29/03/2023
நாள்: 29-03-2023 நேரம்: 2:22 மணி
வானிலை தகவல்
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,
29.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
30.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.03.2023 முதல் 02.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அழகரை எஸ்டேட் (நீலகிரி) 14, குண்டேரிபள்ளம் (ஈரோடு) 10, குன்னூர் (நீலகிரி) 8, அடார் எஸ்டேட் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி) தலா 7, குன்னூர் PTO (நீலகிரி) 6, மேட்டுப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 5, செங்கோட்டை (தென்காசி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 4, கோத்தகிரி (நீலகிரி), வைகை அணை (தேனி), கெத்தை (நீலகிரி), பெரியகுளம் AWS (தேனி) தலா 3, தக்கலை (கன்னியாகுமரி), மதுரை தெற்கு (மதுரை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), தேக்கடி (தேனி) தலா 2, விரகனூர் அணை (மதுரை), ராசிபுரம் (நாமக்கல்), மன்னார்குடி (திருவாரூர்), மஞ்சளார் (தேனி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குந்தா பாலம் (நீலகிரி), மதுரை விமான நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
முனைவர். பா.கீதா
விஞ்ஞானி - D
தென் மண்டல தலைவருக்காக
மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை