Nellai Life

Nellai Life Nellai Life - All about Nellai
(2)

04/11/2025

அச்சங்கோவில் மேக்கரை ரோடு, இந்த ஏரியா இரண்டு பக்கம் ஒரே மரம் தான்... நாம நம்ம ஊருல தான் இருக்கோமா ன்னு டவுட் வரும்...

வேற லெவவ்ல்... இந்த ஏரியா போனவங்க கமண்ட் பண்ணுங்க

03/11/2025

கருக்கல் நேரம்... தோப்புக்குள்ள சாயங்காலம் நேரம் வானத்தோட அழக ரசிக்கிற சுகம் இருக்கே... வீடியோ பாருங்க.. புரியும், அப்டியே இந்த லொகேஷனுக்கு உங்களுக்கு புடிச்ச பாட்ட சொல்லுங்க... pls ❤🙏

03/11/2025

தற்செயலா நேத்து 02.11.2025, இலஞ்சி திருமலை கோவில் போயிருந்தோம்... போயிருந்த நேரம் தங்கச் சப்பரம் இழுத்தாங்க..

மலைக்கு மேலே, தங்கச் சப்பரம் போறது பார்க்க பேரானந்தம்...

உன்ன மாதிரி இல்ல கோவில்ல என்னைக்கும் கூட்டம் அலைமோதுது

02/11/2025

நட்புக்கு இலக்கணமா யாரையெல்லாமோ சொல்றாங்க, அதுக்கு ஏத்த ஆளு மேக்கரை MMA ரிசார்ட் ஓனர் MMA அலி அண்ணாச்சி தான்.. நட்பு மேல மனுசன் வச்சி இருக்குற பாசத்தை வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க... மனுசன் வேற லெவல்.. MMA அலி சார் கண்டிப்பா உங்களை பார்த்து ஒரு HUG பண்ணனும்யா... WILL MEET ZOON..

02/11/2025

ஒரே கேள்வி..
ஒரே கேள்வி..
எந்தன் நெஞ்சிலே...

மழை, வெயில் ன்னு என்னனாலும் சரி walking போகாம இருக்காது "மஞ்சுமோல் Boys".. டீம்...

பாருங்க மழை நேரம் கூட கொடைய புடிச்சுகிட்டு ஒரே அலைப்பறை தான்.. போங்க

01/11/2025

சின்னக்குயில் னா சித்ரா... இது தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஆனா நம்ம நெல்லைய பொருத்தவரை, கிராமத்துக் குயில் நம்ம ஆ.சந்திர புஷ்பம் மேடம் தான்.. புண்ணியவதிக்கு என்ன ஒரு குரல் வளம், என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு... தமிழக அரசு விடுமாக்கும், இந்தா " கலை மாமணி விருது 2025" கொடுத்துட்டுல.. கொடுக்காம இருக்க முடியுமா ன்ன... ❤❤❤ அம்மா பாடுறத கேளுங்க... அதே உற்சாகத்தோடு அதே உச்சரிப்போட கலக்குறாங்க... வாழ்த்துக்கள் ம்மா..

31/10/2025

நம்ம நெல்லை செல்ல புள்ளைங்க, தெய்வ குழந்தைங்க ( intellectual disable) ST. ANNIES, BISHOP ஸ்கூல் புள்ளைங்க, through ball ல state லெவல் விளையாடி ஜெயிச்ச பிள்ளைங்க.. நேஷனல் லெவல், international லெவல் போக போறாங்க

ரீசண்டா நார்மல் பிள்ளைங்க கூட விளையாடி டிஸ்ட்ரிக்ட்ல மூன்றாவது இடம் பிடிச்சாங்க, அதுக்காக அவங்கள வர வச்சி பாராட்டினோம்..

பிள்ளைங்க இவ்ளோ அன்பா பாசமா பேசுது பாருங்க... நானும் நார்மலா பேச ட்ரை பண்ணினே.. ஆனா மனசுக்குள்ள ஒரு வலி இருக்கத்தான் செய்யுது... வாழ்க வளத்துடன் ❤🙏

#

30/10/2025

வண்டி வாங்க வந்த ஆள பாத்திங்களா... 🤣🤣🤣..

செல்லமா என்னம்மா ஓடுது பாருங்க...❤❤❤

அருமையான காட்சி, நம்ம ல...

