Karisal Media

Karisal Media COMPUTER ULAGAM – A scintillate technical Tamil monthly magazine started in the year 1998.

09/05/2024

ஒரு பிரியாணி விருந்தில் கலந்து கொள்கின்றோம்.

முதலில் அனைவருக்கும் சிக்கன் ப்ரை இரண்டு இரண்டு துண்டுகளை இலையில் வைக்கிறார்கள்.

உங்கள் இலைக்கு வரும் போது வைப்பவர் ஏதோ நினைவில் வேகமாக மிகச்சிறிய துண்டுகளை வைத்து போகிறார்.

”நீங்கள் தம்பி இன்னொன்னு வை” என்று சொல்லும் போதே அவர் அவசரத்தில் அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலைக்கு போகிறார்.

அதன் பிறகு வரும் பிரியாணியை நீங்கள்.

1. சுவைத்து சாப்பிடுவீர்களா ?
2. சுவைக்காமல் சாப்பிடுவீர்களா ?

சுவைத்து சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அர்த்தமாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயை புறக்கணித்து நீல ஒநாய்க்கு தீனி போட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுவைக்காமல் ஏதோ அவமானம் நடந்து விட்டது மாதிரி சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை வீணடித்து மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாய்க்கு தீனி போட்டு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவருடைய மிக மோசமான செயலால் இன்னொருவர் பாதிக்கப்பட்டிருப்பார்.

பாதிக்கப்பட்டவர் என்னிடம் பேசும் போது “அவன் புத்திக்கெல்லாம் நல்லா நாசமா போவான் பாரு” என்று சாபமிடுவது மாதிரி பேசினால் ஒருமாதிரி ஆகிவிடுவேன்.

“ச்சே ஏன் அப்படி சொல்றீங்க. விடுங்க. அப்படி சொல்லாதீங்க” என்பேன். இப்படி சொல்லாமல் என்னால் இருக்கவே முடியாது.

இது அமெரிக்க பழங்குடியின கதையின்படி

ஒவ்வொரு மனதிலும் இரண்டு ஒநாய்கள் இருக்கிறதாம். இரண்டுக்கும் சண்டை நடக்கும். எப்போதும் ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்குமாம்.

சிகப்பு ஒநாய் பொறாமை, கோபம். வெறுப்பு, ஆதிக்கம் என்று இருக்கிறது.

நீல ஒநாயோ அன்பு, அருள், சகோதரத்துவம், மன்னித்தல் என்று இருக்கிறது. இந்த இரண்டு ஒநாய்களும் ஒன்றுக்கொன்று நம் மனதில் மோதிக் கொண்டே இருக்கின்றன.

இவை இரண்டில் எந்த ஒநாய் வெல்லும் ? நாம் எந்த ஒநாய்க்கு தீனி போடுகிறோமோ அதுவே வெல்லும்.

தப்பு சரி, நியாயம் அநியாயம் தாண்டி ஏதோ ஒருவிதத்தில் அதிக வெறுப்பு, பொறாமை, எரிச்சல் கொண்டிருக்கும் போது நாமும் அந்த சிகப்பு ஒநாயாகவே மாறிவிடுவோம்.

அப்படி மாறும் போது வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விடும்.

ஒன்றுமில்லை ஒரு விழாவுக்கு போகும் போது உங்கள் மனநிலையை கவனித்துப் பாருங்கள்.

நீங்கள் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா?
அல்லது நீல ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? என்பதை கண்டுகொள்ள முடியும்.

- என்னை கண்டுகொள்ளவில்லை

- சாப்பாடு நல்லாயில்லை

- ரொம்பத்தான் ஒவரா ஸீன் போடுறாங்க

- நான் விழா எடுக்கும் போது இத விட நல்லா செய்து காட்டுறேன் பாரு.

- நீயா வந்து பேசினா நா பேசுவேன். இல்லன்னா பேச மாட்டேன்.

இப்படி எல்லாம் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

- எல்லாரும் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கங்க ( ரசனை)

- சாப்பாடு அருமை

- விழா கொண்டாட்டம் அருமை

- நாம விழா எடுக்கும் போதும் இப்படி எல்லாரையும் ஹேப்பியா வைச்சிக்கனும்

- அவுங்க தெரியாம இருக்காங்க போல இருக்கு. நாம போய் பேசுவோம்.

இப்படி எல்லாம் நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களுக்கு எவ்வளவு புகழ், பணம், பதவி வந்தாலும் வாழ்க்கை துன்பமாகவே இருக்கும்.

நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்கள் எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருப்பார்கள்.

வீட்டில் வளரும் சிறார்களிடம் இந்த இரண்டு ஒநாய்கள் பற்றியும் அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள்.

ஒருவேளை மாற்றங்கள் நிகழலாம். அவர்கள் மன ஆரோக்கியத்தோடு வளர வாய்ப்பு அதிகமுண்டு.

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயையும் நீல ஒநாயையும் கண்காணித்து கொண்டே இருங்கள்....!!!

02/05/2024

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..

2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.

இந்த 2024-25 கல்வியாண்டில்
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.

🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய டிஜிட்டல்/பிடிஃஎப் வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.

🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code உடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.

🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

🔵 வருமான சான்றிதழ் (Income certificate) தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.

🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS / BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.

பெற்றோர்களுக்கான அறிவுரை,

1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.

2. மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (10th, 11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.

3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில் / எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.

4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.

5. கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.

6. தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

7. பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப் படலாம்

14/04/2024

தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அன்று என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிரமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கீரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபாணு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வகித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத்
30. துர்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி 35
33. விகாரி
34. சார்வரி
35.. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசு .
40. பராபவ
41. பிலவங்க
42.கீலக
43. செமிய
44. சாதரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தாத்திரி
54.. ரெத்திரி.
55. துன்பதி
56. துந்துபி
57. ருத்ரோகாரி
58. ரக்தாஷி
59. குரோதன
60. அக்ஷய

இந்த அறுபதில் எது தமிழ்ச் சொல்?

யாராவது சொல்ல முடியுமா?

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் வியப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள்.

*வைகறை*
*காலை*
*நண்பகல்*
*எற்பாடு*
*மாலை*
*யாமம்*

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது *பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன*.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவக் கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்*.

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- *பாவேந்தர் பாரதிதாசன்*

அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆக வேண்டுமெனில் சித்திரைத் திருநாளாகக் கொண்டாடுங்கள்

அனைத்து உறவுகளுக்கும்

*சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!*

12/04/2024

தமிழக அரசின் நூலகங்களுக்கு நூல்கள் வாங்க இருக்கும் இணையதளத்தில் நூல்களை பதிவேற்றம் செய்வதற்கு தேவையானவை
1. ISBN NUMBER
2. Language of the Book
3. Book Title
4. Author name and photo and short description about author
5. Edition Number
6. Book published year
7. Binding - paper back or hardbound
8. Book size
9. Book Length x Breadth(in Centimeters)
10. Book Width(in Centimeters)
11. Book Weight(in grams)
12. GSM
13. Type of paper
14. Lamination type
15. Total Number of pages - BW and colour
16. Price
17. Discount
18. Short Description
19. Book Front Wrapper, Book Back Wrapper, Book Front and back Wrapper - jpg file
20. Book highlights - text and image - image jpg file
21. Book breif description - text
22. 25 pages or 25% of book details - pdf file
மேலும் விவரங்களுக்கு - தி. அருணாசலம், கரிசல் மீடியா - 98948 19643

12/04/2024
10/04/2024

தமிழக அரசின் நூலகங்களுக்கு நூல்கள் வாங்க இருக்கும் இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய தேவையான விவரங்கள்
1. Publication Name, 2. Gmail id, 3. Pan card copy, 4. Owner Aadhar Card copy, 5. Aadhar Card Linked Mobile Number, 6. Publication Address with full pincode, 7. Contact Person (if any), 8. Year of establishment, 9. இதுவரை பதிப்பித்துள்ள நூல்களின் எண்ணிக்கை, 10. கடைசி மூன்று வருடங்களில் பதிப்பகத்தில் வெளியிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை, 11. நன்கு விற்பனையாகும் நூல்கள் - Title Name, and author name, 12. சிறந்த 5 மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் (ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும்), 13. பதிப்பகத்தில் விருது பெற்ற தலைப்புகள் (ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும்), 14. பதிப்பிக்கப்பட்ட நூல்களின் வகை, 15. Book Price List - Excel file.
மேலும் விவரங்களுக்கு - தி. அருணாசலம், கரிசல் மீடியா - 98948 19643

10/04/2024

பதிப்பக தொழிலை மத்திய அரசின் MSME-ன் கீழ் பதிவு செய்ய தேவையான விவரங்கள்.
1. Aadhar Card xerox
2. Aadhar Card Linked Mobile Number
3. Pan card xerox
4. Bank Account full details with ifsc code - xerox
5. Company name
6. Company full address with pincode
7. நிறுவனம் தொடங்கிய ஆண்டு
8. Number of persons employed
9. Gst details - இருந்தால்
10. Social category - General, SC, ST or OBC
11. மாற்றுத்திறனாளியா ?

