17/01/2017
இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு - இந்தியன் ஜர்னலிஸ்ட் அசோசியேசன் (ஐ.ஜே.ஏ), சார்பில் 13/01/2017 அன்று ஐ.ஜே.ஏ தமிழ் மாநில அலுவலகத்தில் இந்திய சுதந்திர போராளியும், பத்திரிகை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆன திரு. ஜி.ஏ.வடிவேலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. அன்னாரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.
விழாவில் ஐ.ஜே.ஏ தேசியத் தலைவர் டி.எஸ்.தனஞ்சயன் தலைமையில், ஐ.ஜே.ஏ கௌரவத்தலைவர் கோபி நாராயணன் யாதவ் முன்னிலையில் பத்திரிகையாளர்கள் ஜி.ஏ.வடிவேலுவிற்கு புகழஞ்சலி செலுத்தினர். விழாவில், தேசிய பொதுச்செயலாளர் ஜுபிடர் இரவி, சட்ட ஆலோசகர் எஸ்.செந்தில்குமார், தமிழ் மாநிலத் தலைவர் சூரியநாராயணன், மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் கிருஷ்னவேனி, எழுத்தாளர்கள் இறைவன், தஞ்சை இளஞ்சிங்கம், பத்திரிகை ஆசிரியர் C.S.சுப்ரமனியம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.கே.தாஸ், தமிழ்நாடு பத்திரிகை சம்மேளனம் மாநிலத்தலைவர் பொன்.கணேசன், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிசம் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், உலகத் தமிழர் பேரவை ஒருங்கினைப்பாளர் அக்னி மற்றும் முன்னனி பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஜே.ஏ தேசியத்தலைவர் டி.எஸ்.தனஞ்செயன் சிறப்புரையில் திரு. ஜி.ஏ.வடிவேலுவுடன் தன்னுடைய நீண்ட கால தொடர்பைக் கூறி, அன்னாருக்கு அஞ்சலியாக தான் உடல் தானம் தருவதை தெரிவித்தார். ஜுபிடர் இரவியின் நன்றி உரையுடன், விழா நிறைவுற்றது.
டி.எஸ்.தனஞ்செயன்
தேசியத் தலைவர், ஐ.ஜே,ஏ