Parivu.TV

Parivu.TV Buyya is a collection of neighborhood stores that are now online.

We help local businesses to come online and serve their customers seamlessly as well as acquire new customers through their online presence in Buyya.

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!வரும் ஜூன்...
28/05/2023

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும்; தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வரும் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும். ஜூன் மாதத்தில் இயல்பு அளவை விடவும் குறைவான மழையே இருக்கும். இந்த மழைக்காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. ‘எல் நினோ’ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் உள்ளது.

பல வழிகளில் ஆராய்ந்து பார்த்ததில், வரும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும். ஜூன் மாதத்தில் பெய்யும் குறைவான மழை காரணமாக, காரீப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒருசில பகுதிகளைத் தவிர்த்து ஜூன் மாதத்தில் குறைவான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. சில இடங்களில் மட்டுமே இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தென்மேற்கு #பருவமழை #இந்தியவானிலைஆய்வுமையம்

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!டெல்லியில் ப...
28/05/2023

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!

டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறிய பாஜக எம்.பி. மீது அக்கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது போராட்டம் நடத்தியவர்களை இழுத்துச் சென்று கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே, கைது நடவடிக்கை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

#மல்யுத்தவீராங்கனைகள் #பாலியல்புகார் #முகஸ்டாலின்

மனித மூளைக்குள் மைக்ரோசிப்.. இனி இதெல்லாம் சாத்தியம்.. ட்விட்டர் ஓனரின் அடுத்த அதிரடி..!!டெஸ்லா,  ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் ...
28/05/2023

மனித மூளைக்குள் மைக்ரோசிப்.. இனி இதெல்லாம் சாத்தியம்.. ட்விட்டர் ஓனரின் அடுத்த அதிரடி..!!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற நிறுவனம் மூலம் நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ டிவைஸ்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த டிவைஸ்கள் மூலம் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை எளிதாக பயன்படுத்தும் நோக்குடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் நியூராலிங்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த சிப்பை பொருத்துவதன் மூலம் அவர்கள் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்களை தொடாமலேயே அவற்றை பயன்படுத்த முடியும்.

இவர்கள் மூளையின் சிந்தனையை அந்த சிப் கமெண்ட்டுளாக பதிவு செய்து கொள்ளும். இதனால் நாம் நினைப்பதை நமது ஸ்மார்ட் போனும் கம்ப்யூட்டரும் நிறைவேற்றும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ஸ்மார்ட் டிவைஸ்களை நம்மால் மைண்ட் கன்ட்ரோல் செய்ய முடியும். இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை தொடங்கியதுபோது தெரிவித்திருந்தார்.

#டெஸ்லா #ஸ்பேஸ்எக்ஸ் #ட்விட்டர் #மனிதமூளை #மைக்ரோசிப்

‘சீனாவிடம் இருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை   அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். குஜராத்தின் இந்தியாவுக்கு சீனாவிடம...
28/05/2023

‘சீனாவிடம் இருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். குஜராத்தின்
இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து சிக்கலான சவால்: ஜெய்சங்கர் பேச்சு..!!

அகமதாபாத்தில் உள்ள அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசியதாவது: இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையே அமைதி சீர்குலைந்தால், இருதரப்பு உறவு பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. நிச்சயமாக சீனாவிடம் இருந்து நமக்கு சவால்கள் உள்ளன. அந்த சவால் மிகவும் சிக்கலான சவால். ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக எல்லையில் உள்ள நிலையை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் ஆர்வம் ஆகியவை இருதரப்பு உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும். நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், என் கவலைகளை உணரவில்லை என்றால், என் ஆர்வத்தை புறக்கணித்தால், நாம் எப்படி நீண்ட காலம் பழக முடியும்? இதனால் நாங்கள் எங்கள் உரிமைக்காக நிற்க வேண்டி உள்ளது. எதிர்ப்பை வலியுறுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டி உள்ளது. இதுதான் துரதிஷ்டவசமாக சீனா உடனான உறவு வலுவாக இல்லாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

#இந்தியா #சீனா #சவால் #ஜெய்சங்கர்

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்...
28/05/2023

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்..!!

தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தை ஆய்வு செய்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை கேளம்பாக்கம் அருகே தையூர் கிராமத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தை,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து படித்த, படிக்காத இளைஞர்களும் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 3 மாதகால திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது.

காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்தில் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை இலவசம். இதற்கு 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படித்தவர்களும், பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சியில் சேரும் அனைவருக்கும் எல் அண்டு டி நிறுவனத்தின் சார்பில், 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதுமட்டுமின்றி, தையூர் மையத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் மற்றொரு திட்டமும் உள்ளது. தினசரி 800 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் சேருவதற்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். சுமார் ரூ16 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 72000 சதுரஅடி உள்ள இந்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றதொரு கட்டிடம் திருப்பெரும்புதூர் அருகே எழிச்சூர் என்ற இடத்திலும் இருக்கிறது. இந்த இரு கட்டிடங்களும் இனி பூட்டப்பட்டு இருக்காது. 2 கட்டிடங்களும் இனி வருங்காலத்தில் முறையாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து இந்த அளவிற்கு வசதிகள் உள்ள கட்டிடம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமலும், பயன்படுத்தாமலும் இருந்த அதிகாரிகளை அழைத்து அமைச்சர் சி.வி.கணேசன் கடுமையாக எச்சரித்தார்.

#தையூர் #தொழிலாளர் #திறன்மேம்பாட்டுபயிற்சி

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பு..!!புதிய நாடாளுமன்றத்தில...
27/05/2023

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பு..!!

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமரை சந்தித்து செங்கோலை வழங்கினர். பிரதமருக்கு மதுரை, திருவாவடுதுறை ஆதீனங்கள் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

#செங்கோல் #ஆதீனங்கள் #பிரதமர் #நரேந்திரமோடி

மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!மாற்று...
27/05/2023

மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 500 மின்சார பேருந்துகள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

#மாற்றுத்திறனாளிகள் #பேருந்துகள் #போக்குவரத்துத்துறை #அமைச்சர் #சிவசங்கர்

சென்னை மெரினா சாலையில் அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள், அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!!அனைத்து சனி, ஞாயி...
27/05/2023

சென்னை மெரினா சாலையில் அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள், அரசு விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம்..!!

அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு (27.05.2023) முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
1. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.
2. கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப் பட்டு பாரதி சாலை – பெல்ஸ் ரோடு – வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
3. ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பாரதி சாலை சந்திப்பில் திருப்பப் பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

4. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)
5. நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை – பெல்ஸ் ரோடு – வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
6. பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஓருவழிப்பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஓத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#மெரினா #அரசுவிடுமுறைநாட்கள் #போக்குவரத்துமாற்றம்

செல்பி எடுத்த போது தவறியது; அணையில் விழுந்த செல்போனை மீட்க 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சட்டீஸ்கர் அரசு அதிகார...
27/05/2023

செல்பி எடுத்த போது தவறியது; அணையில் விழுந்த செல்போனை மீட்க 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்: சட்டீஸ்கர் அரசு அதிகாரி சஸ்பெண்ட்..!

செல்பி எடுத்த போது தவறி தண்ணீரில் விழுந்த செல்போனை எடுக்க அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை சட்டீஸ்கர் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் உணவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21ம் தேதி காங்கர் மாவட்டத்தில் உள்ள கெர்கட்டா அணை பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது அணையில் மேற்பகுதியில் நின்று கொண்டு வெளியேறும் தண்ணீர் தெரியும்படி செல்பி எடுக்க ராஜேஷ் விஸ்வா முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரது ரூ1 லட்சம் மதிப்பிலான சாம்சங் கேலக்ஸி எஸ்23 செல்போன் அணைக்குள் விழுந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள கிராம மக்களை தொடர்பு கொண்டு செல்போனை எடுத்து தரும்படி கேட்டார். அணையில் 10 அடி அளவுக்கு 41 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூழ்கி பார்த்து தேடியும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து நீர்வளத்துறையை சேர்ந்த சப்டிவிஷனல் அதிகாரி ஆர்.சி. திவாரை தொடர்பு கொண்ட ராஜேஷ் விஸ்வாஸ் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்து விட்டார். இதையடுத்து 30எச்பி சக்தி கொண்ட 2 டீசல் மோட்டார்களை கொண்டு வந்து அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீர் 3 நாட்களாக வெளியேற்றப்பட்டது. அதன்பின் அவர் தண்ணீரில் விழுந்த செல்போனை எடுத்தார்.

