நாமக்கல் மாவட்ட செய்திகள்

  • Home
  • நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்ட செய்திகள் நாமக்கல் மாவட்ட செய்திகள்

20/05/2024

திருச்செங்கோடு தேர் திருவிழா இன்று அதிகாலை அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயிலுக்கு பரிவார மூர்த்திகள் எழுந்தருளும் விழா சிறப்பாக நடைபெற்றது 🙏

🛤️ஈரோடு - நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை ( வழி: திருச்செங்கோடு, துறையூர், பெரம்பலூர்) திட்டம் நிறைவேற்றப்படுமா?  எ...
12/04/2024

🛤️ஈரோடு - நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை ( வழி: திருச்செங்கோடு, துறையூர், பெரம்பலூர்) திட்டம் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

👇இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால்

▪️திருச்செங்கோடு, துறையூர், பெரம்பலூர் போன்ற நகரங்களுக்கு ரயில் வசதி கிடைக்கும்.

▪️அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் பொருளாதார மற்றும் போக்குவரத்து பன்மடங்கு வளர்ச்சியடையும்.

▪️மேற்கு மாவட்டங்கள் டெல்டா மற்றும் வட மாவட்டங்களுடன் ரயில் இணைப்பு பெரும்.

▪️தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் இருந்து சென்னை செல்ல 2 வது முக்கிய வழித்தடமாக இது அமையும்.

▪️நாமக்கல் மாவட்ட மக்களுக்கு தொழில் மற்றும் கல்வி சார்ந்து மேற்கு மற்றும் வட மாவட்டங்கள் செல்ல நேரடி ரயில் வசதிகள் கிடைக்கும்.

📌எனவே, இதுபற்றி அரசியல் கட்சியினர் குரல்கொடுத்து திட்டத்தை நிறைவேற்றுவார்களா? என 5 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

12/02/2024

நாமக்கல் மாவட்டம் மக்கள் பயன்பெறும் வகையில் சேலம் TO மயிலாடுதுறை வரை குறைந்த கட்டணத்தில் தினசரி ரயில் இயக்கப்படுகிறது ...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரு...
22/11/2023

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
நேற்று நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சேவையை தொடங்கி வைத்து உரையாற்றினார் . பின் DMK Youth Wing-ன் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு பெருந்திரளான இளைஞர் படையை அழைக்கும் வகையில் நாமக்கல் கிழக்கு - மேற்கு மாவட்டக் கழக இளைஞரணிச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார் .

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை மருத்துவம் பயின்று வருகின்றனா். இவா்கள் அன...
20/11/2023

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளநிலை மருத்துவம் பயின்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் இங்குள்ள விடுதிகளில் தங்கி பயில்கின்றனா். இந்நிலையில் கல்லூரி உணவகம், விடுதி ஆகியவற்றை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் கா. ச. அருண் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை நேரடியாக ஆய்வு செய்தனா். உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் என பணியாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தரமான மூலப்பொருள்களை கொண்டு மட்டுமே உணவு தயாரிக்க வேண்டும்,மாணவா்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்க வேண்டும், உணவுப் பொருள்களை கையாளும் பணியாளா்கள் ஏப்ரான் தொப்பி, கையுறை ஆகியவற்றை அணிய வேண்டும், பணியாளா்கள் தொற்று நோய்க்கும் ஆளாகவில்லை என்பதற்கான மருத்துவச் சான்றை பெற்றிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பள்ளி, கல்லூரி...
16/11/2023

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் இணைந்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

நாமக்கல் குளக்கரைத் துறையில் அமைந்துள்ள வீர பக்த ஆஞ்சநேயர் கோவில் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகள் துவங...
16/11/2023

நாமக்கல் குளக்கரைத் துறையில் அமைந்துள்ள வீர பக்த ஆஞ்சநேயர் கோவில் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகள் துவங்க உள்ள நிலையில் அறநிலையத்துறை மண்டல வல்லுநார்கள் கோவிலை ஆய்வு செய்தனர் . அப்போது அந்த கோவிலை முழுவதும் இடித்துவிட்டு புதிதாக சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
12/11/2023

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இனிப்பு மற்றும் பலகார  கடைகளில்  உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர...
09/11/2023

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இனிப்பு மற்றும் பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அருண் தலைமையில் நடைபெற்றது. இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றை பழைய செய்தித்தாள்களை கொண்டு மூடி வைக்கக் கூடாது . ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை திரும்ப பயன்படுத்தக்கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் ...
09/11/2023

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது இதனால் தமிழக முழுவதும் சுமார் 20 லட்சம் லாரிகள் ஓடவில்லை எனவும். அரசுக்கு இன்று ஒரு நாள் மட்டும் பல கோடி ரூபாய் நஷ்டம் என தெரிவித்துள்ளனர்

தீபாவளி திருநாள் அன்று சிறுவர் முதல் பெரியவர்வரை  பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவார்கள் அன்று காலை 6 ...
07/11/2023

தீபாவளி திருநாள் அன்று சிறுவர் முதல் பெரியவர்வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவார்கள் அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது எனவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கும் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் உங்கள் அருகாமையில்...
04/11/2023

18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கும் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் உங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் சனிக்கிழமை (நவ. 4) தொடங்கப்படு...
03/11/2023

நாமக்கல்லில் மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் சனிக்கிழமை (நவ. 4) தொடங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியா் ச. உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக 8 கி. மீ தூரம் நடைப்பாதை கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அன்று காலை 6 மணி அளவில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மோகனூா் சாலை வழியாக டிரினிடி கல்லூரி வரை சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பிடும் வகையில் 8 கி. மீ. தொலைவிற்கு நடைபெற உள்ளது. "

இன்று கோலாகலமாக நடைபெற்ற உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கும்ப...
01/11/2023

இன்று கோலாகலமாக நடைபெற்ற உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா கும்பாபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்...

நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்ற...
31/10/2023

நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா.!கும்பாபிஷேக நாள்: நாளை - புதன் கிழமை .          ...
31/10/2023

நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா.!
கும்பாபிஷேக நாள்: நாளை - புதன் கிழமை .

நாமக்கல்  திருச்செங்கோடு நகர மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாரிய...
28/10/2023

நாமக்கல் திருச்செங்கோடு நகர மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாரியம்மன் தெப்பத்திருவிழா வைபவம் நேற்று சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்திருவிழா வைபவத்தை கண்டு ரசித்தனர்.

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் !
23/10/2023

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் !

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when நாமக்கல் மாவட்ட செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நாமக்கல் மாவட்ட செய்திகள்:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share