PondiDiary

PondiDiary Read all latest news from Pondicherry, India & World on Politics, Business,Technology, Entertainment, Sports etc. Find exclusive news stories...

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு  அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம்கேட்பதாக கூறிஅதிகாரிகளை கண்டித்து சட்டமன்ற உறுப்ப...
13/06/2024

புதுச்சேரியில் குடும்ப அட்டை பெறுவதற்கு அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம்கேட்பதாக கூறி

அதிகாரிகளை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

13.06.2024வில்லியனூர் தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கின...
13/06/2024

13.06.2024
வில்லியனூர் தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வில்லியனூர், பெரியபேட், ஒதியம்பட்டு, தட்டாஞ்சாவடி, சுல்தான்பேட்டை பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் பள்ளிக் கல்வித்துறை மூலம் இலவச புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அரசின் இலவச புத்தகம் மற்றும் சீருடையை வழங்கி, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

11/06/2024
11/06/2024
இன்று 10.06.2024 புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன் வரிச்சுகுடி கிராமத்தில் அருள்மிகு ஞானாம்பி...
10/06/2024

இன்று 10.06.2024 புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன் வரிச்சுகுடி கிராமத்தில் அருள்மிகு ஞானாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் சுவாமி மற்றும் அருள்மிகு ஞான விநாயகர் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அருள்மிகு மகாலட்சுமி அருள்மிகு துர்க்கை அம்மன் அருள்மிகு தட்சிணாமூர்த்தி அருள்மிகு பைரவர் நவகிரகம் ராஜகோபுர சமேத மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பெருவிழாவில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.மேலும் இந்நிகழ்வில் அறங்காவல் குழுவினர் பக்தர்கள் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்...

பத்திரிக்கை செய்தி.. சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் அலுவலகம்பொருள்: அமோக்ஸிசிலின் உலர் சிரப் காலாவதி தேதி தெளிவு...
09/06/2024

பத்திரிக்கை செய்தி.. சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநர் அலுவலகம்

பொருள்:

அமோக்ஸிசிலின் உலர் சிரப் காலாவதி தேதி தெளிவுபடுத்துதல் பற்றிய அறிக்கை:

08.06.2024 திமுக இளைஞர் அணி சார்பில் கால்பந்து போட்டிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் ! புதுச்சேரி மாநில...
08/06/2024

08.06.2024

திமுக இளைஞர் அணி சார்பில் கால்பந்து போட்டி
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !


புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கால்பந்து விளையாட்டுப் போட்டி, இன்று காலை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூ. மூர்த்தி வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு, மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமை தாங்கி, கால்பந்து போட்டியை ஒலிம்பிக் ஜோதி ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கால்பந்து அணியின் கொடியேற்றி வைக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் கால்பந்து வீரர்களுக்கு இளைஞர் அணி சார்பில் சீருடை வழங்கப்பட்டது.
இன்றும் நாளையும் நடைபெறும் ஐவர் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் புதுச்சேரி, கேரளா, தமிழகத்தின் சென்னை, தின்டிவனம், கடலூர், எண்டியூர், கோவளம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்கின்றன.
நிகழ்ச்சியை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தாமரைக்கண்ணன், ரெமிஎட்வின், தமிழ்ப்பிரியன், மாநில அயலக அணி துணை அமைப்பாளர் சிவா, உப்பளம் தொகுதி துணைச் செயலாளர் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் ராஜா, ராஜி, ரமேஷ், கல்யாணசுந்தரம், சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா. செ. சக்திவேல், ரவீந்திரன், வேலவன், கோபாலகிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், எம்.ஆர். திராவிடமணி, கோ. தியாகராஜன் என்கிற ராஜா, சிவக்குமார், து. சக்திவேல், எல். மணிகண்டன், கலியகார்த்திகேயன், சத்தியவேல், அணிகளின் அமைப்பாளர்கள் எஸ்.பி. மணிமாறன், சீனு. மோகன்தாசு, செந்தில்முருகன், முகம்மது ஹாலிது, வீரய்யன், மதிமாறன், செல்வநாதன், டாக்டர் ஆனந்த் ஆரோக்கியராஜ், கோதண்டபாணி, காயத்ரி ஸ்ரீகாந்த், மாநில துணை அமைப்பாளர்கள் அகஸ்டீன் சித்து, விஜி என்கிற வெங்கடேசன், கலிமுல்லா, ரபேல், கலிவரதன், சந்தோஷ், அன்பழகன், தேவேந்திரன், பிரியதர்ஷினி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன், உருளையன்பேட்டை தொகுதி பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிக்கு நாளை மாலை 05.00 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர், முன்னாள் துணைவேந்தர் முனைவர் சபாபதிமோகன் அவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பிறந்த நாள் விழா ஏனாமில் இன்று நடைபெற்றது முதல்வர் ரங்கசாமி, உள்துறை ...
06/06/2024

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பிறந்த நாள் விழா ஏனாமில் இன்று நடைபெற்றது முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

*புதுச்சேரி...மக்களவை தொகுதி..காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி ..புதுச்சேரி வரலாற்றில் இரண்டாவது முறையாக எதிர்க்...
05/06/2024

*புதுச்சேரி...மக்களவை தொகுதி..காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி ..புதுச்சேரி வரலாற்றில் இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வேட்பாளர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.காங்வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜக நமச்சிவாயத்தை தவிர அதிமுக,நாதக கட்சி உட்பட 24 கட்சிகள் டெபாசிட் இழந்தனர்.*