1500 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் அணைத்தண்ணீர் ரூ1 லட்சம் செல்போனுக்காக முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிய தகவல் அறிந்த கலெக்டர் பிரியங்கா சுக்லா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும்அணை தண்ணீரை வெளியேற்ற அனுமதி கொடுத்த அதிகாரி ஆர்.சி.திவார் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். அந்த அறிக்கையில் எந்தவித அனுமதியும் பெறாமல் செல்போனை எடுப்பதற்காக அணையில் இருந்த 41 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோடை காலத்தில் இப்படி தண்ணீரை வீணாக்கிய உணவு அதிகாரி ராஜேஷ் விஸ்வாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆர்சி திவாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒருநாளுக்குள் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி நீர்வளத்துறை செயலாளருக்கு கலெக்டர் பிரியங்கா சுக்லா கடிதம் எழுதி உள்ளார். அதில் அணை தண்ணீரை வெளியேற்ற தன்னிச்சையாக அனுமதி அளித்த திவார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இந்த சம்பவம் சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#அணை #சட்டீஸ்கர் #அரசுஅதிகாரி #சஸ்பெண்ட்

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன திட்டம்: ஜூன் 16க்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்..!!பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிச...
27/05/2023

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன திட்டம்: ஜூன் 16க்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்கலாம்..!!

பழநி மலைக்கோயிலில் பிரேக் தரிசன வசதி அமைப்பது தொடர்பாக ஜூன் 16ம் தேதிக்குள் பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிகளவு வரும் கோயில்களில் விரைவு தரிசனம் செய்வதற்கு சட்டமன்ற அறிவிப்பின்படி நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ரூ300 கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனம் (பிரேக் தரிசனம்) வசதி அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசனத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், விபூதி, 1 மஞ்சள் பை ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, அக்னி நட்சத்திரம் நிறைவு நாள், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கில வருடப்பிறப்பு, தை மாதத்தில் முதல் 5 நாட்கள், தைப்பூச திருவிழாவின் 10 நாட்கள், பங்குனி உத்திர திருவிழாவின் 10 நாட்கள், மாதாந்திர கார்த்திகை தினங்களில் இந்த தரிசனம் இருக்காது. இதுதொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை பக்தர்கள் வரும் ஜூன் 16ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இணை ஆணையர், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாமென்றும், அந்நாளுக்கு பின் கிடைக்கும் ஆலோசனைகள், ஆட்சேபனைகள் ஏற்கப்பட மாட்டாதென பழநி மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான அறிவிப்புகளை அரசு அலுவலக தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

#பழநி #மலைக்கோயில் #பக்தர்கள்

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!தமிழ்நா...
26/05/2023

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் 5ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வரும் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்த அமைச்சர் திட்டமிட்டபடி 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்.நேற்று மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம். தி.மலை, வேலூர், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பள்ளி திறப்பை தள்ளிவைக்க பெற்றோர் கோரிக்கை வைக்காவிட்டாலும் வெயிலின் தாக்கம் உள்ளது உண்மை தான்.வெயில் தாக்கத்தால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வரிடம் கூறியுள்ளோம்.” என்றார்.

இந்த நிலையில் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்,” என பதிவிட்டுள்ளார்.

#வெயில் #பள்ளிகள்திறப்பு #பள்ளிக்கல்வித்துறை

அண்ணா பல்கலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 5 முதல் சான்று சரிபார்ப்பு..!!தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை விளையாட்டு வீர...
26/05/2023

அண்ணா பல்கலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 5 முதல் சான்று சரிபார்ப்பு..!!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:

2023ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை www.tneaonline.org ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களது பெயருக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.

#அண்ணாபல்கலை #விளையாட்டுவீரர்கள் #சான்றிதழ்சரிபார்ப்பு

தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி உச்ச வரம்பு ₹25 லட்சமாக உயர்வு..!!தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஈட்டி...
26/05/2023

தனியார் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு வரி உச்ச வரம்பு ₹25 லட்சமாக உயர்வு..!!

தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஈட்டிய விடுப்புக்காக பெறும் தொகை ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமானவரி இதுவரை விதிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் இந்த வரம்பு ₹25 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தற்போது இதற்கான ஆணையை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த வரிச்சலுகை ஏப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#வருமானவரி #ஊழியர்கள் #தனியார்நிறுவனம்

உயர்கல்வி நிறுவனங்களில் விதிமீறலை சரிபார்க்க புதிய குழு அமைத்துள்ளது யுஜிசி..!!உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமன...
25/05/2023

உயர்கல்வி நிறுவனங்களில் விதிமீறலை சரிபார்க்க புதிய குழு அமைத்துள்ளது யுஜிசி..!!

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவதில் விதிமீறல்களை சரிபார்க்க ஒரு புதிய குழுவை யுஜிசி அமைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 568வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில், உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவதில் விதிமீறல்களை சரிபார்க்க ஒரு குழுவை அமைத்துள்ளது.

மேலும் பல்கலைக் கழகக் கல்வியை ஒருங்கிணைத்து, ஆசிரியர்களின் தரம் மற்றும் ஆராய்ச்சி பட்டங்களின் தரத்தை அவ்வப்போது உறுதி செய்வதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த குழுவானது, சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பி.எச்.டி பட்டங்கள் வழங்குவது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும். மேலும் ஆவணங்களைச் சரிபார்த்து, தகுந்த பரிந்துரைகளையும் வழங்கும். விதி மீறல்கள் ஏற்பட்டால் அதற்கான தகுந்த நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்யும்.

#உயர்கல்விநிறுவனம் #விதிமீறல் #யுஜிசி

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடித...
25/05/2023

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமுல் நிறுவனம் இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய உள் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள, இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளர், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளர்.

#அமுல்நிறுவனம் #பால்கொள்முதல் #அமித்ஷா #முதலமைச்சர் #முகஸ்டாலின் #கடிதம்

Parivu Dr. S. SakthiVel Extends Congratulations to J. Radhakrishnan IAS, Chennai Corporation Commissioner..!!Parivu Dr. ...
25/05/2023

Parivu Dr. S. SakthiVel Extends Congratulations to J. Radhakrishnan IAS, Chennai Corporation Commissioner..!!

Parivu Dr. S. SakthiVel, along with the esteemed team of Singara Chennai Builders Association, congratulated J. Radhakrishnan IAS on his recent posting as the Commissioner of Chennai Corporation.

Mr. Radhakrishnan is a 2003-batch IAS officer who has held several important positions in the state government, including as the District Collector of Kanchipuram and Tiruvallur. He is currently the Commissioner of the Chennai Corporation.

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது : பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ்..!!அண்ணா பல்கலைக...
25/05/2023

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது : பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ்..!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த ஒரு பாடப் பிரிவும் நீக்கப்படாது என அதனை துணை வேந்தர் வேல்ராஜ் தெளிவுபடுத்தியுள்ளார். நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான முடிவு அண்மையில் நடந்து முடிந்த 29வது அகாடமி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த தகவல் தவறானது என விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ், உறுப்பு கல்லூரிகளில் நடப்பாண்டு எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது என தெளிவுபடுத்தி உள்ளார். மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த கல்லூரிகளில் மட்டுமே குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை நீக்க திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் அதிலும் தமிழ் வழி மட்டுமின்றி, சில ஆங்கில மொழி பாடப் பிரிவுகளையும் நீக்க ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் உயர்கல்வித் துறை உத்தரவின் பேரில் நடப்பு கல்வியாண்டில் எந்த ஒரு பாடப்பிரிவு நீக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

#அண்ணாபல்கலை #உறுப்புகல்லூரி #பாடப்பிரிவு #பல்கலைதுணைவேந்தர் #வேல்ராஜ்

‘க்ரெயின்ஸ்’ இணையதளத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாக கணக்கிடும் வசதி: துறை அதிகாரிகளுக்க...
25/05/2023

‘க்ரெயின்ஸ்’ இணையதளத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் பரப்பினை துல்லியமாக கணக்கிடும் வசதி: துறை அதிகாரிகளுக்கு பயிற்சி..!!

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, வருவாய் போன்ற 13க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பலன்களை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் “க்ரெயின்ஸ்” இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘க்ரெயின்ஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யப்படும் மூன்று முக்கியமான இனங்கள் வருமாறு:
1. சாகுபடி நிலத்துடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் தனிப்பட்ட விவரம். 2. கிராமங்களில் உள்ள சாகுபடி நிலத்தில் நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல். 3. சாகுபடி நிலத்தில் ஒவ்வொரு முறை சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பற்றிய விபரங்களை நிகழ்நிலை அடிப்படையில் நில உடைமை வாரியாக சேகரித்தல். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் என்ற இனங்களில் ஒவ்வொரு பருவத்திலும் என்னென்ன பயிர்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது என்பது பற்றிய விபரங்களை சர்வே எண் வாரியாக நிகழ்நிலை அடிப்படையில் பதிவு செய்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்பணியினை எளிதாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைபேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்கள் பற்றிய விபரங்களும் சர்வே எண், உட்பிரிவு வாரியாக ஏற்கெனவே புவியிடக்குறியீடு செய்யப்பட்டு, இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, களப்பணியாளர்கள் சம்பந்தப்பட்ட உட்பிரிவில் உள்ள நிலத்திற்கு நேரடியாக சென்று, ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்யப்படும் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள் போன்ற வேளாண் பயிர்களையும், பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களையும், தேக்கு, மகாகனி, செம்மரம் போன்ற மரப்பயிர்கள் பற்றிய விபரங்களையும் பயிர் வாரியாக எத்தனை ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களையும் பதிவு செய்ய முடியும்.

பயிர், பரப்பு மட்டுமல்லாது, பயிரின் நிலை, வளர்ச்சி பற்றிய விபரங்களையும் புகைப்படம் வாயிலாக பதிவு செய்ய இயலும். இத்தகைய பதிவு முறைக்கு கட்டாயம் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சர்வே எண் உட்பிரிவு உள்ள வயலுக்கு நேரடியாகச் சென்றால் மட்டுமே பயிர் சாகுபடி பதிவேற்றம் செய்ய முடியும். வயலுக்கு செல்லாமலோ, சம்பந்தப்பட்ட சர்வே எண் அல்லாது மற்ற இடங்களில் நின்றோ பயிர் சாகுபடியினை பதிவிட இயலாது. இந்த செயலியினை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த பயிற்சி சென்னை, அண்ணா நிர்வாக மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கடந்த 22ம் தேதி அன்று நடைபெற்றது.

#க்ரெயின்ஸ் #இணையதளம் #விவசாயிகள் #சாகுபடி #பயிர்களின்பரப்பு #துறைஅதிகாரிகள்

சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்..!!இந்திய சுகாதாரத்த...
25/05/2023

சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்..!!

இந்திய சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் ‘அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் 76வது உலக சுகாதார மாநாட்டில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்கள் உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளன. தொற்று சவால்களுக்கு எதிராக போரிடுவதில் உலகை இணைத்துள்ளது. ” என்று குறிப்பிட்டார்.
‘இந்தியாவில் சிகிச்சை, இந்தியா வழங்கும் சிகிச்சை’ என்ற அமர்வில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “ சுகாதார சவால்கள் சர்வதேச எல்லைகளை கடந்தது என்பதை கொரோனா பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. சுகாதார பணியாளர்களின் திறன் கட்டமைப்பை மேம்படுத்துதல், சுகாதாரத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகிறது” என்று தெரிவித்தார்.

#டிஜிட்டல்தொழில்நுட்பம் #சுகாதாரத்துறை #மன்சுக்மாண்டவியா

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை.....
25/05/2023

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை..!!

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 120 கட்டிடங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம், கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகளை கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் 2வது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் 24,600 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது. இதை ஏற்று, ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதற்கான பணிகளை கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு இதற்கான டெண்டர் விடப்பட்டது. இந்த மறு சீரமைப்பு பணிகளை 36 மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மும்பையை சேர்ந்த டாடா பொறியாளர் ஆலோசனை நிறுவனம் கண்காணிக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான முகப்பு காந்தி இர்வின் சாலையிலும், பின்புறப் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் முடிவடைகிறது. இந்த இரு பகுதியிலும் ரயில்வே விரிவாக்க மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1,35,406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டிடம் புதிதாக அமைய இருக்கிறது. இந்நிலையில், முதல் கட்டமாக ரயில் நிலையத்தை அளவீடு செய்து, காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ரயில்வே கட்டிட சிவில் இன்ஜினியர் ஒருவர் கூறுகையில், ‘‘மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன நிறுத்தங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது. ரயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரயில்வே பார்சல் பகுதி ரயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது,’’ என்றார்.

3 நடை மேம்பாலம்
ரயில் நிலையத்தில் கார்கள், வாடகை கார்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்க்ஷாக்கள் நிறுத்தும் வகையில் அடுக்கு பார்க்கிங் வசதிகள் அமைய உள்ளன. பயணிகள் தனித்தனி பகுதிகளில் இருந்து வந்து சேர 3 நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

பல்வேறு வசதிகள்
பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்குதடையின்றி ரயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளி வளாகப்பகுதி அமைய இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், குடிநீர் குழாய்கள், குளிர் குடிநீர் வசதி, மேற்கூரைகள், இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

மல்டிலெவல் பார்க்கிங்
காந்தி இர்வின் சாலை பகுதியிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன. பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவற்றிற்கு தனித்தனியாக அரங்குகள், பார்சல்களை கையாள தனிப்பகுதி, நடைமேம்பாலங்கள், மல்டிலெவல் வாகன நிறுத்தங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன.

காத்திருப்பு அரங்கு
தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல மின் தூக்கி, எஸ்கலேட்டர் அமைய இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருப்பது போல பயணிகள் வருகை புறப்பாடு தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நடைமேடை காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப் பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.

#எழும்பூர்ரயில்நிலையம் #பூந்தமல்லி #நெடுஞ்சாலை #மறுசீரமைப்புபணி

தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை...
24/05/2023

தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு குடியிருப்பு பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு: விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை என எச்சரிக்கை..!!

தெருக்களில் உணவளிக்கும் நாய் பிரியர்களால் பாதிப்பு ஏற்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு என தனி இடம் ஒதுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கவும் முடிவு செய்துள்ளது. நன்றியுடைய பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. நாய்களை வளர்ப்போர்கள் தங்கள் வீட்டில் ஒரு உறவாகவே நினைத்து வளர்க்கின்றனர். ஆனால் ஆதரவற்ற நிலையில் திரியும் தெரு நாய்கள் பெருகி வரும் நிலையில், அவை மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பவையாக மாறி வருகின்றன. முந்தைய காலங்களில் தொல்லை தரக்கூடிய தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவை கொல்ப்பட்டன. இதனால் விலங்குகள் நல அமைப்புகள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் நாய்களை ெகால்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இத தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை பெரும்பாலும் நகரங்களில் தான் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன.

