந்தவர்களை எவ்வித விசாரணையும் செய்யாமல் குற்றவாளிகள் என முடிவு செய்து நமதூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் (யூசுப் கான், முகம்மது அலி) இருவர் வீட்டிற்கும் காவல் துறை அதிகாரிகள் சென்று காவல் நிலையம் அழைத்து வந்து சிறையில் அடைக்க முயற்சி நடந்த நேரத்தில் தகவல் கிடைத்ததும் நமதூரில் உள்ள மண்டல சேர்மன் அனைத்து கவுன்சிலர்கள், அனைத்து கட்சி, அனைத்து அமைப்பு, அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் சரியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுங்கள் ஒருதரப்பு புகாரின் அடிப்படையில் இவ்வாறு பொய்யான புகாரில் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட வேண்டாம் எனவும், பொய் வழக்கு பதிவு செய்து ஊரில் தேவையில்லாத பதட்டத்தையும் பரபரப்பான சூழலையும் உருவாக்க வேண்டாம் என்று கூறினார்கள், ஆனால் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கும் நிலையில் எந்த தவறும் செய்யாத அந்த இரண்டு அப்பாவி இளைஞர்களையும் சிறைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார்கள்,
இதன் காரணமாக நமதூரின் பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள் அனைத்து கட்சி அனைத்து அமைப்புக்களின் நிர்வாகிகள் காவல்நிலையத்தின் முன்னால் கூடினர். அதன் பின்னர் மேற்படி இளைஞர்கள் இருவரையும் காவல்துறை தலா இரண்டு ஜாமீன் தாரர்களிடம் கையெப்பம் எழுதி வாங்கிவிட்டு ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்நிலையில் நெல்லை மாநகர காவல்துறை அதிகாரிகள் மேற்படி காவல்நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்த சென்ற மக்கள் பிரதிநிதிகளான மேலப்பாளையம் மண்டல சேர்மன், மாநகராட்சி கவுன்சிலர்கள்7 பேர், மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட இருபதிற்கும் மேற்பட்ட நமதூர் முக்கியஸ்தர்கள் மீது நான்கு பிரிவுகளில் காவல் நிலையத்தில் அதிகாரிகளுக்கு இடையூறு செய்து வழிமறித்து உதாசீனம் செய்ததாக பொய்யான வழக்கு பதிவு செய்து உள்ளார்கள். மேற்கண்ட அனைத்து முக்கியஸ்தர்களையும் அச்சுறுத்தி மிரட்ட வேண்டும் என்ற கெட்ட நோக்கில் இவ்வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் வரும் நாட்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சிகாரர்கள் இயக்க நிர்வாகிகள், மக்கள் பணி செய்ய கூடிய யாரும் காவல் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்....
ஆகவே நமதூரின் அனைத்து விஷயங்களிலும் முன் நின்று களப்பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கட்சி அமைப்பு நிர்வாகிகளை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கு, மற்றும் பொது மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு இவைகளை இரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த அராஜக செயலை செய்த காவல்துறையை கண்டித்தும் மேலப்பாளையம் அனைத்துக் கட்சி அனைத்து அமைப்பு அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 17/7/2023 திங்கள் அன்று நமதூர் மேலப்பாளையம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த எல்லோரும் சேர்ந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இன்ஷா அல்லாஹ் வருகின்ற 17.7.2023 திங்கள் கிழமை அன்று அனைத்து கடைகள், வியாபார நிறுவனங்களை பீடி கம்பெனிகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களை அடைத்தும் வாகனங்களை நிறுத்தி ஒத்துழைப்பு நல்கிட அனைத்து கட்சி அனைத்து அமைப்பு அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்: மேலப்பாளையம் அனைத்து கட்சி அனைத்து அமைப்பு அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு.