Salem memes

Salem memes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salem memes, Media/News Company, Hasthampatti, Yercaud main Road, Salem.
(1)

Mango City : This page will be the platform to provide the information on socio eco cultural aspect of Salem which covers all 360 degree updates on Salem district , Tamil Nadu

சேலத்தில் சொத்துக்காக தன் தந்தையை அடித்துக் கொன்ற மெத்தப் படித்த கொலைகாரன்.சேலத்தில் தன் மகனை நல்ல முறையில் பிஇ.எம்பிஏ ப...
04/05/2024

சேலத்தில் சொத்துக்காக தன் தந்தையை அடித்துக் கொன்ற மெத்தப் படித்த கொலைகாரன்.

சேலத்தில் தன் மகனை நல்ல முறையில் பிஇ.எம்பிஏ படிக்க வைத்ததுடன் தான் உருவாக்கி வைத்த தொழில் நிறுவனத்தையும் கையில் கொடுத்து

அதை மகன் சரியாக நிர்வாகம் செய்யாததால் ஏற்பட்ட இழப்புகளை காட்டி மீதி சொத்தை எல்லாம் தனக்கு எழுதி தா என்று சொல்லி

தன் தந்தையை தாறுமாறாக தாக்கி அதனால் நிலைகுலைந்து போன தந்தை மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட காணொளியை பார்க்க அவ்ளோ குரூரமா கொடூரமா பக்குன்னு இருக்கு..

வீட்டை எழுதி தா சொத்தை எழுதி தா..இல்லன்னா உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று எத்தனை எத்தனை குடும்பங்கள்...

பணத்தின் மீதும் சொத்தின் மீதும் எத்தனை எத்தனை ஆசைகள். சொத்துக்காக எத்தனை அண்ணன் தம்பி சண்டைகள் வழக்குகள்..

நியாயமா அந்த தகப்பனாரும் குடும்பமும் சேர்ந்து மகன் மீது வழக்கு தொடுத்து உள்ள தூக்கி வெச்சிருக்கணும்.

கம்பனியும் சரி எந்த சொத்தும் சரி உனக்கு கிடையாது வெளிய போடா என்று துரத்தி இருக்கணும்..கேவலமான மகனுக்காக நல்ல தகப்பன் எதுக்கு மருந்தை குடிச்சி உயிரை விட?

தாய் தந்தையை அடிச்சி அசிங்க அசிங்கமா பேசி சொத்துக்களை பறிச்சிட்டு அம்போன்னு விடுற இந்த கேடு கெட்ட பிள்ளைகளின் முடிவுகள் ஒன்றும் ஆகா ஓகோ என்று இருந்து விட போவதில்லை.

ஒரு விபத்தோ ஒரு மாரடைப்போ ஒரு கேன்சர் வியாதியோ ஒரு மூளை நரம்பியல் சிக்கலுக்கோ ஒரு சிறுநீரக கல்லீரல் வியாதிக்கோ தாங்காத காசும் பணமும் தான்..

கோடான கோடிகள் சொத்து வெச்சிருந்த எத்தனையோ பேரால் தங்கள் வியாதியில் இருந்து காத்துக் கொள்ள முடிந்ததா?

இந்த மாதிரி ஒரு கொலைகார புருசனை விட்டுட்டு அந்த மனைவி விவாகரத்து வாங்கிட்டு ஓடணுமா இல்லியா?

அப்பன் ஆத்தாளை அடிக்கிற கேவலமா பேசுற எந்த மனுசன் உருப்பட்டு இருக்கான்? முன்பை விட நாளுக்கு நாள் இந்த கொடூரங்கள் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு ரொம்ப ரொம்ப மோசமா போகுது..

தன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவதே வாக்குத் தத்தமுள்ள முதலாம் கற்பனை என்கிறது திருவிவிலியம்.

ஆன்டனி வளன்

சேலம் லீபஜார் in 1935 வருடம்
26/04/2024

சேலம் லீபஜார் in 1935 வருடம்

20/04/2024
ஏற்காட்டின் ஆங்கிலேயர் கால புகைப்படங்கள்!!!
13/02/2024

ஏற்காட்டின் ஆங்கிலேயர் கால புகைப்படங்கள்!!!

Happy News for our Salemite  ! Gear up n cheer up ! Airline service again going to get Resumed  🔥😇✅👏
22/09/2023

Happy News for our Salemite ! Gear up n cheer up ! Airline service again going to get Resumed 🔥😇✅👏

😝🫥
06/09/2023

😝🫥

வாழ்த்துக்கள் sir 👏🎉               😍🤩
19/08/2023

வாழ்த்துக்கள் sir 👏🎉 😍🤩

The feeling is different 🤪🤪😄Pls like my page Let us follow each other 💐🎉
19/08/2023

The feeling is different
🤪🤪😄
Pls like my page
Let us follow each other 💐🎉

பாராட்டுக்கள் 👏👏👏👏🙏🏻
18/08/2023

பாராட்டுக்கள் 👏👏👏👏🙏🏻

நஞ்சில் பழுத்தவர்கள்*********************பிஞ்சில் பழுத்ததல்ல;நஞ்சில் பழுத்தது!கற்றது கல்வியல்ல;குற்றத்தின்  கொடூரம்!சிந்...
11/08/2023

நஞ்சில் பழுத்தவர்கள்
*********************

பிஞ்சில் பழுத்ததல்ல;
நஞ்சில் பழுத்தது!