காரணம், தெருநாய்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடபற்றாக்குறை இருப்பது தான். இடப் பற்றாக்குறையால் சென்னையில் உள்ள குறுகிய தெருக்களில் அதிக நாய்கள் வலம் வருவதால் அதை மனிதர்கள் சீண்டுவது போன்ற நிகழ்வுகளால் மனிதர்களை கடிக்கின்றன. தெருநாய்களின் இந்த மாற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கமும், நகரங்களில் இடமின்மையும் முக்கிய காரணம். முன்பெல்லாம் நாய்களுக்கென்று நிறைய இடங்கள் இருந்தன.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் நாய்கள் ஊர் எல்லையிலோ, தொலைவாகவோ தான் இருக்கும். ஒரு நிகழ்வின்போது சாப்பாட்டுக்காக மட்டுமே மக்களை நெருங்கும். அவை கிராமங்களில், குப்பைகளில், தெருக்களில் கிடைக்கும் உணவுகளையே உண்ணும். ஆனால், நகர்ப்புறங்களில் இடமின்மை, மக்கள் தொகை காரணமாக குடியிருப்புகள் கட்டடங்கள் அதிகமானதால் நாய்கள் தெருவில் குவிய ஆரம்பித்தன.

அவற்றுக்கென இடங்கள் இல்லாமல் போயின. இதனால் மனிதனர்களுடன் நெருங்கி இருக்கும் வகையில் நாய்கள் தெருவில் தள்ளப்பட்டன. இதனால் தான் சென்ைனையில் தெருநாய்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.இதனால், பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக, சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகமாகவே இருக்கிறது. நாய்களை கொல்ல முடியாது என்பதால் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாய்களை பிடித்து அவற்றிருக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை செய்து அதே இடங்களில் விடப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்தவரையில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக பொதுநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை. நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.

குடியிருப்பு பகுதியிலேயே தெருநாய் தொல்லை இருந்தாலும், அவற்றிற்கு உணவளித்து பாதுகாக்கும் நாய்பிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றன. நல் உள்ளத்தோடு அவர்கள் உணவளித்தாலும், இதன் மூலம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இது தொடர்பான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு அதிகம் அளவில் வருவதாக கூறப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், ‘தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே அவற்றிற்கு தடுப்பூசி போடுவதற்கும் பொறுப்பாவார்கள் எனவும், மேலும் அந்த விலங்குகள் மக்களைத் கடித்தால் அதற்கான செலவையும் அவர்களே ஏற்க வேண்டும்’ எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், பசியோடு சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் உணவு பிரியர்கள் அதற்கு தொடர்ந்து உணவளிக்கத் தான் செய்கின்றனர். அவர்களை கண்டதும் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வருகின்றன. ஒரு புறம் மனிதாபிமானத்தோடு பார்க்க வேண்டிய செயல். ஆனாலும் அந்த நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் ஏற்றுக் ெகாள்ள முடியாது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறிதது சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பல்வேறு தெருக்களில் தெரு நாய்கள் பாதிப்பு உள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சையை தீவிரப்படுத்தி வருகிறோம். மேலும், குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மட்டுமே நாய் பிரியர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவுகளை தெரு நாய்களுக்கு அளிக்க வேண்டும். இதுபோன்ற சென்னையில் பல்வேறு தெருக்களில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், இடங்களை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்து அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

15,696 நாய்களுக்கு தடுப்பூசி
சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.

விலங்குகள் கடித்த வழக்கு
கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி விலங்குகள் கடித்த வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் அதிக வழக்குகள் பதிவானது உத்திர பிரதேசத்தில், அடுத்தபடியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளது. 2019ம் ஆண்டில் 72,77,523 விலங்கு கடி வழக்குகள் இருந்தன. இது 2020ல் 46,33,493 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், 2022ம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும், 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன.

#தெருநாய்கள் #உணவு #விதி

Address

Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when Parivu.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parivu.TV:

Videos

Share


Other Media/News Companies in Chennai

Show All