Vision R.S.Mangalam

Vision R.S.Mangalam செய்திகள், அரசு அறிவிப்பு, சமூக விழிப?

17/12/2021
18/11/2021

பொதுமக்கள் மழை மற்றும் இயற்கைப் பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும், புகார்கள் தெரிவிக்கவும் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tollfree Number: 1077
Landline number: 04567- 230060
WhatsApp number: 7708711334

25/09/2021

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (26.09.2021) காலை 7.00 மணி முதல் மாலை 7.00 வரை மொத்தம் 494 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சுமார் 50,000 டோஸ் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்.

12/09/2021

நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.

சினிமா வாய்ப்பு...
10/09/2021

சினிமா வாய்ப்பு...

இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை...
10/09/2021

இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை...

JusticeForRabiya
10/09/2021

JusticeForRabiya

இரண்டு மார்பகங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன! பிறப்புறுப்பு குத்திக் கீறப்பட்டுள்ளது..!
கழுத்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு தொங்கும் நிலையில்..!
நெஞ்சில் ஆழமான துளையிட்ட ஓட்டை...! உடல் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெட்டுக்கள் மற்றும் குத்தப்பட்ட காயங்கள்....!

அவள் இறப்பதற்கு சற்று முன்பு நான்கு பேருக்கும் அதிகமானோர் கற்பழித்துள்ளனர். ஒரு மனித உடல் தாங்க முடியாத அளவிற்கு வேதனை. அசையக் கூட முடியாமல் அவள் இறுதியில் இறந்து விடுகிறாள்.

மேற்கண்ட அதிர்ச்சியூட்டும் வரிகள் திரைப்படம் அல்லது நாவலின் பகுதிகள் அல்ல. குப்பை பொறுக்கியும் வீட்டு வேலை செய்தும் கிடைத்த பணத்தில் ஒரு தாயால் காவல்துறை அதிகாரியாக உருவான அவரது மகள் ,

அவள் வேலைக்குச் சென்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் தவறுகளுக்கு துணை போகாததன் காரணத்தால் மனிதத்தையும் மனசாட்சியையும் குப்பைத் தொட்டியில் வீசிய நமது ஜனநாயக நாட்டின் மக்கள் ஊழியர்களால் தண்டிக்கப்பட்டாள்.

அவள் பெயர் ராபியா ஷைஃபி.
வயது 21. கொல்லப்பட்டது - ஆகஸ்ட் 26. டெல்லி லஜ்பத் நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரி.

நிர்பயா வழக்கை விட கொடிய குற்றம். ஆனால், அனைத்து இந்திய ஊடகங்களும் தகவல்களை மறைத்தன.
வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் ஹேஷ்டேக் இல்லை.

யாரும் மெழுகுவர்த்தி ஏந்தவில்லை. தெரிந்தவர்கள் கூட சொல்லவில்லை. ஆனால் இது போன்ற ஒன்று நடந்திருக்கிறது.
கேட்டால் தலை வெடித்துவிடும், உடல் தளர்ந்து விடும் ஒரு பெரும் கொடூரத்தை சில கொடூரர்கள்,
நர வேட்டைக்காரர்கள் ஒரு பெண்ணின் மீது, ஒரு பாவப்பட்ட தாயின் மகளின் மீது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 26 இரவு, ராபியாவைப் காணவில்லை என்றவுடன், ​​அவளது குடும்பத்தினர் அவளது சக ஊழியர்கள் உட்பட பலரை அழைத்தார்கள்.
சிறிது நேரம் கழித்து ஒரு சக ஊழியர் அவளது அம்மாவை அழைக்கிறார்.

அழைப்பு பதிவு செய்யவில்லை என்பதை ஆரம்பத்தில் உறுதி செய்த பிறகு,
அவர் சில விஷயங்களை கூறியுள்ளார். ராபியாவை அவருடன் பணிபுரியும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவாள் என்று கூறியுள்ளார்.

