23/11/2022
மாண்புமிகு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதிகளில் மறுக்கட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 392 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத்தொகையாக ரூ.94.08 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மீ.தங்கவேல்,பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக் குழு தலைவர் நே.சிற்றரசு,தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் எஸ் மதன்மோகன்,ராயபுரம் மண்டல குழு தலைவர் ப.ஸ்ரீராமலு,மாமன்ற உறுப்பினர் இரா.ஜெகதீசன்,வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம்,வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.