A1 Firstcopy

A1 Firstcopy a1 firstcopy is a pure infotainment page where it reflects the day to day activity. By this new plat

15/01/2025

15/01/2025
14/01/2025

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் மாவட்ட ஆட்சியரகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாழை, கரும்பு போன்ற தோரணங்கள் கட்டப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் நேபாளம், இங்கிலாந்து ஆப்பிரிகா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். விழாவில் பாரம்பரியமிக்க தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்! #தைதிருநாள்
14/01/2025

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்!
#தைதிருநாள்

இன்றைய (13.01.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
13/01/2025

இன்றைய (13.01.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

13/01/2025

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட திமுகவின் தொழிலாளர் அணி சார்பில் சேலத்தில் மாநில அளவிலான மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

13/01/2025

சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக விலை ஏற்றம் கண்டுள்ளது. பனியின் காரணமாக செடிகளில் மொட்டுகள் மலர்வதற்கு முன்பாகவே கொட்டி விடுவதால் குண்டுமல்லி உற்பத்தி வெகுவாக குறைந்து சில ஆயிரம் கிலோ பூக்கள் மட்டுமே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இதனால், குண்டு மல்லி விலை தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது.

நேற்றைய தினம் குண்டுமல்லி கிலோ ரூ.1600க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் குண்டு மல்லி கிலோவுக்கு ரூ.1200 விலை ஏற்றம் கண்டு, இன்றைய தினம் கிலோ ரூ.2,800க்கு விற்பனையானது.

இன்றைய (13.01.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
13/01/2025

இன்றைய (13.01.25) காலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

12/01/2025

சேலம் மாநகராட்சி 34 கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ நூதன முறையில் தனது பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுடன் பாரம்பரிய மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றவர் புகையில்லா போகித் திருநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ததோடு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களுடன் சென்று அதனை பெற்றுக் கொண்டு மேலும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இயற்கை வளங்கள் நிரம்பிய உலகில் பொங்கல் திருநாளை எதிர்வரும் காலங்களில் நாம் அனைவரும் நல்ல மாற்றத்துடனும் ஏற்றத்துடனும் கொண்டாடி புகையில்லா போகி பண்டிகையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

11/01/2025

சேலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனியார் பொழுதுபோக்கு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது சேலம் டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் சிவகுமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி சிவக்குமாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு டைரியில் ஆட்டோகிராப் போட்டு வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய மாற்றுத் திறனாளி சிவகுமாருக்கு சாவே கிடையாது அவர் பல்லாண்டு வாழ வேண்டும், தெய்வம் அவருக்கு மேலும் பல வருடங்கள் வாழ ஆயுள் தர வேண்டும் சிவக்குமாரின் அம்மா புண்ணியவதி என்றும் சிவகுமார் கடவுள்தான். கிருஷ்ணர் போன்ற பல கடவுள் வேடங்களை போட்டுள்ளார் என குறிப்பிட்டு புகழ்ந்து பேசினார். இதையடுத்து சிவக்குமார் மாற்றுத்திறனாளிக்கு கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து கூறினார்.

இன்றைய (11.01.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..
11/01/2025

இன்றைய (11.01.25) மாலை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..

11/01/2025

சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், உதவி கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர்.

11/01/2025

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, புடவை மற்றும் பாவாடை தாவணி அணிந்து வந்திருந்தனர்.

விழாவில் பங்கேற்ற மாணவர்கள் பொங்கல் பானைகள், கரும்புகள், பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்கள், மஞ்சள் முதலியவற்றை கொண்டு கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனர்.

அப்போது பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும்போது மாணவர்கள் அனைவரும் குலவையிட்டும் பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகமடைந்தனர். தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களான மாட்டு வண்டி பயணம், கயிறு இழுத்தல், உரி அடித்தல் போன்ற விளையாட்டுகளில் மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when A1 Firstcopy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share