MSME REGISTER செய்வதால் உள்ள பயன்கள்
1. எவ்வித Bank guarantee இல்லாமல், எளிதில் 35% subsidy உடன் business loan பெறலாம். 2. வருமான வரி தாக்கல் செய்யும் போது exemption பெறலாம் 3. EB -லும் subsidy பெறலாம். 4. தனியார் வங்கிகளில் company பெயரில் current account துவங்க ஆதாரமாக பயன்படுத்தலாம். 5. அரசுக்கோ தனியாருக்கோ புத்தகங்கள் சப்ளை செய்தால் 45 நாட்களுக்குள் பில் பணம் தர வேண்டும் என்ற விதி உள்ளது. 6. அரசாங்கம் ஒதுக்கும் சிறு தொழிற்பேட்டைகளில் தொழிலகம் தொடங்க முன்னுரிமை 7. மேலும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் சிறப்பு சலுகைகளும் கிடைக்கும்.

MSME REGISTER செய்ய தொடர்பு கொள்ள - அருணாசலம், கரிசல் மீடியா - 9894819643
சேவை கட்டணம் ரூ. 500 மட்டுமே.

05/04/2024

பதிப்பகங்கள் மற்றும் அனைத்து விதமான Business நிறுவனங்களையும் MSME Register செய்வதற்கு தேவையான ஆவணங்கள்

1. Aadhar card
2. Pan card
3. Bank account full details
4. Business address
5. Turn over details

ஏற்கனவே இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனம் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் நிறுவனங்களுக்கும் பதிவு செய்யலாம்.

MSME REGISTER செய்வதால் உள்ள பயன்கள்

1. எளிதில் 35% subsidy உடன் business loan பெறலாம் (எவ்வித Bank guarantee இல்லாமல்).
2. வருமான வரி தாக்கல் செய்யும் போது exemption பெறலாம்
3. EB இலும் subsidy பெறலாம்.
MSME REGISTER செய்ய தொடர்பு கொள்ள 9894819643

03/04/2024

படிப்பு மட்டும் தான் அடுத்த தலைமுறைக்கான விடியலாக இருக்க முடியும். அந்த விடியலை ஏழை மாணவர்களுக்கும் சாத்தியம.....

25/03/2024

*உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?*

*கன்னியாகுமரி*
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்

*திருநெல்வேலி*
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா

*தென்காசி*
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்

*தூத்துக்குடி*
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்

*இராமநாதபுரம்*
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்

*விருதுநகர்*
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்

*தேனி*
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்

*மதுரை*
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி

*சிவகங்கை*
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி

*தஞ்சாவூர்*
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்

*நாகப்பட்டினம்*
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா

*மயிலாடுதுறை*
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்

*சிதம்பரம்*
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி

*கடலூர்*
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்

*பெரம்பலூர்*
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி

*திருச்சிராப்பள்ளி*
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்

*கரூர்*
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா

*திண்டுக்கல்*
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்

*பொள்ளாச்சி*
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்

*கோயம்புத்தூர்*
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்

*நீலகிரி*
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்

*திருப்பூர்*
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி

*ஈரோடு*
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்

*நாமக்கல்*
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி

*சேலம்*
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்

*கள்ளக்குறிச்சி*
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்

*விழுப்புரம்*
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்

*ஆரணி*
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி

*திருவண்ணாமலை*
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு

*தருமபுரி*
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா

*கிருஷ்ணகிரி*
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்

*வேலூர்*
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்

*அரக்கோணம்*
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்

*காஞ்சிபுரம்*
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்

*ஸ்ரீபெரும்புதூர்*
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்

*மத்திய சென்னை*
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்

*தென் சென்னை*
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி

*வட சென்னை*
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி

*திருவள்ளூர்*
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்

*புதுச்சேரி*
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா

16/03/2024

இன்று பாராளுமன்ற தேதி அறிவிப்பு நாளை முதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துவிடும் ஆகவே அரசு ஊழியர்கள் தாசில்தார்கள் மற்றும் பல்வேறு பதவியில் உள்ளவர்கள் வாங்க வேண்டிய லஞ்சத் தொகையை இன்றே வாங்கி விடவும் ஏனெனில் நாளை முதல் பண பட்டுவாடாவை தடுக்கும் ஜனநாயக காவலர்களாக வேடம் போட வேண்டி இருக்கும்