அவரது மேலதிகாரியின் தொலைபேசி எண்ணைக் கேட்டபோது, ​​அந்த சக ஊழியர் கொடுக்க மறுத்ததுடன், அவரும் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறி தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

பின்னர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற ராபியா குடும்பத்தினரை உட்காரச் கூடச் சொல்லாமல் வழக்கை முன்னதாகவே பதிவு செய்து விட்டோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம் என்று கூறி அவர்களது வாக்குமூலத்தை கூட பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவரது தந்தை சமித் அகமது கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு இரகசிய அறை இருப்பது தனது மகளுக்குத் தெரியும் என்றும் லஞ்சப் பணமாக தினமும் ரூ. 3-4 லட்சம் வருவதாக ராபியா கூறியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தகவலை அறிந்ததனால் தான் ராபியா கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அவளது அலுவலகத்தில் நடந்த ஊழல் குறித்து அவள் பலரிடம் புகார் அளித்துள்ளதாகவும்,
அவள் பணியில் சேருவதற்கு முன்னால் ஊழல் தடுப்பு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இறுதியில் ஹரியானாவிலிருந்து ராபியாவின் உடல் மீட்கப்பட்டது.

டெல்லியில் ராபியா என்ற போலீஸ் அதிகாரி ஒரு சிலரால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,
உறுப்புகள் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட்டன என்பதை நாடு அறிய பல நாட்களானது என்பது மட்டுமின்றி,

இங்கேயுள்ள அரசும் சட்டவியல் அமைப்புகளும் தலைவர்களும் முக்கிய ஊடகங்களும் நடந்த கொடுமைகளை அறிந்திருந்தும், அமைதியாக இருக்கிறார்கள்.
இது வகுப்புவாதம் நிரம்பிய வஞ்சனையாகும்.

ஒரு பெண்ணுக்கு எதிராக மட்டுமல்ல, ஒரு சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு, இங்கே உள்ள நீதி நெறிமுறைகளுக்கு, அனைத்துவிதமான சட்ட முறைமைகளுக்கு எதிராக நடக்கும்
அநீதிகளுடனான தொடர்ச்சியான அமைதி.

ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் இடைவிடாமல் தாக்கப்படுகையில், அவர்களின் பெண் மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் நாட்டில் நாம் சில பிராமணிய கண்ணீருக்காக மட்டுமே மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.
சில குடும்பங்களுக்கு மட்டுமே நீதியை பெற்றுத் தருவோம்.

அந்த குடும்பங்களுக்காக மட்டும் கட்டமைக்கப்பட்ட சனாதன பொது புத்தியின்,
உணர்வின் ஊடாக நாம் புலம்பலாம். பசுவை தேசிய விலங்காக ஆக்குவது பற்றி நாம் இன்னும் விவாதிக்கலாம். சங்கிகளுடன் அவர்களது மனோநிலையுடன் அவர்களது அடிமைகளாக சேவகம் செய்யும் ஊடகங்கள் வாந்தி எடுக்கும் செய்தியை அப்படியே விழுங்கலாம்.

சட்ட அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு அதிகாரிக்கே இது போன்ற மோசமான நிலை ஏற்பட்டிருப்பது பயத்தை உருவாக்குகிறது.
அதுவும் தலைநகரில்! நமது நாடு ஜனநாயகத்தில் இருந்து தடம் புரண்டுவிட்டது.
ஊழல் / பண மோசடி மையமாக மாறிய இந்த நாட்டிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது.
தன் தாய்நாட்டிற்காக வேலை செய்ய தயாரான, தன் வேலையில் நேர்மையாக இருந்த ஒரு பெண்ணின் கொடூர கொலைக்குப் பிறகும் நாம் மீண்டும் அமைதியாக இருக்கிறோம்.

வேட்டைக்காரர்களுக்கு எல்லைகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் இரைகளை மட்டுமே பின் தொடர்கிறார்கள். டெல்லியில் இருந்து நமது பகுதிகள் அதிக தூரம் இல்லை.
நமக்காகவும்தான் அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டாள்.
மக்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் இருந்த ஒருவரையே கொடூரமாக கொன்றுள்ளனர்!

ராபியா ஷைஃபி, ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் தன் உயிரைக் கொடுத்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண்ணின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவளது மேலதிகாரிகளின் கொலை வெறியால் இல்லாமல் போனது பல ஆசைகள் கொண்ட ஒரு பெண்.
ஒரு மகள். ஒரு குடும்பம்.