கற்றது கல்வியல்ல;
குற்றத்தின் கொடூரம்!

சிந்தியது இரத்தமல்ல;
சாதியில் ஊறிய விசம்!

வெட்டியவர் சிறாரல்ல;
வளர்த்தெடுத்த சமூகம்!

வீழ்ந்தது மாணவரல்ல;
மானுடத்தின் ஆன்மா!

நான் என்னத்த சொல்றது 🤩🧐🤨
13/06/2023

நான் என்னத்த சொல்றது 🤩🧐🤨

அருமை !
13/06/2023

அருமை !

13/06/2023

நடிகர் திலகம் சிவாஜியுடன் பழகிய சில நாட்களை நினைவு கூர்ந்த சிவகுமார் நெஞ்சம் நெகிழ கூறியதாவது:-

“உறுதிமொழி” படப்பிடிப்பு. நானும் பிரபுவும் தேக்கடியில் நடித்துக் கொண்டிருந்தோம். அங்கே ஒரு நாள் சிவாஜி குடும்பத்துடன் வந்திருந்தார். எங்கள் வீட்டிலிருந்து என் மனைவி, குழந்தைகள் எல்லாம் வந்திருந்தனர். சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்படியே என் தோள் மீது கைபோட்டபடி தனியே நடந்த சிவாஜி, “கவுண்டரே! சிவாஜிகணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேண்டா” என்று குரல் தழுதழுக்கச் சொன்னார்.
“அண்ணே, என்ன பேச்சு பேசுறீங்க! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுலதான் நாங்க விளையாடுகிறோம். எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிச்சிட முடியாது” என்றேன்.”அப்படியா நினைக்கிறே?””இது என் தாய் மேல் சத்தியம்! தொழில் மேல் சத்தியம்” என்றேன்.
“எல்லாரும் அப்படி நினைப்பாங்களா?” சிவாஜியின் கேள்வி என்னைக் கலங்கச் செய்து விட்டது.

தேக்கடியில் ஓட்டல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள், என் மகள் பிருந்தா. அப்போது அங்கே சிவாஜி வந்தார். “குட் மார்னிங் அங்கிள்” என்று சொன்னாள்.
“நான் உனக்கு அங்கிள் இல்லம்மா. உங்கப்பன் என் தம்பி! நான் உன் பெரியப்பன்” என்றார். அது முதல் சிவாஜியை பிருந்தா, “பெரியப்பா” என்றுதான் அன்போடு அழைப்பாள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் சிவாஜி மயங்கி விழுந்து விட்டார். “ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் ஊசலாடுகிறது” என்றும், ஒரு கட்டத்தில் “சிவாஜி இறந்து விட்டார். உடல் விமானத்தில் வருகிறது” என்றெல்லாம் செய்திகள். எனக்கு இதயமே ஒரு நொடி நின்று விட்டதுபோல் ஆகிவிட்டது. “பெரியப்பா சாகமாட்டாருப்பா! அவர் கம்பீரமாகத் திரும்பி வருவார் பாருங்க” என்றாள், பிருந்தா.
“மகளே, உன் வாய் முகூர்த்தம் பலிச்சுட்டா, ஒரு பூச்செண்டு தர்றேன், அதை உன் கையாலேயே பெரியப்பாவுக்குக் கொடுத்துடு” என்றேன்.
அதேபோல் புது ரத்தம், புதுப்பொலிவுடன் ஒரு மாத ஓய்வுக்குப் பின் திரும்பி வந்தார்.

குடும்பத்துடன் போய்ப் பார்த்தேன். அவர் அருகில் ஒரு நாற்காலி – உட்காரச் சொன்னார். நான் தரையில் அமர்ந்தேன். என் தலையைத் தடவிவிட்டபடி சிவாஜி சொன்னார்:
“நாமெல்லாம் `முன்னொருகால நடிகர்கள்’டா சிவா! எல்லாம் முடிஞ்சுப் போச்சு. நம்மை யாரு ஞாபகம் வச்சிருக்கா? சிங்கப்பூர்ல பாரு, அஞ்சாயிரம் பேர் கூடியிருக்காங்க. இருபது அடிக்கு முப்பது அடி திரையில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' காட்சியைப் போடுறான். அஞ்சாயிரம் பேரும் அடிக்கிறான் விசில்.
“தங்கப்பதுமை' யில … `ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே’ பாடல் போட்டா…, அவனவன் சாமி ஆடறான். `தங்கப்பதக்கம்’ அரங்கமே குலுங்குது!
“சிவா! வாட் ஏ பைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் ஏன்டா அப்ப சாகல? எதுக்காகடா உயிரோட வந்தேன்?”
இப்படி சொல்லும்போது சிவாஜிக்கும் எனக்கும் கண்களில் நீர் முட்டித் தளும்பியது.
நூறு வயது வாழணும்னு ஆசை இருந்தா கூட, ஒரு கலைஞனுக்கு எப்படி முடிவு வரவேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.