பருப்பு வடை, கீரை வடை 5 ரூபா, உளுந்த வடையும் அஞ்சு ரூபா தான்... மரத்தடி கீழ ஆயாசமா உக்காந்து சூடா டீ வடை சாப்பிட்டுக்கிட...
29/10/2025

பருப்பு வடை, கீரை வடை 5 ரூபா, உளுந்த வடையும் அஞ்சு ரூபா தான்...

மரத்தடி கீழ ஆயாசமா உக்காந்து சூடா டீ வடை சாப்பிட்டுக்கிட்டே, அரட்டை அடிச்சுகிட்டு, கொஞ்ச நேரம் நேரத்தை போக்குறது ஒரு சுகம்...

அதுக்கு ஏத்த மாதிரி நம்ம நெல்லை சிட்டுக்குள்ள ஒரு டீ கடை, ஆர்டிஓ ஆபீஸ் கீழ்ப்பக்கம், பாலாஜி ஹோட்டல் முன்னாடி.. "மணம்" டீக்கடை..

இந்த பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய் பாருங்க...

அது சரி நாம தான் ஒரு டீக்கடைய விடுறது இல்லையே ன்ன...

#

28/10/2025

நம்ம சமாதானபுரம் தான்.. முன்ன எல்லாம் ஊரை விட்டு எட்டி இருக்கிற மாதிரி இருக்கும், இப்போ சிட்டுக்குள்ளயே நெருக்கமா வந்துடுச்சு... காரணம் ரோடு முழுக்க கடை...

சிட்டி டெவலப் ஆகிவிட்டது, ஊரு குறிகீடுச்சி ன்ன... நல்லாத்தான் இருக்கு.. ❤🙏

27/10/2025

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்ல ஒண்ணு,

பாண்டவர்கள், சேரர்கள், சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் ன்னு பல அரச வம்சத்தினரால கட்டப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது நம்ம கோவில்.

ஐயாவுக்கும், அம்மாவுக்கும் தனித்தனியா சன்னதி உண்டு.

முக்கியமான குறிப்புகள்:
வரலாற்றுச் சிறப்பு: நம்ம கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாகக் சொல்றாங்க.

கட்டிடக்கலை: பாண்டவர் காலத்தில கட்டப்பட்ட கோயில், பின்னாடி வந்த அரசுகளால் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கு.

அமைவிடம்: திருநெல்வேலி நகரில் அமைந்திருக்கு, மேலும் இது தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது.

சன்னதிகள்: நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் தனித்தனி சன்னதிகளாக உள்ளன. முதலில் இவை இரண்டு சுயாதீனமான அமைப்புகளாக இருந்தன.

சிறப்பம்சம்: இக்கோவில் சிவன் தனது நடனத்தை வெளிப்படுத்திய ஐந்து இடங்களில் ஒன்றாகும்.

தேவாரப் பாடல்: சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.

விளையாட்டு: இக்கோவில் இசைத்தூண்கள், சிற்பங்கள் மற்றும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

நம்ம நெல்லை மாவட்டம், நாரணம்மாள் புரம் இருந்து இன்னைக்கு ஆசிய விளையாட்டு போட்டில பக்ரைன் நாட்டில் போய், வெள்ளி பதக்கம் வ...
27/10/2025

நம்ம நெல்லை மாவட்டம், நாரணம்மாள் புரம் இருந்து இன்னைக்கு ஆசிய விளையாட்டு போட்டில பக்ரைன் நாட்டில் போய், வெள்ளி பதக்கம் வாங்கி, நம்ம இந்தியாவோட பெருமையை இரண்டாவது இடத்துக்கு கொண்டு போன, தங்க புள்ள, நம்ம புள்ள எட்வினா ஜெய்சன் வாழ்க வளத்துடன், தொடர்ந்து பிள்ளைகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்து வரும் தம்பி மகேஷுக்கும் நெல்லை லைஃப் மூலமா வாழ்த்துக்கள்... பட்டைய கிளப்புங்க தம்பி... நம்ம புள்ளைங்க உலகம் ஃபுல்லா போகணும்.. ❤❤🙏

Address

Abulkalam Azad Road, Melapalayam

627005

Telephone

+919629694954

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nellai Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nellai Life:

  • Want your business to be the top-listed Media Company?

Share