வெட்கித் தலை குனிகிறோம்.

Murugan tirupati

28/08/2021
நல்லதொரு மாற்றம்...சிறப்பு... மகிழ்ச்சி...
27/08/2021

நல்லதொரு மாற்றம்...
சிறப்பு... மகிழ்ச்சி...

*மதிப்பிற்குரிய ஐயா*  ஆர்எஸ் மங்கலம் அலிகார் சாலை பிஸ்மி ரைஸ் மில் மற்றும் தவக்கல் மளிகை கடை அருகில் பொதுமக்கள் பயன்படுத...
26/08/2021

*மதிப்பிற்குரிய ஐயா*

ஆர்எஸ் மங்கலம் அலிகார் சாலை பிஸ்மி ரைஸ் மில் மற்றும் தவக்கல் மளிகை கடை அருகில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக குடிநீர் ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக அமைக்கப்பட்டிருக்கும் தொட்டி அருகில் குப்பை கழிவுகளை கொட்டுகிறார்கள்.

ஆர்எஸ் மங்கலம் பேருரட்சி மூலமாக குப்பைகளை சேகரிப்பதற்கு ஒவ்வொரு வீடுகளுக்கும் வாகனம் வரும்போது குப்பைகளை கொடுக்காமல், அப்பகுதி மக்கள் வழக்கமாக குடிநீர் தொட்டி அருகிலேயே குப்பைகளை கொட்டுகிறார்கள்.

அப்பகுதி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக இருப்பதால், ரோட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் சூழல் உள்ளது.

எனவே தாங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி குப்பைகளை சாலையோரம் கொட்டாமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மேலும் விதிமுறைகளை மீறி குப்பைகளை கொட்டும் வீடுகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

*இணைப்பு*

சாலையில் கொட்டப்பட்டிருக்கும் குப்பையின் புகைப்படம்.

21/08/2021
20/08/2021
தல தளபதி...வா...ரே... வா...
12/08/2021

தல தளபதி...
வா...ரே... வா...

மகிழ்ச்சியும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும்...
08/08/2021

மகிழ்ச்சியும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும்...

Star Vijay தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் வாய்ப்பு... திறமையான நமது ஆர் எஸ் மங்கலம், இராமநாதபுரம...
02/08/2021

Star Vijay தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் வாய்ப்பு... திறமையான நமது ஆர் எஸ் மங்கலம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கவும்...
நம் ஊரில் கிராமப் பகுதிகளில் திறமையான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் உள்ளனர்... ஆகவே தொடர்ந்து பகிரவும்... யாருக்கேனும் உதவியாக இருக்கும்...

மகிழ்ச்சி...
02/08/2021

மகிழ்ச்சி...

இந்த படத்தில் 609 என்ற எண்ணைத் தவிர வேறு எண்கள் எத்தனை உள்ளது?
28/07/2021

இந்த படத்தில் 609 என்ற எண்ணைத் தவிர வேறு எண்கள் எத்தனை உள்ளது?

வாழ்த்துக்கள் சகோதரி மீராபாய்...What a fantastic start... முதல் நாளிலேயே TOKYO OLIMPIC 2021ல் வெள்ளி பதக்கம் வென்ற சாதனை...
24/07/2021

வாழ்த்துக்கள் சகோதரி மீராபாய்...
What a fantastic start...
முதல் நாளிலேயே TOKYO OLIMPIC 2021ல் வெள்ளி பதக்கம் வென்ற சாதனைப் பெண்மணி மீராபாய்.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல் நாளில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும்...

இராமநாதபுரம் மாவட்ட மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்...
06/07/2021

இராமநாதபுரம் மாவட்ட மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் பங்கேற்க கமுதியைச் சேர்ந்த காவலர் தேர்வு செய்...

வேலைவாய்ப்பு...
24/06/2021

வேலைவாய்ப்பு...

17/06/2021

Address

Ramanathapuram

Telephone

+918838598282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vision R.S.Mangalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision R.S.Mangalam:

Videos

Share


Other Media/News Companies in Ramanathapuram

Show All