1981-ல் முத்துராமன் ஊட்டியில் இறந்தபோது, அவரது உடலை நானும் திருப்பூர் மணி படக்குழுவும் சென்னைக்கு எடுத்து வந்தோம். அதிகாலை 4 மணி. முத்துராமன் வீட்டு வாசலில் சிவாஜியும் முன்னாள் டி.ஜி.பி. பரமகுருவும் காத்திருந்தார்கள். “கவுண்டரே, தேவனுக்கு (முத்துராமன்) நல்ல சாவுடா! கொஞ்ச நாளா படமில்லாம வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். ஷூட்டிங் போன இடத்துல உடற்பயிற்சிக்காக ஓடிக்கிட்டிருக்கும்போது உயிர் போறது வீர மரணம். உனக்குத் தெரியுமா? நம்ம நடிக ஜாதியில ஒருத்தர், விஸ்வநாததாஸ் – மேடையில முருகன் வேஷம் கட்டி மயில்மேல் வள்ளி தெய்வானைக்கு நடுவுல உட்கார்ந்திருக்கும்போது செத்துப் போயிட்டார். எவ்வளவு கொடுத்து வைத்த சாவு. சாவுன்னா, அப்படி வரணும்” என்றார்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை !

மனிதர்கள் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால், தமிழ் உள்ளளவும் தமிழ் சினிமா உள்ளளவும் அந்த ஒரு உலக மகா கலைஞனின் சாதனையை யாரும் மறந்திட முடியாது.

இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறினார்.

(திருத்தப்பட்ட பகிர்ந்த பதிவு)

Ithayakkani S Vijayan

13/06/2023
13/06/2023

New Police city Commisioner , Salem city

01/06/2023
18/05/2023

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.

  and   of   with the   award in their hands!வாழ்த்தி மகிழும் ❤️🎉Salem memes
27/03/2023

and of with the award in their hands!

வாழ்த்தி மகிழும் ❤️🎉
Salem memes

கடந்த 21.02.23ஆம் தேதி இரவு தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை தீவட்டிப்பட்டி to பொம்மியம்பட்டி மெயின் ரோடு சந்தைப்பேட்டை ...
24/02/2023

கடந்த 21.02.23ஆம் தேதி இரவு தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை தீவட்டிப்பட்டி to பொம்மியம்பட்டி மெயின் ரோடு சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள India one ATM மை மூன்று நபர்கள் திருடமுயற்சி செய்து ஏ.டி.எம் மிஷின் தகடை உடைத்துள்ளனர். அந்த வழியாக இரவு ரோந்து சென்ற முதல் நிலை காவலர் திருமதி.தெய்வராணி மற்றும் நர்மதா ஆகிய இருவரும் ஏ.டி.எம் அருகில் சென்று பார்த்த பொழுது மூன்று நபர்கள் இருந்துள்ளனர். காவல்துறையினரை பார்த்தவுடன் அதில் ஒருவர் செருப்பை விட்டு விட்டு ஓடி விட்டார் மற்ற இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.இது சம்மந்தமாக உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் அவர்கள் செருப்பு இல்லாமல் சந்தேகப்படும்படியாக சந்தைப்பேட்டை அருகில் ஒருவர் இருப்பதாக கொடுத்த தகவலின் படி பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் உடனடியாக சென்று சந்தேக நபரை பிடித்து விசாரணை செய்ததில் ஏற்காடு கொளகூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்றும் அவருடன் வந்தவர்கள் சேலம் குகை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்றும் இவரது உறவினர் தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியைச் சேர்ந்த ராமர் (எ) குட்டி பையன் என்று தெரியவந்தது.லட்சுமன் அளித்த தகவலின் பெயரில் ஆனந்தனை கைது செய்தனர். மேலும் இரவு ரோந்து பணியின் துரித நடவடிக்கையால் ஏ.டி.எம் கொள்ளையை தடுத்து எதிரிகளை கைது செய்துள்ளனர். இது சம்மந்தமாக காவல்துறை தலைவர் மேற்கு மண்டலம் திரு.சுதாகர் இ.கா.ப அவர்கள் திரு.செந்தில்குமார் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் முதல் நிலை காவலர் திருமதி.தெய்வராணி, திருமதி.நர்மதா இரண்டாம் நிலை காவலர் திரு.சந்திரன் மற்றும் திரு.சந்தோஷ் தீவட்டிப்பட்டி ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.

சேலம், ஏற்காடு மலை பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டு தீ 🔥😭
12/02/2023

சேலம், ஏற்காடு மலை பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டு தீ 🔥😭

Yeppudra😂….
30/01/2023

Yeppudra😂….

அதானே 😀
26/01/2023

அதானே 😀

22/01/2023

I will get angry if anyone embarrassing our ttf Annan
03/01/2023

I will get angry if anyone embarrassing our ttf Annan

Address

Hasthampatti, Yercaud Main Road
Salem
636007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salem memes:

Videos

Share