இந்திய நாட்டுக்கான பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடந்தது.
இதில் முதல்கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரிக்கு தேர்தல் நடந்தது. புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்பி உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 10லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர்.
78.90 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் அனைத்தும் நேற்று காலை எண்ணப்பட்டன.
காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று சுற்றுகளாக சட்டமன்றத்தில் 30 தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
இரவு 8 மணி வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது.
முதல் கட்டத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலையில் இருந்தார்.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யானாம், இந்திரா நகர் தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் மற்ற அனைத்து வேட்பாளர விட கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

வைத்திலிங்கம்(காங்)-4,26,005
நமச்சிவாயம்(பாஜக)-2,89,489
வித்தியாசம்..1,36,516

மேனகா(நாம் தமிழர்)-39,603
தமிழ்செல்வம்(அதிமுக)-25,165
நோட்டா-9679
இந்த தேர்தலில் அமைச்சர் வாழ்த்தை தவிர அதிமுக நாம் தமிழர் கட்சி உட்பட 24 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரின் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றது.

வெற்றி பெற்ற வைத்திலிங்கத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

வெற்றி பெற்ற காங் எம்பி வைத்திலிங்கம் கூறுகையில்,ராகுலுக்கு புதுச்சேரி மக்கள் முழுமையான ஆதரவை தந்துள்ளனர் என்றும் ஜனநாயகத்தை முழுமையாக காக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் விடை மக்களால் அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர்களைப் போல பாரதிய ஜனதாவை மக்கள் விரட்டி இருக்கிறார்கள்.கல்வி திட்டம், மின்சார் தனியார் மையம் என பல திட்டங்கள் மக்கள் விரும்பாமலே திணிக்கப்பட்டது அதற்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.சட்டமன்ற தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் கூறினார்.

பேட்டி...காங் எம்பி வைத்திலிங்கம்...

முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில்„

பேட்டி...முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில்,புதுச்சேரி அரசில் நடைபெறும் ஊழல்களை பலமுறை சுட்டிக்காட்டிட்டும் முதலமைச்சர்,அமைச்சர்கள் என யாரும் பதில் அளிக்கவில்லை. அவர்களுக்கு மக்கள் தற்போது பதில் அளித்துள்ளனர் என கூறினார்.

முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தார்மீக பொறுப்பேற்று தங்களுடைய பதவியில் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.கூட்டணி இல்லாமல் பாஜகவில் ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி. அதனால் பாஜக மூத்த தலைவர்கள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக்க கூடாது என நாராயணசாமி தெரிவித்தார்..

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பத்திரிகை செய்தி
04/06/2024

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பத்திரிகை செய்தி

புதுச்சேரி..முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது...முதல் சுற்று..1.மண்ணாடிப்பட்டு, 2.மங்கலம், 3.கதிர்காமம், 4.காமராஜ...
04/06/2024

புதுச்சேரி..
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது...

முதல் சுற்று..
1.மண்ணாடிப்பட்டு,
2.மங்கலம்,
3.கதிர்காமம்,
4.காமராஜ்நகர், 5.முத்தியால்பேட்டை, 6.உருளையன்பேட்டை, 7.அரியாங்குப்பம்,
8.ஏம்பலம்,
9.நெடுங்காடு,
10.காரைக்கால் வடக்கு
11. மாகி,
12ஏனாம் தொகுதிகளுக்கு எண்ணப்படுகிறது

04.06.2024 முதல் புதுச்சேரி- ஓசூர், ஓசூர் -புதுச்சேரி 2+2 இருக்கைகளுடன் கூடிய semi Deluxe  பேருந்து இயக்கப்படுகிறது.    ...
03/06/2024

04.06.2024 முதல்
புதுச்சேரி- ஓசூர்,
ஓசூர் -புதுச்சேரி 2+2 இருக்கைகளுடன் கூடிய semi Deluxe பேருந்து இயக்கப்படுகிறது.

இன்று முதல் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை செங்கம் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் செல்ல பேருந்து இயக்கப்படுகிறது*

பயண நேரம் மற்றும் கட்டண விபரம்

*பயண கட்டணம்
*ரூ 250.00*

*12.30 Pm (மதியம்)
புதுச்சேரி to ஓசூர்.

09.00 Pm (இரவு)
ஓசூர் to புதுச்சேரி

இந்தப் பேருந்தில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு தற்போது இல்லை கூடிய விரைவில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.புதுச்சேரி நகரப்பகுதிய...
31/05/2024

புதுச்சேரியில் உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

புதுச்சேரி நகரப்பகுதியில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளது. இந்த ஆலயத்தின் 117-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக புதுவை கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், மீரட் மறைமாவட்ட பேராயர் பாஸ்கர் ஏசுராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி மரம் அருகே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆலய கொடி மரத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனைடுத்து நவ நாட்களில் காலை மாலை இருவேலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி வருகிற 9-ம் தேதி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. ஆண்டு பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய பங்குதந்தை பிச்சைமுத்து, உதவி பங்குதந்தை சின்னப்பன், அருட்திரு பால் தெலாமூர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Address

Pondicherry
605001

Telephone

+919171122700

Website

Alerts

Be the first to know and let us send you an email when PondiDiary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PondiDiary:

Videos

Share


Other Media/News Companies in Pondicherry

Show All