Smart Salem - தமிழ்

Smart Salem - தமிழ் சேலம் தகவல்கள்

01/03/2024

Click the below link and follow us on Instagram for regular salem updates and videos!!!

ஓசூர், திருச்சி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சில நகரங்கள் அதன் மாநகராட்சி எல்லையை நீட்டித்துள்ளதன்  அறிவிப்பு நேற்று முதல்...
25/08/2021

ஓசூர், திருச்சி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சில நகரங்கள் அதன் மாநகராட்சி எல்லையை நீட்டித்துள்ளதன் அறிவிப்பு நேற்று முதல்வரால் வெளியிடப்பட்டது, ஆனால் சேலம் மாநகராட்சி வரம்பு நீட்டிப்பு சேலம் மக்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமாகும். சேலம் விலக்கப்பட்டது, நாங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் சேலம் மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு சேலத்திற்கு விரைவில் செய்தற வேண்டும் என்று.....

சேலத்தில் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் டவுன் பஞ்சாயத்து இப்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது,  இன்று காலை சட்டசபையில...
24/08/2021

சேலத்தில் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் டவுன் பஞ்சாயத்து இப்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, இன்று காலை சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

சேலம் கிட்டத்தட்ட வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் !! ஏற்காடு படகு இல்லம் அ...
23/08/2021

சேலம் கிட்டத்தட்ட வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் !!

ஏற்காடு படகு இல்லம் அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்குகிறது, திரையரங்குகள் இன்று முதல் 50% ஆக்கிரமிப்புடனும் அண்ணா பூங்கா மற்றும் ஏற்காட்டில் உள்ள மற்ற பூங்காக்கள் இன்று திறக்கப்படுகின்றன மற்றும் மதுவிடுதிகளும் இன்று செயல்படத் தொடங்குகின்றன, பேருந்துகள் கர்நாடகாவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் சேவைகளைத் தொடங்குகின்றன. மேலும் நகரத்தில் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும்.

தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி முதல் புதிய தளர்வுகள் அறிவிப்பு.... திரையரங்குகள்  50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ள...
21/08/2021

தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி முதல் புதிய தளர்வுகள் அறிவிப்பு....

திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது. பூங்காக்கள் , கேளிக்கை பூங்கா, விடுதிகள் , உயிரியல் பூங்காக்கள் , கடற்கரைகள் , நீச்சல் குளம், மதுக்கூடம், போன்ற அனைத்தும் திறக்க அனுமதி , மேலும் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் தொடங்கயுள்ளன.
அதே போன்று செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 50 சதவீத சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும்.
இரவு 10 வரை கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.

அரசு மருத்துவமனையும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் !!!கேரளாவில் பணியாற்றி வரும் வாழப்பாடி அருகே உள்ள கரடிப்பட்டியை சேர்ந்த ஐ.ஏ.எஸ்...
19/08/2021

அரசு மருத்துவமனையும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் !!!

கேரளாவில் பணியாற்றி வரும் வாழப்பாடி அருகே உள்ள கரடிப்பட்டியை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மலாஸ்ரீ சேலம் அரசுமருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ், அகில இந்திய அளவில் 409 -வது இடத்தையும், மாநில அளவில் (தமிழகத்தில்) 10-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வார இறுதி நாட்களில் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை !!! சேலம் மாவட்டத்தில் மெதுவாக கொரோனா அதிகரிக்க ஆரம்...
05/08/2021

வார இறுதி நாட்களில் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை !!!

சேலம் மாவட்டத்தில் மெதுவாக கொரோனா அதிகரிக்க ஆரம்பம் ஆகிறது. எனவே கட்டுப்பாடுகள் மீண்டும் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்குச் செல்லும் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் இரண்டு தடுப்பூசியும் போட்டுக்கொண்ட பயணிகள் வார நாட்களில் பயணம் செய்யலாம். அல்லது கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டு்ம்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இல் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையான ஒன்றே இதனைக் நீண்ட நாள் கோரிக்கை எழுந்து...
03/08/2021

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இல் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையான ஒன்றே இதனைக் நீண்ட நாள் கோரிக்கை எழுந்து வருகிறது இதனை குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துறை புதிய உத்தியை கையாள உள்ளது அதாவது சுமார் 13 கோடி ரூபாய் செலவில் சென்னையில் இருந்து நாமக்கல் செல்லும் வண்டிகள் அனைத்தும் , சீநாயக்கம்பட்டி பைபாஸ் ரவுண்டானா செல்லாமல் அங்கிருந்து சர்வீஸ் ரோடு வழியாக நாமக்கல் செல்லும் சாலைக்கு திருப்பி விடப்படுகிறது இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை கருதுகிறது ,சென்னை பைபாஸ் இல் இருந்து தர்மபுரி பெங்களூர் செல்லும் வண்டிகள் அனைத்தும் வழக்கம்போல் சீலநாயக்கன்பட்டி ரவுடானா வழியேசெல்லும்

ஈரோடு மஞ்சள் பழனி பஞ்சாமிர்தம் மதுரை மல்லி இதுபோன்று சேலம் மாவட்டத்திற்கு என்று இரு புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள...
25/07/2021

ஈரோடு மஞ்சள் பழனி பஞ்சாமிர்தம் மதுரை மல்லி இதுபோன்று சேலம் மாவட்டத்திற்கு என்று இரு புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன அவை எது என்று உங்களுக்கு தெரியுமா ???

ஆடிமாத பண்டிகையை முன்னிட்டு மேட்டூர் அணைக்கு அதிக கூட்டம் வருவார்கள் என்று ஐயம் உள்ளதால் 17 மற்றும் 18ம் தேதிகளில் மேட்ட...
17/07/2021

ஆடிமாத பண்டிகையை முன்னிட்டு மேட்டூர் அணைக்கு அதிக கூட்டம் வருவார்கள் என்று ஐயம் உள்ளதால் 17 மற்றும் 18ம் தேதிகளில் மேட்டூர் அணைக்கு கோரணா காரணமாக பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ளது

தேங்காயின் பெருமையைப் போற்றுவதுடன் தமிழகத்தின் சில பகுதிகளில் அதற்கென ஒரு விழாவே கொண்டாடப்படுகிறது.  `தேங்காய் சுடும் தி...
17/07/2021

தேங்காயின் பெருமையைப் போற்றுவதுடன் தமிழகத்தின் சில பகுதிகளில் அதற்கென ஒரு விழாவே கொண்டாடப்படுகிறது. `தேங்காய் சுடும் திருவிழா’ என்று அழைக்கப்படும் அந்த விழா சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் ஆடி மாதம் 1-ம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தேங்காய்ப் பண்டிகை உருவாக செவிவழிக் கதைகள் பல கூறப்பட்டாலும், தேங்காயின் மருத்துவக் குணத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே இத்தகைய விழா உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில் தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு. இது பலருக்கு நமது சிறுவயது ஞாபகங்களை நினைவுபடுத்த கூடும்

பின்னோக்கி பார்ப்போமா.... 1972 ஆம் ஆண்டில் திருமணி முத்தாற்றில்  கடும் வெள்ளம் ஏற்பட்டது, அந்த நேரத்தில் ஆற்றின் கரையில்...
14/07/2021

பின்னோக்கி பார்ப்போமா....

1972 ஆம் ஆண்டில் திருமணி முத்தாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டது, அந்த நேரத்தில் ஆற்றின் கரையில் பழைய பேருந்து நிலையம் செவ்வாய்பேட்டை, திருவள்ளுவர் சிலை போன்ற பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளது. அதன் நினைவு புகைப்படங்கள் உங்களுக்காக இதோ .......

நகரத்தின் மிகவும் பிஸியான வணிக வீதிகளில் ஒன்றான க்ரீன்வேஸ் ரோட் இப்போது ஒற்றை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் ...
14/07/2021

நகரத்தின் மிகவும் பிஸியான வணிக வீதிகளில் ஒன்றான க்ரீன்வேஸ் ரோட் இப்போது ஒற்றை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது , இந்த முறை மட்டுமில்லை ஒவ்வொரு முறையும் இதே நிலைமைதான், ஒரு மழை பெய்தாலே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பது அங்கு வாடிக்கையாகிவிட்டது , சேலம் மாநகராட்சி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுமா காத்திருந்து பார்ப்போம்.....