ஸ்டெர்லைட் மூடினால்,தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை ஒன்றுமே நடக்கவில்லை நகரின் தொழில் முடங்கி விட்டது என நீலிக் கண்ணீர் ...
05/03/2024

ஸ்டெர்லைட் மூடினால்,
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை ஒன்றுமே நடக்கவில்லை நகரின் தொழில் முடங்கி விட்டது என நீலிக் கண்ணீர் வடித்த கூலி கூட்டத்தின் கவனத்திற்கு..
இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 9 % கூடுதல் சரக்கு போக்குவரத்தை கையாண்டு தூத்துக்குடி வ உ சி துறைமுகம் வளர்ச்சி அடைந்துள்ளது..

தமிழ்நாடு பட்ஜெட்2024-25
19/02/2024

தமிழ்நாடு பட்ஜெட்2024-25

தமிழக பட்ஜெட்2024-25
19/02/2024

தமிழக பட்ஜெட்2024-25

19/02/2024

நந்தன் மாசிலாமணி.
கலைஞன் பதிப்பகம்....

என்னளவில் சென்னையில் இருக்கும் அரசு நூலகங்களை விடவும் சில தனியார் நூலகங்கள் நல்ல சேவையை வழங்குகின்றன. திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் ஆகப் போகும் நிலையிலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தனது பழைய பொலிவைப் பெற்றபாடில்லை. உட்கட்டமைப்பில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், புத்தகங்களும் இதர நூலக சேவைகளிலும் பெரிய அளவிலான தர உயர்வு இல்லை. இதையொட்டி சில மாதங்களுக்கு முன்னர் தி இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் அருண் பிரசாத் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

கன்னிமாரா நூலகத்தில் புத்தகத்தைக் கண்டடைவது அவ்வளவு எளிதான காரியமாகப் படவில்லை.

பழைய தரவுகளைக் காண, குறிப்பெடுக்க, நகலாக்கம் செய்ய RMRL நூலகத்திற்கு ஈடு இணை இல்லை. இந்த நூலகத்தில் நடைபெறும் கூட்டரங்குகளுக்கும், ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கும் நேர்த்தியாக திட்டமிடலுக்குப் பிறகு,
உபசரிப்பு நிறைந்த சிற்றுண்டியோடு நடைபெறுபவை. நூலகத்தின் இணையப் பக்கமும் தரமான ஒன்று. நூலகர்களும் அப்படியே.

MIDS நூலகம் ஆய்வு நூல்களையும், பல முக்கியமான ஆய்விதழ்களையும் கொண்டிருக்கிறது. வெயில் காலத்தில் நூலகத்தில் உட்காருவது கடினம், மின்விசிறிகள் அங்கிருக்கும் ஊழியர்களைப் போலவே மெதுவாகச் சுழல்வதால் நேரம் நிறையவே விரயமாகிறது.

மிகச் சமீபத்தில் தான் இரண்டு பொக்கிஷங்களைக் கண்டடைந்தேன், ஒன்று எழுத்தாளர் Vinod Kumar மூலம் தெரிய வந்த American Spaces Library, அண்ணா மேம்பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்திற்குள் உள்ளது. ஆண்டு சந்தா 400 ரூபாய், சென்னை புத்தக காட்சியில் 200 ரூபாய்க்குக் கிடைத்தது. ஒரு நேரத்தில் 4 புத்தங்களை எடுத்துக்கொள்ளலாம். இது தவிர்த்து E-library-ஐ அணுகும் வசதியும் உண்டு. இன்றைக்கும் ஆயிரங்களில் ஆண்டு சந்தா கேட்கும் NewYorker, The Atlantic, TIME magazine, New York Review of Books, National Review, Bloomberg, உள்ளிட்ட இதழ்களைப் படிக்க முடிகிறது.

இது தவிர்த்து Washington post, Guardian, The Boston Globe, உள்ளிட்ட பல்வேறு தினசரிகளைப் படிக்க முடியும். இதைத் தாண்டி ஆய்வாளர்களுக்கு JStor, Academic Search Premier, ProQuest Dissertations & Theses Global உள்ளிட்ட தளங்களை அணுகும் வாய்ப்பும் அடங்கியுள்ளது.