இயற்கையின் நடுவே ஒரு சாலை பயணம் !!!  # பெங்களூரு-  # சேலம்  # என்.எச் 44  # தோப்பூர் காட் பிரிவு ...
14/07/2021

இயற்கையின் நடுவே ஒரு சாலை பயணம் !!!

# பெங்களூரு- # சேலம் # என்.எச் 44
# தோப்பூர் காட் பிரிவு ...

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் எடுப்புப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன , ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுப்பா...
14/07/2021

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் எடுப்புப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன , ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுப்பாட்டு அறை சேலம் மாவட்டத்தில் அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது !

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் என்னும் கிராமத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க சரியான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது அங்கு நிலம் தேர்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது, அவ்வாறு அங்கு ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில் ராக்கெட் எரிபொருள் மிகக்குறைவாக ஏற்படும் என்றும் இதன் மூலம் சுமார் 100 கோடி பணம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது அவ்வாறு அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் அதற்கான கட்டுப்பாட்டு அறை சேலம் மாவட்டத்தில் அமையுமென்று கூறப்பட்டு வருகிறது அவ்வாறு சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைந்தால் சேலம் மாவட்டத்திற்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தரும் இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சேலம் மாவட்டத்தின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கும் இது நம் மாவட்டத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய பெருமை

சிங்கார  சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுவரொட்டிகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது, விரைவில...
13/07/2021

சிங்கார சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுவரொட்டிகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது, விரைவில் சென்னை நகரத்தில் சுவரொட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று நம்புகிறார், ஏன் பிற மாவட்டங்களில். இல்லை? சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஒட்டும் சுவரொட்டிகள் மற்றும் மேம்பாலங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை குறைந்தபட்சம் தடை செய்ய வேண்டும் ..........

பிப்ரவரி 2021 இல் சேலத்தில் விண்வெளி கிளஸ்டரை உருவாக்க டி.என் அரசாங்கம் கிரவுன் குழுமத்துடன் ஒரு   உடன்பாட்டில் கையெழுத்...
13/07/2021

பிப்ரவரி 2021 இல் சேலத்தில் விண்வெளி கிளஸ்டரை உருவாக்க டி.என் அரசாங்கம் கிரவுன் குழுமத்துடன் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது, ஆனால் எந்த முன்னேற்றங்களும் இல்லை, இன்னும் திட்டம் உள்ளதா.??

2021 பிப்ரவரி கிரவுன் குழு சேலம் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஒருங்கிணைந்த விண்வெளி கிளஸ்டரை உருவாக்க தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்தது. இது தமிழ்நாடு பாதுகாப்பு துறையின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் 2500 கோடி முதலீட்டில் ட்ரோன் சோதனை வசதிகள், பராமரிப்பு, பழுதுபார்ப்பு , பழுதுபார்க்கும் பிரிவு மற்றும் ஒரு விமானப் பள்ளி ஆகியவை இருக்கும். இந்த பூங்காவில் ட்ரோன் உற்பத்தி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் 5000+ மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகையாகும். இந்த அறிவிப்பு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னும் அந்த திட்டம் இன்னும் இருக்கிறதா? அந்த திட்டத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா? எங்களுக்கு வேலை கிடைக்குமா ????

கழிவுநீர் குட்டையான ஏரி: அடையாளத்தை இழந்து வரும் ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு..அரசு அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்காமல் வ...
13/07/2021

கழிவுநீர் குட்டையான ஏரி: அடையாளத்தை இழந்து வரும் ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு..
அரசு அதிகாரிகள் உரிய முறையில் பராமரிக்காமல் விட்டதால் ஏற்காடு மலைப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புகளின் கழிவுநீர் நேரடியாக இந்த ஏரியில் கலக்கிறது.

அன்புள்ள பெற்றோர் / மாணவர்கள்,  II பதிப்பு: சிஐஐ வின்னை தோட்டு - தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி 17 & 18 ஜூலை 2021 : 1000 மண...
13/07/2021

அன்புள்ள பெற்றோர் / மாணவர்கள்,

II பதிப்பு: சிஐஐ வின்னை தோட்டு - தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி

17 & 18 ஜூலை 2021 : 1000 மணி முதல் 1330 மணி வரை | ஆன்லைன் - மெய்நிகர் இயங்குதளம்

மாணவர்களே வருங்காலத்தில் தாங்கள் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு எந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் எந்த துறைகள் மிக சிறப்பான வளர்ச்சி அடையும் போன்ற போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள் வல்லுநர்கள் சேலத்தில் மிகப்பெரிய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது Cii இதில் கலந்துகொள்ள நீங்கள் தயாராகுங்கள்

* இலக்கு பார்வையாளர்கள் *: 10, 11 மற்றும் 12 வது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை முடித்தல்.

பதிவு செய்ய: bit.ly/CIIVT2

அன்புடன்
சிஐஐ சேலம் மண்டலம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எம்பி மற்றும் மாநகராட்சி ஆணைய...
13/07/2021

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எம்பி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர் !

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 37-வது கோட்டம் குமரிகிரி ஏரியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.10.58 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்பு பணி மற்றும் சூரமங்கலம் மண்டலம் 25-வது கோட்டம் பள்ளப்பட்டி ஏரி ரூ.12.80 கோடி மதிப்பில் மறு சீரமைக்கும் பணியையும் எம்பி பார்த்திபன் மற்றும் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும், சேலம் மாநகராட்சி கோட்டம் 31-ல் ரூ.5.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் பணி மற்றும் தற்காலிகமாக செயல்பட்டு வரும் வஉசி மார்க்கெட்டையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 43 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்பி மற்றும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினர்.

சேலத்தை சேர்ந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் கொடுத்த இன்ப அதிர்ச்சி இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் அமெரிக்காவில் நடந்த சுவாரச...
09/07/2021

சேலத்தை சேர்ந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் கொடுத்த இன்ப அதிர்ச்சி இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் அமெரிக்காவில் நடந்த சுவாரசிய நிகழ்வு.......

08/07/2021

உயிரைக்காத்த வீரமங்கைகள்...

புதன்கிழமை அதிகாலை சேலம் ரயில்வே சந்திப்பில் நகரும் ரயிலில் இருந்து வெளியேற முயன்றபோது பீகாரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார் அப்பொழுது சேலம் சந்திப்பில் நேற்று கடமையில் இருந்த இரண்டு பெண்கள் ஆர்.பி.எஃப் பணியாளர்கள் மஞ்சு மற்றும் அஸ்வினி ஆகியோர் தங்கள் அவரை காப்பாற்றினார்கள்! பாராட்டுக்குரியவர்கள்

பால் மற்றும் பால் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.  நாசர் இன்று காலை சேலம் பால் பண்ணை ஆய்வு செய்தார் , இங்கு உயர் தொழி...
04/07/2021

பால் மற்றும் பால் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் இன்று காலை சேலம் பால் பண்ணை ஆய்வு செய்தார் , இங்கு உயர் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க நிலம் ஒதுக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். சேலம் பால் ஆலையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நிதி நிலைமையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார் மற்றும் 7 லட்சம் லிட்டர் பால் திறன் மற்றும் 30 மெட்ரிக் பால் தூளின் உற்பத்தி திறன் ஆகியவற்றை அதிகரிப்பதன் மூலம் சேலம் டைரியின் விரிவாக்கம் ரூ .140 கோடி செலவில் செய்யப்படும் என்றும் கூறினார்

நடக்கலாம் வாங்க...... காலை  காந்தி ஸ்டேடியத்தில் நாளை காலை 6 முதல் 9 மணி வரை  நடைபயிற்சி அனுமதிக்கப்படுகின்றன.துப்புரவு ...
03/07/2021

நடக்கலாம் வாங்க......
காலை காந்தி ஸ்டேடியத்தில் நாளை காலை 6 முதல் 9 மணி வரை நடைபயிற்சி அனுமதிக்கப்படுகின்றன.துப்புரவு மற்றும் துப்புரவுப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, காலை நடை பயிற்சிக்கு செல்வோர் முக கவசம் கட்டாயமாகும் ......

தலைவாசலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் 2022 க்குள் முழுமையாக செயல்படும்! இங்குள்ள தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்...
02/07/2021

தலைவாசலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் 2022 க்குள் முழுமையாக செயல்படும்!

இங்குள்ள தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் தொடர்பான ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிறுவனத்தில் பணிகள் முன்னேற்றம் குறித்து மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். கால்நடை பண்ணை உட்பட 1,022 ஏக்கரில் ஆராய்ச்சி மற்றும் கால்நடை ஆய்வுகளுக்கு தனி வசதிகள் இங்கு அமைந்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களுக்கு இங்கு கல்வி கற்க வசதிகளும் உள்ளன.

சர்வதேச தரத்தில் அமைந்துள்ள இம்மையத்தின் முக்கிய பணிகள் 2021 க்குள் நிறைவடையும், இது 2022 க்குள் முழுமையாக செயல்படும். தற்போது 40 மாணவர்கள் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை அறிவியல் படித்து வருவதாகவும், இது 2022 ஆம் ஆண்டில் 80 ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.13 கோடி மதிப்பில் புதிய இரண்டடுக்கு பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் விற...
01/07/2021

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.13 கோடி மதிப்பில் புதிய இரண்டடுக்கு பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதற்காக பேருந்து நிலையம் அருகில் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உள்ள பழைய மேம்பாலங்கள் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இந்த புதிய மேம்பாலம் பேருந்து நிலையத்தின் மேல் பகுதிக்கு பேருந்துகள் செல்ல ஏதுவாக அமைக்கப்படுகிறது இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஆர்.ஜகன்னாதனை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் நியமித்துள்ளார்! ஆளுநர் ஜகந்நாத...
30/06/2021

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஆர்.ஜகன்னாதனை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் நியமித்துள்ளார்!

ஆளுநர் ஜகந்நாதனை மூன்று வருட காலத்திற்கு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார், ஜகந்நாதன் 39 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டவர் மற்றும் வேளாண்மை, பேராசிரியர் மற்றும் தலைவராக, வேளாண் வானிலை / வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாட்டில் கோவை வேளாண் பல்கலைக்கழக டீன் ஆக பணியாற்றி உள்ளார்

உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு முன்னர் சேலம் கார்ப்பரேஷன் நகர வரம்பை 60 வார்டுகளிலிருந்து 100 வார்டுகளாக உயர்த்துமாறு தமி...
29/06/2021

உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு முன்னர் சேலம் கார்ப்பரேஷன் நகர வரம்பை 60 வார்டுகளிலிருந்து 100 வார்டுகளாக உயர்த்துமாறு தமிழ்நாடு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம், இதனால் சேலம் நகரத்தின் மக்கள் தொகை விரைவாக அதிகரிக்கும், மேலும் சேலம் அரசாங்கத்திடமிருந்தும் பல நலத்திட்டங்களைப் பெற இது உதவியாக இருக்கும் .....

29/06/2021

சேலத்தில் கோரனோ வைரஸ் தொற்று குறைந்துள்ளதால் விவசாயிகள் உழவர் சந்தையை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர் அதேபோல் ஜவுளி கடை உரிமையாளர்கள் சங்கம் கடைகளை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்......

27/06/2021

சேலத்தில் கந்தம்பட்டிபாஸ் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு அருகிலுள்ள சிறிய கரும்பு காடுகளுக்குள் சிறுத்தை நுழைந்ததாக செய்திகள் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய காவல் குழுவும் , மீட்புக் குழுவும் நிறுத்தப்பட்டு தேடப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பாதுகாப்புப்படை செயல்பாட்டில் உள்ளது, காத்திருந்து பார்ப்போம் இது ஒரு உண்மையான சிறுத்தையா., அல்லது மக்களால் ஏற்படுத்தபட்ட ஒரு வதந்தியா ......

Address

Salem
Salem
636004

Telephone

+917010344689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Salem - தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Salem - தமிழ்:

Videos

Share