மற்றொரு நூலகம், ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்திற்குப் பின்புறம்அமைந்துள்ள British Council நூலகம், இதன் உறுப்பினர் சந்தா ஆண்டுக்கு 2000 என்றாலும் நல்ல வார இதழ்களையும், சமீபத்தில் வெளியான பல்வேறு புத்தகங்களையும் இங்குக் காண முடிகிறது. 6 புத்தகங்கள் வரை Borrow செய்து கொள்ளலாம்.

British Council E-library சேவை American Spaces Library-ஐ சேவையை விட அபாரமான ஒன்று, தினசரிகளில் Wall Street Journal, New york times, Washington post, Daily Mail ஆகியவையும், வார மட்டும் மாத இதழ்களில் The Economist, Rolling Stone, Foreign Affairs, New York Magazine போன்றவற்றையும் படிக்க முடிகிறது. சமீபத்தில் வெளியான E-Booksஐ ஆன்லைனில் கடன் வாங்கிக் கொள்ளலாம், Jstor Access உண்டு, AudioBooks, Movies, Concerts, English Learning வகுப்புகள் உள்ளிட்ட பல E-சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு பொது நூலகங்கள் நல்ல சேவையை வழங்குபவை என்றாலும், நூலக துறை செல்ல வேண்டிய தூரம் பல கோடி கி.மீ நெடும்பயணம்.

அறிவை மக்கள் மையப்படுத்துவதோடு தரப்படுத்துவதும் அவசியமானது. தமிழ்நாடு அரசு நூலக துறை குறைந்த பட்சம் British council, American Spaces Library வழங்கும் E-library சேவையை வழங்கினால் போதும். அதற்கான சாத்தியமும் அதிகம்.

ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் WI-FI வசதிகளே சரிவர இல்லாத நிலையில் இதை எல்லாம் எதிர்பார்ப்பதற்குக் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கிறது.

புதுடெல்லி சர்வதேச புத்தக காட்சி2024 ரைட்ஸ் டேபிள் நிகழ்வில் நமது பிரதிநிதிகள் பிரேம்குமார்,அருணாசலம்.
12/02/2024

புதுடெல்லி சர்வதேச புத்தக காட்சி2024 ரைட்ஸ் டேபிள் நிகழ்வில் நமது பிரதிநிதிகள் பிரேம்குமார்,அருணாசலம்.

02/02/2024

சொகுசு கார்களில் பயணம் செய்யும் உயர் அதிகாரிகள் மற்றும் மாண்புமிகு நீதிபதிகள் மற்றும் மக்கள் சேவகர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் அனைவரும் மாதத்தில் ஒரு நாள் பொது ப் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் அப்போதுதான் பாமர மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வசதிகளை செய்து கொடுக்க முடியும்

02/01/2024

சென்னை புத்தக காட்சி 2024 ஜனவரி 3 முதல் 21 வரை YMCA நந்தனம்.கரிசல் மீடியா ஸ்டால் எண் 203,204.

02/12/2023

*உலக கணினி கல்வி தினம்*
🌺 *உலக கணினி கல்வி தினம் டிசம்பர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கணிப்பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாக செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.*

இன்று குமுதம் வார இதழில்.
22/11/2023

இன்று குமுதம் வார இதழில்.

22/10/2023

கார்ப்பரேட்டுகள்,அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் கூட்டணியால் வறட்சி பூமியாக மாற்றப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் குலயன்கரிசல் குளத்தில் தண்ணீர் தேடும் ஆட்டுமந்தை.

இன்று தொடங்கும் மதுரை புத்தக திருவிழா ,தமுக்கம் மைதான அரங்கில் திரு.அருணாசலம்.கரிசல் மீடியா ஸ்டால் எண்70.
12/10/2023

இன்று தொடங்கும் மதுரை புத்தக திருவிழா ,தமுக்கம் மைதான அரங்கில் திரு.அருணாசலம்.கரிசல் மீடியா ஸ்டால் எண்70.

Address

84 E BAJANAI KOIL 1st Street VADAPALANI
Chennai
600026

Opening Hours

Monday 10am - 3pm
Tuesday 10am - 3pm
Wednesday 10am - 3pm
Thursday 10am - 3pm
Friday 10am - 3pm
Saturday 10am - 3pm

Telephone

+919381110500

Alerts

Be the first to know and let us send you an email when Karisal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karisal Media:

Videos

Share

Nearby media companies


Other Chennai media companies

Show All